TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய குறிப்புகள்: TNPSC Current Affairs in Tamil: February 13 to 15, 2026| (PDF) : (Key Takeaways for Exam):
வணக்கம் Tnpsc Aspirants! பிப்ரவரி 13 முதல் 15, 2026 வரையிலான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வர்களுக்கான முக்கிய நடப்பு நிகழ்வுகள் மற்றும் முக்கியக் GK குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அனைத்துலக வள்ளலார் மாநாடு 2026 :
- சென்னை, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடைபெற்ற அனைத்துலக வள்ளலார் மாநாடு 2026-ல் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வள்ளலார் நினைவைப் போற்றும் வகையில் 7 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
- ஆண்டுதோறும் முப்பெரும் விழா: வள்ளலார் பிறந்தநாளையொட்டி இனி ஆண்டுதோறும் மூன்று நாட்கள் விழா நடத்தப்படும்.
- நினைவுத் தூண்: மாநாடு நடைபெற்ற பள்ளி வளாகத்தில் நினைவுத் தூண் அமைக்கப்படும்.
- சன்மார்க்கப் பயிற்சிப் பள்ளி: வடலூரில் சன்மார்க்கப் பயிற்சிப் பள்ளி உருவாக்கப்பட்டு, அதில் திருவருட்பா இசைப்பயிற்சியும் அளிக்கப்படும்.
- மூலிகைத் தோட்டம்: வடலூரில் வள்ளலார் பெயரில் மூலிகைத் தோட்டம் அமைக்கப்படும்.
- புத்தகம் வெளியீடு: 'ஸ்பிரிச்சுவல் அல்-கெமி' (Spiritual Alchemy) என்ற வள்ளலார் புத்தகம் வெளியிடப்படும்.
- அன்னதானக் கூடங்கள்: மேட்டுக்குப்பம், மருதூர், கருங்குழி ஆகிய இடங்களில் 'வள்ளலார் அன்னதானக் கூடங்கள்' திறக்கப்படும்.
- வள்ளலார் பூங்கா: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள பூங்காவிற்கு 'வள்ளலார் பூங்கா' எனப் பெயர் சூட்டப்படும்.
- ஆய்வு மையம்: சென்னையில் வள்ளலார் ஆய்வு மையம் அமைக்கப்படும்.
‘நொய்யல்’, ‘நாவாய்’ அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்:
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 15 பிப்ரவரி 2026 அன்று, ஈரோடு மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அமையவுள்ள இரண்டு புதிய அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதன் மொத்த மதிப்பீடு ரூ.68 கோடியாகும்.
1. நொய்யல் அருங்காட்சியகம் (ஈரோடு):
- அமைவிடம்: ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், கருமாண்டி செல்லிபாளையம்.
- மதிப்பீடு: ரூ.33.19 கோடி (5.98 ஏக்கர் பரப்பளவில்).
- நோக்கம்: நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள கொடுமணல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட இரும்பு உருக்காலைகள், ரோமானிய நாணயங்கள் மற்றும் அரிய தொல்பொருட்களைக் காட்சிப்படுத்துவதற்காக இது அமைக்கப்படுகிறது.
2. நாவாய் அருங்காட்சியகம் (ராமநாதபுரம்):
- அமைவிடம்: ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதி.
- மதிப்பீடு: ரூ.34.55 கோடி (சுமார் 5 ஏக்கர் பரப்பளவில்).
- நோக்கம்: அழகன்குளம் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களைக் கொண்டு, பண்டைய தமிழர்களின் கடல்வழி வணிகத் தொடர்புகளை விளக்கும் வகையில் இது அமையும்.
நூல் வெளியீடு:
- இவ்விழாவில் "தமிழ்நாட்டின் பாறை ஓவியங்கள்" (Rock Art of Tamil Nadu) என்ற நூலையும் முதலமைச்சர் வெளியிட்டார்.
- பேராசிரியர் கா. ராஜன் மற்றும் முனைவர் இரா. சிவானந்தம் எழுதிய இந்நூலில், தமிழகத்தின் 46 பாறை ஓவியத் தளங்கள் குறித்த விரிவான தகவல்களும், 682 வண்ண நிழற்படங்களும் இடம்பெற்றுள்ளன.
மாபெரும் சோழர் அருங்காட்சியகத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்:
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படவுள்ள மாபெரும் சோழர் அருங்காட்சியகத்திற்கு 14 பிப்ரவரி 2026 அன்று அடிக்கல் நாட்டினார்.
முக்கிய தகவல்கள்:
- அமைவிடம்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகம் (சுமார் 50 ஏக்கர் பரப்பளவில்).
- மதிப்பீடு: ரூ.56.41 கோடி.
- நோக்கம்: சோழர்களின் வரலாற்றுப் பங்களிப்புகள், கலைப்பொருட்கள் மற்றும் நினைவுச் சின்னங்களைப் பாதுகாத்து, எதிர்காலத் தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையில் இது அமையும்.
