மராட்டிய இராணுவ தளங்களை இந்தியாவின் 44வது உலக பாரம்பரிய தளமாக யுனெஸ்கோ அங்கீகரித்தது:
- யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இந்தியாவின் மராத்திய ஆட்சியாளர்களின் ராணுவ தளங்கள் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸில் நடைபெற்று வரும் உலக பாரம்பரியக் குழுவின் (WHC) 47வது அமர்வில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
- இந்தியாவிலிருந்து யுனெஸ்கோ பாரம்பரிய சின்னத்துக்கான 2024-25 ம் ஆண்டுக்கான பரிந்துரையில் 'மராத்திய ராணுவ தளங்கள்' இடம்பெற்றது.
- மராத்திய ராணுவ தளங்களில், மகாராஷ்டிராவில் உள்ள சல்ஹெர் கோட்டை, சிவனேரி கோட்டை, லோஹ்காட், கண்டேரி கோட்டை, ராய்காட், ராஜ்காட், பிரதாப்காட், சுவர்ணதுர்க், பன்ஹாலா கோட்டை, விஜய் துர்க் மற்றும் சிந்துதுர்க் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள செஞ்சி கோட்டை ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த மாராத்திய ராணுவ கோட்டைகள் மற்றும் தளங்கள் 17 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைபட்ட காலத்தில் உருவாக்கப்பட்டன.
- மராத்தா ராணுவ தளங்கள் யுனெஸ்கோ பட்டியலில் இடம்பெற்றதன் மூலமாக, இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
- தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கும்பகோணம் ஐராவதேஸ்வரர் கோயில், ஜெயகொண்டம் கங்கை கொண்ட சோழபுரம் கோயில், மாமல்லபுரம் நினைவுச் சின்னங்கள், நீலகிரி மலை ரயில் பாதை ஆகிய ஐந்தும் தமிழ்நாட்டில் யுனெஸ்கோ அங்கீகரித்த உலக பாரம்பரிய சின்னங்களாகும். இந்தப் பட்டியலில் ஆறாவது சின்னமாக செஞ்சிக் கோட்டை இடம் பிடித்துள்ளது.
- TNPSC GK NOTES : இந்தியாவில் உள்ள 44 யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள்
பாரம்பரிய மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு - உலக சுகாதார நிறுவனத்தின் முக்கிய வெளியீட்டில் இந்தியாவின் ஆயுஷ் கண்டுபிடிப்புகள் இடம்பெற்றுள்ளன:
- உலகளாவிய சுகாதார கண்டுபிடிப்புகளுக்கான ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, உலக சுகாதார அமைப்பு (WHO) "பாரம்பரிய மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை திட்டமிடுதல்" என்ற தலைப்பில் ஒரு தொழில்நுட்ப சுருக்க அம்சத்தை வெளியிட்டுள்ளது.
- இது செயற்கை நுண்ணறிவை (AI) பாரம்பரிய மருத்துவ அமைப்புகளுடன், குறிப்பாக ஆயுஷ் அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பதில் இந்தியாவின் முன்னோடி முயற்சிகளை அங்கீகரித்துள்ளது. இந்த விஷயத்தில் இந்தியாவின் முன்மொழிவை இந்த வெளியீடு பின்பற்றுகிறது. இது பாரம்பரிய மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான உலக சுகாதார நிறுவனத்தின் முதல் செயல் திட்டத்தை உருவாக்க வழிவகுத்தது.
- இந்த ஆவணம் ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவின் பல்வேறு பயன்பாடுகளைக் காட்டுகிறது. இதில் நாடி வாசிப்பு, நாக்கு பரிசோதனை, பிரகிருதி மதிப்பீடு போன்ற பாரம்பரிய முறைகளை இயந்திர கற்றல் வழிமுறைகள் மற்றும் ஆழமான நரம்பியல் கட்டமைப்புகளுடன் ஒருங்கிணைக்கும் நோயறிதல் ஆதரவு அமைப்புகள் அடங்கும். இந்த முயற்சிகள் நோயறிதல் துல்லியத்தை மேம்படுத்துவதோடு தனிப்பயனாக்கப்பட்ட நோய்த் தடுப்பு சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்தும்.
மின்சார கனரக சரக்கு வாகனப் பயன்பாடு ஊக்கத் திட்டம்:
- பிரதமர் நரேந்திர மோடியின் பசுமை வாகன இயக்கத் தொலைநோக்குப் பார்வையின் கீழ் நாடு முழுவதும் முதல் முறையாக மின்சார கனரக சரக்கு வாகனப் பயன்பாடு ஊக்கத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
- மத்திய கனரக தொழில்கள் மற்றும் எஃகு அமைச்சர் திரு எச் டி குமாரசாமி வழிகாட்டுதலின் கீழ் கனரக தொழில்கள் துறை அமைச்சகம் மின்சார கனரக சரக்கு வாகனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
- TNPSC KEY NOTES : E-TRUCK INCENTIVE SCHEME
நாடு முழுவதும் இளைஞர்களை டிஜிட்டல் தூதர்களாக மாற்றும் சஞ்சார் மித்ரா திட்டத்தை மத்திய தொலைத் தொடர்புத்துறை அறிமுகப்படுத்துகிறது:
- மத்திய தொலைத் தொடர்புத்துறை கள அலுவலகம் சார்பில் அசாம் குவஹாத்தி நகரில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஐஐடி, என்ஐடி மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள முன்னணி பொறியியல் கல்லூரிகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் அமர்வு நடைபெற்றது.
