இந்தியாவின் முதல் கடல்சார் வங்கி சாரா நிதி நிறுவனம்:India’s First Maritime NBFC -(Non-Banking Financial Company ):
- துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால் இந்தியாவின் முதல் கடல்சார் வங்கி சாரா நிதி நிறுவனமான சாகர்மாலா நிதிக் கழகம் லிமிடெட்டை(Sagarmala Finance Corporation Limited (SMFCL)) தொடங்கி வைத்தார்.
- முன்பு சாகர்மாலா மேம்பாட்டு நிறுவனம் என அழைக்கப்பட்ட சாகர்மாலா நிதிக் கழகம் இந்தியாவின் கடல்சார் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இப்போது மறு சீரமைக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது இப்போது ரிசர்வ் வங்கியில் வங்கி சாரா நிதி நிறுவனமாக முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
- இந்தப் புதிய நிறுவனம் கடல்சார் துறையில் முக்கியமான நிதி இடைவெளிகளைக் குறைத்து, துறை சார்ந்த நிதி தீர்வுகளை வழங்கும் துறைமுகங்கள், கடல்சார் துறை சார்ந்த குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் போன்றவற்றின் மேம்பாட்டுக்கு இது உதவும் .
வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளின் உற்பத்தி மதிப்பு குறித்த புள்ளி விவர அறிக்கை (2011-12 முதல் 2023-24):
- வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளின் உற்பத்தி மதிப்பு குறித்த புள்ளி விவர அறிக்கையை (2011-12 முதல் 2023-24)” (Statistical Report on Value of Output from Agriculture and Allied Sectors (2011-12 to 2023-24))மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளி விவர அலுவலகம் இன்று வெளியிட்டது. இந்த அறிக்கை அமைச்சகத்தின் https://mospi.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் கிடைக்கும்.
- வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளின் ஒட்டு மொத்த மதிப்புக் கூட்டல்( Gross Value Added (GVA)) நடப்பு விலைகளில் 225 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதாவது 2011-12-ல் ரூ.15 லட்சத்து 2000 கோடி என்பதிலிருந்து 2023-24-ல் ரூபாய் 48 லட்சத்து 78,000 கோடியாக அதிகரித்துள்ளது.
- வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளின் ஒட்டு மொத்த மதிப்புக் கூட்டல்( Gross Value of Output (GVO)) நிலையான விலைகளில் 54.6 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதாவது 2011-12-ல் ரூ.19 லட்சத்து 8000 கோடி என்பதிலிருந்து 2023-24-ல் 29 லட்சத்து 49,000 கோடியாக அதிகரித்துள்ளது.
- தானிய வகைகளில் நெல் மற்றும் கோதுமை நிலையான விலைகளில் ஒட்டு மொத்த உற்பத்தி மதிப்பு 2023-24-ல் 85 சதவீதமாக இருந்தது.
- பழ வகையில் நிலையான விலைகளில் ஒட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் மாம்பழத்தை (46,100 கோடி) வாழைப்பழம் (47,000 கோடி) விஞ்சியது. 2011-12 முதல் 2021-22 வரை ஒட்டு மொத்த பழங்களில் மாம்பழம் நிலையான விலைகளில் ஒட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் முதன்மையானதாக இருந்தது.
ஆதம்யா விரைவு ரோந்து கப்பல்:
- கோவா ஷிப்யார்ட் நிறுவனத்தில் எட்டு விரைவு ரோந்து கப்பல்கள் கட்டும் திட்டத்தின் கீழ் முதலாவது விரைவு ரோந்து கப்பலான ‘ஆதம்யா’ இன்று (ஜூன் 26ம் தேதி) கோவாவில் இந்திய கடலோர காவல்படையுடன் இணைக்கப்பட்டது.
- விரைவு ரோந்து கப்பல்கள் என்பவை கடலோரக் காவல் படையில் உள்ள கப்பல்களில் பிட்ச் ப்ரொப்பல்லர்கள் மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கியர்பாக்ஸ்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட முதலாவது வகை கப்பல்கள் ஆகும். இதன் சிறந்த சூழற்சித்திறன், செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மை ஆகியவை கடற்பகுதி கண்காணிப்புப் பணியில் மேம்பட்ட செயல்திறனை வழங்குகிறது.
- இந்த கப்பலில் 30 மிமீ அளவிலான சிஆர்என்-91 ரக துப்பாக்கி, தீ கட்டுப்பாட்டு அமைப்புகள் ஆகியவற்றுடன் கூடிய இரண்டு 12.7 மிமீ நிலைப்படுத்தப்பட்ட தொலைக்கட்டுப்பாட்டு அமைப்புடன் கூடிய துப்பாக்கிகள், ஒருங்கிணைந்த பாலம் அமைப்பு, ஒருங்கிணைந்த தள மேலாண்மை அமைப்பு, தானியங்கி மின் மேலாண்மை அமைப்பு உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மேம்பட்ட அமைப்புகள், இந்தியாவின் விரிவான கடல்சார் பாதுகாப்புப் பணிகளில் அதிக செயல்திறன் மற்றும் எதிர் தாக்குதல் நடத்துவதற்கான வலிமையையும் கொண்டுள்ளன.
- இந்த ரோந்து கப்பல் கடலோரக் காவல் படையின் வலிமையை அதிகரிப்பதுடன் கடல் பகுதிகளில் கண்காணிப்பு, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் கடல்சார் பிரத்யேக பொருளாதார மண்டலத்தின் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்கிறது.
ஆசிய ஸ்குவாஷ் இரட்டையர் சாம்பியன்ஷிப் தொடர் 2025:
- மலேசியா தலை நகரான கோலாலம்பூரில் ஆசிய ஸ்குவாஷ் இரட்டையர் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதில் ஆடவர் இரட்டையர், மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் என 3 பிரிவிலும் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளது.
- ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில் குமார், அபய் சிங் ஜோடி 2-1 (9-11, 11-5, 11-5) என்ற செட் கணக்கில் பாகிஸ்தானின் நூர் ஜமான், நசீர் இக்பால் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த ஆட்டம் 88 நிமிடங்கள் நடைபெற்றது.
- மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, அனஹத் சிங் ஜோடி இறுதிப் போட்டியில் 2-1 (8-11, 11-9, 11-10) என்ற செட் கணக்கில் மலேசியாவின் அய்னா அமனி, ஸின் யிங் யி ஜோடியை வீழ்த்தியது. இந்த ஆட்டம் 35 நிமிடங்களில் முடிவடைந்தது.
- கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அபய் சிங், அனஹத் சிங் 2-0 (11-9, 11-7) என்ற நேர் செட் கணக்கில் மலேசியாவின் ரேச்சல் அர்னால்ட், அமீசன்ராஜ் சந்திரன் ஜோடியை தோற்கடித்தது. இந்த ஆட்டம் 28 நிமிடங்கள் நடைபெற்றது.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!