Prime Minister’s Visit to Japan 2025 -Key Points in Tamil

TNPSC PAYILAGAM
By -
0

Prime Minister’s Visit to Japan 2025 -Key Points in Tamil



15-வது இந்தியா-ஜப்பான் வருடாந்தர உச்சி மாநாடு கூட்டறிக்கை: 

  • ஜப்பான் பிரதமர் திரு இஷிபா ஷிகெரு அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி, 15-வது இந்தியா-ஜப்பான் வருடாந்தர உச்சிமாநாட்டிற்காக 2025, ஆகஸ்ட் 29-30 தேதிகளில் ஜப்பானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். 2025, ஆகஸ்ட் 29 அன்று மாலை பிரதமர் அலுவலகத்தில் (கான்டெய்) பிரதமர் மோடியை பிரதமர் இஷிபா வரவேற்றார். அங்கு அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • 2014 முதல் இந்தியா-ஜப்பான் இடையே சிறப்பு உத்தி மற்றும் உலகளாவிய கூட்டாண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பீடு செய்யவும், அடுத்த தலைமுறை மற்றும் அதற்கு அப்பால் பயனளிக்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை உருவாக்கவும் 15வது வருடாந்தர உச்சிமாநாடு உதவியது. 2027-ம் ஆண்டில் இந்தியா-ஜப்பான் தூதரக உறவின் 75-வது ஆண்டு நிறைவு என்பதை  நோக்கி இரு நாடுகளும் ஒன்றிணைந்து முன்னேறி வருவதாகவும், இது ஒரு பொருத்தமான முறையில் கொண்டாடப்படும் என்றும் இரு பிரதமர்களும் அறிவித்தனர்.

 

பிரதமரின் ஜப்பான் அரசுமுறைப் பயணத்தின்- 2025 பலன்கள்:


1.அடுத்த பத்தாண்டுகளுக்கான இந்தியா- ஜப்பான் கூட்டுத் தொலைநோக்குப் பார்வை

  • பொருளாதார கூட்டாண்மை, பொருளாதாரப் பாதுகாப்பு, இயக்கம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, தொழில்நுட்பம் மற்றும் புதுமை, சுகாதாரம், மக்களுக்கிடையேயான உறவுகள் மற்றும் மாநிலங்கள் மற்றும் மாகாணங்களுக்கு இடையேயான ஈடுபாடுகள் ஆகிய எட்டு வகை முயற்சிகளில் பொருளாதார மற்றும் செயல்பாட்டு ஒத்துழைப்புக்கான 10 ஆண்டுகால உத்திசார் முன்னுரிமை


2. பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த கூட்டுப் பிரகடனம்

  • நமது சிறப்பு உத்திசார் மற்றும் உலகளாவிய கூட்டாண்மைக்கு ஏற்ப சமகால பாதுகாப்பு சவால்களுக்கு பதிலளிக்க நமது பாதுகாப்பு ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான ஒரு விரிவான கட்டமைப்பு.

