TNPSC GROUP 4 2025 EXPECTED CUT OFF MARKS IN TAMIL

TNPSC PAYILAGAM
By -
0

TNPSC GROUP 4 2025 EXPECTED CUT OFF MARKS IN TAMIL

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூலை 12 ஆம் தேதி நடத்தியது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 


TNPSC GROUP 4  தேர்வு முறை:

  • டிஎன்பிஎஸ்சி-யில் குரூப் 4 தேர்வை எழுதி கல்வித்தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குரூப் 4 தேர்வு என்பது ஒரே நிலை தேர்வாகும். நேர்காணல் கிடையாது. தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும். இதில் தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியாக உள்ளது.

  • என்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கொள்குறி வகையில் (Objective type) 200 கேள்விகள் கொண்டு இருக்கும். தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு - 100 வினாக்கள், பொது அறிவு - 75 வினாக்கள், திறனறிவு மனக்கணக்கு நுண்ணறிவும் - 25 வினாக்கள் என்று இருக்கும். பத்தாம் வகுப்பு தரத்தில் தான் வினாக்கள் அமைக்கப்பட்டு இருக்கும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். குறைந்தபட்ச தேர்ச்சிக்கு 90 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.


தமிழ்நாடு இடஒதுக்கீடு முறையின் விவரங்கள்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தும் தேர்வுகளில் பல்வேறு இடஒதுக்கீடு முறைகள் பின்பற்றப்படுகின்றன. 

மொத்த இடஒதுக்கீடு:

  • தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் மொத்த இடஒதுக்கீடு 69% ஆகும். 

பிரிவுகளுக்கான ஒதுக்கீடு:

  • பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (BC): 26.5%. 
  • பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு (BCM): 3.5% (உள் இடஒதுக்கீடு). 
  • மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (MBC): 20%. 
  • பட்டியல் சாதியினருக்கு (SC): 15%. 
  • பட்டியல் சாதிகளில் ஒன்றான அருந்ததியருக்கு (SCA): 3% (உள் இடஒதுக்கீடு). 

  • பட்டியல் பழங்குடியினருக்கு (ST): 1%. 
  • மீதமுள்ள 31% இடங்கள் பொது முறையின் கீழ் நிரப்பப்படுகிறது.


TNPSC GROUP 4 கட் ஆஃப் மதிப்பெண்கள் 2025?


2025 ஆம் ஆண்டிற்கான TNPSC GROUP 4 கட்ஆஃப் மதிப்பெண்கள் பின்வருமாறு:

  • GENERAL: ஆண் - 169, பெண் - 166 மதிப்பெண்கள் வரை எதிர்பார்க்கலாம்.
  • OBC: ஆண் - 168, பெண் - 165 மதிப்பெண்கள் வரை எதிர்பார்க்கலாம்.
  • BCM: ஆண் - 167, பெண் - 167 மதிப்பெண்கள் வரை எதிர்பார்க்கலாம்.
  • MBC: ஆண் - 165, பெண் - 163 மதிப்பெண்கள் வரை எதிர்பார்க்கலாம்.
  • SC: ஆண் - 165, பெண் - 164  மதிப்பெண்கள் வரை எதிர்பார்க்கலாம்.
  • ST: ஆண் - 164, பெண் - 161  மதிப்பெண்கள் வரை எதிர்பார்க்கலாம்.

TNPSC EXAMS கட்-ஆஃப் தீர்மானிக்கும் காரணிகள்:

  • தேர்வின் கடினத்தன்மை: தேர்வு எளிமையாக இருந்தால் கட்-ஆஃப் அதிகமாகவும், கடினமாக இருந்தால் குறைவாகவும் இருக்கும்.
  • காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், கட்-ஆஃப் குறைய வாய்ப்புள்ளது.
  • விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை: அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதினால், கட்-ஆஃப் உயரலாம்.
  • பிரிவு வாரியான ஒதுக்கீடு: ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக கட்-ஆஃப் நிர்ணயிக்கப்படும். 

TNPSC GROUP 4 2025 EXPECTED CUT OFF MARKS IN TAMIL:

  • TNPSC GROUP 4 தேர்வு முறை:
  • தமிழ்நாடு இடஒதுக்கீடு முறையின் விவரங்கள்:
  • TNPSC GROUP 4 கட்ஆஃப் மதிப்பெண்கள்
  • TNPSC கட்-ஆஃப் தீர்மானிக்கும் காரணிகள்:


Post a Comment

0Comments

Post a Comment (0)