TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய குறிப்புகள்: TNPSC Current Affairs in Tamil: February 04 to 05, 2026| (PDF) : (Key Takeaways for Exam):
வணக்கம் Tnpsc Aspirants! பிப்ரவரி 04 முதல் 05, 2026 வரையிலான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வர்களுக்கான முக்கிய நடப்பு நிகழ்வுகள் மற்றும் முக்கியக் GK குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வானிலை மாறுபாடுகளைக் கண்காணிக்கும் வகையில் நாடு முழுவதும் 47 டாப்ளர் வானிலை ரேடார் அமைப்புகள் செயல்பாட்டில் உள்ளன:
- இந்தியாவில் வானிலையில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்து முன்னறிவிப்பு செய்யும் வகையில் நாடு முழுவதும் 47 டாப்ளர் வானிலை ரேடார் அமைப்புகள் செயல்பாட்டில் உள்ளதாக மத்திய புவிஅறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நாட்டின் மொத்த பரப்பளவில் 87 சதவீதம் ரேடார் கண்காணிப்பு அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
- கூடுதலாக வானிலை முன்னறிவிப்பு தொடர்பான செயல்பாடுகளில் இந்தியாவை முன்னணி நாடாக உருவெடுக்கச் செய்யும் வகையில் வானிலை இயக்கம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
- இந்த இயக்கம் வானிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கத்தில் செயல்பட உள்ளது.
- தற்போது மொபைல் செயலி வாயிலான எச்சரிக்கை அமைப்பு செயல்பாட்டில் உள்ளது என்று அவர் கூறினார். வானிலை தொடர்பான முன்னறிவிப்புகள் மற்றுமட் எச்சரிச்கைகள் வானிலை அவசரகால செயல்பாட்டு மையங்களுடன் பகிரப்பட்டு பொது மக்களுக்கு தெரிவிக்கப்படுகின்றன.
- மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
- TNPSC EXAM KEY POINTS : பிரித்வி (PRITHVI - Prithvi Vigyan) திட்டம்:
‘க்ராஃபோர்ட்’ (Crafoord Prize) பரிசு 2026:
- அமெரிக்காவில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த காலநிலை விஞ்ஞானி வீரபத்திரன் ராமநாதன் (82) அவர்களுக்கு, 2026-ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க ‘க்ராஃபோர்ட்’ (Crafoord Prize) பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
- புவி அறிவியலின் நோபல் பரிசு என அழைக்கப்படும் இது, பசுமை இல்ல வாயுக்கள், வளிமண்டல பழுப்பு மேகங்கள் (Atmospheric Brown Clouds) மற்றும் சூப்பர் மாசுக்கள் (Super Pollutants) குறித்து அவர் மேற்கொண்ட தசாப்த கால ஆராய்ச்சிக்காக, சுவீடனின் ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமியால் வழங்கப்படுகிறது.
முக்கிய அம்சங்கள்:
- விருது விவரம்: க்ராஃபோர்ட் பரிசுடன் 8 மில்லியன் சுவீடிஷ் குரோனர் (சுமார் ₹6 கோடிக்கும் மேல்) மற்றும் தங்கப் பதக்கம் மே 2026-ல் வழங்கப்படும்.
- ஆராய்ச்சி பங்களிப்பு: கரியமில வாயுவை விட (CO2) சிஎஃப்சி (CFC) போன்ற பிற வாயுக்கள் வெப்பமயமாதலை 10,000 மடங்கு அதிகமாக பாதிக்கின்றன என்பதைக் கண்டறிந்து, காலநிலையில் மனித தொழில்நுட்பத்தின் தாக்கத்தை முதன்முதலில் நிரூபித்தவர்.
- பின்னணி: மதுரையில் பிறந்து சென்னையில் வளர்ந்த ராமநாதன், நாசாவில் (NASA) தனது ஆராய்ச்சியைத் தொடங்கி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (Scripps Institution of Oceanography) பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
- தாக்கம்: இவரது கண்டுபிடிப்புகள் மாண்ட்ரியல் உடன்படிக்கை (Montreal Protocol) மற்றும் உலகளாவிய சுற்றுச்சூழல் கொள்கைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
- விருது முக்கியத்துவம்: பூமியின் வெப்பநிலை உயர்வு, பனிப்பாறைகள் உருகுதல் மற்றும் பருவமழை மாற்றம் குறித்த புரிதலை உலகிற்கு உணர்த்தியதற்காக, இந்த உயரிய விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தின் புதிய முதலமைச்சர்:
- மணிப்பூர் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த யும்னம் கேம்சந்த் சிங் (Yumnam Khemchand Singh) பிப்ரவரி 4, 2026 அன்று பதவியேற்றுக்கொண்டார்.
