TNPSC நடப்பு நிகழ்வுகள்: TNPSC Current Affairs in Tamil: Jan 26 to 28, 2026 | (PDF) :
வணக்கம் Tnpsc Aspirants! 2026-ம் ஆண்டின் (ஜனவரி 26 to 28 ) நடைபெற்ற முக்கியமான நடப்பு நிகழ்வுகளைத் (TNPSC Group 1, 2, 4, and VAO exams) தேர்வுக்குத் தயாராகும் வகையில் இங்குத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய குறிப்புகள் (Key Takeaways for Exam):
- இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது:
- டெல்லியில் நடைபெற்ற 77-வது குடியரசு தின விழா :
- தமிழகத்தின் சிறந்த காவல் நிலையம்:
- தமிழக அரசு தொடங்கியுள்ள கடல் ஆமைகளை பாதுகாக்க திட்டம்:
- மாபெரும் தமிழ்க் கனவு' திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது :
- கருப்பைவாய் புற்றுநோயைத் தடுக்கும் வகையில் பள்ளி மாணவிகளுக்குத் தடுப்பூசி வழங்கும் திட்டம் :
- வாராணசி ஆணையர் ராஜலிங்கத்துக்கு "சங்கத் தமிழன்" விருது வழங்கப்பட்டது :
- "இந்தியா எரிசக்தி வாரம் 2026" (India Energy Week 2026) :
இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது:
- இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (India–European Union Free Trade Agreement (India–EU FTA)) கையெழுத்தாகியுள்ளது.
- சுமார் 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.இதனை பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி அறிவித்தார்.
- ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் அன்டோனியோ கோஸ்டாவும், பிரதமர் மோடியும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
டெல்லியில் நடைபெற்ற 77-வது குடியரசு தின விழா :
- தேசியக் கொடி ஏற்றம்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
- சிறப்பு விருந்தினர்கள்: இவ்விழாவில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா (António Costa) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
- முக்கியத் தலைவர்கள்: பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தின் சிறந்த காவல் நிலையம்:
- மதுரை மாநகரில் உள்ள ஜெய்ஹிந்த்புரம் (Jaihindpuram) காவல் நிலையம் தமிழகத்தின் சிறந்த காவல் நிலையமாகத் தேர்வு செய்யப்பட்டு முதலிடம் பிடித்தது.
விருது வழங்கல்:
- சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதற்கான விருதை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய ஆய்வாளர் பூமிநாதன் அவர்களிடம் வழங்கினார்.
மற்ற இடங்கள்:
- இரண்டாம் இடம்: திருப்பூர் காவல் நிலையம்.
- மூன்றாம் இடம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலையம்.
தேர்வுக்கான காரணங்கள்:
- சட்டம் ஒழுங்கை முறையாகப் பராமரித்தல்.
- குற்றங்களைத் தடுத்தல் மற்றும் குறைத்தல்.
- நிலுவை வழக்குகளை விரைந்து முடித்தல்.
- பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ளுதல் மற்றும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தல்.
- காவல் நிலையத்தின் சுத்தம் மற்றும் சுகாதாரம்.
கூடுதல் தகவல்:
- ஆய்வாளர் பூமிநாதன் இதற்கு முன்பே மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது, அந்த காவல் நிலையம் இரண்டு முறை சிறந்த காவல் நிலையத்திற்கான விருதைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இது அவர் பெறும் மூன்றாவது விருதாகும்.
தமிழக அரசு தொடங்கியுள்ள கடல் ஆமைகளை பாதுகாக்க திட்டம்:
- தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இனப்பெருக்கத்திற்காக கடற்கரைக்கு வரும் கடல் ஆமைகளைப் மீன்பிடி இழுவலைகளிலிருந்து பாதுகாத்திட மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை மூலம் மீனவர்களுக்கு ரூ 6.40 கோடி மதிப்பீட்டில் ஆமை விலக்கு சாதனங்களை (Turtle Excluder Device) விலையில்லாமல் வழங்கும் திட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- TNPSC KEY NOTES : தமிழக அரசின் கடல் ஆமைகள் பாதுகாப்புத் திட்டம்
மாபெரும் தமிழ்க் கனவு' திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது :
- நிதி ஒதுக்கீடு: ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை நடத்த தமிழக அரசு ரூ.1 கோடியே 8 லட்சத்து 75 ஆயிரம் (ரூ.1.08 கோடி) நிதி ஒதுக்கியுள்ளது.
