2023 தேசிய விளையாட்டு விருதுகள் 2023:
2023-ஆம் ஆண்டிற்கான மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது உள்ளிட்ட விருதுகளைப் பெறும் விளையாட்டு வீரர்களின் விவரங்கள் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது.
கேல் ரத்னா விருது
- ஆசிய பேட்மிணடன் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஆகியோருக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட உள்ளது.
தியான் சந்த் விருது (வாழ்நாள் சாதனை விருது)
| விருது பெறுவோர் | பிரிவு |
| கவிதா செல்வராஜ் (தமிழ்நாடு) | கபடி பயிற்சியாளர் |
| மஞ்ஜுஷா கன்வர் | பாட்மின்டன் |
| வினீத்குமார் சர்மா | ஹாக்கி |
- 2002 முதல் இவ்விருதானது வழங்கப்படுகிறது.
துரோணாச்சார்யா விருது
| விருது பெறுவோர் | பிரிவு |
| ஆர்.பி.ரமேஷ் (தமிழ்நாடு) | செஸ் பயிற்சியாளர் |
| லலித்குமார் | மல்யுத்தம் |
| மகாவீர் பிரசாத் சைனி | பாரா தடகளம் |
| ஷிவேந்திர சிங் | ஹாக்கி |
| கணேஷ் பிரபாகர் | மல்லர்கம்பம் |
- 1985 முதல் இவ்விருதானது வழங்கப்படுகிறது.
துரோணாச்சார்யா விருது (வாழ்நாள் சாதனையாளர் விருது)
| விருது பெறுவோர் | பிரிவு |
| ஜஸ்கிரத்சிங் கிரெவால் | கோல்ப் |
| இ.பாஸ்கரன் | கபடி |
| ஜெயந்தகுமார் புஷிலால் | டேபிள் டென்னிஸ் |
- பயிற்சியாளராக 20 ஆண்டுகளுக்குமேல் சிறந்து செயல்படுபவருக்காக வழங்கப்படுகிறது.
மெளலானா அபுல்கலாம் ஆஸாத் விருது
| விருது பெறுவோர் | இடம் |
| குருநானக் தேவ் பல்கலைக்கழகம் (அமிர்தசரஸ்) | 1வது இடம் |
| லவ்லி தொழில் முறை பல்கலைக்கழகம் (பஞ்சாப்) | 2வது இடம் |
| குருக்சேத்ரா பல்கலைக்கழகம் (குருஷேத்ரம்) | 3வது இடம் |
- பல்கலைக்கழகங்கள் இடையேயான போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவைக்காக 1956 முதல் வழங்கபடுகிறது.
அர்ஜுனா விருது
| விருது பெறுவோர் | பிரிவு |
| வைஷாலி (தமிழ்நாடு) | செஸ் |
| முகமது சமி | கிரிக்கெட் |
| ஓஜாஸ் பிரவீன் தியோடேல் | வில்வித்தை |
| அதிதி சுவாமி | வில்வித்தை |
| முரளி ஸ்ரீ சங்கர் | தடகளம் |
| பாருல் செளதிரி | தடகளம் |
| முகமது ஹசாமுதின் | குத்துச்சண்டை |
| அனுஷ் அகர்வல்லா | குதிரையேற்றம் |
| திவ்யகிருதி சிங் | குதிரையேற்றம் |
| தீக்ஷா தாகர் | கோல்ஃப் |
| கிருஷண் பகதூர் பாதக் | ஹாக்கி |
| சுஷீலா சானு | ஹாக்கி |
| பவன்குமார் | கபடி |
| ரிது நெகி | கபடி |
| நசுரீன் | கோ-கோ |
| பீங்கி | லான் பெளல்ஸ் |
| ஐஸ்வரி பிரதாப்சிங் தோமர் | துப்பாக்கி சுடுதல் |
| ஈஷா சிங் | துப்பாக்கி சுடுதல் |
| ஹிந்தர்பால் சிங் | ஸ்குவாஷ் |
| அஹிகா முகர்ஜி | டேபிள் டென்னிஸ் |
| சுனில்குமார் | மல்யுத்தம் |
| அன்டிம் | மல்யுத்தம் |
| ரோஷிபினா தேவி | வுஷு |
| ஷித்தல் தேவி | பாரா வில்வித்தை |
| அஜய்குமார் ரெட்டி | பார்வையற்றோர் கிரிக்கெட் |
| பிராச்சி யாதவ் | பாரா கேனோயிங் |
- பல்கலைக்கழகங்கள் இடையேயான போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவைக்காக 1956 முதல் வழங்கபடுகிறது.