TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய குறிப்புகள்: TNPSC Current Affairs in Tamil: February 08 to 09, 2026| (PDF) : (Key Takeaways for Exam):
வணக்கம் Tnpsc Aspirants! பிப்ரவரி 08 முதல் 09, 2026 வரையிலான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வர்களுக்கான முக்கிய நடப்பு நிகழ்வுகள் மற்றும் முக்கியக் GK குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் மலேசிய பயணத்தால் 2026 ஏற்பட்ட பலன்கள்:
- மலேசியப் பிரதமர் டத்தோ திரு அன்வர் இப்ராஹிமின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026 பிப்ரவரி 7 முதல் 8 வரை மலேசியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார்.
- இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நாகரிக தொடர்புகளின் அடிப்படையில் ஆழமான வேரூன்றிய நட்பு, மக்களுக்கு இடையேயான நீடித்த உறவுகளைப் பிரதிபலித்தது.
- இந்தியா-மலேசியா விரிவான உத்திசார் ஒத்துழைப்பை மேலும் ஒருங்கிணைத்து விரிவுபடுத்துவதற்கான இரு தலைவர்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இது மீண்டும் உறுதிப்படுத்தியது.
கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்/ ஆவணங்கள்:
1. இந்தியாவுக்கும் மலேசிய அரசுக்கும் இடையிலான ஒலி-ஒளி கூட்டு தயாரிப்பு ஒப்பந்தம்
2. பேரிடர் மேலாண்மையில் ஒத்துழைப்புக்காக இருதரப்புக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்
3. ஊழலை எதிர்த்துப் போராடுவதிலும் தடுப்பதிலும் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
4. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
5. செமிகண்டக்டர் துறையில் ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தம்
6. சர்வதேச புலிகள் கூட்டணி தொடர்பான கட்டமைப்பு ஒப்பந்தம்
7. மலேசியாவில் உள்ள இந்திய மக்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்த ஒத்துழைப்பு ஒப்பந்தம்.
8. தொழிற்கல்வி, பயிற்சி ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தம்
9. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கும் மலேசியாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தம்
10. சுகாதாரம், மருத்துவத் துறையில் ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தம்
11. 10-வது மலேசியா-இந்தியா தலைமைச் செயல் அதிகாரிகள் மன்றத்தின் அறிக்கை சமர்ப்பிப்பு
அறிவிப்புகள்:
1. மலேசியாவில் இந்திய துணைத் தூதரகத்தை நிறுவுதல்
2. கோலாலம்பூரில் மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் மையம் நிறுவுதல்
2. கோலாலம்பூரில் மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் மையம் நிறுவுதல்
3. மலேசிய நாட்டினருக்கான திருவள்ளுவர் உதவித்தொகை நிறுவனம் அமைத்தல்
4. நாடு கடந்த பணப்பரிவர்த்தனை தொடர்பான ஒத்துழைப்பு
5. சைபர்ஜெயா பல்கலைக்கழகம் - ஆயுர்வேத பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இடையே கல்வி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
4. நாடு கடந்த பணப்பரிவர்த்தனை தொடர்பான ஒத்துழைப்பு
5. சைபர்ஜெயா பல்கலைக்கழகம் - ஆயுர்வேத பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இடையே கல்வி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
ஜிப்மரில் “JAI-HO” சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பயணம்
- புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில், சர்வதேச விபத்து சிகிச்சை மாநாட்டின் (ISATC–2026) ஒரு பகுதியாக “JAI-HO” (JIPMER Accident and Injuries Halting Objective) என்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பயணம் 2026, பிப்ரவரி 8 அன்று நடைபெற்றது.
முக்கிய அம்சங்கள்:
- நோக்கம்: சாலை பாதுகாப்பு, விபத்து தடுப்பு மற்றும் காயங்களைக் குறைப்பதன் அவசியத்தை பொதுமக்களிடையே வலியுறுத்துவது.