- திட்டத்தின் நோக்கம்: தமிழ் மண்ணின் சிறப்புகள், தமிழர் மரபு, நாகரிகம், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு மற்றும் சமூகப் பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பது.
பயிற்சி விவரங்கள்:
- பயனாளிகள்: நடப்பு கல்வியாண்டில் சுமார் 1,500 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். (தொடக்கத்தில் 1,200 எனத் திட்டமிடப்பட்டு பின்னர் அதிகரிக்கப்பட்டுள்ளது).
- இடங்கள்: சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 மண்டலங்களில் இப்பயிற்சி நடைபெறும்.
- முறை: மாதம் ஒரு மண்டலம் வீதம், 3 மாதங்களில் மொத்தம் 12 அணிகளாகப் பிரிக்கப்பட்டு பயிற்சி வழங்கப்படும்.
- அமைப்பு: ஒவ்வொரு அணியிலும் சராசரியாக 100 பேர் இருப்பார்கள். இவர்களுக்கு 2 நாட்கள் உண்டு உறைவிடப் பயிற்சி அளிக்கப்படும்.
கருப்பொருள்:
- மொழிப்பற்றாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆய்வறிஞர்களைக் கொண்டு சிறப்பு அமர்வுகள் நடத்தப்படும்.
- ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் கல்லூரிகளில் சிறப்புச் சொற்பொழிவுகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கருப்பைவாய் புற்றுநோயைத் தடுக்கும் வகையில் பள்ளி மாணவிகளுக்குத் தடுப்பூசி வழங்கும் திட்டம் :
திட்டத்தின் நோக்கம்:
- கருப்பைவாய் புற்றுநோயை (Cervical Cancer) ஏற்படுத்தும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தொற்றைத் தடுப்பதற்காக மாணவிகளுக்குத் தடுப்பூசி வழங்குதல்.
தொடக்கம்:
- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
- இதனுடன், "தமிழ்நாடு புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு இயக்கத்தின்" (Tamil Nadu Cancer Care Mission) செயல்திட்ட ஆவணத்தையும் அவர் வெளியிட்டார்.
பயனாளிகள் & இலக்கு:
- 14 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசி வழங்கப்படும்.
- தமிழகம் முழுவதும் சுமார் 3,38,649 பெண் குழந்தைகளுக்குத் தடுப்பூசி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- முதற்கட்டமாக, புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ள தர்மபுரி, பெரம்பலூர், திருவண்ணாமலை மற்றும் அரியலூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 30,209 மாணவிகளுக்கு இத்தடுப்பூசி வழங்கப்படுகிறது.
நிதி ஒதுக்கீடு:
- 2025-26 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்திற்காக ரூ.36 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
முக்கியத் தகவல்:
- இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 1.2 லட்சம் பெண்களுக்குக் கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. தமிழகத்தில் மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்தபடியாகப் பெண்களை அதிகம் பாதிப்பது இதுவேயாகும்.
- தடுப்பூசி மூலம் இந்த நோயைத் தடுக்க முடியும் என்பதால் அரசு இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளது.
வாராணசி ஆணையர் ராஜலிங்கத்துக்கு "சங்கத் தமிழன்" விருது வழங்கப்பட்டது :
- பெறுநர்: வாராணசி மண்டல ஆணையரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான ராஜலிங்கம் ஐ.ஏ.எஸ்.
- விருது: "சங்கத் தமிழன்" விருது.
- வழங்கிய அமைப்பு: பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் செயல்படும் "காசி தமிழ்ச் சங்கம்".
- நிகழ்வு: பனாரஸ் இந்து பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்ற பொங்கல் விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.
விருதுக்கான காரணங்கள்:
- பிரதமர் மோடியின் தொகுதியான வாராணசியில் மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தியது.
- "காசி தமிழ்ச் சங்கமம்" நிகழ்ச்சியை கடந்த 4 ஆண்டுகளாகச் சிறப்பாக நடத்தி வருவது.
- வாராணசியில் தமிழ் மொழி கற்பிக்கப்படுவதை ஊக்குவித்தது (இவர் ஆலோசனையின் பேரில் காசி தமிழ்ச் சங்கம் தமிழ் வகுப்புகளை நடத்துகிறது).
ராஜலிங்கம் பற்றிய குறிப்புகள்:
- சொந்த ஊர்: தென்காசி மாவட்டம், கடையநல்லூர்.
