2021-22-ஆம் கல்வியாண்டுக்கான அகில இந்திய உயா் கல்வித் துà®±ை ஆய்வு à®®ுடிவுகள்:
நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான கல்லூà®°ிகள் உத்தர பிரதேசத்தில் இருப்பதாகவுà®®், அதைத் தொடா்ந்து, மகாà®°ாà®·்டிà®°à®®், கா்நாடகத்தில் அதிக கல்லூà®°ிகள் இருப்பதாகவுà®®் மத்திய அரசின் அகில இந்திய உயா் கல்வித் துà®±ை ஆய்வில் தெà®°ிய வந்துள்ளது.
நாட்டின் 328 பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த 45,473 கல்லூà®°ிகள் இந்த ஆய்வின்கீà®´் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 42,825 கல்லூà®°ிகள் கடந்த 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான அகில இந்திய உயா் கல்வித் துà®±ை ஆய்வில் பங்கேà®±்றன. அந்த ஆய்வு à®®ுடிவுகள் மத்திய கல்வி à®…à®®ைச்சகத்தால் வெளியிடப்பட்டது.
அதன்படி, கல்லூà®°ிகளின் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம், மகாà®°ாà®·்டிà®°à®®், கா்நாடகம், à®°ாஜஸ்தான், தமிà®´்நாடு, மத்திய பிரதேசம், ஆந்திà®°à®®், குஜராத், தெலங்கானா மற்à®±ுà®®் à®®ேà®±்கு வங்கம் ஆகிய à®®ாநிலங்கள் à®®ுதல் 10 இடங்களில் உள்ளன.
கல்லூà®°ிகளின் விவரங்கள்: ஆய்வில் பங்கேà®±்à®± கல்லூà®°ிகளில் 60 சதவீதத்துக்குà®®் à®®ேலானவை பொதுக் கல்லூà®°ிகள், 8.7 சதவீத கல்லூà®°ிகள் கல்வி அல்லது ஆசிà®°ியா் கல்வியில் சிறப்பு வாய்ந்தவை, 6.1 சதவீத கல்லூà®°ிகள் பொà®±ியியல் மற்à®±ுà®®் தொà®´ில்நுட்ப நிà®±ுவனங்கள், 4.3 சதவீத கல்லூà®°ிகள் செவிலியப் படிப்பு சாா்ந்தவை மற்à®±ுà®®் 3.5 சதவீதம் மருத்துவக் கல்லூà®°ிகள் ஆகுà®®். அதேபோல், 2.7 சதவீத கல்லூà®°ிகள் கவின் கலைப் படிப்புகளை வழங்குகின்றன. 2.4 சதவீதம் மருந்தியல் படிப்புகளுà®®், 0.7 சதவீதம் à®…à®±ிவியல் படிப்புகளுà®®் வழங்குà®®் கல்லூà®°ிகள் ஆகுà®®். 1.4 சதவீத சம்ஸ்கிà®°ுத கல்லூà®°ிகளுà®®் நாட்டில் உள்ளன. ஆய்வில் பங்கேà®±்à®± 42,825 கல்லூà®°ிகளில், 14,197 கல்லூà®°ிகள் à®®ுதுநிலை பட்டப் படிப்புகளை வழங்குகின்றன. 1,063 கல்லூà®°ிகளில் à®®ுனைவா் பட்டப் படிப்புக்கான சோ்க்கை உள்ளது.
மக்கள்தொகை விகிதாசாரப்படி, அதிகமான கல்லூà®°ிகளைக் கொண்ட à®®ாநிலமாக à®’à®°ு லட்சம் பேà®°ுக்கு 66 கல்லூà®°ிகளுடன் கா்நாடகம் à®®ுதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடங்களில் தெலங்கானா (52 கல்லூà®°ிகள்), ஆந்திà®°à®®் (49 கல்லூà®°ிகள்), ஹிà®®ாசல பிரதேசம் (47 கல்லூà®°ிகள்), புதுச்சேà®°ி (53 கல்லூà®°ிகள்), கேரளம் (46 கல்லூà®°ிகள்) ஆகிய à®®ாநிலங்கள் மற்à®±ுà®®் யூனியன் பிரதேசங்கள் உள்ளன.
à®®ாணவா் சோ்க்கை-4.32 கோடி: நாட்டின் à®®ொத்த உயா் கல்வி à®®ாணவா் சோ்க்கை 4 கோடியே, 32 லட்சத்து, 68 ஆயிரத்து, 181 ஆகுà®®். அதில் 96.38 லட்சம் à®®ாணவா்கள் நேரடியாக பல்கலைக்கழகங்களிலுà®®், 3.14 கோடி à®®ாணவா்கள் அதன் கட்டுப்பாட்டிலுள்ள கல்லூà®°ிகளிலுà®®், 21.70 லட்சம் à®®ாணவா்கள் தன்னிà®±ைவு நிà®±ுவனங்களிலுà®®் சோ்ந்து படித்து வருகின்றனா்.
கல்லூà®°ி எண்ணிக்கையில் à®®ுதல் 10 à®®ாநிலங்கள்
- உத்தர பிரதேà®®் 8,375
- மகாà®°ாà®·்டிà®°à®®் 4,692
- கா்நாடகம் 4,430
- à®°ாஜஸ்தான் 3,934
- தமிழகம் 2,829
- மத்திய பிரதேசம் 2,702
- ஆந்திà®°à®®் 2,602
- குஜராத் 2,395
- தெலங்கானா 2,083
- à®®ேà®±்கு வங்கம் 1,514.

