TNPSC Current Affairs in Tamil: February 06 to 07, 2026 | PDF Download & Key Notes

TNPSC PAYILAGAM
By -
0


TNPSC Current Affairs in Tamil: February 06 to 07, 2026 | PDF

TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய குறிப்புகள்: TNPSC Current Affairs in Tamil: February 06 to 07, 2026| (PDF) : (Key Takeaways for Exam):

வணக்கம் Tnpsc Aspirants! பிப்ரவரி 06 முதல் 07, 2026 வரையிலான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வர்களுக்கான முக்கிய நடப்பு நிகழ்வுகள் மற்றும் முக்கியக் GK குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 


19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 6-வது முறையாக சாம்பியன்!

  • ​ஜிம்பாப்வேயின் ஹாராரே நகரில் நடைபெற்ற 2026-ம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான (U-19) உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய அணி இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

​முக்கிய சிறப்பம்சங்கள்:

  • ​வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி: 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி, வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் (15 பவுண்டரிகள், 15 சிக்ஸர்கள்) விளாசி உலக சாதனை படைத்தார். இது ஒரு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன் ஆகும்.
  • ​இந்தியாவின் ஸ்கோர்: முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் குவித்தது. கேப்டன் ஆயுஷ் மத்ரே 53 ரன்கள் எடுத்து சிறப்பான பங்களிப்பை அளித்தார்.
  • ​இங்கிலாந்து தோல்வி: 412 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இங்கிலாந்து தரப்பில் காலேப் பால்கனர் 115 ரன்கள் எடுத்தார்.
  • ​6-வது முறை மகுடம்: இதன் மூலம் இந்திய அணி 6-வது முறையாக (2000, 2008, 2012, 2018, 2022, 2026) உலகக் கோப்பையை வென்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.
  • ​பரிசுத் தொகை: இந்த மகத்தான வெற்றியைப் பாராட்டி, இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) அணிக்கு ரூ. 7.5 கோடி பரிசுத் தொகை அறிவித்துள்ளது.


மக்களவையில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அளித்த தகவல் :

​முக்கிய விவரங்கள்:

  • ​உயர் நீதிமன்றங்கள்: நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் மொத்தம் உள்ள 814 நீதிபதிகளில் 116 பேர் மட்டுமே பெண்கள்.
  • ​உச்ச நீதிமன்றம்: உச்ச நீதிமன்றத்தில் உள்ள 33 நீதிபதிகளில் தற்போது ஒரே ஒரு பெண் நீதிபதி மட்டுமே உள்ளார்.
  • ​அதிகபட்ச எண்ணிக்கை: பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் அதிகபட்சமாக 18 பெண் நீதிபதிகள் உள்ளனர்.
  • ​முக்கிய நீதிமன்றங்கள்: பம்பாய் உயர் நீதிமன்றத்தில் 12 பேர், டெல்லி மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களில் தலா 10 பெண் நீதிபதிகள் உள்ளனர். 110 நீதிபதிகளைக் கொண்ட அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 7 பேர் மட்டுமே பெண்கள்.
  • ​பெண் நீதிபதிகள் இல்லாத இடங்கள்: உத்தரகாண்ட், திரிபுரா மற்றும் மணிப்பூர் ஆகிய உயர் நீதிமன்றங்களில் ஒரு பெண் நீதிபதி கூட இல்லை.
  • ​நியமன விவரங்கள்: 2014-ம் ஆண்டு முதல் உயர் நீதிமன்றங்களில் 170 பெண் நீதிபதிகளும், உச்ச நீதிமன்றத்தில் 6 பெண் நீதிபதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • ​இடஒதுக்கீடு: நீதிபதிகள் நியமனம் அரசியலமைப்பு சட்டப்பிரிவுகளின்படி (124, 217, 224) நடைபெறுவதாகவும், இதில் சாதி அல்லது பாலின அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்றும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.


பத்தமடை பாய் உள்ளிட்ட தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பொருட்களுக்கு புவிசார் குறியீடு (Geographical Indication - GI Tag) :

​முக்கிய விவரங்கள்:

  • ​23 பொருட்களுக்கு அங்கீகாரம்: பத்தமடை பாய் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 23 பாரம்பரியப் பொருட்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.
  • ​பத்தமடை பாய் (Pattamadai Mat): திருநெல்வேலி மாவட்டத்தின் பத்தமடை கிராமத்தில் கோரைப்புற்களால் நெய்யப்படும் இந்த பாய், அதன் மென்மை மற்றும் கலைநயத்திற்காக உலகப்புகழ் பெற்றது. தற்போது இதற்கு அதிகாரப்பூர்வமாக புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
  • ​தமிழ்நாட்டின் பிற பொருட்கள்: பத்தமடை பாய் தவிர, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, நீலகிரி தோடர் இன மக்களின் பூத்தையல் (Toda Embroidery) போன்றவற்றுக்கும் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
  • ​முக்கியத்துவம்: புவிசார் குறியீடு வழங்கப்படுவதன் மூலம், இந்தப் பொருட்களின் தரம் மற்றும் பாரம்பரியம் சர்வதேச அளவில் உறுதி செய்யப்படுகிறது. இது போலிப் பொருட்களைத் தடுப்பதுடன், உள்ளூர் கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்கவும் உதவும்.
  • ​விண்ணப்பம்: தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் வளர்ச்சிக் கழகம் (Poompuhar) சார்பில் இதற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, நீண்ட கால ஆய்வுக்குப் பிறகு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


புது தில்லியில் நடைபெறவுள்ள சர்வதேச செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்கியதற்காக இந்தியாவுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்:

முக்கிய அம்சங்கள்:

  • இந்தியாவின் தலைமை: பிப்ரவரி 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ள 'இந்தியா-AI இம்பாக்ட் மாநாட்டை' (India AI Impact Summit 2026) முன்னின்று நடத்துவதற்காக இந்தியாவை ஐ.நா. தலைவர் பாராட்டியுள்ளார்.
  • சர்வதேச முக்கியத்துவம்: இன்றைய சர்வதேச உறவுகளில் செயற்கை நுண்ணறிவு என்பது மிகவும் முக்கியமான விஷயமாகவும், சமகாலத்தின் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகவும் உருவெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • மாநாட்டின் நோக்கம்: 'மக்களுக்காக, பூமிக்காக மற்றும் முன்னேற்றத்திற்காக' (People, Planet, and Progress) என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இந்த மாநாடு அமையவுள்ளது. இது "Global South" எனப்படும் வளர்ந்து வரும் நாடுகளால் நடத்தப்படும் முதல் உலகளாவிய AI மாநாடாகும்.
  • ஐ.நா தலைவரின் வருகை: இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப்போவதை உறுதி செய்துள்ள குட்டெரெஸ், நாடுகள் மட்டுமின்றி சிவில் சமூக அமைப்புகளும் இணைந்து இந்த தொழில்நுட்பத்தின் சவால்கள் குறித்து விவாதிக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
  • நிபுணர் குழு: AI தொடர்பான அறிவியல் பூர்வமான ஆலோசனைகளை வழங்க 40 பேர் கொண்ட சர்வதேச நிபுணர் குழுவை ஐ.நா உருவாக்கியுள்ளது. இதில் சென்னை ஐஐடியின் பேராசிரியர் பாலராமன் ரவீந்திரன் மற்றும் விபின் குமார் ஆகிய இரு இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


வதோதராவில் தயாராகும் ஏர்பஸ் சி295 (Airbus C295) விமானம் 

முக்கிய விவரங்கள்:

  • இந்தியாவின் முதல் முயற்சி: குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள டாடா-ஏர்பஸ் (Tata-Airbus) மையத்தில், இந்தியாவின் முதல் 'மேக் இன் இந்தியா' (Make in India) சி295 இராணுவப் போக்குவரத்து விமானம் தயாராகி வருகிறது.
  • பிரதமர் தொடங்கி வைப்பார்: இந்த ஆண்டு (2026) இரண்டாம் பாதியில், வதோதரா மையத்தில் இருந்து முதல் விமானம் பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்படும். இந்த முக்கிய நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பார் என்று ஏர்பஸ் நிறுவனத்தின் சர்வதேசத் தலைவர் வோட்டர் வான் வெர்ஷ் (Wouter Van Wersch) தெரிவித்துள்ளார்.
  • ஒப்பந்த விவரம்: இந்திய விமானப்படைக்காக மொத்தம் 56 விமானங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் 16 விமானங்கள் ஸ்பெயினில் இருந்து நேரடியாக வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 40 விமானங்கள் வதோதராவில் உள்ள டாடா மையத்தில் தயாரிக்கப்படுகின்றன.
  • உள்ளூர் தயாரிப்பு: இந்த விமானத்தின் 70% பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. மீதமுள்ள 30% பாகங்கள் (என்ஜின் போன்றவை) இறக்குமதி செய்யப்படுகின்றன.
  • எதிர்காலத் திட்டம்: வதோதரா மையம் எதிர்காலத்தில் மற்ற நாடுகளுக்கு விமானங்களை ஏற்றுமதி செய்யும் மையமாகவும், பெங்களூருவில் உள்ள ஏர்பஸ் மையம் தனது செயல்பாடுகளைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2026-ம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் (WPL)  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • வரலாற்று வெற்றி: வதோதராவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் நிர்ணயித்த 204 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய RCB அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது WPL வரலாற்றில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும்.
  • மந்தனாவின் அதிரடி: கேப்டன் ஸ்மிருதி மந்தனா 41 பந்துகளில் 87 ரன்கள் (12 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) விளாசி அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தார். இவருக்கு உறுதுணையாக ஆடிய ஜார்ஜியா வால் 79 ரன்கள் குவித்தார்.
  • டெல்லியின் போராட்டம்: முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 203/4 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிகபட்சமாக 57 ரன்கள் எடுத்தார். இருப்பினும், டெல்லி அணி தொடர்ந்து 4-வது முறையாக இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது.
  • ஆரஞ்சு தொப்பி (Orange Cap): இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி 377 ரன்கள் குவித்த ஸ்மிருதி மந்தனா, இந்த சீசனின் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைக்கான 'ஆரஞ்சு தொப்பியை' தட்டிச் சென்றார்.
  • இரட்டை மகுடம்: இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்தபடியாக இரண்டு முறை (2024, 2026) WPL கோப்பையை வென்ற இரண்டாவது அணி என்ற பெருமையை RCB பெற்றுள்ளது. மேலும், தற்போது ஐபிஎல் (ஆண்கள்) மற்றும் டபிள்யூபிஎல் (பெண்கள்) ஆகிய இரண்டிலும் நடப்பு சாம்பியனாக RCB திகழ்வது குறிப்பிடத்தக்கது.


வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதன் மூலம் இந்தியாவுக்கு ஏற்படவுள்ள லாபம் குறித்து பாரத ஸ்டேட் வங்கி (SBI) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:

முக்கிய விவரங்கள்:

  • ரூ.27,000 கோடி மிச்சம்: ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து, வெனிசுலாவிடமிருந்து 'மெரி 16' (Merey 16) வகை கனரக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதன் மூலம் இந்தியா ஆண்டுக்கு சுமார் 300 கோடி டாலர் (சுமார் ரூ.27,000 கோடி) வரை மிச்சப்படுத்த முடியும் என்று எஸ்பிஐ அறிக்கை கூறுகிறது.
  • தள்ளுபடி விலை: வெனிசுலா கச்சா எண்ணெய்க்கு ஒரு பேரலுக்கு 10 முதல் 12 டாலர் வரை தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது. இது ரஷ்யாவிடமிருந்து கிடைக்கும் தள்ளுபடி நிறுத்தப்பட்டாலும் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய உதவும்.
  • பணவீக்கக் கட்டுப்பாடு: இந்த விலை குறைப்பு உள்நாட்டுப் பணவீக்கத்தைப் பாதிக்காமல், எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய உதவும்.
  • மாற்று வாய்ப்புகள்: உக்ரைன் போருக்குப் பிறகு இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி 30%-ஐத் தாண்டியது. தற்போது வெனிசுலா, ஈராக், சவுதி அரேபியா உள்ளிட்ட 40 நாடுகளிலிருந்து எண்ணெய் பெறும் வாய்ப்பு இந்தியாவுக்கு உள்ளது.
  • அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: அமெரிக்கா விதித்துள்ள வரிக் குறைப்பு மற்றும் இந்தியப் பொருட்களின் ஏற்றுமதித் திறன் அதிகரிப்பு போன்றவை இந்தியப் பொருளாதாரத்திற்குச் சாதகமான அம்சங்களாக இருக்கும் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
  • உள்நாட்டுப் பாதுகாப்பு: வர்த்தக தாராளமயமாக்கல் மேற்கொள்ளப்படும் அதே வேளையில், இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரமான பால் உற்பத்தி போன்ற துறைகள் பாதிக்கப்படாமல் கவனமாகச் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மோசடிகளில் பாதிக்கப்படும் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பரிந்துரைத்துள்ளது:

முக்கிய அம்சங்கள்:

  • ரூ.25,000 வரை இழப்பீடு: சிறிய அளவிலான டிஜிட்டல் பண மோசடிகளால் (Small-value digital frauds) பாதிக்கப்படும் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 25,000 ரூபாய் வரை இழப்பீடு வழங்க ரிசர்வ் வங்கி புதிய திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளது.
  • நிபந்தனையற்ற உதவி: வாடிக்கையாளர் கவனக்குறைவாக ஓடிபி (OTP) எண்ணைப் பகிர்ந்திருந்தாலும் கூட, இந்த இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மோசடிகளில் 65% வழக்குகள் ரூ.50,000-க்கும் குறைவான மதிப்பில் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • பகிர்ந்தளிக்கப்படும் இழப்பு: இந்தத் திட்டத்தின்படி, மொத்த இழப்பில் 85% அல்லது ரூ.25,000 (எது குறைவோ அது) இழப்பீடாக வழங்கப்படும். இதில் 15% தொகையை சம்பந்தப்பட்ட வங்கியும், மீதமுள்ள தொகையை ஆர்பிஐ-யின் டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதியிலிருந்தும் (DEAF) வழங்கப்படும். மீதமுள்ள 15% இழப்பை மட்டும் வாடிக்கையாளர் ஏற்க வேண்டும்.
  • மூத்த குடிமக்களுக்குப் பாதுகாப்பு: முதியவர்கள் எளிதில் ஏமாற்றப்படுவதைத் தடுக்க, அவர்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளில் கூடுதல் பாதுகாப்பு முறைகளை (Additional Authentication) கொண்டுவரவும், பணம் உடனடியாகச் சேராமல் சிறிது நேரத் தாமதத்திற்குப் பிறகு சேரும் 'லேக்டு கிரெடிட்ஸ்' (Lagged Credits) முறையை அறிமுகப்படுத்தவும் ஆர்பிஐ திட்டமிட்டுள்ளது.
  • கடன் வசூல் மற்றும் தவறான விற்பனை: வங்கிகளில் தேவையற்ற திட்டங்களைத் திணிப்பதையும் (Mis-selling), கடன் வசூல் முகவர்கள் வாடிக்கையாளர்களை மிரட்டுவதையும் தடுக்கக் கடுமையான புதிய வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
  • வட்டி விகிதம்: இதற்கிடையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னிட்டு 'ரெப்போ' வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை (5.25% ஆக நீடிக்கிறது).

LIST OF IMPORTANT DAYS FEBRUARY 2026 IN TAMIL :

பிப்ரவரி 6: பெண் பிறப்புறுப்பு சிதைவுக்கான பூஜ்ஜிய சகிப்புத்தன்மையின் சர்வதேச தினம் (International Day of Zero Tolerance for Female Genital Mutilation (FGM) ):

  • பிறப்புறுப்பு சிதைவினால் பெண்கள் எதிர்கொள்ளும் விளைவுகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பிப்ரவரி 6 ஆம் தேதி சர்வதேச பெண் பிறப்புறுப்பு சிதைவுக்கான பூஜ்ய சகிப்புத்தன்மை தினம் அனுசரிக்கப்படுகிறது. 
2026-ம் ஆண்டிற்கான கருப்பொருள் (Theme):
  • "2030-ஐ நோக்கி: நிலையான அர்ப்பணிப்பு மற்றும் முதலீடு இல்லாமல் பெண் பிறப்புறுப்பு சிதைவுக்கு முடிவு இல்லை" (Towards 2030: No End To FGM Without Sustained Commitment and Investment)
வரலாறு மற்றும் முக்கியத்துவம்:
  • ஐக்கிய நாடுகள் சபை (UN) 2012-ம் ஆண்டில் இந்நாளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
  • இது பெண்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் ஒரு வன்முறைச் செயலாகக் கருதப்படுகிறது.
  • இலக்கு: ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்கு (SDG) 5.3-ன் படி, 2030-ம் ஆண்டிற்குள் இந்த நடைமுறையை முற்றிலுமாக ஒழிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


பிப்ரவரி 7 முதல் 14 பிப்ரவரி வரை - காதலர் வாரம்

  • முக்கிய காதலர் தினம் பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது, கூடுதல் நிகழ்வுகள் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 14 ஆம் தேதி வரை நீடிக்கும்.



TNPSC Current Affairs Quiz: February - (06.02.2026 TO 07.02.2026) :

  • படித்தது போதும்! உங்கள் அறிவை சோதிக்க இந்த வினாடி வினாவை முயற்சிக்கவும்: 
  • Test your knowledge: TNPSC CURRENT AFFAIRS QUIZ: February (06.02.2026 TO 07.02.2026)  (TAMIL & ENGLISH) 


DOWNLOAD PDF : TNPSC CURRENT AFFAIRS IN TAMIL JANUARY 2026 :




OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!


Download Daily TNPSC current affairs PDF in Tamil for February 06 to 07, 2026 for TNPSC Group 1, 2, & 4 exams.

tnpsc-current-affairs-in-tamil-february-06-07-2026



 


Post a Comment

0Comments

Post a Comment (0)