
அகரமுதலி

அகரமுதலி
(TNPSC TAMIL NEW SYLLABUS STUDY NOTES [ UPDATED ON 2025 ]-தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்)
அகரம் ஆதி என்னும் இருசொற்களின் சேர்க்கையே “அகராதி” என்றானது. “அகராதி” என்னும் சொல் தற்போதைய வழக்கில் “அகர முதலி” என வழங்கப்படுகிறது.
ஒரு மொழியிலுள்ள சொற்கள் அனைத்தையும் அகர முதலிய எழுத்து வரிசையில் அமையும்படி ஒரு சேரத் தொகுத்து, அவற்றின் பொருள்களை, அம்மொழியாலேனும், பிறமொழியாலேனும் விளக்கும் நூல் அகராதி எனப்படும். அகராதி என்னும் சொல்லின் 'ஆதி' என்னும் சொல் வடமொழி என்பதால், மொழிஞாயிறு பாவாணர் அகரமுதலி என்று அழைத்தார்.
அகரமுதலி வரலாறு:
- தமிடழ் அகரமுதலி வரலாற்றில் செம்பாதி இடத்தை பெரும் சொற்பொருள் துறை நூல்கள் நிகண்டுகளாகும். இதில் பழமையானது சேந்தன் திவாரகம். இதன் ஆசிரியர் திவாகர் 25 நிகண்டுகளில் சிறந்தது மண்டல புருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு.
- நிகண்டுகள்: தமிழ் மொழியில் அகரமுதலி தோன்றுவதற்கு முன்னால், சொற்களுக்குப் பொருள் அறிய செய்யுள் வடிவில் அமைந்த 'நிகண்டுகள்' பயன்பாட்டில் இருந்தன. (எ.கா: திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டு). இவை சாதாரண மக்களுக்குக் கடினமாக இருந்ததால், எளிய முறையில் தேட அகர வரிசை முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
- முதல் அகரமுதலி: தமிழில் தோன்றிய முதல் அகரமுதலி 'சதுரகராதி' ஆகும்.
- இயற்றியவர்: வீரமாமுனிவர் (கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி) ஐரோப்பிய அகராதி முறையைத் தமிழுக்கு அறிமுகம் செய்தார்.
- ஆண்டு & பிரிவுகள்: இது 1732 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது பெயர், பொருள், தொகை, தொடை என்னும் நான்கு பிரிவுகளைக் கொண்டது.
அகரமுதலி - விளக்கம்:
- திருமூலர் எழுதிய “திருமந்திரத்தில்” “அகராதி” என்னும் சொல் முதன் முதலாக இடம் பெற்றுள்ளது. அகரமுதலிகள் தோன்றுவதற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த நூல் அராதி நிகண்டு.
- பொருள்: 'அகரமுதலி' என்பது ஒரு மொழியில் உள்ள சொற்கள் அனைத்தையும் அகர வரிசையில் (Alphabetical Order) அடுக்கி, அவற்றிற்குரிய பொருளை விளக்கும் நூலாகும்.
- பிரிப்பு: அகரமுதலி = அகரம் + முதலி. 'அ' என்னும் எழுத்தைத் தொடக்கமாகக் கொண்டது என்பது இதன் பொருளாகும்.
- பயன்பாடு: ஒரு சொல்லின் பொருள், அதன் பிறப்பிடம் (வேர்ச்சொல்), வரலாறு மற்றும் பயன்பாடு போன்ற பல தகவல்களை இது வழங்குகிறது.
சதுரகராதி:
- தமிழில் தோன்றிய முதல் அகராதி “சதுரகராதி” இதனைத் தொகுத்தவர் வீரமாமுனிவர். இது 1732-ம் ஆண்டு வெளிவந்தது. சதுர் – நான்கு என்பது பொருள். (பெயர் பொருள், தொகை, தொடை என நான்கு).