- கல்வி: திருச்சி என்.ஐ.டி-யில் வேதியியல் பொறியியல் பட்டம்.
- பணி: முதலில் 2007-ல் ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்றார். பின்னர் தமிழை விருப்பப் பாடமாக எடுத்து 2008-ல் ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்றார்.
- பேச்சு: விழாவில் பேசிய அவர், "காசியில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். காசி தமிழ்ச் சங்கம் மூலமாகத் தமிழ்நாட்டின் பெருமையைப் பரப்புவது அவசியம்," என்று குறிப்பிட்டார்.
"இந்தியா எரிசக்தி வாரம் 2026" (India Energy Week 2026) :
முதலீட்டு அழைப்பு:
- பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் வளர்ந்து வரும் எரிசக்தித் துறையில் உள்ள ரூ.46 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு உலக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
- "இந்தியாவில் தயாரியுங்கள், இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்" என்ற கோரிக்கையை அவர் முன்வைத்தார்.
முக்கிய இலக்குகள்:
- எண்ணெய் & எரிவாயு: 2030-க்குள் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் ரூ.9.1 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
- சுத்திகரிப்புத் திறன்: நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்புத் திறன் தற்போது ஆண்டுக்கு 26 கோடி டன்னாக உள்ளது. இதை 30 கோடி டன்னாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
- எரிவாயுப் பயன்பாடு: இந்தியாவின் மொத்த எரிசக்தித் தேவையில் 15 சதவீதத்தை திரவமயமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) மூலம் பூர்த்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
துறைசார் வளர்ச்சி:
- ஆய்வுப் பரப்பு: எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுப் பரப்பை 10 லட்சம் சதுர கிலோமீட்டராக விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்தமான் நிக்கோபார் வடிநிலம் ஒரு முக்கியப் பகுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கப்பல் கட்டுதல்: எல்என்ஜி (LNG) போக்குவரத்துக்குத் தேவையான கப்பல்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சமீபத்தில் ரூ.70,000 கோடி மதிப்பிலான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி விவரம்:
- இந்த நிகழ்ச்சி கோவா மாநிலம் பனாஜியில் தொடங்கியது. இதில் பிரதமர் மோடி காணொலி வாயிலாகப் பங்கேற்றுப் பேசினார்.
- எரிசக்தித் துறையில் உலகின் முதல் ஐந்து ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
IMPORTANT DAYS AND DATES IN JANUARY 2026 IN TAMIL :(ஜனவரி 26 to 28, 2026) :
ஜனவரி 26, 2026:
77-வது குடியரசு தினம் (Republic Day): - இந்தியா ஒரு குடியரசு நாடாக மலர்ந்த தினத்தை (1950) நினைவுகூரும் வகையில் நாடு முழுவதும் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும் நாள். இது தேசிய விடுமுறை தினமாகும்.
சர்வதேச சுங்க தினம் (International Customs Day): - சர்வதேச சுங்க தினம் (International Customs Day) ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது
- உலகப் பொருளாதாரத்தில் சுங்கத் துறையின் பங்கை அங்கீகரிக்கும் விதமாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
- நோக்கம்: உலகளாவிய வர்த்தகம் மற்றும் எல்லை பாதுகாப்பை உறுதி செய்வதில் சுங்க அதிகாரிகளின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
- 2026-ஆம் ஆண்டின் கருப்பொருள் (Theme): "விழிப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் சமூகத்தைப் பாதுகாக்கும் சுங்கத்துறை" (Customs protecting society through vigilance and commitment) என்பது இந்த ஆண்டிற்கான மையக்கருத்தாகும்.
- வரலாறு: உலக சுங்க அமைப்பு (WCO) 1953-ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் தனது முதல் அமர்வை நடத்தியது. இதனை நினைவுகூரும் வகையில் 1983-ஆம் ஆண்டு முதல் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
ஜனவரி 27, 2026 :
சர்வதேச ஹோலோகாஸ்ட் நினைவு தினம் (International Holocaust Remembrance Day): - சர்வதேச ஹோலோகாஸ்ட் நினைவு தினம் (International Holocaust Remembrance Day) ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 27 அன்று அனுசரிக்கப்படுகிறது.
- இரண்டாம் உலகப் போரின் துயரங்களை நினைவுகூரவும், அமைதியை வலியுறுத்தவும் ஐநா சபையால் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
- நிறுவனம்: நவம்பர் 2005-ல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் (UN General Assembly) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
- நோக்கம்: இனப்படுகொலை பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துதல், சகிப்புத்தன்மையின்மையை எதிர்த்தல் மற்றும் ஹோலோகாஸ்ட் கல்வியை ஊக்குவித்தல்.
- முக்கியத்துவம்: இனவெறி, மதவெறி மற்றும் குழு-இலக்கு வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
- 2026 தீம்: "Bridging Generations" (தலைமுறைகளை இணைத்தல்).
ஜனவரி 28, 2026 :
தரவு பாதுகாப்பு தினம் (Data Privacy Day): - சர்வதேச தரவு பாதுகாப்பு தினம் (Data Privacy Day) அல்லது தரவு தனியுரிமை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 28 அன்று உலகளவில் அனுசரிக்கப்படுகிறது.
- இணைய உலகில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை (Personal Data) எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாள்.
- விழிப்புணர்வு: டிஜிட்டல் உலகில் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
- சிறந்த நடைமுறைகள்: தரவு பாதுகாப்பு குறித்த சிறந்த வழிமுறைகளை தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மத்தியில் மேம்படுத்துதல்.
- வரலாற்று பின்னணி: 1981-இல் தரவு பாதுகாப்பிற்கான உலகின் முதல் சர்வதேச ஒப்பந்தமான Convention 108 கையெழுத்தான தினத்தை நினைவுகூரும் வகையில் 2006-இல் ஐரோப்பிய கவுன்சில் இந்த தினத்தை அறிவித்தது.
- 2026 கருப்பொருள் (Theme): இந்த ஆண்டிற்கான மையக்கருத்து "உங்கள் தரவைக் கட்டுப்படுத்துங்கள்" (Take Control of Your Data) என்பதாகும்.
- இந்தியாவின் நிலை: இந்தியா தனது 2023-ஆம் ஆண்டின் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தின் (DPDP Act) மூலம் குடிமக்களின் தரவு உரிமைகளை உறுதிப்படுத்துகிறது.
லாலா லஜபதி ராய் பிறந்த நாள்: - இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், 'பஞ்சாப் சிங்கம்' என்று அழைக்கப்படும் லாலா லஜபதி ராய் அவர்களின் பிறந்த தினம்.
- சுதந்திரப் போராட்ட வீரர் லாலா லஜபதி ராய் அவர்களின் பிறந்த நாள் ஜனவரி 28, 1865 ஆகும்.
- பிறந்த இடம்: பஞ்சாப் மாநிலம், மோகா மாவட்டத்தில் உள்ள துடிக் கிராமம்.
- சிறப்புப் பெயர்: "பஞ்சாப் சிங்கம்" (Lion of Punjab) அல்லது "பஞ்சாப் கேசரி" என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.
- முக்கியத்துவம்: பாலகங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆகியோருடன் இணைந்து புகழ்பெற்ற "லால் பால் பால்" மூவர் கூட்டணியில் ஒருவராகத் திகழ்ந்தார்.
- பங்களிப்பு: பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் லட்சுமி காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றைத் தோற்றுவிப்பதில் முக்கிய பங்காற்றினார்.
ஜனவரி 26, 2026:
77-வது குடியரசு தினம் (Republic Day):
- இந்தியா ஒரு குடியரசு நாடாக மலர்ந்த தினத்தை (1950) நினைவுகூரும் வகையில் நாடு முழுவதும் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும் நாள். இது தேசிய விடுமுறை தினமாகும்.
சர்வதேச சுங்க தினம் (International Customs Day):
- சர்வதேச சுங்க தினம் (International Customs Day) ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது
- உலகப் பொருளாதாரத்தில் சுங்கத் துறையின் பங்கை அங்கீகரிக்கும் விதமாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
- நோக்கம்: உலகளாவிய வர்த்தகம் மற்றும் எல்லை பாதுகாப்பை உறுதி செய்வதில் சுங்க அதிகாரிகளின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
- 2026-ஆம் ஆண்டின் கருப்பொருள் (Theme): "விழிப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் சமூகத்தைப் பாதுகாக்கும் சுங்கத்துறை" (Customs protecting society through vigilance and commitment) என்பது இந்த ஆண்டிற்கான மையக்கருத்தாகும்.
- வரலாறு: உலக சுங்க அமைப்பு (WCO) 1953-ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் தனது முதல் அமர்வை நடத்தியது. இதனை நினைவுகூரும் வகையில் 1983-ஆம் ஆண்டு முதல் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
ஜனவரி 27, 2026 :
சர்வதேச ஹோலோகாஸ்ட் நினைவு தினம் (International Holocaust Remembrance Day):
- சர்வதேச ஹோலோகாஸ்ட் நினைவு தினம் (International Holocaust Remembrance Day) ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 27 அன்று அனுசரிக்கப்படுகிறது.
