TNPSC Current Affairs in Tamil: February 23 to 24, 2026 | PDF Download & Key Notes

TNPSC PAYILAGAM
By -
0

 

TNPSC Current Affairs in Tamil: February 23 to 24, 2026 | PDF Download & Key Notes


TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய குறிப்புகள்: TNPSC Current Affairs in Tamil: February 23 to 24, 2026| (PDF) : (Key Takeaways for Exam):

வணக்கம் Tnpsc Aspirants! பிப்ரவரி 23 முதல் 24, 2026 வரையிலான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வர்களுக்கான முக்கிய நடப்பு நிகழ்வுகள் மற்றும் முக்கியக் GK குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 


AI இம்பாக்ட் உச்சிமாநாடு 2026 மற்றும் புது தில்லி பிரகடனம் (AI Impact Summit 2026)

  • முக்கிய நிகழ்வு: பிப்ரவரி 18-19, 2026 தேதிகளில் புது தில்லியில் நடைபெற்ற 'AI Impact Summit 2026' மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க 'புது தில்லி பிரகடனம்' (New Delhi Declaration) ஒருமனதாக ஏற்கப்பட்டது.
  • சர்வதேச ஆதரவு: இந்தியா முன்னெடுத்த இந்த பிரகடனத்திற்கு 91 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் ஒப்புதல் அளித்துள்ளன.
  • அடிப்படை நோக்கம்: “அனைவருக்கும் நன்மை, அனைவருக்கும் மகிழ்ச்சி” (Sarvajan Hitaya, Sarvajan Sukhaya) என்ற கொள்கையின் அடிப்படையில், செயற்கை நுண்ணறிவின் பலன்கள் உலக மக்கள் அனைவருக்கும் சமமாகச் சென்றடைய வேண்டும் ("AI for All") என்பதே இதன் முக்கிய நோக்கமாகும். தேசிய இறையாண்மையை மதித்து (Respecting national sovereignty) சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை இது வலியுறுத்துகிறது.


பாஃப்தா விருது 2026 : பாஃப்தா விருது பெற்ற பூங் திரைப்பட குழுவினருக்கு பிரதமர் வாழ்த்து:

  • பாஃப்தா (BAFTA) குழந்தைகள் மற்றும் இளம் பார்வையாளர்களுக்கான விருதுகளில் 'பூங்' (Pūng) திரைப்படம் சிறந்த அனிமேஷன் அல்லாத திரைப்படப் பிரிவில் (Best Feature Film) விருதை வென்றுள்ளது. 
  • பிரிட்டிஷ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலை நிறுவனம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
  • இந்தத் திரைப்படம் ஒரு சிறுவன் தனது தந்தையைத் தேடிச் செல்லும் உணர்ச்சிகரமான பயணத்தை மையமாகக் கொண்டது. 
  • மணிப்பூரின் கலை மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்பட்ட இந்தப் படம், சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 
  • இதற்காக பூங் திரைப்படக் குழுவினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சாதனை குறிப்பாக மணிப்பூருக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய தருணம் என்று கூறியுள்ளார்.
  • இந்த விருது நாட்டின் படைப்பாற்றல் திறனை எடுத்துக்காட்டுவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
கூடுதல் தகவல்கள்:
  • இயக்குநர்: ரோம் மெய்ரி (Rom Meitei). 
  • விருதுப் பிரிவு: பாஃப்தா குழந்தைகள் மற்றும் இளம் பார்வையாளர்கள் விருதுகள் (BAFTA Children & Young People Awards). 

பல்வேறு நாடுகளுடன் நாடாளுமன்ற உறவை மேம்படுத்த நாடாளுமன்ற நட்புறவுக் குழு அமைப்பு (Parliamentary Friendship Groups) :

  • முக்கிய நடவடிக்கை: உலக நாடுகளுடனான இந்தியாவின் நாடாளுமன்ற உறவுகளை மேம்படுத்தும் விதமாக, 60-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் 'நாடாளுமன்ற நட்புறவுக் குழுவை' (Parliamentary Friendship Groups) மக்களவைத் தலைவர் திரு. ஓம் பிர்லா அமைத்துள்ளார்.
  • நோக்கம்: வெளிநாடுகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துதல், நாடாளுமன்ற அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்ளுதல் மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி பரஸ்பர புரிதலை ஏற்படுத்துதல் ஆகியவை இதன் நோக்கமாகும்.
  • குழுவின் அமைப்பு: பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். திரு. ரவிசங்கர் பிரசாத், திரு. ப. சிதம்பரம், டாக்டர் எம். தம்பிதுரை, திரு. டி.ஆர். பாலு, திருமதி. கனிமொழி கருணாநிதி, திரு. அகிலேஷ் யாதவ், டாக்டர் சசி தரூர் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் இந்தக் குழுக்களுக்குத் தலைமை தாங்குவார்கள்.
  • இடம்பெற்றுள்ள நாடுகள்: இலங்கை, அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, தென்ஆப்பிரிக்கா, சவூதி அரேபியா, ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த நாடாளுமன்ற நட்புறவுக் குழுவில் இடம்பெற்றுள்ளன.

