ஐ.நா.வின் உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG) தரவரிசை 2025:
- ஐ.நா.வின் உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG) தரவரிசையில் இந்தியா முதல்முறையாக முதல் 100 இடங்களுக்குள் நுழைந்துள்ளது.
- உலகில் உள்ள அனைத்து நாடுகளும் கவனம் கொடுக்க வேண்டிய அம்சங்கள் மற்றும் அதற்கான நிலையான வளர்ச்சி இலக்குகளை ஐநா வரையறுத்துள்ளது. அதில் ஆண்டுதோறும் ஏற்படும் முன்னேற்றங்களுக்கு ஏற்ப நாடுகளை அது தரவரிசைப்படுத்துகிறது.
- அதன்படி, 2025-ம் ஆண்டுக்கான உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகள் தரவரிசையை ஐநா வெளியிட்டுள்ளது.
- அதன்படி, 193 நாடுகள் கொண்ட பட்டியலில் முதல்முறையாக இந்தியா 67 புள்ளிகளுடன் 99-வது இடத்தைப் பிடித்துள்ளது.
- 87 புள்ளிகளுடன் ஃபின்லாந்து முதலிடத்திலும், 85.7 புள்ளிகளுடன் ஸ்வீடன் 2-வது இடத்திலும், 85.3 புள்ளிகளுடன் டென்மார்க் 3-வது இடத்திலும் உள்ளன.
- ஜெர்மனி 4-வது இடத்திலும், பிரான்ஸ் 5-வது இடத்திலும், ஆஸ்ட்ரியா 6-வது இடத்திலும், நார்வே 7-வது இடத்திலும், குரோஷியா 8-வது இடத்திலும், போலந்து 9-வது இடத்திலும், செக் குடியரசு 10-வது இடத்திலும் உள்ளன.
- முதல் 20 இடங்களில் 19 நாடுகள் ஐரோப்பாவைச் சேர்ந்தவையாக உள்ளன. ஜப்பான் 8.7 புள்ளிகளுடன் 19-வது இடத்தைப் பிடித்துள்ளது.
நன்றி : இந்து தமிழ் திசை (24.06.2025)