- நாட்டு மக்களுக்கும், தொலைத்தொடர்பு சூழல் அமைப்பிற்கும் இடையேயான இடைவெளியை குறைக்கும் வகையில் தன்னார்வ மாணவர்களை டிஜிட்டல் தூதர்களாக ஈடுபடுத்தும் புதுமையான முயற்சியான சஞ்சார் மித்ரா திட்டம் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. புதுதில்லி டெலிகாம் தலைமை இயக்குநர் திருமதி சுனிதா சந்திரா, கூடுதல் தலைமை இயக்குநர் திரு சுரேஷ் பூரி, இணை தலைமை இயக்குநரும் தொலைத் தொடர்புத்துறை செய்தித் தொடர்பாளருமான ஹேமந்த்ர குமார் ஷர்மா உள்ளிட்டோர் இந்தத் திட்டத்தின் நோக்கம் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
- நிகழ்ச்சியில் புதுப்பிக்கப்பட்ட சஞ்சார் மித்ரா திட்டத்தை வடகிழக்குப் பிராந்தியத்தின் தகவல் தொடர்பு மற்றும் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், இந்தத் திட்டமானது ஜனநாயகம், மக்கள் தொகை, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் விநியோகம் என்ற நான்கு நிலைகளில் இந்தியாவின் தலைமைத்துவத்தை நிலைநிறுத்தும் ஒரு தொலைநோக்குப் பார்வையாக உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
- விரிவாக்கப்பட்ட சஞ்சார் மித்ரா திட்டம் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துடன், 5ஜி, 6ஜி தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட அதிநவீன தொலைத் தொடர்பு துறையின் தொழில்நுட்பங்களை எடுத்துரைக்கும் நோக்கத்தை கொண்டதாகும்.
- இந்த திட்டத்தின் கீழ், சஞ்சார் மித்ராஸ் என நியமிக்கப்பட்ட மாணவர் தன்னார்வலர்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்பு, சைபர் மோசடி தடுப்பு மற்றும் ஈ.எம்.எஃப் கதிர்வீச்சு கவலைகள் போன்ற முக்கிய தொலைத்தொடர்பு பிரச்சினைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அதிகாரம் அளிக்கப்படும், அதே நேரத்தில் பொறுப்பான மொபைல் பயன்பாடு மற்றும் டிஜிட்டல் கல்வியறிவை ஊக்குவிக்கும்.
அத்திப்பட்டு மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே ரயில் பாதை:
- திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அத்திப்பட்டு மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே 22.52 கி.மீ நீளமுள்ள மூன்று மற்றும் நான்காவது ரயில் பாதைகள் ரூ.374.3 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளன. இது சென்னை - கூடூர் வடகிழக்கு ரயில்வே பாதையில் உள்ள மிக முக்கியமான பகுதி ஆகும். இதனை இரண்டாண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- மொத்த ரயில்வே வழித்தடத்தின் நீளம்: 47 கிமீ
- பாலங்கள்: 6 பெரிய பாலங்கள் மற்றும் 48 சிறிய பாலங்கள்
- மின் பாதை அமைப்பு: 2x25 கிலோவோல்ட்
- வேகம்: மணிக்கு 160 கிமீ
- ரயில் நிலையங்கள்: அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம், மீஞ்சூர், அனுப்பம்பட்டு, பொன்னேரி, கவரைப்பேட்டை, கும்மிடிப்பூண்டி
- இத்திட்டத்தின் மூலம் வழித்தட திறன் பயன்பாடு தற்போது உள்ள 99.1% இலிருந்து 63.7% ஆகக் குறையவுள்ளது. இதனால் எஃகு, உணவுதானியம், பெட்ரோரசாயனங்கள், உரம், சிமென்ட் மற்றும் வாகனங்கள் போன்ற முக்கிய பொருட்களின் வேகமான மற்றும் சீரான போக்குவரத்து சாத்தியமாகும்.
- மேலும், சென்னை துறைமுகம், காமராஜர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களை இணைக்கும் இந்த திட்டம், காமராஜர் துறைமுகத்தில் உள்ள இந்தியப் பெட்டகக் கழக சரக்கு முனையத்திற்கும் சேவையளிக்கும்.
- சுற்றுலாவுக்கு ஊக்கம் அளிக்கக்கூடிய பழவேற்காடு ஏரி, பூண்டி ஏரி, ஸ்ரீ விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயசுவாமி கோவில், திருவள்ளூர் வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜசுவாமி கோவில், திருவொற்றியூர் பவானி அம்மன் கோவில், பெரியபாளையம் தேவி கருமாரியம்மன் கோவில், திருவேற்காடு அம்பிகை, திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் திருக்கோயில் முதலியவை பெரும் ஊக்கம் அடையும்.
- இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால், முதலாண்டில் கூடுதலாக வருடத்திற்கு 8.71 மில்லியன் சரக்குகள் கையாளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல 6-வது ஆண்டில் வருடத்திற்கு 11.11 மில்லியன் டன்னும், 11-வது ஆண்டில் வருடத்திற்கு 14.18 மில்லியன் டன் சரக்குகளும் கூடுதலாகக் கையாளப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் திருவள்ளூர் மாவட்டத்தின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக அமையும்.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!
current-affairs-in-tamil-11th-12th-july-2025