அருங்காட்சியகத்தின் சிறப்பம்சங்கள்:
இந்த அருங்காட்சியகத்தில் கீழ்க்கண்ட தலைப்புகளில் தனித்தனி காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட உள்ளன:
- சங்ககாலச் சோழர்கள் மற்றும் அவர்களது வரலாறு
- கட்டடக்கலை, நகரமைப்பு மற்றும் நீர் மேலாண்மை
- சோழர் காலச் செப்புப் படிமங்கள் மற்றும் கற்சிற்பங்கள்
- சமூக வாழ்வு, பொருளாதாரம் மற்றும் இலக்கியம்
- கடல் கடந்த வாணிபம் மற்றும் கடற்படை வலிமை
- நிர்வாகம் மற்றும் ஆட்சி முறை
ஸ்டார்ட் அப் இந்தியா நிதி 2.0 (Startup India Fund 2.0) திட்டத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்:
- 2016-ல் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் இந்தியா (Startup India) திட்டம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், ரூ.10,000 கோடி நிதியுடனான ஸ்டார்ட் அப் இந்தியா நிதி 2.0 (Startup India Fund 2.0) திட்டத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.
முக்கியத் தகவல்கள்:
- அறிமுகம்: 2016-ல் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
- புதிய திட்டம்: ரூ.10,000 கோடி நிதியுதவியுடன் கூடிய 'ஸ்டார்ட் அப் இந்தியா நிதி 2.0' திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஒப்புதல்: பிரதமர் மோடி தனது புதிய அலுவலகமான 'சேவா தீர்த்தத்தில்' தனது முதல் நாளில் இத்திட்டத்திற்கான கோப்பில் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்தார்.
- பிற கையெழுத்துகள்: இதே நாளில், ஏழைகள், விவசாயிகள் மற்றும் பெண்கள் ஆகியோரின் அதிகாரமளிப்பு தொடர்பான கோப்புகளிலும் பிரதமர் கையெழுத்திட்டார்.
'கம்பைன்ட் டாஸ்க் போர்ஸ் 154' (Combined Task Force 154) என்ற சர்வதேச கடல் பாதுகாப்பு குழுவின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது :
- சர்வதேச தலைமை: இந்திய கடற்படை வரலாற்றில் முதல்முறையாக, 46 நாடுகள் அங்கம் வகிக்கும் 'கம்பைன்ட் டாஸ்க் போர்ஸ் 154' (Combined Task Force 154) என்ற சர்வதேச கடல் பாதுகாப்பு குழுவின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.
- பக்ரைன் தலைமையகம்: உலகின் மிகப்பெரிய கடல் பாதுகாப்பு கூட்டமைப்பான இது, பக்ரைனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இதுவரை இத்தாலி வசம் இருந்த இந்தத் தலைமைப் பொறுப்பு தற்போது இந்தியாவிடம் வந்துள்ளது .
- முக்கிய பணிகள்: நடுகடலில் நடக்கும் பயங்கரவாதம், கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் மற்றும் சட்டவிரோத கடத்தல்களைத் தடுப்பதே இந்தப் படையின் முக்கிய வேலை .
- பயிற்சி அளிக்கும் பொறுப்பு: இந்திய பெருங்கடல் பகுதியில் நடக்கும் மாற்றங்களைக் கண்காணிப்பதுடன், மற்ற நாட்டு கடற்படை வீரர்களுக்குப் பயிற்சியளிக்கும் பொறுப்பும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன் முக்கியத்துவம்:
- இந்தியாவின் 95% வர்த்தகம் கடல் வழியாகவே நடைபெறுவதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த கடல் பாதுகாப்பு மிக அவசியமானது
- அமெரிக்க தலைமையிலான இந்தக் கூட்டணியில் இந்தியா இணைந்து குறுகிய காலத்திலேயே இவ்வளவு பெரிய பொறுப்பு கிடைத்திருப்பது உலக நாடுகளை வியக்க வைத்துள்ளது
- இதன் மூலம் இந்திய பெருங்கடல் பகுதி இனி இந்தியாவின் முழு கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது
இந்திய போர் விமான இன்ஜின் தயாரிக்கிறது ரோல்ஸ்-ராய்ஸ்:
- இந்தியாவில் உற்பத்தி: ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது வணிகத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் அடுத்த தலைமுறை போர் விமானங்களுக்கான இன்ஜின்களை உள்நாட்டிலேயே கூட்டாக இணைந்து தயாரிக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
- பிரதமருடனான சந்திப்பு: ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி துஃபான் எர்கின்பில்கிக், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- வேலைவாய்ப்பு: இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்குக்கும் மேல் அதிகரித்து, 10,000 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வாய்ப்பு: இந்திய விநியோகச் சங்கிலி (Supply Chain) மூலம் மேற்கொள்ளப்படும் கொள்முதலை 10 மடங்கு அதிகரிக்கவும், இதில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
- முக்கிய சந்தை: பிரிட்டனுக்கு அடுத்தபடியாக இந்தியாவை தனது மூன்றாவது மிகப்பெரிய சந்தையாக மாற்ற ரோல்ஸ்-ராய்ஸ் இலக்கு நிர்ணயித்துள்ளது.