1)  ஒருவருக்கொருவர் நடத்தும் பலதரப்பு பயிற்சிகளில் பரஸ்பர பங்கேற்பு
(2) விரிவான உரையாடல்களில் ஈடுபடுதல் 
(3) இந்தோ-பசிபிக் பகுதியில் மனிதாபிமான, பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக முப்படை பயிற்சிகள் 
(4) சிறப்பு செயல்பாட்டுப் பிரிவுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு 
(5) ஜப்பான் பாதுகாப்புப் படைகளுக்கும் இந்திய ஆயுதப் படைகளுக்கும் இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பான இந்தியா-ஜப்பான் ஒப்பந்தத்தின் நடைமுறைகளை மேம்படுத்துதல் 
(6) பயங்கரவாத எதிர்ப்பு, அமைதி காக்கும் நடவடிக்கைகள், இணையதளப் பாதுகாப்பு போன்றவற்றில் முன்னுரிமை அளித்து ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்தல் 
(7) வளர்ந்து வரும் பாதுகாப்பு அபாயங்கள் தொடர்பான மதிப்பீடுகள் உட்பட பலதரப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல் 
(8) பாதுகாப்பு தளவாடங்களை பழுதுபார்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் ஒருவருக்கொருவர் தங்களது நிறுவனங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தல் 
(9) ரசாயன, உயிரியல், கதிரியக்கப் பாதுகாப்பில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்தல் 
10) இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியான கடல்சார் சூழலுக்காக கடலோர காவல்படை ஒத்துழைப்பை ஊக்குவித்தல் 
11) ஜப்பான் பாதுகாப்புப் படைகள், இந்திய ஆயுதப் படைகள், இரு நாடுகளின் கடலோர காவல்படையைச் சேர்ந்த கப்பல்களின் துறைமுக ஒத்துழைப்புகள் 
12) கடற்கொள்ளை, ஆயுதமேந்திய கொள்ளை, நாடுகடந்த பிற  குற்றங்களுக்கு எதிரான சட்ட அமலாக்க ஒத்துழைப்பை மேம்படுத்துதல் 
13) பாதுகாப்புத் துறையில் வழக்கமான தொழில்துறை ஒத்துழைப்பு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துதல் 
14) புதிய பிரிவுகளில் தொழில்நுட்பப் பகிர்வு 
15) ராணுவ மருத்துவம், சுகாதாரப் பாதுகாப்பில் ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய்தல் 
16) இந்தியாவின் டிஆர்டிஓ ஜப்பானின் ஏடிஎல்ஏ இடையேயான பாதுகாப்பு ஆராய்ச்சி - மேம்பாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் 
17) தேசிய பாதுகாப்பு, செயற்கைக்கோள் அடிப்படையிலான வழிசெலுத்தல், புவிக் கண்காணிப்பு போன்றவற்றில் விண்வெளி அமைப்புகளின் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் 
18) விண்வெளி குப்பைகளைக் கண்காணித்தல், நிர்வகித்தல் உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பு  
19) பொதுவான பிராந்திய உலகளாவிய பாதுகாப்பு நோக்கங்களை ஊக்குவித்தல் 
20) எல்லை தாண்டிய பயங்கரவாதம் உட்பட அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தைக் கண்டித்தல், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பொருள் நிதி ஆதரவை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஒன்றிணைந்து செயல்படுதல், பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு பலதரப்பு மன்றங்களில் ஒன்றிணைந்து செயல்படுதல். 


3. இந்தியாவிற்கான செயல் திட்டம் - ஜப்பான் மனிதவள பரிமாற்றம்

  • அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையில் 5,00,000 பேர், குறிப்பாக இந்தியாவிலிருந்து ஜப்பானுக்கு 50,000 திறன் வாய்ந்த மற்றும் ஓரளவு திறன்பெற்ற பணியாளர்களின் இருவழி பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்கான ஒரு செயல் திட்டம்

இத்தகைய முயற்சிகள் பின்வரும் நோக்கங்களுக்கு இலக்காகக் கொள்ளப்படும்:

i.  இந்தியாவிலிருந்து ஜப்பானுக்கு சாத்தியமான திறமையாளர்களை ஈர்ப்பது.
ii. இரு நாடுகளிலும் கூட்டு ஆராய்ச்சி, வணிகமயமாக்கல் பணிகள்.
iii. இந்தியாவில் ஜப்பானிய மொழிக் கல்வியை ஊக்குவித்தல், அத்துடன் எதிர்காலத்திற்கான முதலீடாக இரு வழி கலாச்சார, கல்வி பரிமாற்றங்களை ஊக்குவித்தல்.
iv. திறன் மேம்பாட்டை அதிகரித்து உற்பத்தித் துறையை வலுப்படுத்துதல்
v. ஜப்பானிய நிறுவனங்களுக்கும் இந்திய மாணவர்களுக்கும் இடையேயான தொடர்புகளை வலுப்படுத்துதல்.


4. கூட்டு கடன் பொறிமுறையில் ஒத்துழைப்பு ஒப்பந்தம்:

  • ஆகஸ்ட் 2025-ல் நடைபெற்ற 11வது இந்தியா-ஜப்பான் எரிசக்தி உரையாடலின் கூட்டு அறிக்கையை இந்தியாவும் ஜப்பானும் வரவேற்றன.
  • கூட்டு கடன் வழங்கும் செயல்முறை தொடர்பான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை இந்தியாவும் ஜப்பானும் வரவேற்றன.
  • உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி போன்ற சர்வதேச கூட்டமைப்புகள் மூலம் உயிரி எரிபொருட்களில் இந்தியாவும் ஜப்பானும் தங்கள் ஒத்துழைப்பைத் தொடரும்.
  • இந்தியாவின் பசுமைக்குடில் வாயு உமிழ்வு குறைப்பு இலக்குகளுக்கு பங்களிக்கும் வகையில், டிகார்பனைசிங் தொழில்நுட்பங்கள், தயாரிப்புகள், அமைப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் பரவலை எளிதாக்குவதற்கான ஒரு கருவி, இந்தியாவில் ஜப்பானிய முதலீட்டை ஊக்குவித்தல் மற்றும் இந்தியாவின் நிலையான வளர்ச்சி.


5. இந்திய - ஜப்பான் டிஜிட்டல் கூட்டாண்மை 2.0 தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, டிஜிட்டல் திறன் மேம்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு, இணையம் சார்ந்த செயல்பாடுகள், குறைக்கடத்திகள் போன்ற எதிர்கால தொழில்நுட்ப துறைகளில் கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு ஆவணம்


6. கனிம வளங்கள் துறையில் ஒத்துழைப்பு ஒப்பந்தம்

  • கனிம பாதுகாப்பு ஒத்துழைப்பு, இந்தோ-பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு, குவாட் முக்கிய கனிமங்கள் அமைப்பு ஆகிய முன்முயற்சிகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும் ஜப்பானும் இணைந்து செயல்படுகின்றன.
  • ஆகஸ்ட் 2025-ல் கனிம வளத்துறை தொடர்பாக இந்தியாவும் ஜப்பானும் ஒரு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
  • அரிய மண் பொருட்களுக்கான நிலையான விநியோகச் சங்கிலியை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட டொயோட்டா சுஷோவின் அரிய மண் சுத்திகரிப்புத் திட்டத்தின் மூலம் இந்தியாவும் ஜப்பானும் தங்கள் ஒத்துழைப்பை ஆழப்படுத்தியுள்ளன.


7. கூட்டு நிலவின் துருவ ஆய்வுப் பணி தொடர்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு இடையேயான கூட்டு முயற்சியை செயல்படுத்துதல்

  • சந்திரயான் 5 திட்டத்தில் இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை வரையறுக்கும் ஒரு ஆவணத்தின் மூலம் ஒரு முக்கிய ஒத்துழைப்புக்கு நடைமுறை வடிவம் அளித்தல்


8. சுத்தமான ஹைட்ரஜன் மற்றும் அம்மோனியா மீதான கூட்டு நோக்கப் பிரகடனம்

  • ஹைட்ரஜன்/அம்மோனியா குறித்த ஆராய்ச்சி, முதலீடு மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும், தொழில்நுட்பங்களை வளர்ப்பதற்கான அதிநவீன ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கும் ஓர் ஆவணம்.


9. கலாச்சார பரிமாற்றத்திற்கான ஒத்துழைப்பு ஒப்பந்தம்

  • கண்காட்சிகள், அருங்காட்சியக ஒத்துழைப்புகள் மற்றும் கலாச்சார பாதுகாப்புத் துறையில் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் கலை மற்றும் கலாச்சாரத் துறையில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான ஒரு கருவி


10. பரவலாக்கப்பட்ட உள்நாட்டு கழிவு நீர் மேலாண்மை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கு மிக முக்கியமான கழிவுநீரை திறம்பட மறுபயன்பாடு செய்தல் மற்றும் பரவலாக்கப்பட்ட கழிவு நீர் மேலாண்மை ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான ஓர் ஆவணம்.


11. சுற்றுச்சூழல் ஒத்துழைப்புத் துறையில் ஒத்துழைப்பு ஒப்பந்தம்

  • மாசு கட்டுப்பாடு, காலநிலை மாற்றம், கழிவு மேலாண்மை, பல்லுயிர் பெருக்கத்தின் நிலையான பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் தொழில்நுட்பங்கள் போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான துறைகளில் ஒத்துழைப்புக்கான ஒரு கட்டமைப்பு


12. சுஷ்மா ஸ்வராஜ் வெளியுறவு சேவை நிறுவனம் மற்றும் ஜப்பானின் வெளியுறவு அமைச்சகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • வெளியுறவுக் கொள்கைத் துறையில் பரஸ்பர புரிதலை மேம்படுத்துவதற்காக தூதர்கள், கல்வியாளர்கள், அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடையே பரிமாற்றங்களை ஊக்குவிப்பதற்கான ஒரு கட்டமைப்பு


13. ஜப்பானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் கல்வி, கலாச்சாரம், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் (MEXT) இடையேயான கூட்டு நோக்க அறிக்கை

  • விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் பரிமாற்றம் மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு பிரகடனம், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்களின் ஈடுபாட்டுடன் இரு நாடுகளின் ஆராய்ச்சி மற்றும் அறிவியல் நிறுவனங்களுக்கிடையேயான நிறுவன ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்.


பிற குறிப்பிடத்தக்க முடிவுகள்:


1. அடுத்த பத்தாண்டுகளுக்கு ஜப்பானிலிருந்து இந்தியாவிற்கு 10 ட்ரில்லியன் ஜப்பான் யென் தனியார் துறை முதலீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2. குறைக்கடத்திகள், சுத்தமான எரிசக்தி, தொலைத்தொடர்பு, மருந்துகள், முக்கியமான கனிமங்கள் மற்றும் புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் போன்ற உத்திசார் துறைகளில் விநியோகச் சங்கிலி மீள்தன்மையை ஊக்குவிப்பதற்காக இந்தியாவும் ஜப்பானும் பொருளாதார பாதுகாப்பு முயற்சியைத் தொடங்கின.இந்தத் துறைகளில் உண்மையான ஒத்துழைப்பின் விளக்கப் பட்டியலாக அவர்கள் ஒரு பொருளாதாரப் பாதுகாப்பு உண்மை ஆவணத்தை வெளியிட்டனர்.

3. இந்திய - ஜப்பான் செயற்கை நுண்ணறிவு முன்முயற்சியின் துவக்கம் : நம்பகமான செயற்கை நுண்ணறிவு சூழலியலை வளர்ப்பதற்காக பெரிய கணினி மொழி மாதிரிகள், பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் வணிகங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல்

4. அடுத்த பொது இயக்க கூட்டாண்மையைத் தொடங்குதல் : ‘இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும்’ இயக்கத் தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளில் கவனம் செலுத்தி, உள்கட்டமைப்பு, தளவாடங்கள் மற்றும் இயக்கத் துறைகளில், குறிப்பாக ரயில்வே, விமானப் போக்குவரத்து, சாலைகள், கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுகங்களில், அரசுகளுக்கு இடையே மற்றும் வர்த்தகங்களுக்கு இடையே கூட்டாண்மைகளை வளர்ப்பது.

5. நமது பொருளாதாரங்களின் இயந்திரங்களாக விளங்கும் இந்திய மற்றும் ஜப்பானிய சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்திய - ஜப்பான் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மன்றத்தைத் தொடங்குதல்.

6. எரிசக்தி பாதுகாப்பு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் உயிரி எரிவாயு மற்றும் உயிரி எரிபொருள்கள் போன்ற நிலையான எரிபொருள்கள் தொடர்பான தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை வலுபடுத்துவதற்கான  நிலையான எரிபொருள் முன்முயற்சியைத் தொடங்குதல்.

7. வெளியுறவு அலுவலகங்களால் ஏற்பாடு செய்யப்படும் ஒவ்வொரு முயற்சியிலும் மூன்று வருகைகள் உட்பட, மாநிலங்கள் மற்றும் மாகாணங்களுக்கு இடையே உயர் மட்ட பரிமாற்றங்கள்

8. வணிகம், மக்களிடையேயான தொடர்புகள் மற்றும் கலாச்சார தொடர்புகளை வலுப்படுத்த இந்தியாவிற்கும் கன்சாய் மற்றும் கியூஷு ஆகிய இரு பகுதிகளுக்கும் இடையே வணிக மன்றங்களை நிறுவுதல்.


SOURCE : https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2162109




Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)