கேரளா' மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்:

  • முக்கிய முடிவு: கேரளா மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்றுவதற்கான பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை இன்று (பிப்ரவரி 24, 2026) ஒப்புதல் அளித்துள்ளது.
  • பின்னணி: மலையாளத்தில் 'கேரளம்' என்றே அழைக்கப்படும் இம்மாநிலத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றுவதற்காக, கடந்த ஜூன் 2024-ல் கேரள சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டு வந்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. (முன்னதாக 2023 ஆகஸ்ட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உள்துறை அமைச்சகம் சில தொழில்நுட்ப மாற்றங்களை பரிந்துரைத்ததால், 2024-ல் மீண்டும் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது).
  • அமைச்சரவை கூட்டம்: சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய பிரதமர் அலுவலக கட்டிடமான 'சேவா தீர்த்தத்தில்' முதல்முறையாக நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்தகட்ட நடைமுறைகள்:

  • மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து, 'கேரளா (பெயர் மாற்றம்) மசோதா 2026' குடியரசுத் தலைவரால் கேரள சட்டப்பேரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
  • சட்டப்பேரவையின் ஒப்புதலுக்குப் பின், மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.
  • நாடாளுமன்றத்தில் நிறைவேறிய பின், குடியரசுத் தலைவரின் இறுதி ஒப்புதல் பெறப்பட்டு பெயர் மாற்றம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும்.

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் 'தேசிய தீவிரவாத எதிர்ப்பு கொள்கை' வெளியீடு : பிரஹார் (PRAHAAR)

  • புதிய கொள்கை: தீவிரவாதத்திற்கு எதிராகச் செயல்படும் வகையில், மத்திய உள்துறை அமைச்சகம் 'பிரஹார்' (PRAHAAR) என்ற புதிய 'தேசிய தீவிரவாத எதிர்ப்பு கொள்கையை' (National Counter Terrorism Policy) வெளியிட்டுள்ளது.
  • பின்னணி: சில அண்டை நாடுகள் தீவிரவாதத்தை தங்களின் கொள்கையாகவே கடைப்பிடித்து வருவதால் இந்தியா பாதிக்கப்படுகிறது. இதனை முறியடிக்கும் விதமாக இந்த கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.


மீரட்டில் இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

  • நிகழ்வு: உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில் சேவையையும் (மீரட் மெட்ரோ) மற்றும் டெல்லி - மீரட் இடையிலான 'நமோ பாரத் ஆர்ஆர்டிஎஸ்' (Namo Bharat RRTS) ரயிலின் எஞ்சிய பகுதி சேவைகளையும் பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 22, 2026 அன்று தொடங்கி வைத்தார்.
  • பயண அனுபவம்: தொடக்க விழாவிற்குப் பிறகு, ஷதாப்தி நகரில் இருந்து மீரட் தெற்கு வரை பிரதமர் மோடி ரயிலில் பயணம் செய்தார். அப்போது அதிகாரிகளிடம் திட்ட விவரங்களைக் கேட்டறிந்ததோடு, சக பயணிகளுடனும் உரையாடினார்.
  • நமோ பாரத் ஆர்ஆர்டிஎஸ் (RRTS): டெல்லி - மீரட் இடையே 82 கிலோமீட்டர் தொலைவைக் கொண்ட இந்த ரயில் பாதை முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 160 கி.மீ வேகத்தில் இயங்கும், இதன்மூலம் டெல்லியிலிருந்து மீரட்டுக்கு வெறும் ஒரு மணி நேரத்தில் பயணிக்க முடியும்.
  • மீரட் மெட்ரோ சிறப்பம்சங்கள்: * இதுவே இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில் சேவையாகும் (அதிகபட்ச வேகம் மணிக்கு 130 கி.மீ).
  • 23 கிலோமீட்டர் தூரம் மற்றும் 13 ரயில் நிலையங்களைக் கொண்ட இந்தத் தடத்தில் வெறும் 30 நிமிடங்களில் பயணத்தை முடிக்க முடியும்.
  • இந்தியாவிலேயே முதல்முறையாக நமோ பாரத் ஆர்ஆர்டிஎஸ் ரயிலும், மீரட் மெட்ரோ ரயிலும் ஒரே தடத்தில் பயணிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • கூடுதல் திட்டங்கள்: இந்த ரயில் சேவைகளைத் தொடங்கி வைத்ததோடு மட்டுமின்றி, ரூ.12,930 கோடி மதிப்பிலான பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகளையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்வில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