வங்கதேச நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2026:
- 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி: வங்கதேசத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசிய கட்சி (BNP), சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சி அமைக்கும் நிலையை எட்டியுள்ளது.
- பெரும்பான்மை: வங்கதேசத்தில் மொத்தம் உள்ள 300 தொகுதிகளில், ஆட்சியமைக்க 151 இடங்கள் தேவை. பிஎன்பி தலைமையிலான 10 கட்சிக் கூட்டணி சுமார் 201 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
- சர்வதேச வாழ்த்துகள்: பிஎன்பி கட்சியின் வெற்றியை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் மற்றும் அமெரிக்க தூதரகம் ஆகியவை தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன.
- ஜமாத்-இ-இஸ்லாமி கேள்வி: தேர்தல் முடிவுகள் மற்றும் அதன் நேர்மை குறித்து ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. அக்கட்சி தலைமையிலான கூட்டணி சுமார் 56 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
- பின்னணி: கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் மாணவர் போராட்டத்தால் ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியா வந்ததை அடுத்து, முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. தற்போது நடந்த இந்தத் தேர்தலில் சுமார் 55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
LIST OF IMPORTANT DAYS FEBRUARY 2026 IN TAMIL :
பிப்ரவரி 13, 2026:
தேசிய மகளிர் தினம் (National Women's Day):
- இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் சரோஜினி நாயுடு அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்தியாவில் தேசிய மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
- அவர் 1879 பிப்ரவரி 13 அன்று ஹைதராபாத்தில் விஞ்ஞானியும் தத்துவஞானியுமான அகோர்நாத் சட்டோபாத்யாயா மற்றும் பரதா சுந்தரி தேவிக்கு மகனாகப் பிறந்தார்.
- அவர் இந்திய தேசிய காங்கிரஸின் முதல் இந்திய பெண் தலைவராகவும், தற்போது உத்தரபிரதேசம் என்று அழைக்கப்படும் ஐக்கிய மாகாணத்தின் ஆளுநராக உள்ள இந்திய மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராகவும் இருந்தார்.
உலக வானொலி தினம் (World Radio Day):
- வானொலியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக உலகம் முழுவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.
பிப்ரவரி 14, 2026 :
காதலர் தினம் (Valentine's Day):
- ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 அன்று, காதலர் தினம் அல்லது செயிண்ட் வாலண்டைன் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- 3 ஆம் நூற்றாண்டில் ரோமில் வாழ்ந்த செயிண்ட் வாலண்டைன் என்ற கத்தோலிக்க பாதிரியாரின் நினைவாக காதலர் தினம் அழைக்கப்படுகிறது.
உலக பிறவி இதயக் குறைபாடு விழிப்புணர்வு தினம்-World Congenital Heart Defect Awareness Day :
- ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 அன்று, பிறவி இதயக் குறைபாடுகள் குறித்து மக்களின் கவனத்தை ஈர்க்கவும், அவற்றைப் பற்றி அறியவும் உலக பிறவி இதயக் குறைபாடு விழிப்புணர்வு தினம் என்று கொண்டாடப்படுகிறது.
பிப்ரவரி 15, 2026 :
சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தினம் (Childhood Cancer Awareness Day):
- சர்வதேச குழந்தைபருவ புற்றுநோய் தினம் என்பது குழந்தைப்பருவ புற்றுநோயை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவை வெளிப்படுத்துவதற்கும், ஆண்டுதோறும் பிப்ரவரி 15-ம் நாள் அனுசரிக்கப்படுகிறது.
- புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உலகில் எங்கு வாழ்ந்தாலும், அவர்களுக்கு சிறந்த சிகிச்சை, கவனிப்பு மற்றும் ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
TNPSC Current Affairs Quiz: February - (13.02.2026 TO 15.02.2026) :
- படித்தது போதும்! உங்கள் அறிவை சோதிக்க இந்த வினாடி வினாவை முயற்சிக்கவும்:
- Test your knowledge: TNPSC CURRENT AFFAIRS QUIZ: February (13.02.2026 TO 15.02.2026) (TAMIL & ENGLISH)
DOWNLOAD PDF : TNPSC CURRENT AFFAIRS IN TAMIL FEBRUARY 2026 :
- G DRIVE LINK (TAMIL & ENGLISH): TNPSC Current Affairs Feb 2026 PDF
- G DRIVE LINK (TAMIL & ENGLISH): TNPSC Current Affairs Feb 2026 PDF
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM


