இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் 'கிரேட் நிகோபார் மேம்பாட்டுத் திட்டம்' (Great Nicobar Island Project) மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளது.
சமீபத்தில், இத்திட்டத்திற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) அனுமதி வழங்கியுள்ளது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு, குறிப்பாக TNPSC குரூப் 1, 2 மற்றும் 4 தேர்வர்களுக்கு இந்தத் திட்டம் குறித்த தகவல்கள் மிகவும் முக்கியமானவை.
இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள், அதன் நோக்கம் மற்றும் தேர்வு நோக்கில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களைக் காண்போம்.
கிரேட் நிகோபார் திட்டம் என்றால் என்ன? (What is Great Nicobar Project?)
- மத்திய அரசின் நிதி ஆயோக் (NITI Aayog) மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக் கழகம் (ANIIDCO) ஆகியவை இணைந்து முன்னெடுக்கும் ஒரு பிரம்மாண்டமான திட்டமே கிரேட் நிகோபார் திட்டம். இது இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கிரேட் நிகோபார் தீவில் செயல்படுத்தப்பட உள்ளது.
ரூ.80,000 கோடி மதிப்பிலான 'கிரேட் நிகோபார்' (Great Nicobar) வளர்ச்சித் திட்டத்திற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) பிப்ரவரி 16, 2026 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது:
- திட்ட அனுமதி: அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் செயல்படுத்தப்பட உள்ள ரூ.80,000 கோடி மதிப்பிலான 'கிரேட் நிகோபார்' (Great Nicobar) வளர்ச்சித் திட்டத்திற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) பிப்ரவரி 16, 2026 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
- மனுத் தள்ளுபடி: இத்திட்டத்திற்கு எதிராக சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆஷிஷ் கோத்தாரி தொடர்ந்த வழக்கை, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவத்ஸவா தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது.
- தீர்ப்பின் சாராம்சம்: இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இருப்பதாகவும், இதில் தலையிடத் தகுந்த காரணங்கள் இல்லை என்றும் தீர்ப்பாயம் கூறியுள்ளது. இருப்பினும், சுற்றுச்சூழல் நிபந்தனைகளை அதிகாரிகள் முழுமையாகவும், கண்டிப்பாகவும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
கிரேட் நிகோபார்' (Great Nicobar) வளர்ச்சித் திட்ட விவரங்கள்:
- மதிப்பு: ரூ.80,000 கோடி.
- பரப்பளவு: இத்திட்டம் 166 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் செயல்படுத்தப்பட உள்ளது (இதில் 130 சதுர கி.மீ. வனப்பகுதியும் அடங்கும்).
- உள்ளடக்கம்: இத்திட்டத்தில் சரக்கு பெட்டக மாற்று முனையம் (International Container Transshipment Terminal), ஒருங்கிணைந்த நகரம் (Township), ராணுவ மற்றும் சிவில் பயன்பாட்டிற்கான விமான நிலையம், மற்றும் 450 MVA திறன் கொண்ட எரிவாயு மற்றும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.
- சரக்கு பெட்டக மாற்று முனையம் (International Container Transshipment Terminal - ICTT): கலாத்தியா வளைகுடா (Galathea Bay) பகுதியில் மிகப் பெரிய சரக்கு கப்பல்களைக் கையாளும் வகையில் இது அமைக்கப்படும்.
- சர்வதேச விமான நிலையம் (International Airport): ராணுவம் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக (Dual-use) ஒரு புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும்.
- மின் உற்பத்தி நிலையம் (Power Plant): 450 MVA திறன் கொண்ட எரிவாயு மற்றும் சூரியசக்தி (Gas and Solar based) மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது.
- நகரக் கட்டமைப்பு (Township): இப்பகுதியில் குடியேற்றங்களுக்காகவும், வர்த்தகத்திற்காகவும் ஒரு ஒருங்கிணைந்த நகரம் (Township) உருவாக்கப்படும்.
TNPSC தேர்வு நோக்கில் முக்கிய குறிப்புகள் (Exam Points)
- TNPSC தேர்வுகளில் இது புவியியல் (Geography), பொருளாதாரம் (Economy) மற்றும் சுற்றுச்சூழல் (Environment) ஆகிய தலைப்புகளின் கீழ் கேட்கப்படலாம்.
- இந்திரா முனை (Indira Point): இந்தியாவின் தென்கோடி முனையான இந்திரா முனை கிரேட் நிகோபார் தீவில் தான் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- கலாத்தியா வளைகுடா: இது ஆலிவ் ரிட்லி ஆமைகள் மற்றும் லெதர் பேக் ஆமைகள் முட்டையிடும் தளங்களுக்குப் பெயர் பெற்றது.
- பழங்குடியின மக்கள்: கிரேட் நிகோபார் தீவில் 'ஷோம்பென்' (Shompen) மற்றும் 'நிகோபாரிஸ்' (Nicobarese) ஆகிய பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.

