தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் 2026-27 (Tamil Nadu Interim Budget 2026-27) முக்கிய அறிவிப்புகள்

TNPSC PAYILAGAM
By -
0

 

Tamil Nadu Interim Budget 2026-27 Key points in tamil


தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் 2026-27 (Tamil Nadu Interim Budget 2026-27) முக்கிய அறிவிப்புகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. நிதியமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டின் முக்கிய சிறப்பம்சங்கள்:


பொது மற்றும் மகளிர் நலம்:

  • மகளிர் உரிமைத் தொகை: மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகையுடன், கோடைகால சிறப்புத் தொகையாக ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது.
  • விடியல் பயணம்: பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கும் திட்டம் மூலம் மாதம் சராசரியாக ரூ.888 சேமிக்கிறார்கள்.
  • சொத்து பதிவு: பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கான பதிுக் கட்டணம் 1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
  • சுய உதவி குழுக்கள்: மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.41 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் மாணவர்கள் நலம்:

  • புதுமைப் பெண் திட்டம்: அரசுப் பள்ளியில் படித்து கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் இத்திட்டத்தில் இதுவரை 6,95,296 மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
  • நான் முதல்வன் திட்டம்: 2025 ஆம் ஆண்டு குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த 59 பேரில் 52 பேர் இத்திட்டத்தின் பயனாளிகள்.
  • நூலகங்கள்: போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக ரூ.199 கோடியில் 101 நூலகம் மற்றும் அறிவுசார் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • காலை உணவுத் திட்டம்: 19.34 லட்சம் மாணவர்கள் இத்திட்டத்தால் பயனடைகின்றனர்.
  • கல்வி உதவித்தொகை: சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கு ரூ.16 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வீட்டு வசதி மற்றும் உள்கட்டமைப்பு:

  • கலைஞர் கனவு இல்லம்: 2030-க்குள் 8 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இலங்கைத் தமிழர் மறுவாழ்வு: முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு 10,469 புதிய வீடுகள் கட்ட ரூ.630 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • கிராம சாலைகள்: கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.8,911 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மெட்ரோ ரயில்: சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டப் பணிகள் ரூ.63,246 கோடியில் நடைபெற்று வருகின்றன. பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான மெட்ரோ விரைவில் பயன்பாட்டிற்கு வரும்.
  • தூய்மைப் பணியாளர்கள்: தூய்மைப் பணியாளர்களுக்கு 30,000 புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.

துறை ரீதியான நிதி ஒதுக்கீடு:

  • ஊரக வளர்ச்சித் துறை: ரூ.28,687 கோடி.
  • மருத்துவத் துறை: ரூ.22,090 கோடி.
  • சிறப்புத் திட்டங்கள் செயலாக்கம்: ரூ.17,088 கோடி.
  • உயர் கல்வித் துறை: ரூ.8,505 கோடி.
  • தொழிலாளர் நலத் துறை: ரூ.1,996 கோடி.
  • சுற்றுலாத் துறை: ரூ.1,394 கோடி.
  • மாற்றுத் திறனாளிகள் நலம்: ரூ.1,400 கோடி.
  • இளைஞர் நலன் & விளையாட்டு: ரூ.718 கோடி.

தொழில் மற்றும் பொருளாதாரம்:

  • பொருளாதார வளர்ச்சி: 11.19% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழகம் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது.
  • மின்னணு உற்பத்தி: மின்னணு துறை உற்பத்தியில் 41% பங்களிப்புடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
  • செமி கண்டக்டர் கொள்கை: செமி கண்டக்டர் திட்டத்திற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • கப்பல் கட்டும் கொள்கை: 'தமிழ்நாடு கப்பல் கட்டும் கொள்கை' விரைவில் வெளியிடப்படும்.

பிற முக்கிய அறிவிப்புகள்:

  • கோயில் நிலங்கள் மீட்பு: ரூ.8,363 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. ரூ.8,100 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • அருங்காட்சியகங்கள்: சோழர், நொய்யல், வெண்கல அருங்காட்சியகங்கள் ரூ.285 கோடியில் அமைக்கப்படுகின்றன.
  • இணைய வசதி: 11,953 கிராம ஊராட்சிகளில் 95% கண்ணாடி இழை (Optical Fiber) பதிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

வருவாய் மற்றும் நிதிப் பற்றாக்குறை:

  • வருவாய்ப் பற்றாக்குறை (Revenue Deficit): 2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.48,696.32 கோடி ஆகக் கணிக்கப்பட்டுள்ளது.
  • எதிர்காலக் கணிப்பு: வரி வசூல் மற்றும் நிர்வாகத் திறனை மேம்படுத்துவதன் மூலம், இந்த வருவாய்ப் பற்றாக்குறை 2027-28-ல் ரூ.42,964.61 கோடியாகவும், 2028-29-ல் ரூ.35,115.33 கோடியாகவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • நிதிப்பற்றாக்குறை (Fiscal Deficit): மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) மதிப்பில் நிதிப்பற்றாக்குறை விகிதம் 200 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு நிதிநிலை நிர்வாகப் பொறுப்புடைமைச் சட்ட இலக்கிற்குள் உள்ளது.

கடன் சுமை மற்றும் நிர்வாகம்:

  • மொத்தக் கடன் திட்டம்: 2026-27 ஆம் ஆண்டில் மாநில அரசு ரூ.1,78,308.05 கோடி அளவிற்குப் புதிய கடன் பெறத் திட்டமிட்டுள்ளது.
  • கடன் திரும்பச் செலுத்துதல்: இதே ஆண்டில் ரூ.60,418.42 கோடி பழைய கடனை அரசு திருப்பிச் செலுத்த உள்ளது.
  • நிலுவையில் உள்ள மொத்தக் கடன்: இதன் விளைவாக, 31.03.2027 அன்று மாநிலத்தின் மொத்தக் கடன் சுமை ரூ.10,71,770.34 கோடி (சுமார் 10.71 லட்சம் கோடி) ஆக இருக்கும். இது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 20.35 சதவீதம் ஆகும்.

சென்னை மெட்ரோ ரயில் கடன்:

  • சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டப் பணிகளுக்கான ரூ.9,522.65 கோடி மத்திய அரசின் கணக்கில் சேர வேண்டியது என்றாலும், தற்போதைக்கு இது மாநிலத்தின் மொத்தக் கடனில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • இத்தொகையைத் தவிர்த்தால், மாநிலத்தின் கடன் சுமை விகிதம் இன்னும் குறைவாகவே (20.12%) இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)