ஜிஎஸ்டி 2.0: NEW GST RATES IN TAMIL 2025
- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டம் (03.09.2025) டெல்லியில் தொடங்கியது.
- இதில் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை வெளியிட்ட நிர்மலா சீதாராமன், வரும் 22-09.2025 தேதி முதல் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளின் கீழ் மட்டுமே ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார்.
- இந்த ஜிஎஸ்டி வரி மறுசீரமைப்பு நடவடிக்கை மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீதான நிதி சுமையை பெரிய அளவில் குறைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5% என மாற்றப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பொருட்களின் விலை வரும் 22-09.2025 தேதி முதல் குறையும். இது மக்களுக்கு நேரடியாக பலன் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
- TNPSC GK NOTES : ஜிஎஸ்டி 2.0 -NEW GST RATES IN TAMIL 2025
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜெர்மனியில் முதலீட்டாளர்கள் மாநாடு:
- ஜெர்மனியில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.3,819 கோடி மதிப்பிலான 23 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
- முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றுள்ளார். ஜெர்மனியில் ஸ்டாலின் தலைமையில் ‘டி என் ரைசிங் யுரோப்’ முதலீட்டு இயக்கத்தின் ஒரு பகுதியாக, ‘டி என் ரைசிங் ஜெர்மனி’ முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது.
- இதில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.3,819 கோடி மதிப்பிலான 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் தமிழகத்தில் 9,070 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
- ஜெர்மனியில் மொத்தம் 26 ஒப்பந்தங்களின் மூலம் ரூ.7,020 கோடி அளவுக்கு முதலீடு கிடைத்துள்ளது. இதனால் 15,320 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகி உள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் பல முன்னணி நிறுவனங்கள் விரிவாக்கப் பணிகளுக்கான முதலீட்டுக்கு முன்வந்துள்ளன.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘விக்ரம் சிப்’ அறிமுகம்:
- பொருளாதார சுயநலம் காரணமாக பல்வேறு தடைகள் இருந்தபோதிலும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
- செமிகான் இந்தியா மாநாட்டின் நேற்றைய தொடக்க விழாவின்போது முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட விக்ரம்-32 பிட் சிப்பை பிரதமர் மோடியிடம் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வழங்கினார்.
- அப்போது, “எண்ணெய் கருப்பு தங்கம் என்றால், செமிகண்டக்டர் ஒரு டிஜிட்டல் வைரம்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
- விக்ரம்-32 சிப் விண்வெளிப் பயணங்களுக்காக முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 32-பிட் மைக்ரோபிராசசர் ஆகும். இது ராக்கெட் ஏவுதல் மற்றும் விண்வெளி சூழல்களின் தீவிர தன்மைகளை தாங்கும் வகையில் சண்டிகரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) செமிகண்டக்டர் ஆய்வகத்தால் வடிவமைப்பு செய்யப்பட்டது.
NIRF தரவரிசை 2025:
- தேசிய அளவில் சிறந்த பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்கள் என்ற அளவிலும், பல்கலைக்கழகம், பொறியியல், நிர்வாகம், சட்டம், மருத்துவம், மருந்தியல் உள்ளிட்ட 16 பாடப்பிரிவுகள் அளவிலும் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. கற்றல், கற்பித்தல், உள்கட்டமைப்பு வசதி, ஆராய்ச்சி, உருவாக்கப்படும் பட்டதாரிகளின் நிலை போன்ற அம்சங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
- 2025-ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து ஏழாவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்து சென்னை ஐஐடி சாதனை படைத்துள்ளது. சிறந்த பல்கலைக்கழகங்களில் பெங்களூரு ஐஐஎஸ்சி முதலிடம் பிடித்துள்ளது. டெல்லி ஜேஎன்யு இரண்டாம் இடத்தையும், ம்ணிபால் பல்கலைக்கழகம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
- கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலில் டெல்லி ஹிந்து கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது. மாநில அரசு பல்கலைக்கழக பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த அண்ணா பல்கலைக்கழகத்தை கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலை. இரண்டாம் இடத்துக்கு தள்ளியுள்ளது. இந்த பட்டியலில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 10-வது இடத்தை பிடித்துள்ளது.
- ஒட்டுமொத்தமாக இந்த பட்டியலில் இடம்பெற்ற 100 கல்வி நிறுவனங்களில் 17 கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய தென்னை ரகம் ‘ஏஎல்ஆர்-4’ வெளியிடப்பட்டுள்ளது:
- செப்டம்பர் 2 உலக தென்னை தினத்தை முன்னிட்டு, இளநீர் விவசாயிகளுக்காக ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தால் புதிய தென்னை ரகம் ‘ஏஎல்ஆர்-4’ வெளியிடப்பட்டுள்ளது.
- ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் 1963-ம் ஆண்டு வேளாண் ஆராய்ச்சி நிலையமாக தொடங்கப்பட்டு, 2002-ல் தென்னை ஆராய்ச்சி நிலையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- பொள்ளாச்சி பகுதியில் இருந்து தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் தினசரி 4 லட்சம் இளநீர் காய்கள் விற்பனைக்கு அனுப்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் இந்தாண்டு ‘ஏஎல்ஆர் -4’ என்னும் புதிய ரகத்தை வெளியிட்டுள்ளது. நெட்டை ரகமான இது இளநீருக்கும், கயிறு தொழிற்சாலைக்கும் ஏற்றதாக இருக்கும். இந்த ரக இளநீருக்கு மட்டும் 15 ஆயிரம் தென்னங்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன. மேலும், நறுமணம் உடைய இளநீர், இளஞ்சிவப்பு இளநீர் குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அத்துடன் தென்னையில் ஊடுபயிராக பழச்சாகுபடி குறித்து ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன
புஜைரா குளோபல் சூப்பர் ஸ்டார்ஸ் செஸ் தொடர் 2025 :
- ஐக்கிய அரபு அமீகரத்தில் புஜைரா நகரில் புஜைரா குளோபல் சூப்பர் ஸ்டார்ஸ் செஸ் தொடர் நடைபெற்றது.
- பிரணவ் தனது கடைசி ஆட்டத்தில் ஸ்பெயின் கிராண்ட் மாஸ்டரான ஆலன் பிச்சோட்டுடன் மோதினார். வெள்ளை காய்களுடன் விளையாடிய பிரணவ் 54-வது நகர்த்தலின் போது வெற்றியை வசப்படுத்தினார். இந்தத் தொடரில் பிரணவ் 9 சுற்றுகளில் 5-ல் வெற்றி பெற்றார். 4 சுற்றுகளை டிரா செய்திருந்தார். சாம்பியன் பட்டம் வென்ற பிரணவுக்கு ரூ.20.25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. மேலும் இஎல்ஓ ரேட்டிங்கில் 28 புள்ளிகளையும் பிரணவ் பெற்றார்.
- இதில் உலக ஜூனியர் சாம்பியனான இந்தியாவின் பிரணவ் வெங்கடேஷ் 9-க்கு 7 புள்ளி களை குவித்து முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!
current-affairs-in-tamil-03rd-04th-september-2025