- இரண்டாம் உலகப் போரின் துயரங்களை நினைவுகூரவும், அமைதியை வலியுறுத்தவும் ஐநா சபையால் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
- நிறுவனம்: நவம்பர் 2005-ல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் (UN General Assembly) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
- நோக்கம்: இனப்படுகொலை பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துதல், சகிப்புத்தன்மையின்மையை எதிர்த்தல் மற்றும் ஹோலோகாஸ்ட் கல்வியை ஊக்குவித்தல்.
- முக்கியத்துவம்: இனவெறி, மதவெறி மற்றும் குழு-இலக்கு வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
- 2026 தீம்: "Bridging Generations" (தலைமுறைகளை இணைத்தல்).
ஜனவரி 28, 2026 :
தரவு பாதுகாப்பு தினம் (Data Privacy Day):
- சர்வதேச தரவு பாதுகாப்பு தினம் (Data Privacy Day) அல்லது தரவு தனியுரிமை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 28 அன்று உலகளவில் அனுசரிக்கப்படுகிறது.
- இணைய உலகில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை (Personal Data) எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாள்.
- விழிப்புணர்வு: டிஜிட்டல் உலகில் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
- சிறந்த நடைமுறைகள்: தரவு பாதுகாப்பு குறித்த சிறந்த வழிமுறைகளை தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மத்தியில் மேம்படுத்துதல்.
- வரலாற்று பின்னணி: 1981-இல் தரவு பாதுகாப்பிற்கான உலகின் முதல் சர்வதேச ஒப்பந்தமான Convention 108 கையெழுத்தான தினத்தை நினைவுகூரும் வகையில் 2006-இல் ஐரோப்பிய கவுன்சில் இந்த தினத்தை அறிவித்தது.
- 2026 கருப்பொருள் (Theme): இந்த ஆண்டிற்கான மையக்கருத்து "உங்கள் தரவைக் கட்டுப்படுத்துங்கள்" (Take Control of Your Data) என்பதாகும்.
- இந்தியாவின் நிலை: இந்தியா தனது 2023-ஆம் ஆண்டின் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தின் (DPDP Act) மூலம் குடிமக்களின் தரவு உரிமைகளை உறுதிப்படுத்துகிறது.
லாலா லஜபதி ராய் பிறந்த நாள்:
- இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், 'பஞ்சாப் சிங்கம்' என்று அழைக்கப்படும் லாலா லஜபதி ராய் அவர்களின் பிறந்த தினம்.
- சுதந்திரப் போராட்ட வீரர் லாலா லஜபதி ராய் அவர்களின் பிறந்த நாள் ஜனவரி 28, 1865 ஆகும்.
- பிறந்த இடம்: பஞ்சாப் மாநிலம், மோகா மாவட்டத்தில் உள்ள துடிக் கிராமம்.
- சிறப்புப் பெயர்: "பஞ்சாப் சிங்கம்" (Lion of Punjab) அல்லது "பஞ்சாப் கேசரி" என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.
- முக்கியத்துவம்: பாலகங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆகியோருடன் இணைந்து புகழ்பெற்ற "லால் பால் பால்" மூவர் கூட்டணியில் ஒருவராகத் திகழ்ந்தார்.
- பங்களிப்பு: பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் லட்சுமி காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றைத் தோற்றுவிப்பதில் முக்கிய பங்காற்றினார்.
TNPSC Current Affairs Quiz: January - (26.01.2026 TO 28.01.2026) :
- படித்தது போதும்! உங்கள் அறிவை சோதிக்க இந்த வினாடி வினாவை முயற்சிக்கவும்: Test your knowledge:
DOWNLOAD PDF : TNPSC CURRENT AFFAIRS IN TAMIL JANUARY 2026 :
- G DRIVE LINK : TNPSC Current Affairs January 2026 PDF (JAN 01 TO 09 )
- G DRIVE LINK : TNPSC Current Affairs January 2026 PDF (JAN 01 TO 09 )
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!
Download Daily TNPSC current affairs PDF in Tamil for Jan 26 to 28, 2026 for TNPSC Group 1, 2, & 4 exams.
tnpsc-current-affairs-in-tamil-january-26-28-2026