LIST OF IMPORTANT DAYS FEBRUARY 2026 IN TAMIL :


பிப்ரவரி 23, 2026 :

உலக அமைதி மற்றும் புரிதல் தினம் (World Peace and Understanding Day): 
  • ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 23 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினம் உலகளாவிய நல்லிணக்கம், அமைதி மற்றும் நாடுகளுக்கிடையேயான புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ரோட்டரி கிளப் தொடக்கம்: 1905 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 அன்று சிகாகோவில் பால் ஹாரிஸ் (Paul Harris) என்பவரால் முதல் ரோட்டரி கிளப் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த வரலாற்று நிகழ்வின் நினைவாகவே இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • ரோட்டரி இன்டர்நேஷனல்: இந்த ஒரு சிறிய கூட்டம் காலப்போக்கில் 'ரோட்டரி இன்டர்நேஷனல்' (Rotary International) என்ற மிகப்பெரிய சர்வதேச மனிதாபிமான அமைப்பாக வளர்ந்தது.

பிப்ரவரி 24, 2026 :

மத்திய கலால் வரி தினம் (Central Excise Day): 
  • இந்தியாவில் ஆண்டுதோறும் பிப்ரவரி 24 அன்று மத்திய கலால் வரி தினம் (Central Excise Day) கொண்டாடப்படுகிறது. 2026-ஆம் ஆண்டும் இத்தினம் நாடு முழுவதும் சிறப்பிக்கப்பட்டது.
  • சட்ட அங்கீகாரம்: 1944-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி இயற்றப்பட்ட 'மத்திய கலால் மற்றும் உப்புச் சட்டத்தை' (Central Excise and Salt Act, 1944) நினைவுறுத்தும் வகையில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • நிர்வாகம்: இத்துறை இந்திய மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (CBIC) மூலம் நிர்வகிக்கப்படுகிறது.
  • இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் மீது விதிக்கப்படும் கலால் வரி, நாட்டின் வருவாயில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜிஎஸ்டி (GST) அறிமுகத்திற்குப் பிறகும், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் புகையிலை போன்ற சில குறிப்பிட்ட பொருட்களுக்கு மத்திய கலால் வரி இன்றும் முக்கியமானதாக உள்ளது

மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் (State Girl Child Protection Day): 
  • தமிழகத்தில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் (State Girl Child Protection Day) ஆண்டுதோறும் பிப்ரவரி 24 அன்று கொண்டாடப்படுகிறது.
  • முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் 2020-ஆம் ஆண்டு இந்த நாள் அறிவிக்கப்பட்டது
  • நிதியுதவி: அரசு இல்லங்களில் வளரும் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு 21 வயது நிறைவடையும் போது, அவர்களின் எதிர்கால வாழ்விற்காக ₹2 லட்சம் வங்கி வைப்புத் தொகையாக வழங்கப்படுகிறது.
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு: 18 வயது பூர்த்தியாகி அரசு இல்லங்களிலிருந்து வெளியேறும் பெண்களுக்கு உயர்கல்வி, திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
  • மாவட்ட விருதுகள்: பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை (Sex Ratio) அதிகரிக்க சிறப்பாகச் செயல்படும் மூன்று மாவட்ட ஆட்சியர்களுக்குத் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கிக் கௌரவிக்கப்படுகிறது.
  • ஆண்டு ஊக்கத்தொகை: முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்த குழந்தைகளுக்கு 6-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ₹1,800 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.



TNPSC Current Affairs Quiz: February - (23.02.2026 TO 24.02.2026) :

  • படித்தது போதும்! உங்கள் அறிவை சோதிக்க இந்த வினாடி வினாவை முயற்சிக்கவும்: 
  • Test your knowledge: TNPSC CURRENT AFFAIRS QUIZ: February (23.02.2026 TO 24.02.2026)   (TAMIL & ENGLISH) 


DOWNLOAD PDF : TNPSC CURRENT AFFAIRS IN TAMIL FEBRUARY 2026 :

TNPSC Current Affairs in Tamil: February 2026 (1st WEEK ) | PDF Download & Key Notes 

மேலும் படிக்க:  DAILY CURRENT AFFAIRS IN TAMIL FEBRUARY 2026





OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!


Download Daily TNPSC current affairs PDF in Tamil for February 23 to 24, 2026 for TNPSC Group 1, 2, & 4 exams.

tnpsc-current-affairs-in-tamil-february-23-24-2026 


Post a Comment

0Comments

Post a Comment (0)