வீரமாமுனிவர் இயற்றியது:
- தமிழ் – இலத்தீன் அகராதி
- இலத்தீன் – தமிழ் அகராதி
- தமிழ் – பிரெஞ்சு அகராதி
- பிரெஞ்சு – தமிழ் அகராதி
- போர்த்துகீசியம் – இலத்தீன் தமிழ் அகராதி
பிற அகர முதலிகள்:
- தமிழ் – தமிழ் அகராதி – லெவி-ஸ்-பால்டிஸ்
- தமிழ்ச்சொல்லகராதி – யாழ்பாணம் கதிர்வேல்
- இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அகராதி – இராமநாதன் (இது படங்களுடன் கூடிய ஓர் அகரமுதலி
- தமிழ் – ஆங்கிலப் பேரகராதி – வின்சுலோ
- தமிழ் – தமிழ் அகரமுதலி – மு. சண்முகம் (இது 1985 ஆம் ஆண்டு (தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது)
- 1985-ம் ஆண்டு தேவநேயப்பாவாணரின் “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேகரமுதலியின்” முதல் தொகுதி வெளிவந்தது. இதன் 2-ம் தொகுதி 1993 ஆம் ஆண்டு வெளியானது. இது படங்களைத் தந்த இரண்டாவது அகரமுதலி ஆகும்.
- “அபிதான கோசம்” தமிழ்க் கலைக் களஞ்சியங்களின் முன்னோடி ஆகும். இது 1902-ல் வெளியானது.
- சிங்காரவேலனார் தொகுத்து வெளியிட்ட “அபிதான சிந்தாமணி” இலக்கியச் சொற்களோடு அறிவியல் துறைப் பொருள்களையும், முதன்முதலாகச் சேர்த்து விளக்கம் தந்து 1934-ல் வெளியிட்டது.
- 1925-ம் ஆண்டு பாவனந்தரின் தற்காலத் தமிழ்ச் சொல்லகராதியும் 1937-ம் ஆண்டு மதுரைத் தமிழ்ப் பேரகராதியும்” வெளிவந்தது
நிகண்டுகள்:
நிகண்டுகளின் வழிவழியே வந்ததுதான் அகரமுதலி. இப்பெயர் முதன்முதலிற் காணப்படுவது, கி. பி. 1594-ல் இயற்றி முடித்த அகராதி நிகண்டு என்ற நூலின் பெயரிலேயாகும். இதன் ஆசிரியர் சிதம்பர ரேவண சித்தர் என்னும் வீரசைவப் புலவர். இவர் இட்ட பெயரே, இப்பொழுது 'டிக்ஷனரி' (Dictionary) என்று ஆங்கிலத்திற் கூறும் நூலுக்குரிய தமிழ்ப் பெயராய் அமைந்துவிட்டது.
- தமிழ் அகரமுதலி வரலாற்றில், செம்பாதி இடத்தைப்பெறும் சொற்பொருள் துறை நூல்கள் நிகண்டுகளாம்.
- நிகண்டுகளில் பழமையானது = திவாகரர் எழுதிய சேந்தன் திவாகரம்.
- நிகண்டுகளில் சிறப்பானது = மண்டலபுருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு.
தமிழ்வளர்ச்சிக் கழகம்:
- முதல் கலைக்களஞ்சியத்தைத் தொகுத்து “தமிழ்வளர்ச்சிக்கழகம்” வெளியிட்டது. (பத்துத் தொகுதிகள்) இக்கழகம் குழந்தைகள் கலைக்களஞ்சியம், நாகக் கலைக்களஞ்சியம், இசுலாமியக் கலைக்களஞ்சியம் முதலிய பல கலைக் களஞ்சியங்களையும் வெளியிட்டுள்ளது.
தமிழ் நூல்கள் :
- “மணவை முஸ்தபா” அறிவியல் சார்ந்த துறைவாரியான “கலைச்சொல் அகரமுதலிகளைத்” தொகுத்து கலைச்சொல் அகர முதலிகள்” 1960-ம் ஆண்டு தொகுக்கப்பட்டன. அறிவியல் கலைச் சொல் களஞ்சியம் 1991-ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.
542 தமிழ் கலைச் சொற்கள் :
- செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி இயக்ககத்தின் சார்பில், பல்வேறு துறைச் சார்ந்த நவீன ஆங்கில வார்த்தைகளுக்கு இணையாக, 542 தமிழ் கலைச் சொற்கள் இதுவரை உருவாக்கப்பட்டுள்ளதாக அதன் இயக்குநர் கோ.செழியன் தெரிவித்தார்.
- தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின்கீழ் செயல்பட்டு வரும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி இயக்ககத்தின் சார்பில், தமிழ்க் கலைக் கழகத்தின் 10 -ஆவது கூட்டம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதுகுறித்து அகரமுதலி திட்ட இயக்குநர் கோ.செழியன் செய்தியாளர்களிடம் கூறியது:
- தமிழில் பிறமொழிச் சொற்கள் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தில் தமிழ்க் கலைக் கழகம் ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த இயக்ககத்தின் சார்பில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அவ்வப்போது ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் உறுப்பினர்கள், தமிழ் மொழியாக்கம் இல்லாத ஆங்கிலச் சொற்கள் மற்றும் பிறமொழிச் சொற்களை கண்டறிந்து அதற்கு இணையான நல்ல தமிழ்ச் சொற்களை உருவாக்கி தருவர். இதுவரை 542 சொற்கள் இதுபோன்று உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது நடைபெற்ற கூட்டத்தில் 158 கலைச் சொற்கள் ஏற்புக்கு வைக்கப்பட்டன. இவற்றில் "பவர் பேக்'- திறன்தேக்கி, "எர்த் வயர்'- நிலக்கம்பி, "பார்கோட்'- வரிக்குறி, "எவர் சில்வர்'- நிலை வெள்ளி, "டேப்'-தாவல், "கிரீப்பிங்'- ஊடுருவல் போன்ற 69 சொற்கள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.
TNPSC தேர்வுக்குப் படிக்க வேண்டிய (அகரமுதலி / AKARAMUTALI ) முக்கிய வினா-விடைகள்:
- தமிழில் வெளிவந்த முதல் அகரமுதலி எது? - சதுரகராதி
- சதுரகராதியை இயற்றியவர் யார்? - வீரமாமுனிவர்
- அகரமுதலித் தோன்றுவதற்கு முன் பொருள் விளக்கப் பயன்பட்ட நூல்கள் எவை? - நிகண்டுகள்
- செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தின் இயக்குநராகப் பணியாற்றியவர் யார்? - தேவநேயப் பாவாணர்
- சதுரகராதி எத்தனை பிரிவுகளைக் கொண்டது? - நான்கு (பெயர், பொருள், தொகை, தொடை)
- அகரமுதலி என்பது வெறும் சொற்களின் தொகுப்பு மட்டுமல்ல, அது தமிழ் மொழியின் வளர்ச்சி மற்றும் பண்பாட்டைப் பதிவு செய்யும் முக்கிய ஆவணமாகும். இந்தக் குறிப்புகள் TNPSC Group 4, Group 2, மற்றும் Group 1 தேர்வுகளுக்கு மிக உதவியாக இருக்கும்.
TNPSC Group 4, 2, 2A தமிழ் பாடக்குறிப்புகள் மற்றும் முந்தைய ஆண்டு வினாக்கள்:
TNPSC தேர்வுகளில் 'அகரமுதலி' என்ற தலைப்பில் இருந்து நேரடியாகக் கேள்விகள் கேட்பது மட்டுமின்றி, அகரமுதலியைப் பயன்படுத்தும் முறையான "அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்" (Alphabetical Order) என்ற பகுதியிலிருந்து கட்டாயம் கேள்விகள் இடம்பெறும்.
முந்தைய ஆண்டு தேர்விலிருந்து ஒரு எடுத்துக்காட்டு வினா:
கேள்வி: அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:
பவளம், பின்னல், பீலி, பந்து, பாடம்
விடை காணும் முறை: உயிர்மெய் எழுத்துக்களின் வரிசையான (ப, பா, பி, பீ, பு, பூ...) என்ற அடிப்படையில் பிரிக்க வேண்டும்.
அதில் 'ப' வரிசையில் பவளம், பந்து என இரண்டு சொற்கள் வந்தால், அதன் அடுத்த எழுத்தைப் பார்க்க வேண்டும் ('வ' முந்தி வருமா அல்லது 'ந்' முந்தி வருமா என்று பார்க்க வேண்டும். 'ந்' தான் முதலில் வரும்).
சரியான விடை: பந்து, பவளம், பாடம், பின்னல், பீலி.
