இஸ்ரோ-நாசா வடிவமைத்த நிசாா் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் :
- புவி கண்காணிப்புக்காக நாசாவுடன் இணைந்து உருவாக்கிய அதிநவீன நிசார் ரேடார் செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் மூலமாக திட்டமிட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.
- ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி ராக்கெட் (30.07.2025) மாலை 5.40 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. தரையில் இருந்து புறப்பட்ட 19 நிமிட பயணத்துக்கு பின்பு 745 கி.மீ உயரத்தில் திட்டமிட்ட சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
- TNPSC GK NOTES : நிசார் ரேடார் செயற்கைக்கோள்
கவச் 4.0 :
- டெல்லி-மும்பை வழித்தடத்தின் மதுரா-கோட்டா பிரிவில் சாதனை அளவிலான நேரத்தில் கவச் 4.0 நிறுவப்பட்டது.
- கவச் 4.0 ( Kavach 4.0) என்பது நவீன தொழில்நுட்பம் சார்ந்த அமைப்பாகும். இது ஜூலை 2024 இல் ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது. பல வளர்ந்த நாடுகள் ரயில் பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்கி நிறுவ 20-30 ஆண்டுகள் எடுத்துக் கொண்ட நிலையில், கோட்டா-மதுரா பிரிவில் கவச் 4.0 மிகக் குறுகிய காலத்தில் நிறுவப்பட்டுள்ளது
- கவச் வேகத்தடை பயன்பாடு மூலம் ரயில் ஓட்டுனர்கள் திறன் மிகுந்த வேகக் கட்டுப்பாட்டை செயல்படுத்த உதவுகிறது; அவர்கள் மூடுபனியிலும் கூட ரயிலின் உள்ளே சமிக்ஞை தகவல்களைப் பெற முடியும்
- இந்திய ரயில்வே 6 ஆண்டுகளுக்குள் நாடு தழுவிய அளவில் கவச் 4.0 பாதுகாப்பு அமைப்பை நிறுவ உள்ளது; பல வளர்ந்த நாடுகள் ரயில் பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்த 20-30 ஆண்டுகள் ஆனது
- ரயில்வே பாதுகாப்புக்கான உறுதிப்பாடு: கவச் உள்ளிட்ட பல பாதுகாப்பு நடவடிக்கைகளை நிறுவ ₹1 லட்சம் கோடி வருடாந்திர முதலீடு அளிக்கப்படுகிறது
கவச் என்றால் என்ன?:
- கவாச் என்பது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ரயில் பாதுகாப்பு அமைப்பு. ரயில் வேகத்தைக் கண்காணித்து கட்டுப்படுத்துவதன் மூலம் விபத்துகளைத் தடுக்க இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இது பாதுகாப்பு வடிவமைப்பின் மிக உயர்ந்த நிலையான பாதுகாப்பு ஒருங்கமைவு நிலை 4 (SIL 4) இல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- கவச்சின் மேம்பாடு 2015 இல் தொடங்கியது. இந்த அமைப்பு 3 ஆண்டுகளுக்கும் மேலாக விரிவாக சோதிக்கப்பட்டது.
- தொழில்நுட்ப மேம்பாடுகளுக்குப் பிறகு, இந்த அமைப்பு தெற்கு மத்திய ரயில்வேயில் (SCR) நிறுவப்பட்டது. முதல் செயல்பாட்டுச் சான்றிதழ் 2018 இல் வழங்கப்பட்டது.
- தெற்கு மத்திய ரயில்வேயில் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில், மேம்பட்ட பதிப்பு 'கவச் 4.0' உருவாக்கப்பட்டது. மே 2025 இல் மணிக்கு 160 கிமீ வரையிலான வேக அளவுக்கு அங்கீகரிக்கப்பட்டது.
- கவச் அமைப்பு உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.
இந்தியாவில் 3-வது பெரிய மென்பொருள் ஏற்றுமதியாளராக தமிழகம் :
- தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின்கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (ஐடிஎன்டி) சார்பில் முதலாவது அறிவுசார் சொத்துரிமை மாநாடு சென்னை கோட்டூர்புரத்தில் 30.07.2025 நடைபெற்றது.
- அறிவுசார் மையம் மூலம் தமிழகத்தை இந்தியாவின் புதுமையின் தலைநகரமாக மாற்றுதல்’ என்ற தலைப்பில் நடந்த மாநாட்டை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்து தொழில்நுட்ப கண்காட்சியை பார்வையிட்டார். தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலை வகித்தார்.
- சென்னையில் நடந்த முதலாவது அறிவுசார் சொத்துரிமை மாநாட்டை தொடங்கி வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இந்தியாவில் 3-வது பெரிய மென்பொருள் ஏற்றுமதியாளராக தமிழகம் திகழ்வதாக தெரிவித்தார்.
- இந்த மாநாட்டில் டீப்-டெக் தொழில்நுட்பம், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம், மகேந்திரா, போஷ் உள்ளிட்ட 6 முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
நான் முதல்வன்’ திட்டத்துக்காக கூகுள், யூனிட்டி நிறுவனங்களுடன் ஒப்பந்தம்:
- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்த கணினி அறிவியல் துறையிலுள்ள இறுதி ஆண்டு பயிலும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான கேம் டெவலப்பர், ஆர்டிஸ்ட் மற்றும் புரோகிராமர் திறன் பயிற்சி திட்டத்துக்காக கூகுள் மற்றும் யூனிட்டி நிறுவனத்துக்கும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
- இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘நான் முதல்வன்’ திட்டத்தில், ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் திறன்சார்ந்த பயிற்சிகள் பெற்று வருகின்றனர். மேலும் தமிழக மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்காக கூகுள் பிளே மற்றும் யூனிட்டி கேம் டெவலெப்பர் டிரைனிங் புரோகிராம் என்ற புதிய திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!