ஐ.நா.வின் உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG) தரவரிசை 2025:
- ஐ.நா.வின் உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG) தரவரிசையில் இந்தியா முதல்முறையாக முதல் 100 இடங்களுக்குள் நுழைந்துள்ளது.
- உலகில் உள்ள அனைத்து நாடுகளும் கவனம் கொடுக்க வேண்டிய அம்சங்கள் மற்றும் அதற்கான நிலையான வளர்ச்சி இலக்குகளை ஐநா வரையறுத்துள்ளது. அதில் ஆண்டுதோறும் ஏற்படும் முன்னேற்றங்களுக்கு ஏற்ப நாடுகளை அது தரவரிசைப்படுத்துகிறது.
- அதன்படி, 2025-ம் ஆண்டுக்கான உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகள் தரவரிசையை ஐநா இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, 193 நாடுகள் கொண்ட பட்டியலில் முதல்முறையாக இந்தியா 67 புள்ளிகளுடன் 99-வது இடத்தைப் பிடித்துள்ளது.
- TNPSC KEY NOTES : SUSTAINABLE DEVELOPMENT REPORT 2025 IN TAMIL
ஆக்சியம்-4 திட்டம்:
- இந்திய விண்வெளி வீரரான கேப்டன் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேரை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அழைத்து செல்லும் ஆக்சியம்-4 திட்டம் வெற்றிகரமாக தொடங்கியது.
- இந்திய நேரப்படி சரியாக 25.06.2025 (ஜூன் 25) பகல் 12.01 மணிக்கு பால்கன் 9 ராக்கெட், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
- சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணிக்கும் நான்கு விண்வெளி வீரர்களும் ஸ்பேஸ்எக்ஸின் இந்த ராக்கெட்டில் உள்ளனர். இந்த விண்கலம் 28 மணி நேர பயணத்துக்குப் பின்னர் (ஜூன் 26) மாலை 4:30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனமும் இணைந்து கடந்த 2022-ல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்கலத்தை அனுப்பின. இது உலகின் முதல் தனியார் விண்கலம் ஆகும். அந்த வகையில் ஆக்சியம் 4 என்ற பெயரில் 4-வது விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டது.
- இதன்படி, அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் ஏவப்பட்டது.. இந்த விண்கலத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் பயணிக்க உள்ளனர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) வீரர் சுபான்ஷு சுக்லா (39) விமானியாக செயல்பட உள்ளார்.
- இந்த விண்கலம் 28 மணி நேர பயணத்துக்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும் என நாசா தெரிவித்துள்ளது. இவர்கள் அங்கு 14 நாட்கள் தங்கி இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
- கடந்த 1984-ம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தில் இந்தியரான ராகேஷ் சர்மா பயணித்தார். சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளி நிலையம் செல்லும் இந்தியர் என்ற சாதனையை சுபான்ஷு சுக்லா படைக்க உள்ளார்.
கர்நாடகாவில் வீட்டு வசதி திட்டத்தில் சிறுபான்மையினருக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:
- கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அண்மையில் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
- இதில் வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறியதாவது: கர்நாடக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து விதமான வீட்டு வசதி திட்டங்களில் முஸ்லிம், கிறிஸ்தவர், பவுத்தர் உள்ளிட்ட அனைத்து மத சிறுபான்மையினருக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சிறுபான்மையினருக்கு போதுமான வீடுகள் கிடைப்பதில்லை. எனவே இட ஒதுக்கீட்டின் அளவை உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதன்படி சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டின் அளவை 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான சட்ட திருத்த மசோதாவும் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் ஜமீர் அகமது கான் தெரிவித்தார்.
இந்தியாவின் முதல் ஆப்-கிரிட் 5 மெகாவாட் பசுமை ஹைட்ரஜன் ஆலை:
- அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஏஎன்ஐஎல்) நிறுவனம் குஜராத்தின் கட்ச் பகுதியில் அமைக்கப்பட்ட முதல் ஆப்-கிரிட் 5 மெகாவாட் பசுமை ஹைட்ரஜன் ஆலையை வெற்றிகரமாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இது, நாட்டின் தூய எரிசக்தி மாற்றத்தில் ஒரு மைல்கல்லாக மாறியுள்ளது.
- இந்த அதிநவீன ஆலை 100 சதவீதம் சூரிய சக்தியால் இயங்கும் பசுமை ஆலையாகும். பேட்டரி எரிசக்தி அமைப்புடன் (பிஇஎஸ்எஸ்) இது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது பரவலாக்கப்பட்ட, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கொண்ட ஹைட்ரஜன் உற்பத்தியில் ஒரு புதிய முன்னுதாரணத்தை பிரதிபலிக்கிறது.
- இந்தியாவின் முதல் ஆப்-கிரிட் 5 மெகாவாட் பசுமை ஹைட்ரஜன் ஆலை இதுவாகும். மதிப்புமிக்க செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மையை இந்த ஆலை கொண்டுள்ளது. சூரியசக்தியின் மாறுபாட்டை கண்டறிந்து செயல்திறன் மற்றும் பாதுகாப்பை இந்த ஆலை உறுதி செய்யும்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (Shanghai Cooperation Organisation (SCO) Defence Ministers’ Meeting) பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் :
- சீனாவின் கிங்டாவோவில் ஜூன் 25 முதல் 26 வரை நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (Shanghai Cooperation Organisation (SCO) Defence Ministers’ Meeting) பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்திய உயர்நிலைக் குழுவிற்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமை தாங்குகிறார்.
