- பருத்தி உற்பத்தி மற்றும் தரத்தை மேம்படுத்தும் வகையில் ஜவுளித்துறையில் புதுமைக் கண்டுபிடிப்புகள் மற்றும் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கான திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் பருத்திக்கான உற்பத்தி இயக்கம் தொடங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக மத்திய ஜவுளி அமைச்சகத்துடன் இணைந்து இந்த இயக்கத்தை வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது.
- பருத்தி உற்பத்தி செய்து வரும் மாநிலங்களில் அனைத்து விதமான ஆராய்ச்சிகள் உட்பட பல்வேறு உத்திசார் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பருத்தி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்த இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.
- உயிரி தொழில்நுட்பக் கருவிகளின் பயன்பாடு, மேம்பட்ட பருத்தி ரகங்களை உருவாக்க நடவடிக்கைகள் உட்பட, பருவநிலைக்கு உகந்த வகையிலும், பூச்சிக்கொல்லி மருந்துகளை தாங்கி வளரக்கூடிய வகையிலும் அதிக சாகுபடி தரக்கூடிய பருத்தி வகைகளை பயிர் செய்வதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று இந்த இயக்கம் வலியுறுத்திகிறது.
- காட்டன் உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஏதுவாக சிறந்த நடைமுறைகளுடன் கூடிய பெரிய அளவிலான பருத்தி உற்பத்தி மண்டலங்களில் வேளாண் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தொழில்நுட்பம் என்ற சிறப்பு திட்டத்தை நாக்பூரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் – மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து பருத்தி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 8 மாநிலங்களில் செயல்படுத்தவுள்ளது.
- இந்த சிறப்புத் திட்டம் 6 ஆயிரத்து 32 லட்சம் செலவில் செயல்படுத்தப்படவுள்ளது.
SOURCE :மக்களவையில், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் கேள்வி ஒன்றுக்கு 22.07.2025 எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.