- சாலை விபத்தில் சிக்கியவர்களின் உயிரை காக்க உதவியவர்களுக்கு ரூ.5,000 வெகுமதியாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.மத்திய அரசின் சார்பில் ரூ.5,000 வழங்கப்படும் நிலையில், மாநில அரசு சார்பில் ரூ.5,000மும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.இத்திட்டம் 31 மார்ச் 2026 வரை செயல்பாட்டில் இருக்கும்
- இந்தியாவில் சாலை விபத்துகள் நடைபெறும் பட்டியலில் தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ்கிறது.
- சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.புவிசார் குறியீடானது அவ்வெற்றிலையின் காரத்தன்மைக்காக வழங்கப்பட்டுள்ளது.இந்தியாவின் “பொருள்கள் புவிசார் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 1999 கொண்டு வரப்பபட்டு 2003-ல் செப்டம்பர் 15-முதல் நடைமுறைக்கு வந்தது.இதுவரை தமிழகத்தில் 56 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.புவிசார் குறியீடு பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) தில்லி ஐஐடி கிளை வளாகம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்பட்டுள்ளது. யானைகளை பாதுகாக்க இந்திய அரசால் யானை பாதுகாப்பு திட்டம் – 1992-ல் உருவாக்கப்பட்டது.
- வெங்காயத்தினை கோபாலட்-60 கதிரியக்க தனிமம் மூலம் கதிர்வீச்சு உட்படுத்தி அழிவில் இருந்து காக்கும் காம கதிர்வீச்சு தொழில் நுட்பம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது.மகாராஷ்டிரா, லசால்கான் என்ற இடத்தில் முதற்கட்டமாக 105டன் வெங்காயத்தை கதிர்வீச்சுக்கு உட்படுத்தும் சோதனையானது நடைபெற உள்ளது.
- தாய்லாந்தில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் விம்பிள்டனில் தனது முதல் சாம்பியன் பட்டம் வென்றார்
- ஆடவர் கலப்பு இரட்டையர் பிரிவில் நெதர்லாந்தின் வெஸ்லிகூல் ஹாப் பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி இணை சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
TODAY CURRENT AFFAIRS IN TAMIL 17.07.2023
By -
July 17, 2023
0
Tags: