டிசம்பர் மாதம் 2025 (03.12.2025-04.12.2025) முக்கிய நடப்பு நிகழ்வுகள் :
உலகின் முதல் 100 ராணுவ தளவாட தயாரிப்பு நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவின் 3 பொதுத் துறை நிறுவனங்கள்:
- ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, ராணுவ தளவாட உற்பத்தியில் உலகளவில் முன்னணியில் உள்ள 100 நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்திய நிறுவனங்கள் மற்றும் அவற்றின் தரவரிசை:
- ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (HAL): 3.8 பில்லியன் டாலர் விற்பனையுடன் 44-வது இடத்தில் உள்ளது.
- பாரத் எலக்ட்ரானிக்ஸ் (BEL): 2.4 பில்லியன் டாலர் விற்பனையுடன் 58-வது இடத்தில் உள்ளது.
- மசாகன் டாக்ஸ் (MDL): 1.2 பில்லியன் டாலர் விற்பனையுடன் 91-வது இடத்தில் உள்ளது.
முக்கியத் தகவல்கள்:
- இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும், சர்வதேச ஆயுத விற்பனையில் இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்து கடந்த ஆண்டு நிலவரப்படி 1.1% பங்களிப்பை மட்டுமே வழங்கியுள்ளன.
- சர்வதேச அளவில் ஆயுத விற்பனை 2024-ல் 5.9% அதிகரித்து சுமார் ரூ.61 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
- இந்தப் பட்டியலில் அமெரிக்காவின் லாக்கீட் மார்ட்டின் (Lockheed Martin) நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயால் உயிரிழப்போர் எண்ணிக்கை 81% குறைந்தது:
- உலக எய்ட்ஸ் நோய் தினத்தை முன்னிட்டு, மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா அவர்கள் 'இந்தியா எச்ஐவி உத்தேசம் 2025' என்ற ஆய்வின் முடிவுகளை வெளியிட்டார்.
முக்கியத் தகவல்கள்:
- உயிரிழப்புகள் குறைவு: 2010 ஆம் ஆண்டு முதல் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி, இந்தியாவில் எய்ட்ஸ் நோயால் உயிரிழப்போர் எண்ணிக்கை 81% குறைந்துள்ளது.
- புதிய பாதிப்புகள் குறைவு: புதிதாக எச்ஐவி நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 49% குறைந்துள்ளது.
- மொத்த பாதிப்பு விகிதம்: தற்போது இந்தியாவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 0.2% அளவில் உள்ளது.
- சிகிச்சை பெறுவோர்: எச்ஐவி பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 14.9 லட்சத்திலிருந்து 18.6 லட்சமாக அதிகரித்துள்ளது.
- வடகிழக்கு மாநிலங்கள்: மிசோரம், நாகாலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு சதவீதம் அளவுக்கு உள்ளது, இது தேசிய அளவைவிட 5 மடங்கு அதிகமாகும்.
- பிற அதிக பாதிப்புள்ள பகுதிகள்: மேகாலயா, பஞ்சாப் மாநிலங்களிலும் போதைப் பழக்கம் மற்றும் பாலியல் காரணங்களால் இளம் வயதினரிடையே எச்ஐவி பாதிப்பு அதிகமாக உள்ளது.
- மொத்த எச்ஐவி பாதித்தோர் (2024): 2024 ஆம் ஆண்டுப் புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவில் 25.6 லட்சம் மக்கள் எச்ஐவி பாதிப்புடன் வாழ்ந்து வருகின்றனர். இதில் 74% பேர் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வசிக்கின்றனர்.
இந்தியாவில் 811 பேருக்கு 1 மருத்துவர்: மத்திய அரசு தகவல்:
- இந்தியாவில் மருத்துவர் - மக்கள் தொகை விகிதம் 1:811 ஆக உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.
முக்கியப் புள்ளிவிவரங்கள்:
- அலோபதி மருத்துவர்கள்: 13,88,185
- ஆயுஷ் மருத்துவ முறை மருத்துவர்கள்: 7,51,768
- விகிதம் கணக்கீடு: அலோபதி மற்றும் ஆயுஷ் மருத்துவ முறைகளில் பதிவு செய்த மருத்துவர்களில் 80% பேர் தற்போது பயிற்சியில் இருப்பதாகக் கருதப்பட்டால், இந்த 1:811 என்ற விகிதம் மதிப்பிடப்பட்டுள்ளது.
- மருத்துவக் கல்வி வளர்ச்சி: நாட்டில் மருத்துவக் கல்லூரிகள், இளங்கலை மற்றும் முதுகலை இடங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது:
- மருத்துவக் கல்லூரிகள்: 2014-ல் 387 ஆக இருந்தது, தற்போது 818 ஆக உயர்ந்துள்ளது.
- இளங்கலை இடங்கள்: 51,348-லிருந்து 1,28,875 ஆக உயர்ந்துள்ளது.
- முதுகலை இடங்கள்: 31,185-லிருந்து 82,059 ஆக உயர்ந்துள்ளது.
ஊரகப் பகுதிகளுக்கான திட்டங்கள்:
- பின்தங்கிய, கிராமப்புற மற்றும் பழங்குடிப் பகுதிகளில் மருத்துவர்களின் கிடைப்பை மேம்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
- புதிய மருத்துவக் கல்லூரிகள்: மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட 157 மருத்துவக் கல்லூரிகளில் 137 புதிய மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன.
- குடும்ப தத்தெடுப்பு திட்டம்: கிராமப்புற மக்களுக்குச் சிறப்பான சேவை வழங்குவதற்காக, குடும்ப தத்தெடுப்பு திட்டம் எம்பிபிஎஸ் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், மருத்துவக் கல்லூரிகள் கிராமங்களைத் தத்தெடுப்பதையும், எம்பிபிஎஸ் மாணவர்கள் அந்தக் கிராமங்களுக்குள் உள்ள குடும்பங்களைத் தத்தெடுக்கும் முறையையும் உள்ளடக்கியது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி நடைபாலம் திறப்பு:
- ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள கைலாசகிரி மலை உச்சியில், இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி நடைபாலம் ('ஸ்கை வாக்') பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.
பாலம் குறித்த முக்கியத் தகவல்கள்:
- அமைவிடம்: விசாகப்பட்டினத்தில் உள்ள கைலாசகிரி மலை உச்சி.
- உயரம்: கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
- நீளம்: இது 55 மீட்டர் நீளமுள்ள ஒரு கேன்டிலிவர் பாலமாக (Cantilever Bridge) கட்டப்பட்டுள்ளது.
- செலவு: விசாகப்பட்டினம் மாநகர வளர்ச்சி ஆணையத்தால் (VMRDA) ரூ.7 கோடி செலவில் கட்டப்பட்டது.
- பயன்படுத்தப்பட்ட பொருட்கள்:பாலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள உயர்தர மூன்று அடுக்கு கண்ணாடிகள் (40 மி.மீ. தடிமன் கொண்டது) ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.40 டன் வலுவூட்டப்பட்ட எஃகு பயன்படுத்தப்பட்டுள்ளது.
- சக்தி: மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் வீசும் புயல் மற்றும் சூறாவளி காற்றைத் தாங்கக்கூடிய வலிமை கொண்டது.
- காட்சிகள்: இந்தப் பாலத்தில் இருந்து வங்காள விரிகுடா, விசாகப்பட்டினம் நகரின் ரம்மியமான காட்சிகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் அழகை ரசிக்க முடியும்.
- நேரம் மற்றும் கட்டணம்: திறந்திருக்கும் நேரம்: தினமும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை.
- கட்டணம்: 15 நிமிடங்களுக்கு ரூ.300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.70 லட்சம் கோடி:
- மத்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ரூ.1,70,276 கோடியாக இருந்தது.
முக்கியத் தகவல்கள்:
- வருடாந்திர வளர்ச்சி: கடந்த 2024 நவம்பர் மாத வசூலுடன் (ரூ.1.69 லட்சம் கோடி) ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டில் ஜிஎஸ்டி வசூல் வெறும் 0.7% மட்டுமே உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி குறைப்பு இதற்குக் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
- அக்டோபர் வசூல்: இதற்கு முந்தைய அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.6% அதிகரித்து ரூ.1.95 லட்சம் கோடியைத் தொட்டது.
- 8 மாத வசூல் (ஏப்ரல்-நவம்பர் 2025): இந்த 8 மாதங்களில் ஜிஎஸ்டி வசூல் 8.9% உயர்ந்து ரூ.14,75,488 கோடியாக அதிகரித்துள்ளது.
- நிகர ஜிஎஸ்டி வருவாய்: நவம்பரில் நிகர அளவிலான ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,52,079 கோடியாக இருந்தது (1.3% உயர்வு).
சஞ்சார் சாத்தி' செயலி கட்டாயம் அல்ல: சர்ச்சைக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி:
- புதிய ஸ்மார்ட்போன்களில் மத்திய அரசின் சைபர் பாதுகாப்பு செயலியான 'சஞ்சார் சாத்தி' (Sanchar Saathi) செயலியை முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்று தொலைத்தொடர்பு அமைச்சகம் உத்தரவிட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்தியை அடுத்து எழுந்த சர்ச்சைக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அரசின் விளக்கம்:
- கட்டாயம் இல்லை: 'சஞ்சார் சாத்தி' செயலி பொதுமக்களுக்குக் கட்டாயம் இல்லை; இது ஒரு தன்னார்வப் பயன்பாட்டுச் சேவையாகவே இருக்கும் என்று தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெளிவுபடுத்தியுள்ளார்.
- நீக்கலாம்: மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தச் செயலியை போனில் முன்கூட்டியே நிறுவி இருந்தாலும், பயனர்கள் விரும்பினால் அதைத் தங்கள் தொலைபேசியில் இருந்து நீக்கிக் கொள்ளலாம் என்றும், நீக்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவித்துள்ளது.
- தனியுரிமைப் பாதுகாப்பு: இந்தச் செயலி மூலம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் கண்காணிக்கப்படாது என்றும், தனியுரிமை முழுவதுமாகப் பாதுகாக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
செயலியின் நோக்கம்:
- அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகள், சைபர் குற்றங்கள் மற்றும் மோசடி அழைப்புகளைக் கட்டுப்படுத்துதல்.
- திருடு போன அல்லது தொலைந்து போன மொபைல்களைப் பயனர்கள் எளிதாகக் கண்டுபிடிக்க/முடக்க உதவுதல்.
- கள்ளத்தனமான மொபைல் இணைப்புகளைக் கண்டறிந்து, போலியான அல்லது தவறாகப் பயன்படுத்தப்படும் IMEI எண்களைக் கண்காணித்து சைபர் மோசடிகளைத் தடுத்தல்.
போர் விமான பைலட் இருக்கை வெளியேற்றும் சோதனை வெற்றி :
- ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (DRDO), போர் விமானங்களில் ஆபத்துக் காலத்தில் பைலட் தப்பிக்க உதவும் இருக்கை வெளியேற்றும் சோதனையை (Pilot Ejection Test) வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
முக்கியத் தகவல்கள்:
- நோக்கம்: அவசர காலத்தில் பைலட் சுவிட்சை ஆன் செய்தால், ராக்கெட் மோட்டார் பொருத்திய இருக்கை விமானத்திலிருந்து வெளியேறி, பாராசூட் உதவியுடன் பைலட்டைப் பாதுகாப்பாகத் தரையிறங்க உதவும்.
- சோதனை: சண்டிகரில் உள்ள பரிசோதனை மையத்தில் இந்தச் சோதனை நடைபெற்றது. மணிக்கு 800 கி.மீ வேகத்தில் சிறப்புத் தண்டவாளத்தில் போர் விமானத்தின் முன்பகுதி செல்லும் போது, பைலட் இருக்கை வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டது.
- பங்களிப்பு: ஏரோ நாட்டிக்கல் மேம்பாட்டு முகமை (ADA) மற்றும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் (HAL) இணைந்து இந்தச் சோதனையை நடத்தின.
- சிறப்பு: இத்தகைய சோதனையை வெற்றிகரமாகச் செய்துள்ள உலகின் முன்னணி நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் தற்போது இணைந்துள்ளது.
அயோத்தியில் 55 ஏக்கரில் கோயில் அருங்காட்சியகம் :
- அயோத்தியில் சர்வதேச தரத்தில் பிரம்மாண்டமான கோயில் அருங்காட்சியகத்தை (Temple Museum) டாடா சன்ஸ் நிறுவனம் அமைக்கவுள்ளது.
முக்கியத் தகவல்கள்:
- நில ஒதுக்கீடு: அருங்காட்சியகம் அமைக்க உ.பி. அரசு முதலில் 25 ஏக்கர் நிலத்தை வழங்கியது. டாடா சன்ஸ் நிறுவனம் கூடுதல் நிலம் கேட்டதைத் தொடர்ந்து, மேலும் 27.102 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டு, மொத்தம் சுமார் 52 ஏக்கர் நிலத்தில் இந்த அருங்காட்சியகம் அமையவுள்ளது.
- டாடா சன்ஸ் பங்களிப்பு: டாடா சன்ஸ் நிறுவனம் தனது சி.எஸ்.ஆர் (CSR) நிதியைப் பயன்படுத்தி, சர்வதேச தரத்தில் இந்த அருங்காட்சியகத்தைக் கட்டி, இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது.
- திராவிடக் கட்டிடக்கலை: இந்த அருங்காட்சியகம் திராவிட பாணி கட்டிடக்கலையில், சர்வதேச நிபுணர்களின் உதவியுடன் அமைக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பயன்கள்: இந்தத் திட்டம் அயோத்திக்கு புதிய கலாச்சார அடையாளத்தை வழங்குவதோடு, சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தி, நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பின்னணி: ராமர் கோயில் திறப்புக்குப் பிறகு அயோத்திக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் (தினமும் 1.5 - 2 லட்சம் பேர்), இந்த அருங்காட்சியகம் முக்கியத்துவம் பெறுகிறது.
கிறிஸ்தவராக மதம் மாறியவர்களுக்கு எஸ்.சி. சலுகைகள் இல்லை - அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு:
- பட்டியலினத்தைச் (SC) சேர்ந்த ஒருவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால், அவருக்கு எஸ்.சி. பிரிவினருக்கான சலுகைகளை வழங்கக்கூடாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம், உத்தர பிரதேச அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
முக்கியத் தகவல்கள்:
- வழக்கு பின்னணி: ஜிதேந்திர சஹானி என்பவர் எஸ்.சி. பிரிவிலிருந்து கிறிஸ்தவராக மாறியவர். இந்து கடவுள்களை அவதூறாகப் பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவர் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
நீதிமன்றத்தின் கருத்து:
- ஒருவர் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவராக மாறினால், அவர் தானாகவே எஸ்.சி. சலுகைகளை இழந்துவிடுகிறார்.
- கிறிஸ்தவ மதத்தில் சாதி முறை இல்லாததால், மதம் மாறிய பிறகு எஸ்.சி. சலுகைகளைப் பெறுவது அரசியல் சட்டத்திற்கு எதிரான மோசடியாகும்.
- இது இடஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கத்திற்கு முரணானது.
அரசுக்கு உத்தரவு:
- பட்டியலினத்தவர் வேறு மதத்திற்கு மாறும்போது அவர்களுக்கான சலுகைகள் நிறுத்தப்படுவதை உ.பி. அரசு உறுதி செய்ய வேண்டும்.
- மாவட்ட ஆட்சியர்கள் 4 மாதங்களுக்குள் இதுபோன்ற நிகழ்வுகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
Current Affairs Quiz - December 2025 - (03.12.2025-04.12.2025)
நடப்பு நிகழ்வுகள் டிசம்பர் 2025 வினாடி வினா - -(03.12.2025-04.12.2025)
Q1. Which Indian Public Sector Undertaking (PSU) secured the highest rank among Indian companies in the SIPRI Top 100 arms-producing companies list?
SIPRI வெளியிட்ட உலகின் முதல் 100 ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள் பட்டியலில், இந்திய நிறுவனங்களில் முதலிடம் பிடித்த பொதுத்துறை நிறுவனம் எது?
- A) Bharat Electronics (BEL)
- B) Mazagon Dock Shipbuilders (MDL)
- C) Hindustan Aeronautics Limited (HAL)
- D) DRDO
Answer: C) Hindustan Aeronautics Limited (HAL)
Explanation:
- According to the SIPRI report, three Indian companies made it to the top 100. Hindustan Aeronautics Limited (HAL) ranked highest at 44th place with sales of $3.8 billion. BEL ranked 58th, and Mazagon Docks ranked 91st. Lockheed Martin (USA) topped the list.
- SIPRI அறிக்கையின்படி, மூன்று இந்திய நிறுவனங்கள் முதல் 100 இடங்களில் உள்ளன. இதில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (HAL) 3.8 பில்லியன் டாலர் விற்பனையுடன் 44-வது இடத்தைப் பிடித்து இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. பெல் (BEL) 58-வது இடத்திலும், மசாகன் டாக்ஸ் 91-வது இடத்திலும் உள்ளன.
Q2. According to the 'India HIV Estimates 2025' released by the Health Ministry, by what percentage have AIDS-related deaths declined in India since 2010?
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட 'இந்தியா எச்ஐவி உத்தேசம் 2025' அறிக்கையின்படி, 2010 முதல் இந்தியாவில் எய்ட்ஸ் நோயால் ஏற்படும் உயிரிழப்புகள் எத்தனை சதவீதம் குறைந்துள்ளன?
- A) 49%
- B) 81%
- C) 25%
- D) 74%
Answer: B) 81%
Explanation:
- AIDS-related deaths in India have declined by 81% since 2010. Furthermore, new HIV infections have reduced by 49%. The current HIV prevalence in India is 0.2%.
- 2010 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் எய்ட்ஸ் நோயால் ஏற்படும் உயிரிழப்புகள் 81% குறைந்துள்ளன. மேலும், புதிதாக நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 49% குறைந்துள்ளது. தற்போது எச்ஐவி பாதிப்பு விகிதம் 0.2% ஆக உள்ளது.
Q3. What is the current Doctor-Population ratio in India as per the recent government data presented in the Rajya Sabha?
மாநிலங்களவையில் அளிக்கப்பட்ட சமீபத்திய மத்திய அரசுத் தகவலின்படி, இந்தியாவில் தற்போதைய மருத்துவர் - மக்கள் தொகை விகிதம் என்ன?
- A) 1:1000
- B) 1:950
- C) 1:811
- D) 1:500
Answer: C) 1:811
Explanation:
- The Doctor-Population ratio in India is 1:811. This calculation assumes 80% availability of registered Allopathic (13.88 lakh) and Ayush (7.51 lakh) doctors.
- இந்தியாவில் மருத்துவர் - மக்கள் தொகை விகிதம் 1:811 ஆக உள்ளது. பதிவு செய்யப்பட்ட அலோபதி (13.88 லட்சம்) மற்றும் ஆயுஷ் (7.51 லட்சம்) மருத்துவர்களில் 80% பேர் பணியில் இருப்பதாகக் கொண்டு இந்த விகிதம் கணக்கிடப்பட்டுள்ளது.
Q4. Where was India's longest glass skywalk bridge (cantilever) recently inaugurated?
இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி நடைபாலம் (Cantilever Bridge) சமீபத்தில் எங்குத் திறக்கப்பட்டது?
- A) Rishikesh, Uttarakhand (ரிஷிகேஷ், உத்தரகாண்ட்)
- B) Wayanad, Kerala (வயநாடு, கேரளா)
- C) Visakhapatnam, Andhra Pradesh (விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம்)
- D) Gangtok, Sikkim (கேங்டாக், சிக்கிம்)
Answer: C) Visakhapatnam, Andhra Pradesh (விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம்)
Explanation:
- India's longest glass skywalk was opened at Kailasagiri in Visakhapatnam. It is 55 meters long, situated at an altitude of about 1,000 feet, and offers views of the Bay of Bengal.
- இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி நடைபாலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கைலாசகிரி மலையில் திறக்கப்பட்டுள்ளது. இது 55 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் கடல் மட்டத்திலிருந்து 1,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
Q5. What was the Gross GST collection recorded in India for the month of November 2025?
நவம்பர் 2025 மாதத்தில் இந்தியாவில் வசூலான மொத்த ஜிஎஸ்டி (GST) தொகை எவ்வளவு?
- A) ₹1.95 Lakh Crore (₹1.95 லட்சம் கோடி)
- B) ₹1.69 Lakh Crore (₹1.69 லட்சம் கோடி)
- C) ₹1.70 Lakh Crore (₹1.70 லட்சம் கோடி)
- D) ₹1.52 Lakh Crore (₹1.52 லட்சம் கோடி)
Answer: C) ₹1.70 Lakh Crore (₹1.70 லட்சம் கோடி)
Explanation:
- The GST collection for November 2025 was ₹1,70,276 Crore (approx. ₹1.70 Lakh Crore). This represents a marginal growth of 0.7% compared to November 2024.
- நவம்பர் 2025-க்கான ஜிஎஸ்டி வசூல் ₹1,70,276 கோடி (சுமார் ₹1.70 லட்சம் கோடி) ஆகும். இது நவம்பர் 2024 உடன் ஒப்பிடும்போது 0.7% மட்டுமே வளர்ச்சியைக் காட்டுகிறது.
Q6.Which company has undertaken the responsibility to build and operate the international-standard Temple Museum in Ayodhya using its CSR funds?
அயோத்தியில் சர்வதேச தரத்தில் கோயில் அருங்காட்சியகத்தை தனது சி.எஸ்.ஆர் (CSR) நிதியைக் கொண்டு கட்டி, இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ள நிறுவனம் எது?
- A) Reliance Foundation (ரிலையன்ஸ் அறக்கட்டளை)
- B) Adani Group (அதானி குழுமம்)
- C) Tata Sons (டாடா சன்ஸ்)
- D) Larsen & Toubro (லார்சன் & டூப்ரோ)
Answer: C) Tata Sons (டாடா சன்ஸ்)
Explanation:
- Tata Sons has come forward to build and operate the grand Temple Museum at international standards using its Corporate Social Responsibility (CSR) funds.
- டாடா சன்ஸ் நிறுவனம் தனது சி.எஸ்.ஆர் (CSR) நிதியைப் பயன்படுத்தி, சர்வதேச தரத்தில் இந்த அருங்காட்சியகத்தைக் கட்டி, இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது.
Q7.Which organization successfully conducted the Pilot Ejection Test to help pilots escape during emergencies in fighter jets?
போர் விமானங்களில் ஆபத்துக் காலத்தில் பைலட் தப்பிக்க உதவும் இருக்கை வெளியேற்றும் சோதனையை (Pilot Ejection Test) வெற்றிகரமாக நடத்திய அமைப்பு எது?
- A) ISRO (இஸ்ரோ)
- B) DRDO (டி.ஆர்.டி.ஓ)
- C) BHEL (பெல்)
- D) BEL (பெல் - பாரத் எலெக்ட்ரானிக்ஸ்)
Answer: B) DRDO (டி.ஆர்.டி.ஓ)
Explanation:
- The Defence Research and Development Organisation (DRDO) successfully conducted this test. It marks a significant milestone in indigenous defence technology.
- ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (DRDO) இந்தச் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இது உள்நாட்டுப் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
Q8.What was the primary rationale cited by the Court for denying SC benefits to those who convert to Christianity?
கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களுக்கு எஸ்.சி. சலுகைகளை மறுப்பதற்கு நீதிமன்றம் கூறிய முக்கிய காரணம் என்ன?
- A) They become economically stable (அவர்கள் பொருளாதார ரீதியாக ஸ்திரமாகிறார்கள்)
- B) There is no caste system in Christianity (கிறிஸ்தவ மதத்தில் சாதி முறை இல்லை)
- C) It violates state laws (இது மாநிலச் சட்டங்களை மீறுகிறது)
- D) Minority quota applies instead (அதற்குப் பதிலாக சிறுபான்மையினர் இடஒதுக்கீடு பொருந்தும்)
Answer: B) There is no caste system in Christianity (கிறிஸ்தவ மதத்தில் சாதி முறை இல்லை)
Explanation:
- The Court observed that since there is no caste system in Christianity, claiming SC benefits after conversion would be a fraud on the Constitution and against the spirit of reservation.
- கிறிஸ்தவ மதத்தில் சாதி முறை கிடையாது என்பதால், மதம் மாறிய பிறகு எஸ்.சி. சலுகைகளைப் பெறுவது அரசியல் சட்டத்திற்கு எதிரான மோசடியாகும் என்றும், இது இடஒதுக்கீட்டின் நோக்கத்திற்கு முரணானது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
current-affairs-in-tamil-03rd-04th-december-2025

.png)
