புற்றுநோய் தடுப்பு மருந்து:
- எண்டெரோமிக்ஸ்' என்ற எம்- ஆர்என்ஏ மருத்துவ தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான புற்றுநோய் தடுப்பு மருந்து வெகுவிரைவில் பொது பயன்பாட்டுக்கு வரக்கூடும் என்று ரஷிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- புற்றுநோய் சிகிச்சையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆராய்ச்சி மற்றும் பரிசோதனைகளில் இந்த மருந்து மனிதர்களுக்கு மிகுந்த பாதுகாப்பானது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் கீமோதெரபி, கதிர்வீச்சு மருத்துவ முறைகளை எடுத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு செல்லாமல் இந்த மருந்து பாதுகாக்கிறது. நமது உடலிலுள்ள நோயெதிர்ப்பு ஆற்றலை, புற்றுநோய் செல்களுக்கு எதிராகச் செயல்பட வைத்து அவற்றை அழிக்கச் செய்கிறது ‘எண்டெரோமிக்ஸ்'.
- ஏற்கெனவே உள்ள கரோனா கொவிட்-19 தடுப்பூசி/தடுப்பு மருந்தைப் போலவே, இந்த புற்றுநோய் தடுப்பு மருந்தும் அதேபாணியில் எம்-ஆர்என்ஏ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகிறது.
- ரஷியாவின் தேசிய மருத்துவ ஆராய்ச்சி ரேடியாலஜிக்கல் மையம், இங்கெல்ஹார்ட் மாலிகுலர் பயாலஜி நிறுவனத்துடன் (இஐஎம்பி) இணைந்து இம்மருந்தை தயாரித்துள்ளது.
- காலரெக்டல் புற்றுநோய், க்லியோ-பிளாஸ்டோமா(மூளை புற்றுநோய்) ,மெலனோமா உள்ளிட்ட பல வகை புற்றுநோய்களைத் தடுப்பில் இந்த மருந்து மிகுந்த பலனளிக்கும் என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு நோயாளியின் உடல்நலன், அவர்களின் மரபணு சார்ந்து, பிரத்யேகமாக மேற்கண்ட எண்டெரோமிக்ஸ் தடுப்பு மருந்து அந்த நபர்களுக்கு வழங்கப்படும் என்பது கூடுதல் தகவல்.
எம்.ஆர்.என்.ஏ (Messenger RNA - mRNA) என்றால் என்ன?
- எம்.ஆர்.என்.ஏ. என்பது டிஎன்ஏ (DNA) என்ற மூலக்கூறிலிருந்து புரதங்களை உருவாக்குவதற்கான தகவல்களைச் சுமந்து செல்லும் ஒரு மரபணு மூலக்கூறு ஆகும்.
- இது டிஎன்ஏவில் உள்ள மரபணு வழிமுறைகளை, புரதங்களைத் தொகுக்க வேண்டிய இடமான செல்களுக்கு எடுத்துச் செல்கிறது.
18வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் (IESO 2025) :
- 18வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் (IESO 2025) சீனாவின் ஜினிங்கில் நடைபெற்றது. இந்த போட்டியில், இந்தியாவின் லூதியானாவைச் சேர்ந்த மாணவர் ராயன்ஷ் குப்தா ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றார். மேலும், அவர் இந்திய அணியின் தலைவராக செயல்பட்டு தேசியக் கொடியை ஏந்தி அணியை வழிநடத்தினார்.
- இந்த போட்டியில் இந்திய அணி மொத்தம் 7 பதக்கங்களையும் 1 சிறப்பு விருதையும் வென்று, உலக அரங்கில் இந்தியாவின் திறமையை வெளிப்படுத்தியது.
பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் பிரதமர் வாங் சந்திப்பு: இரு நாடுகளிடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின:
- சிங்கப்பூர் அதிபர் லாரன்ஸ் வாங் 3 நாட்கள் பயணமாக டெல்லி வந்துள்ளார். அவருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், நிதித் துறை அமைச்சர் ஜெப்ரி, வர்த்தக துறை அமைச்சர் கான் சியோ ஹுவாங் ஆகியோரும் இந்தியா வந்துள்ளனர்.
- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சிங்கப்பூர் பிரதமர் வாங் சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் அவர் சந்தித்து பேசினார்.
- அப்போது இந்தியா, சிங்கப்பூர் இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத கப்பல் போக்குவரத்து, விமான போக்குவரத்து பயிற்சி, செமி கண்டக்டர் உள்ளிட்ட துறைகளில் திறன்சார் பயிற்சி, செயற்கைக்கோள் தகவல் பரிமாற்றம், வங்கி, முதலீடு சார்ந்த தகவல் பரிமாற்றம் ஆகியவை தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
- கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் சென்னை, ஹைதராபாத், புவனேஸ்வர், கான்பூர், லூதியானா நகரங்களில் தேசிய திறன் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்படும். இந்த திட்டம் ரூ.60,000 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி மத்திய அரசு சார்பில் ரூ.30,000 கோடி, மாநில அரசுகள் சார்பில் ரூ.20,000 கோடி, தொழில் நிறுவனங்கள் சார்பில் ரூ.10,000 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இதில் சென்னையில் அமைய உள்ள திறன் பயிற்சி மையத்தை நிறுவ சிங்கப்பூர் அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
தமிழ்நாடு அரசுடன் இந்துஜா குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம் :
- தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஐரோப்பா முதலீட்டு சந்திப்புகளின்போது, இந்துஜா குழுமம், தமிழ்நாடு அரசுடன் மின்சார வாகனம், பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தியில் ரூ. 5,000 கோடி முதலீடு செய்திட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது,
- இதன்மூலம் 1,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மேலும், அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) நிறுவனம் இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மூன்றாவது தொழில் முதலீட்டை அறிவித்துள்ளது.
- சென்னையில் உள்ள அதன் உலகளாவிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப மையத்தை (GITC) ரூ. 176 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்திடவுள்ளது. இதன்மூலம், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான முதல்வர் ஸ்டாலினின் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கான பயணத்தால் தமிழ்நாடு பெற்ற மொத்த முதலீடு ரூ. 13,016 கோடியாக உயர்ந்துள்ளது.
- இதன்மூலம் 17,813 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா ராஜினாமா :
- ஜப்பான் நாட்டின் பிரதமராக இருப்பவர் ஷிகெரு இஷிபா. இவர், லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் சார்பில் பதவி வகிக்கிறார்.
- இந்தாண்டு ஜூலை மாதம் நடந்த பார்லியிhன் மேலவை தேர்தலில் இந்த கட்சிக்கு தோல்வி கிடைத்தது.
- இதனால் ஆளும் கட்சி, பெரும்பான்மையை இழந்து விட்டது இதற்கு பொறுப்பேற்று பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் சிலர் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். தற்போது அவர் தானாகவே ராஜினாமா செய்துள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2025 :
- நடப்பு டென்னிஸ் காலண்டரின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்று அமெரிக்காவில் நடைபெற்று வந்தது.
- இந்தத் தொடரில், நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா மற்றும் அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா ஆகியோர் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்தினர்.
- சுமார் ஒரு மணி நேரம் 34 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் 6-3 என்ற கணக்கில் முதல் செட்டின் சபலென்கா முன்னிலை பெற்றார். அதனைத் தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டில் 5-5 என்ற கணக்கில் சமனிலை பெற்றார் அனிசிமோவா.
- இதனால், இரண்டாவது செட் இறுதியில் டை-பிரேக்கருக்குச் சென்றது. இருப்பினும், உலகின் நம்பர் 1 வீராகனை என்பதை மீண்டும் நிரூபித்த சபலென்கா, 7-6 (3) என்ற கணக்கில் வென்று அமெரிக்க ஓபன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார். 2014 ஆம் ஆண்டு செரீனா வில்லியம்ஸுக்குப் பிறகு அமெரிக்க ஓபன் பட்டத்தை வெற்றிகரமாக தக்கவைத்த முதல் பெண் பெருமையையும் சபலென்கா பெற்றுள்ளார்.
- அமெரிக்க ஓபன் கோப்பை சபலென்காவுக்கு நான்காவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். கிம் கிளிஸ்டர்ஸ், அரான்ட்சா சான்செஸ் விகாரியோ, நவோமி ஒசாகா மற்றும் ஹனா மண்டிகோவா ஆகியோருடன் இந்தச் சாதனையை சமன் செய்துள்ளார் சபலென்கா.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!
current-affairs-in-tamil-05th-07th-september-2025