- இக்கூட்டத்தில், பிராந்திய, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சகங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சர்கள் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரேஷன் சிந்து:
- இஸ்ரேல்-ஈரான் நாடுகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வரும் சூழலில் அந்த நாடுகளில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வரும் வகையில் "ஆபரேஷன் சிந்து" நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
- இதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் நாட்டிலிருந்து ஜோர்டானுக்கு அழைத்து வரப்பட்ட இந்திய மக்கள் மற்றும் மாணவர்கள் என 165 பேர், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஐஏஎஃப் சி-17 விமானத்தில் பத்திரமாக தாயகம் அழைத்து வரப்பட்டனர்.
- இஸ்ரேல் நாட்டிலிருந்து இதுவரை 594 இந்தியர்கள் ஆபரேஷன் சிந்து நடவடிக்கை மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
‘e-Voting SECBHR’ செயலி:
- நாட்டிலேயே முதல் முறையாக மின்னணு முறையில் ஸ்மார்ட்போன் மூலம் வாக்களிக்கும் முறையை அறிமுகம் செய்துள்ளது பிஹார் மாநில தேர்தல் ஆணையம். இந்த முன்முயற்சி அந்த மாநிலத்தில் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் அறிமுகமாகிறது.
- மின்னணு முறையில் மொபைல் மூலம் வாக்காளர்கள் வாக்களிக்கும் செயல்முறை மொத்தம் இரண்டு ஆண்ட்ராய்டு மொபைல் செயலிகள் மூலம் செயல்படுத்தப்படும். இதற்காக C-DAC மையம் ‘e-Voting SECBHR’ என்ற செயலியை வடிவமைத்துள்ளது. பிஹார் மாநில தேர்தல் ஆணையம் தரப்பிலும் ஒரு செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இதுவரை சுமார் பத்தாயிரம் வாக்காளர்கள் மின்னணு முறையில் மொபைல் போனை பயன்படுத்தி வாக்களிக்க பதிவு செய்துள்ளனர். இந்த முறையின் கீழ் சுமார் ஐம்பதாயிரம் வாக்காளர்கள் வரையில் வாக்குச்சாவடிக்கு செல்லாமல் மொபைல் போன் மூலம் வாக்களிக்க முடியும்.
இந்திய விமானப்படைக்கு அடுத்தாண்டில் 6 தேஜஸ் போர் விமானங்கள் விநியோகம்:
- இந்திய விமானப்படைக்கு அடுத்தாண்டில் 6 தேஜஸ் போர் விமானங்களை விநியோகம் செய்வோம்’’ என எச்ஏஎல் நிறுவன தலைவர் டி.கே.சுனில் தெரிவித்துள்ளார்:
- இந்திய விமானப்படையில் உள்ள மிக்-21 போர் விமானங்களுக்கு மாற்றாக எச்ஏஎல் நிறுவனத்திடமிருந்து 83 தேஜஸ் -1 ஏ போர் விமானங்களை ரூ.48,000 கோடி மதிப்பில் கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கடந்த 2021-ல் ஒப்பந்தம் செய்தது.
- தேஜாஸ் MK1A இன் விமான சோதனை ஜூலை 2025 இல் திட்டமிடப்பட்டுள்ளது.
- தேஜாஸ் MK1A என்பது இந்திய ஏவுகணைகளுக்கான தனிப்பயனாக்கப்பட்ட ஒருங்கிணைப்புடன் கூடிய 4.5 தலைமுறை பல்நோக்கு போர் விமானமாகும்.
- F-16 உடன் ஒப்பிடும்போது, தேஜாஸ் MK1A சிறந்த ஏவியோனிக்ஸ் மற்றும் ரேடார் அமைப்புகளைக் கொண்டுள்ளது.
- தேஜாஸ் MK1A இன் மட்டு வடிவமைப்பு பராமரிப்பு மற்றும் மேம்பாடுகளை எளிதாக்குகிறது.
- 2003 ஆம் ஆண்டில், இலகுரக போர் விமானத் திட்டத்திற்கு அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயினால் 'தேஜஸ்' (சமஸ்கிருதத்தில் பிரகாசம் என்று பொருள்) பெயரிடப்பட்டது. இது HAL ஆல் உருவாக்கப்பட்ட இரண்டாவது சூப்பர்சோனிக் போர் விமானமாகும்
3-வது முழு கல்வியறிவு பெற்ற மாநிலமாக திரிபுரா உருவாகியுள்ளது:
- மிசோராம், கோவாவுக்கு அடுத்தபடியாக 3-வது முழு கல்வியறிவு பெற்ற மாநிலமாக திரிபுரா உருவாகியுள்ளது.
- யுனெஸ்கோ விதிமுறைப்படி ஒரு மாநிலத்தில் கல்வியறிவு பெற்றோர் சதவீதம் 95 என்ற இலக்கை தாண்டினால் அந்த மாநிலம் முழு கல்வியறிவு பெற்ற மாநிலமாக கருதப்படும்.
- கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் திரிபுராவில் கல்வியறிவு பெற்றோர் சதவீதம் 93.7 சதவீதமாக இருந்தது. 23,184 பேர் மட்டுமே கல்வியறிவு பெறாதவர்களாக இருந்தனர்.
- இந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் திரிபுராவின் கல்வியறிவு பெற்றோர் சதவீதம் 95.6 சதவீதமாக உள்ளதாக மத்திய கல்வி அமைச்சக இயக்குநர் ப்ரீத்தி மீனா தெரிவித்தார். இதனால் மிசோரம், கோவா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்ததாக முழு கல்வியறிவு பெற்ற மாநிலமாக திரிபுரா உருவாகியுள்ளது. புதிய இந்தியா எழுத்தறிவு இயக்கத்தை தீவிரமாக அமல்படுத்தியதே இந்த வெற்றிக்கு காரணம் என ப்ரீத்தி மீனா தெரிவித்துள்ளார்.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!