ஐஎன்எஸ் ஹிம்கிரி மற்றும் உதயகிரி போர்க்கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்பட்டன :
- ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில் ஐஎன்எஸ் ஹிம்கிரி மற்றும் உதயகிரி போர்க்கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்பட்டன. கடற்படைக்காக புராஜெக்ட் 17ஏ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட முதல் கப்பல் ஐஎன்எஸ் நீல்கிரி, இந்த ஆண்டு தொடக்கத்தில் கடற்படையில் இணைக்கப்பட்டது.
- இத்திட்டத்தின் கீழ் ஐஎன்எஸ் ஹிம்கிரி என்ற போர்க் கப்பலை கொல்கத்தாவில் உள்ள ரீச் ஷிப்பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் நிறுவனம் தயாரித்து.
- ஐஎன்எஸ் உதயகிரி போர்க்கப்பலை மும்பையில் உள்ள மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த இரண்டு போர்க்கப்பல்களும் விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் கடற்படையில் இணைக்கப்பட்டன.
- இதே பெயர்களில் இந்திய கடற்படையில் ஏற்கெனவே இருந்த போர்க்கப்பல்கள் 30 ஆண்டுகள் பணியாற்றி சமீபத்தில் கடற்படையில் இருந்து விடுவிக்கப்பட்டன. அவற்றின் பெயர்கள் இப்போது புதிய போர்க் கப்பல்களுக்கு வைக்கப்பட்டுள்ளன.
- இவற்றின் வடிவமைப்பு, எதிரிநாட்டு ரேடார்களில் சிக்காத தொழில்நுட்பம், ஆயுதங்கள் மற்றும் சென்சார் கருவிகள் அனைத்தும் மிகவும் மேம்பட்டவை மற்றும் நவீனமானவை. இந்த இரு கப்பல்களையும், இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பிரிவு உருவாக்கியது. இந்த பிரிவு வடிவமைத்த 100-வது போர்க்கப்பல் ஐஎன்எஸ் உதயகிரி என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்:
- தமிழகத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் நகர்ப்புறங்களில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முன்னிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் 26.08.2025 தொடங்கிவைத்தார்.
- பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: `
- காலை உணவுத் திட்டத்தை திமுக அரசு 2022-ம் ஆண்டு செப். 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில் தொடங்கியது.
- மதுரை மாவட்டத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன்.
- முதல்கட்டமாக 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்கள் இந்த திட்டத்தால் பயனடைந்தனர்.
- 2023-ம் ஆண்டு ஆக. 25-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த திருக்குவளையில், அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்தோம்.
- 2024-ம் ஆண்டு காமராஜர் பிறந்த நாளில், ஊரகப் பகுதிகளில் செயல்படும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
- இதுவரை 17 லட்சம் மாணவ, மாணவிகள் காலை உணவுத் திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர்.
- இந்த திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நகர்ப்புறங்களில் செயல்படும் 2,429 அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்திருக்கிறோம். இதனால் கூடுதலாக 3 லட்சத்து 6 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற உள்ளனர்.
- இனி தமிழகத்தில் செயல்படும் 37,416 அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 20.59 லட்சம் மாணவ, மாணவிகள் தினமும் காலையில் சூடாக, சுவையாக, சத்தாக சாப்பிட்டு, வகுப்பறைக்குள் தெம்பாக நுழைவார்கள்.
2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்கிறது இந்தியா:
- மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.
- இதில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக மத்திய அமைச்சரவை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2030-ம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடத்துதற்கான ஏல விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான விளையாட்டு அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- ஏல விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், துறைகள், அதிகாரிகளிடமிருந்து தேவையான நடைமுறைகளுடன் போட்டிகளை நடத்த குஜராத் மாநில அரசுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும், குஜராத் அரசுக்குத் தேவையான மானிய உதவிகளை வழங்கவும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் பாதிப்பு :
- கேரளாவில் மூளையை தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
- திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் தற்போது 18 பேருக்கு மூளையை தின்னும் அமீபா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் கேரளாவில் இதுவரை 41 பேருக்கு இந்த அமீபா பாதிப்பு கண்டறியப்பட்டது.
- இதனையடுத்து, நீர் மூலம் பரவும் நோய்களை எதிர்த்துப் போராடுவதற்காக அரசாங்கம் ‘ஜலமான் ஜீவன்’ எனும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இந்த முயற்சியில் மாநில சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, பொதுக் கல்வித் துறை மற்றும் ஹரித கேரளம் மிஷன் ஆகியவை இணைந்து செயல்படுகிறது.
- இந்த பிரச்சாரத்தின் கீழ், கேரளா முழுவதும் உள்ள கிணறுகள் மற்றும் நீர்நிலைகளில் குளோரினேட் செய்யப்படுகிறது. மேலும், ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள தண்ணீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்படவுள்ளது. அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் உள்ளிட்ட நீர் மூலம் பரவும் நோய்கள் பரவுவதைத் தடுப்பதில் இந்த நடவடிக்கைகள் பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
உலகக் கோப்பை செஸ் தொடர்:
- செஸ் உலகக் கோப்பை போட்டி வரும் அக்டோபர் 30-ம் தேதி முதல் நவம்பர் 27 வரை இந்தியாவில் நடைபெறும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தது. ஆனால் போட்டி எந்த நகரத்தில் நடத்தப்படும் என்பது தெரிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் செஸ் உலகக் கோப்பை தொடர் கோவாவில் வரும் அக்டோபர் 30-ம் தேதி முதல் நவம்பர் 27 வரை நடைபெறும் என ஃபிடே அறிவித்துள்ளது.
- இந்தத் தொடரில் 90-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 206 வீரர்கள் கலந்துகொண்டு பட்டம் வெல்ல மோத உள்ளனர். முதல் 3 இடங்களை பிடிப்பவர்கள் 2026-ம் ஆண்டு நடைபெறும் ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள்.
- கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர், உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் விளையாட தகுதிபெறுவார்.இந்தத் தொடரின் பரிசுத்தொகை ரூ.17.53 கோடியாகும்.
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 2025:
- கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது.
- இதில் நடைபெற்ற மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சிப்ட் கவுர் சம்ரா, சீனா வின் யாங் யுஜியை எதிர்த்து விளையாடினார்.
- இதில் சிப்ட் கவுர் சம்ரா 459.2 புள்ளிகளை குவித்து தங்கப் பதக்கம் வென்றார். யாங் யுஜி 458.8 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றார். ஜப்பானின் நோபாடா மிசாகி 448.2 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
- மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் அணிகள் பிரிவில் சிப்ட் கவுர் சம்ரா, அஞ்சும் மவுத்கில், அஷி சவுஸ்கி ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1,753 புள்ளிகளை குவித்து தங்கப் பதக்கம் வென்றது.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!
current-affairs-in-tamil-26th-28th-august-2025