- நிகழ்வு: இந்த நடைப்பயணம் புதுச்சேரி ராக் கடற்கரை பகுதியில் நடைபெற்றது. இதை புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ரச்சனா சிங் தொடங்கி வைத்தார்.
- பங்கேற்பாளர்கள்: ஜிப்மர் பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 800 பேர் இதில் கலந்துகொண்டனர்.
- மாணவர்களின் பங்களிப்பு: சுபிக்ஷம் அகாடமி மாணவர்கள் சாலை பாதுகாப்பு குறித்த ஓவியங்கள் மற்றும் போஸ்டர்களைக் காட்சிப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- முக்கிய செய்தி: "தடுக்கப்படும் ஒவ்வொரு விபத்தும் காக்கப்படும் ஒரு உயிர்" என்ற செய்தியுடன் இந்த விழிப்புணர்வு பேரணி நிறைவடைந்தது.
இந்திய-AI தாக்க உச்சிமாநாடு 2026 (Seven Chakras of India–AI Impact Summit 2026):
- பிப்ரவரி 16 முதல் 20, 2026 வரை புதுடெல்லியில் நடைபெறவுள்ள "இந்திய-AI தாக்க உச்சிமாநாடு 2026" (India–AI Impact Summit 2026) குறித்த முக்கிய தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இது 'குளோபல் சவுத்' (Global South) பிராந்தியத்தில் நடத்தப்படும் முதல் உலகளாவிய AI உச்சிமாநாடாகும்.
உலகின் சிறந்த ஆசிரியர் விருது 2026:
- காஷ்மீரைச் சேர்ந்த சமூக சேவகரும், ஓவியக் கலைஞருமான ரூபிள் நாகி (Rouble Nagi) அவர்களுக்கு இந்த ஆண்டிற்கான 'உலகின் சிறந்த ஆசிரியர் விருது' வழங்கப்பட்டுள்ளது.
- பரிசுத் தொகை: இந்த விருதுடன் சுமார் 9 கோடி ரூபாய் ரொக்கப் பரிசும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- கல்விப் பணி: இவர் இந்தியாவில் உள்ள குடிசைப் பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதை ஒரு இயக்கமாகவே நடத்தி வருகிறார். இதுவரை 800-க்கும் மேற்பட்ட கல்வி மையங்களை குடிசைப் பகுதிகளிலேயே உருவாக்கியுள்ளார்.
- புதுமையான கற்பித்தல்: சுவர் ஓவியங்கள் (Murals) மற்றும் கலை மூலமாக குழந்தைகளுக்கு புதுமையான முறையில் கல்வியை போதித்து வருகிறார்.
- எதிர்காலத் திட்டம்: தனக்கு கிடைத்த பரிசுத் தொகையைக் கொண்டு, காஷ்மீரில் ஒரு பள்ளியைத் தொடங்க இருப்பதாகவும், அங்கு ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக தொழிற்கல்வி மற்றும் டிஜிட்டல் கல்வி பயிற்சிகளை வழங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
- கலைத் தகுதி: இவர் ஒரு சிறந்த ஓவியர். இவரது 850-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் உலகம் முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் ஓவியக் கண்காட்சி நடத்த அழைக்கப்பட்ட முதல் கலைஞர் இவராவார்.
தேசிய குவான்டம் கம்ப்யூட்டர் மையத்துக்கு அடிக்கல்:
- ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள தூளூரு (Uddandarayunipalem) பகுதியில் 'அமராவதி குவான்டம் வேலி' (AQV) திட்டத்திற்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
- திட்டத்தின் நோக்கம்: இந்தியாவை உலகளாவிய குவான்டம் தொழில்நுட்பப் புரட்சியில் முன்னிலைப்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். அமெரிக்காவின் சிலிகான் வேலிக்கு இணையாக இது 'குவான்டம் வேலி'யாக உருவாக்கப்பட உள்ளது.
- பரப்பளவு மற்றும் முதலீடு: இதற்காக ஆந்திர அரசு 50 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. இது மத்திய அரசின் ரூ.6,000 கோடி மதிப்பிலான 'தேசிய குவான்டம் மிஷன்' (National Quantum Mission) திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
- முக்கிய அம்சங்கள்: * நாட்டின் முதல் 133 க்யூபிட் (Qubit) திறன் கொண்ட குவான்டம் கம்ப்யூட்டர் இங்கு நிறுவப்பட உள்ளது.
- இதற்காக IBM, TCS மற்றும் L&T போன்ற முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
- இந்த மையம் கம்ப்யூட்டிங், சென்சார், தகவல் தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு, பாதுகாப்புத் துறை மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் புரட்சியை ஏற்படுத்தும்.
- காலக்கெடு: இந்த மையத்தின் கட்டிடப் பணிகள் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவடைந்து, டிசம்பர் 2026-க்குள் குவான்டம் கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி: சுமார் 35 லட்சம் மாணவர்களுக்கு குவான்டம் தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பல்லாயிரக்கணக்கான உயர் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
- சிறப்பு: போஸ்டன், சிங்கப்பூர், ஷாங்காய் போன்ற நகரங்களுக்கு இணையாக அமராவதி உலகத்தரம் வாய்ந்த குவான்டம் மையமாக மாறும் என சந்திரபாபு நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிநவீன சொகுசு கார் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (பிப்ரவரி 9, 2026) திறந்து வைத்தார்:
முக்கியத் தகவல்கள்:
- முதலீடு: இந்த ஆலை சுமார் ரூ. 9,000 கோடி மதிப்பிலான மெகா திட்டமாகும். இதன் முதல் கட்டமாக ரூ. 900 கோடி முதலீட்டில் பணிகள் நிறைவடைந்துள்ளன.
- வேலைவாய்ப்பு: இந்த ஆலையின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற தமிழக இளைஞர்கள் இங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
- ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR): உலகப் புகழ்பெற்ற சொகுசு கார் பிராண்டான ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) கார்கள் முதன்முறையாகத் தமிழ்நாட்டில் இங்கு தயாரிக்கப்பட உள்ளன.
- முதல் வாகனம்: இன்று நடைபெற்ற விழாவில், இந்த ஆலையில் தயாரிக்கப்பட்ட முதல் 'ரேஞ்ச் ரோவர் எவோக்' (Range Rover Evoque) காரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்ததுடன், அவரே அந்த காரை ஓட்டியும் பார்த்தார்.
- சாதனை வேகம்: இந்தத் திட்டத்திற்கு செப்டம்பர் 2024-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. பொதுவாக 3-4 ஆண்டுகள் ஆகும் இத்தகைய பணிகளை, வெறும் 16 மாதங்களில் முடித்து உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது ஒரு பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.
- ரத்தன் டாடாவிற்கு மரியாதை: இந்த வளாகத்தில் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா அவர்களின் திருவுருவச் சிலையை முதலமைச்சர் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.
திட்டத்தின் சிறப்பு:
- இது 470 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு பசுமைத் தொழிற்சாலை (Greenfield Project) ஆகும்.
- இங்கு பெட்ரோல், டீசல் வாகனங்கள் மட்டுமின்றி, எதிர்காலத்தில் மின்சார வாகனங்களும் (EV) தயாரிக்கப்பட உள்ளன.
- ஆண்டுக்கு சுமார் 2.5 லட்சம் முதல் 3 லட்சம் கார்கள் வரை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தனியார் விண்வெளி நிறுவனம் விண்வெளியில் உள்ள மற்ற நாடுகளின் செயற்கைக்கோள்களைக் கண்காணிக்கும் (Snooping) தொழில்நுட்பத்தில் சாதனை படைத்துள்ளது :
- சாதனை: ஹரியானாவைச் சேர்ந்த அசிஸ்டா (Azista BST Aerospace - ABA) என்ற இந்தியத் தனியார் விண்வெளி நிறுவனம், விண்வெளியில் அதிவேகமாகச் சென்று கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) மிகத் துல்லியமாகப் புகைப்படம் எடுத்து சாதனை படைத்துள்ளது.
- தொழில்நுட்பம்: இது 'இன்-ஆர்பிட் ஸ்னூப்பிங்' (In-Orbit Snooping) என்று அழைக்கப்படுகிறது. அதாவது, பூமியில் இருந்து விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஒரு செயற்கைக்கோள், விண்வெளியில் உள்ள மற்றொரு செயற்கைக்கோளைப் பின்தொடர்ந்து சென்று கண்காணிப்பதாகும்.
- AFR செயற்கைக்கோள்: அசிஸ்டா நிறுவனத்தின் AFR (Azista First Remote-sensing) செயற்கைக்கோள், சுமார் 245 கி.மீ முதல் 300 கி.மீ தொலைவில் இருந்தபடி சர்வதேச விண்வெளி நிலையத்தைப் படம் பிடித்துள்ளது.
- ராணுவ முக்கியத்துவம்: இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் எதிரி நாடுகளின் செயற்கைக்கோள்கள் எங்கே செல்கின்றன, அவை இந்தியாவை உளவு பார்க்கின்றனவா என்பதைக் கண்டறிய முடியும். மேலும், எதிரி நாடுகள் ஏவும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிய இது உதவும்.
- முக்கியத்துவம்: இஸ்ரோ போன்ற அரசு நிறுவனங்கள் ஏற்கனவே இத்தகைய சோதனைகளைச் செய்திருந்தாலும், ஒரு இந்தியத் தனியார் நிறுவனம் முதன்முறையாக இந்த மைல்கல்லை எட்டியிருப்பது விண்வெளித் துறையில் இந்தியாவின் வணிக ரீதியான வளர்ச்சியை உறுதிப்படுத்துகிறது.
- எதிர்காலத் திட்டம்: இதன் மூலம் பாதுகாப்புத் துறை மற்றும் பல்வேறு நாடுகளின் செயற்கைக்கோள் கண்காணிப்புத் தேவைகளுக்கு இந்தியா ஒரு முக்கிய மையமாக மாறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஜப்பானின் வரலாற்றில் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி (Sanae Takaichi) :
- வரலாற்று சாதனை: ஜப்பானின் ஆளும் கட்சியான லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் (LDP) தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், ஜப்பானின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
- அரசியல் பின்புலம்: 64 வயதான சனே தகைச்சி, ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் தீவிர ஆதரவாளர் மற்றும் அவரது அரசியல் கொள்கைகளைப் பின்பற்றுபவர். இவர் தீவிரமான வலதுசாரி மற்றும் பழமைவாதக் கொள்கைகளைக் கொண்டவர்.
- முக்கியப் பதவிகள்: இதற்கு முன்னதாக இவர் ஜப்பானின் உள் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
- கொள்கை நிலைப்பாடு: * பாதுகாப்பு: ஜப்பானின் ராணுவ வலிமையை அதிகரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்.
- பொருளாதாரம்: 'அபேனோமிக்ஸ்' (Abenomics) எனப்படும் பொருளாதாரக் கொள்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல விரும்புபவர்.
- வெளியுறவுக் கொள்கை: சீனா மற்றும் வடகொரியா போன்ற நாடுகளிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க அமெரிக்கா போன்ற நட்பு நாடுகளுடன் வலுவான உறவைப் பேண விரும்புபவர்.
புதுடெல்லியில் நடைபெற்று வரும் ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர வீராங்கனை இளவேனில் தங்கப்பதக்கம் வென்றார்:
முக்கிய சாதனைகள்:
- தனிநபர் பிரிவில் தங்கம்: மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் 252.0 புள்ளிகள் குவித்து இளவேனில் தங்கப்பதக்கம் வென்றார்.
- 3-வது முறையாகச் சாதனை: இதன் மூலம் ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் 3-வது முறையாகத் தங்கம் வென்று (முந்தைய வெற்றிகள்: 2019 மற்றும் கஜகஸ்தான் போட்டி) தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளார்.
- உலக சாதனையுடன் கலப்பு குழு தங்கம்: 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு குழு பிரிவில் அர்ஜுன் பபுதாவுடன் இணைந்து விளையாடிய இளவேனில், 505.0 புள்ளிகள் குவித்து புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.
- குழு பிரிவிலும் தங்கம்: இளவேனில் வாலறிவன், ஆர்யா போர்ஸ் மற்றும் மேகனா சஜ்ஜனார் அடங்கிய இந்திய மகளிர் அணி 1892.6 புள்ளிகளுடன் குழு பிரிவிலும் தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
போட்டியின் சிறப்பம்சங்கள்:
- ஜப்பானின் மிசாகி நொபாடா (251.5 புள்ளிகள்) வெள்ளிப் பதக்கமும், இந்தியாவின் மேகனா சஜ்ஜனார் (229.5 புள்ளிகள்) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
- இளவேனில் தனிநபர், கலப்பு குழு மற்றும் மகளிர் அணி என இந்த ஒரே தொடரில் மூன்று தங்கப் பதக்கங்களை அறுவடை செய்துள்ளார்.
LIST OF IMPORTANT DAYS FEBRUARY 2026 IN TAMIL :
பிப்ரவரி 9 - பாபா ஆம்தேவின் நினைவுநாள்
- பாபா ஆம்தே ஒரு இந்திய சமூக சேவகர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். அவர் குறிப்பாக தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு மற்றும் அதிகாரமளிப்பதற்கான அவரது பணிக்காக அறியப்பட்டார்.
- பழங்குடியின மக்களின் உரிமைகளை ஆதரிப்பவர், அவர் 1973 இல் கட்சிரோலியில் மடியா கோண்ட் பழங்குடியினருக்காக லோக் பிரதாரி பிரகல்ப் என்ற அமைப்பை நிறுவினார். மத பதட்டங்களைத் தணிக்க 1985 இல் பாரத் ஜோடோ யாத்ரா போன்ற நாடு முழுவதும் அமைதி ஊர்வலங்களையும் நடத்தினார். ஆம்தே பெரிய அணைகளை எதிர்த்தார் மற்றும் நர்மதா மீது சர்தார் சரோவர் திட்டத்திற்கு எதிரான இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தார்.
- அவரது பணிக்காக, ஆம்டேவுக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பரிசு, மகசேசே விருது, காந்தி அமைதி பரிசு மற்றும் பத்ம விபூஷன் போன்ற விருதுகள் வழங்கப்பட்டன.
- தலாய் லாமா அவரது பணியைப் பாராட்டினார், "நடைமுறை இரக்கம், உண்மையான மாற்றம் மற்றும் இந்தியாவை வளர்ப்பதற்கான சரியான வழி" என்று அழைத்தார்.
- பல மாதங்களாக இரத்த புற்றுநோயுடன் போராடிய அவர் பிப்ரவரி 9, 2008 அன்று இறந்தார்.
TNPSC Current Affairs Quiz: February - (08.02.2026 TO 09.02.2026) :
- படித்தது போதும்! உங்கள் அறிவை சோதிக்க இந்த வினாடி வினாவை முயற்சிக்கவும்:
- Test your knowledge: TNPSC CURRENT AFFAIRS QUIZ: February (08.02.2026 TO 09.02.2026) (TAMIL & ENGLISH)
DOWNLOAD PDF : TNPSC CURRENT AFFAIRS IN TAMIL FEBRUARY 2026 :
TNPSC Current Affairs in Tamil: February 2026 (1st WEEK ) | PDF Download & Key Notes
- G DRIVE LINK (TAMIL & ENGLISH): TNPSC Current Affairs Feb 2026 PDF
- G DRIVE LINK (TAMIL & ENGLISH): TNPSC Current Affairs Feb 2026 PDF
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!
Download Daily TNPSC current affairs PDF in Tamil for February 08 to 09, 2026 for TNPSC Group 1, 2, & 4 exams.
tnpsc-current-affairs-in-tamil-february-08-09-2026


