ஜிஎஸ்டி 2.0: NEW GST RATES IN TAMIL 2025

TNPSC PAYILAGAM
By -
0

GST ஜிஎஸ்டி 2.0: KEY POINTS IN TAMIL



மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டம் (03.09.2025) டெல்லியில் தொடங்கியது. 

இதில் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை வெளியிட்ட நிர்மலா சீதாராமன், வரும் 22-09.2025 தேதி முதல் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளின் கீழ் மட்டுமே ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த ஜிஎஸ்டி வரி மறுசீரமைப்பு நடவடிக்கை மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீதான நிதி சுமையை பெரிய அளவில் குறைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5% என மாற்றப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பொருட்களின் விலை வரும் 22-09.2025 தேதி முதல் குறையும். இது மக்களுக்கு நேரடியாக பலன் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.


விலை குறையும் பொருட்கள்:

  • பால் பொருட்கள்: யு.எச்.டி பாலுக்கு இப்போது வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கன்டன்ஸ்டு மில்க், வெண்ணெய், நெய், பனீர், பாலாடைக்கட்டி உள்ளிட்ட பொருட்கள் 12%-லிருந்து 5%-ஆக குறைந்துள்ளது.
  • மால்ட், ஸ்டார்ச், பாஸ்தா, கார்ன்ஃப்ளேக்ஸ், பிஸ்கட், சாக்லெட்டுகள் மற்றும் கோகோ பொருட்கள் 12% அல்லது 18%-லிருந்து 5%-ஆக குறைக்கப்படும்.
  • பேரீச்சம்பழம் மாதிரியான உலர்ந்த பழங்கள், பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி 12%-லிருந்து 5%-ஆக குறையும்.
  • சர்க்கரை பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5%-ஆக மாற்றப்பட்டுள்ளது.
  • தாவர எண்ணெய், விலங்கு கொழுப்பு, இறைச்சி மற்றும் மீன் தயாரிப்பு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 5%-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மிக்சர் உள்ளிட்ட சாப்பிட தயாராக இருக்கும் பேக் செய்யப்பட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 18%-லிருந்து 5%-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதில் வறுக்கப்பட்ட பருப்புகள் சேராது.
  • சர்க்கரை அல்லது சுவை சேர்க்கப்பாடாத தண்ணீர், மினரல் வாட்டர் மீதான வரி 18%-லிருந்து 5%-ஆக மாற்றப்பட்டுள்ளது.
  • விவசாய பொருட்கள்: விவசாய இடு பொருட்கள் மீதான வரியும் குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உரங்கள், விதைகள் உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி 12% அல்லது 18%-லிருந்து 5%-ஆக மாற்றப்பட்டுள்ளது.
  • உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12% அல்லது 18%-லிருந்து 5%-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தனிநபர் ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூரன்ஸ்களுக்கு இனி ஜிஎஸ்டி வரி இல்லை.
  • பென்சில், கிரேயான்ஸ் உள்ளிட்ட எழுதுபொருட்கள், நோட்டு புத்தகம் உள்ளிட்ட கல்வி சார்ந்த பொருட்கள் மீதான வரி பூஜ்யம் அல்லது 5%-ஆக மாற்றப்பட்டுள்ளது.
  • நுகர்வோர் பொருட்கள்: ஜிஎஸ்டி மறுசீரமைப்பில் 32 இன்ச்களுக்கு மேலான டிவி, ஏசி, மானிட்டர், டிஷ் வாஷ் இயந்திரம் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் மீதான வரி 28%-லிருந்து 18%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
  • காலணி மற்றும் ஆடை பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியும் 12%-லிருந்து 5%-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஹேர் ஆயில், ஷாம்பு, பற்பசை உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி 18%-லிருந்து 5%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
  • ஆட்டோமொபைல் துறை: சிறிய கார்கள், 350 சிசி திறனுக்கு கீழான இருசக்கர வாகனம் மீதான ஜிஎஸ்டி வரி 28%-லிருந்து 18%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து கார் பாகங்கள் மீதான வரி 18%-ஆக உள்ளது.
  • மின் வாகனங்கள் மீதான வரி 5%-ஆக தொடரும்.
  • விளையாட்டு பொருட்கள் மற்றும் பொம்மைகள், தோல், மரம் மற்றும் கைவினை பொருட்கள் மீதான வரி 5%-ஆக உள்ளது.

விலை உயரும் பொருட்கள்: ஒரு பக்கம் ஜிஎஸ்டி வரி சீரமைப்பு நடவடிக்கை காரணமாக பல்வேறு பொருட்களின் மீதான வரி விகிதம் குறைந்துள்ள நிலையில், ஆடம்பர பொருட்கள் உள்ளிட்ட சிலவற்றின் வரி 40%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • பான் மசாலா, குட்கா, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள், சர்தா, பீடி உள்ளிட்ட பொருட்களுக்கு 40% ஜிஎஸ்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கார்பனேட்டட் குளிர்பானம், சோடா, இனிப்பு சேர்க்கப்பட்ட பானம் உள்ளிட்ட பொருட்களுக்கு 40% ஜிஎஸ்டி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதற்கான ஜிஎஸ்டி வரி விகிதம் 18%-ஆக இருந்தது.
  • ஆடம்பர பொருட்கள், சொகுசு கார்கள், விளையாட்டு போட்டிக்கான டிக்கெட்டுகள், ப்ரீமியம் மதுபான வகைகள் மீதான வரி 40% என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • நிலக்கரி மீதான ஜிஎஸ்டி வரி 5%-லிருந்து 18%-ஆக அதிகரித்துள்ளது.
  • குறிப்பிட்ட இடங்களில் இயங்கும் உணவகங்கள், லாட்டரி உள்ளிட்ட சேவை துறை சார்ந்த ஜிஎஸ்டி வரியும் உயர்ந்துள்ளது.

SOURCE : https://www.hindutamil.in/




Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)