நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் / NALAM KAKKUM STALIN THITTAM

TNPSC PAYILAGAM
By -
0

NALAM KAKKUM STALIN THITTAM


  • நலம் காக்கும் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை 02.08.2025 முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
  • மக்கள் தங்களின் உடல் நிலையை நோய் வரும் முன்பே மருத்துவரீதியாக பரிசோதிப்பதில்லை என்பதால் அதை நோக்கமாகவைத்து, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அனைவரும் பங்கேற்கலாம்.
  • மாவட்டம்தோறும் அரசு விடுமுறை இல்லாத நாட்களில், குறிப்பாக சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை இந்த திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறும்.
  • ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகள், இதய நோய்கள், மனநலன் பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைவருமே இந்த முகாம்களை பயன்படுத்தலாம். இதன்படி மொத்தம் 1,256 முகாம்கள் நடைபெறவுள்ளன.
  • சென்னையில் 15 மண்டலங்களில் முகாம்கள் நடைபெறும். முகாம் நடக்கும் இடத்தில் தொழில்நுட்ப மேம்பாட்டுடன் கூடிய நோய் கண்டறியும் வசதிகள் இருக்கும். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பிற்பகலுக்குள் வாட்ஸ்அப் மூலம் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படும். தேவைப்படுவோர் தொடர் சிகிச்சைக்குள் கொண்டு வரப்படுவார்கள்.
  • மற்ற துறைகளும் இந்த முகாமில் பங்கேற்பதால், மருத்துவக் காப்பீட்டு வசதிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்குதல் போன்ற கூடுதல் வசதிகளும் முகாமில் வழங்கப்படும். இந்த திட்டத்தின் செயல்பாட்டை தலைமை செயலாளர் தலைமையிலான மாநில கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்வார்கள்.
  • இந்த முகாமில் பெயர் பதிவு செய்பவர், பிற்காலங்களில் தமிழகத்தில் வேறு எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் அவரது உடல்நல விவரங்களை கண்டறியும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. நோய் வராமல் தடுக்க உணவு விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கப்படும். முகாம்களில் உயர்தர சிகிச்சை நிபுணர்களும், 5 வகையான இந்திய மருத்துவமுறை நிபுணர்களும் உள்ளனர்.
  • ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், தூய்மைப் பணியாளர்கள், தொழிலாளர் ஆகியோரை பங்கேற்கச் செய்ய அந்தந்த துறைகள் நடவடிக்கை மேற்கொள்கின்றன.
  • தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தில் 3 லட்சம் பேர் உள்ளனர். 20 தொழிலாளர் நலவாரியங்களில் 48.56 லட்சம் பேர் உள்ளனர். அமைப்புசாரா தொழிலில் உள்ளவர்களும் இருக்கின்றனர். இவர்களுக்கு உடல்நலன், நோய்தடுப்பு பற்றிய விழிப்புணர்வும் தரப்படும்.


SOURCE : https://www.hindutamil.in/





Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)