முக்கிய அம்சங்கள்:
- பதவியேற்பு: இம்பாலில் உள்ள லோக் பவனில் நடைபெற்ற விழாவில், மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா (Ajay Kumar Bhalla) அவருக்குப் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
- குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து: மணிப்பூரில் கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டிருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி, புதிய அரசு பதவியேற்பதற்கு முன்பாக விலக்கிக் கொள்ளப்பட்டது.
- துணை முதலமைச்சர்கள்: இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாக, இரண்டு துணை முதலமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்:
- குக்கி-ஸோ (Kuki-Zo) சமூகத்தைச் சேர்ந்த நெம்சா கிப்ஜென் (Nemcha Kipgen).
- நாகா (Naga) சமூகத்தைச் சேர்ந்த லோசி டிகோ (Losii Dikho).
- யார் இந்த கேம்சந்த் சிங்?
- இவர் இதற்கு முன்பு மணிப்பூர் சட்டப்பேரவைத் தலைவராகவும் (Speaker), அமைச்சராகவும் பணியாற்றியவர்.
- 62 வயதான இவர், ஒரு சிறந்த தற்காப்புக் கலைஞர் (Taekwondo master) மற்றும் ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பில் நீண்ட காலம் பணியாற்றியவர்.
- முந்தைய முதலமைச்சர் என். பிரேன் சிங் பதவி விலகியதைத் தொடர்ந்து, பாஜக எம்.எல்.ஏ-க்களால் இவர் ஒருமனதாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆழ்கடல் திட்டத்தில் இந்தியா குறிப்பிடத்தக்க சாதனை – மத்திய அமைச்சர் திரு ஜிதேந்திர சிங்:
- இந்தியாவின் ஆழ்கடல் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளதாக டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
- ஆழ்கடல் சுரங்கத் தொழில்நுட்ப மேம்பாடு கடலுக்கு அடியில் ரோபாட்டிக்ஸ் மற்றும் மனிதனின் ஆய்வுகள், ஆழ்கடல் பருவநிலை மாற்றம் குறித்த ஆலோசனை சேவைகள், ஆழ்கடல் பகுதியில் உள்ள பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பு மற்றும் அவற்றை பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் பெருங்கடல் பகுதியிலிருந்து எரிசக்தி மற்றும் நன்னீர் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் ஆழ்கடல் உயிரிகளுக்கான நவீன கடல்சார் நிலையங்களை உருவாக்குவது ஆகிய 6 அம்சங்களில் மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
- கடலுக்கடியில் 6,000 மீட்டர் ஆழத்திற்கு ஆய்வு செய்யும் வகையில் மனிதனை அனுப்பும் இந்தியாவின் முன்னோடித் திட்டத்திற்கான வடிவமைப்பு மற்றும் பொறியியல் சார்ந்த அமைப்பு முறைகளை சிறப்பான நடைமுறையை நிறைவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
- மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் மத்திய புவிஅறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.
வேளாண் கழிவுகளில் இருந்து 'பயோ-பிட்டுமன்' (Bio-Bitumen) தயாரிப்பு :
- மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மக்களவையில் அளித்த தகவலின்படி, வேளாண் கழிவுகளிலிருந்து, குறிப்பாக நெல் வைக்கோலில் இருந்து சாலை போடுவதற்குப் பயன்படும் 'பயோ-பிட்டுமன்' தயாரிக்கும் புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
- உருவாக்கியவர்கள்: மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-CRRI) மற்றும் இந்திய பெட்ரோலிய நிறுவனம் (CSIR-IIP) இணைந்து இந்த தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளன.
- செயல்முறை: 'பைரோலிசிஸ்' (Pyrolysis) என்ற முறை மூலம் பயிர் எச்சங்கள் உயிரி எண்ணெயாக மாற்றப்பட்டு, பின்னர் பிட்டுமனாக மேம்படுத்தப்படுகின்றன.
- பயன்பாடு: சாதாரண பெட்ரோலியம் பிட்டுமனுக்குப் பதிலாக 30% வரை இந்த பயோ-பிட்டுமனை கலந்து பயன்படுத்தலாம்.
நன்மைகள்:
- பொருளாதாரம்: இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ. 4,000 கோடி அந்நியச் செலாவணி மிச்சமாகும்.
- சுற்றுச்சூழல்: விவசாயிகள் பயிர் எச்சங்களை எரிப்பதைத் தவிர்த்து இதற்குப் பயன்படுத்துவதால் காற்று மாசு மற்றும் கார்பன் உமிழ்வு பெருமளவு குறையும்.
- விவசாயிகள் நலன்: கிராமப்புறங்களில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாவதுடன், விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
- தற்போதைய நிலை: வணிக ரீதியான உற்பத்திக்காக இத்தொழில்நுட்பம் 14 தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான தரக் கட்டுப்பாட்டு விதிகளை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க இந்திய ரயில்வேயின் ‘ஏஐ தொழில்நுட்பம்:
- ரயில் தண்டவாளங்களில் யானைகள் அடிபட்டு உயிரிழப்பதைத் தடுக்க, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் இயங்கும் ‘ஊடுருவல் கண்டறியும் அமைப்பு’ உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்திய ரயில்வே மேற்கொண்டுள்ளது.
- இது குறித்து மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார்.
- இந்த ஐடிஎஸ் தொழில்நுட்பமானது, விநியோகிக்கப்பட்ட ஒலி உணரிகள் மூலம் தண்டவாளத்தின் அருகே யானைகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்து, உடனடியாக லோகோ பைலட்டுகள், ரயில் நிலைய மேலாளர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு எச்சரிக்கை செய்யும். தற்போது வடகிழக்கு எல்லை ரயில்வேயில் 141 கி.மீ தூரத்திற்குச் செயல்பாட்டில் உள்ள இந்த வசதி, தெற்கு ரயில்வே (55.85 கி.மீ) உட்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு முக்கிய வழித்தடங்களுக்கும் விரிவாக்கம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- யானைகளின் நடமாட்டம் உள்ள பகுதிகளில் ரயில்களின் வேகத்தைக் குறைத்தல், யானைகள் பாதுகாப்பாகக் கடந்து செல்ல கீழ்ப்பாலங்கள் மற்றும் சரிவுப் பாதைகளை அமைத்தல், தண்டவாளத்தின் அருகே யானைகள் வருவதைத் தவிர்க்க வேலிகள் மற்றும் தேனீக்களின் சத்தம் எழுப்பும் கருவிகளை (Honey Bee buzzers) நிறுவுதல், இரவு நேரங்களில் வனப்பகுதிகளில் சூரிய சக்தியில் இயங்கும் LED விளக்குகள் மற்றும் தெர்மல் கேமராக்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட கூடுதல் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
- கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக 16 யானை விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், வனத்துறையுடன் இணைந்து இத்தகைய விபத்துகளை முற்றிலுமாகத் தவிர்க்கத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
குழந்தை திருமணம் இல்லாத இந்தியா இணையதளம்:
- குழந்தை திருமணம் இல்லாத இந்தியா இணையதளப் பக்கத்தில் (https://stopchildmarriage.wcd.gov.in) 28 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உறுதிமொழி ஏற்றுள்ளனர்.
- குழந்தைத் திருமணம் இல்லாத இந்தியா இயக்கத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் 6 கோடிக்கும் மேற்பட்டவர்களை சென்றடைந்துள்ளது.
- இத்தகவலை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது தெரிவித்தார்.
- TNPSC EXAM KEY POINTS : குழந்தை திருமணமற்ற பாரதம்: மத்திய அரசின் 100 நாள் சிறப்பு பிரச்சாரம் - முழு விவரம்
LIST OF IMPORTANT DAYS FEBRUARY 2026 IN TAMIL :
பிப்ரவரி 4 - உலக புற்றுநோய் தினம்
- ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4 ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் உலகளவில் அனுசரிக்கப்படுகிறது மற்றும் WHO ஆல் புற்றுநோயைப் பற்றியும் அதை எவ்வாறு குணப்படுத்துவது என்றும் மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.
- 2026 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் (Theme): இந்த ஆண்டிற்கான சர்வதேச மையக்கருத்து "United by Unique" என்பதாகும். இதன் தமிழாக்கம்: "தனித்துவத்தால் ஒன்றிணைவோம்" அல்லது "வேற்றுமையில் ஒற்றுமை".
பிப்ரவரி 4 - இலங்கையின் தேசிய தினம்
- ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையின் தேசிய தினம் சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது.
- வரலாற்றுச் சிறப்பு: 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி, இலங்கை (அப்போது 'சிலோன்' என்று அழைக்கப்பட்டது) பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து முழுமையான சுதந்திரம் பெற்றது.
- 2026 ஆம் ஆண்டின் சிறப்பு: இது இலங்கையின் 78-வது சுதந்திர தினமாகும்.
TNPSC Current Affairs Quiz: February - (04.02.2026 TO 05.02.2026) :
- படித்தது போதும்! உங்கள் அறிவை சோதிக்க இந்த வினாடி வினாவை முயற்சிக்கவும்:
- Test your knowledge: TNPSC CURRENT AFFAIRS QUIZ: February (04.02.2026 TO 05.02.2026) (TAMIL & ENGLISH)
DOWNLOAD PDF : TNPSC CURRENT AFFAIRS IN TAMIL FEBRUARY 2026 :
TNPSC Current Affairs in Tamil: February 2026 (1st WEEK ) | PDF Download & Key Notes
- G DRIVE LINK (TAMIL & ENGLISH): TNPSC Current Affairs Feb 2026 PDF
- G DRIVE LINK (TAMIL & ENGLISH): TNPSC Current Affairs Feb 2026 PDF
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!
Download Daily TNPSC current affairs PDF in Tamil for February 04 to 05, 2026 for TNPSC Group 1, 2, & 4 exams.
tnpsc-current-affairs-in-tamil-february-04-05-2026


