CURRENT AFFAIRS IN TAMIL SEPTEMBER 2025 - (19.09.2025-20.09.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL SEPTEMBER 2025 - (19.09.2025-20.09.2025)



செப்டம்பர் மாதம் 2025 (19.09.2025-20.09.2025) முக்கிய நடப்பு நிகழ்வுகள் :


இன்டர்போல் அமைப்பின் ஆசியக் குழுவின் உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது: (INDIA ELECTED AS MEMBER OF INTERPOL'S ASIAN COMMITTEE) 

  • உலகம் முழுவதும் உள்ள காவல் துறையினர் இணைந்து சர்வதேச குற்றங்களை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் செயல்பட்டு வருவது இன்டர்போல் காவல் அமைப்பாகும். 
  • இந்நிலையில் இன்டர்போல் அமைப்பின் ஆசியக் குழுவின் உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

  • சிங்கப்பூரில் நடைபெற்ற இன்டர்போல் அமைப்பின் 25-வது ஆசிய பிராந்திய மாநாட்டில் நடைபெற்ற தேர்தலில் இந்தியா உறுப்பினராக தேர்வாகி உள்ளது. 
  • இந்தியாவில் இன்டர்போல் விவகாரங்களுக்கு பொறுப்பான மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இந்தியா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்ட்டது, குற்ற கும்பல்கள், சைபர் குற்றங்கள், மனிதக் கடத்தல், பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்புப் பிரச்சினைகளில் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவும் என சிபிஐ தெரிவித்துள்ளது.
  • சர்வதேச காவல் துறை (The International Criminal Police Organization - INTERPOL) சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதை நோக்காக கொண்டு 1923 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட காவல்துறை அமைப்பு ஆகும். இது 184 உலக நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ளது. இவ் அமைப்பு நாடுகளின் காவல்துறைகளுக்கிடையான ஒத்துழைப்பு, இயைபு ஆக்கத்தை ஏதுவாக்குகின்றது. இவ் அமைப்பின் தலைமையகம் லியான்ஸ், பிரான்சில் அமைந்துள்ளது


தாதாசாகேப் பால்கே விருது 2025: (DADASAHEB PHALKE AWARD 2025)

  • மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன் லால்-க்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயரிய விருது வரும் 23ம் தேதி அன்று மோகன் லால்-க்கு விருது வழங்கப்படும் என்று மத்திய அசு அறிவித்துள்ளது. 
  • அதாவது, 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் விருது வழங்கப்படுகிறது. 
  • இந்நிலையில், நடிகர் மோகன் லால்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் இரட்டை இலக்க பொருளாதார  வளர்ச்சி : (TAMIL NADU HAS ACHIEVED DOUBLE-DIGIT ECONOMIC GROWTH DURING THE 4 YEARS OF DMK RULE:)

  • 11.19 சதவீதம் பொருளாதார வளர்ச்சிக்கு திராவிட மாடல் ஆட்சி தான் சாட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வீடியோ வெளியிட்டுள்ளார். 
  • அந்த வீடியோவில், கல்வி, மருத்துவத்தரம், உள்கட்டமைப்பு, சட்டம், ஒழுங்கு என அனைத்தையும் எடுத்துக்காட்டுவது தான் பொருளாதார வளர்ச்சி. பலதுறை வளர்ச்சி, வேலைவாய்ப்பு, தனிபர் வருமானம், மக்களின் வாழ்க்கை தரம், வாங்கும் திறனை எடுத்துக்காட்டுவது ஜிடிபி. 
  • 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் சராசரியாக 8.9 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளோம். கொரோனா பாதிப்பு, மத்திய அரசு நிதி வழங்க மறுத்தும் தமிழ்நாடு இரட்டை இலக்க பொருளாதார  வளர்ச்சி. அதிமுக ஆட்சியை விட தற்போது இரண்டு மடங்கு பொருளாதார வளர்ச்சியை பெற்றுள்ளோம்" என்றார்.

வேலூரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளிக்கு வேலுநாச்சியார் பெயர் : ( POLICE TRAINING SCHOOL TO BE NAMED AFTER ‘VEERAMANGAI’ VELU NACHIYAR: STALIN )

  • வேலூரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளிக்கு வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
  • சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் அவருடைய சிலையையும் அவர் திறந்து வைத்தார்.


H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும்: (TO GET AN H-1B VISA, YOU HAVE TO PAY $1,00,000 (RS. 88 LAKHS) ANNUALLY )

  • அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
  • 2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நடவடிக்கை அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. 
  • கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஜூன் மாதம் அமெரிக்கா சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை 8% குறைந்தது. ஜூலை மாதம் 6% குறைந்தது ,இந்நிலையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அமெரிக்கா செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதம் அதிகபட்சமாக 15% குறைந்துள்ளது. இதனால், அமெரிக்க வணிகங்களுக்கு ரூ.3000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

  • இந்நிலையில், H1B விசா என்பது அமெரிக்காவில் வேலை செய்ய வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வேலை விசா.  உயர் கல்வித் தகுதி (பொதுவாக Bachelor's அல்லது Master's degree) மற்றும் குறிப்பிட்ட துறையில் திறமை கொண்டவர்கள்.பொதுவாக IT, Engineering, Finance, Medicine, Research போன்ற துறைகளில் வேலை பெறுபவர்கள்


ஆசியாவிலேயே ரெயில் ஓட்டுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் பணி ஓய்வு பெறுகிறார்: (ASIA'S FIRST FEMALE TRAIN DRIVER RETIRES)

  • மகாராஷ்டிரா மாநிலம் சாத்தாரா மாவட்டத்தை சேர்தவர் சுரேகா யாதவ் (60 வயது) எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங்கில் டிப்ளமோ படிப்பை முடித்து, 1989 ஆம் ஆண்டு தனது 24 வயதில் இந்திய ரயில்வேயில் உதவி ஓட்டுநராக சுரேகா சேர்ந்தார். 
  • இதன் மூலம் இந்தியாவில் மட்டுமின்றி ஆசியாவிலேயே ரெயில் ஓட்டுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை சுரேகா யாதவ் பெற்றார். 
  • இதன்பின் 1996 ஆம் ஆண்டு சரக்கு ரெயில் ஓட்டுநரான சுரேகா, 2000 ஆம் ஆண்டு முதல் பயணிகள் ரெயில்களை ஓட்டத் தொடங்கினார். 36 ஆண்டுகள் ரெயில்வேயில் பணியாற்றிய சுரேகா யாதவ் வரும் 30ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார். 
  • ரெயில்வேயில் ஓட்டுநர்களாக மாறிய அனைத்து பெண்களுக்கும் சுரேகா யாதவின் வாழ்க்கை ஒரு வழிகாட்டியாக மாறியுள்ளது. இன்று, இந்திய ரயில்வேயில் 1500 பெண் ஓட்டுநர்கள் உள்ளனர்.


நாடு முழுவதும் 474 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது இந்திய தலைமை தேர்தல் ஆணையம் : (THE ELECTION COMMISSION OF INDIA HAS REVOKED THE RECOGNITION OF 474 PARTIES ACROSS THE COUNTRY )

  • தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
  • நாடு முழுவதும் 474 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 121 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. 
  • மேலும், தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத கட்சிகளின் அங்கீகாரத்தையும் ரத்து செய்துள்ளது.


வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை -பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு: (BIHAR CHIEF MINISTER NITISH KUMAR ANNOUNCES RS. 1,000 MONTHLY STIPEND FOR UNEMPLOYED GRADUATES)

  • பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இளம் வாக்காளர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டு வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை அறிவித்துள்ளார் முதல்வர் நிதிஷ் குமார். 
  • இந்தத் திட்டம் 20 முதல் 25 வயதுக்குட்பட்ட, பட்டப்படிப்பை முடித்த வேலையற்ற இளைஞர்களுக்கு முதலமைச்சரின் நிஷாத் சுயம்சய உதவித்தொகை திட்டத்தின் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று நிதிஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார். 
  • முன்னதாக, பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற வேலையற்ற இளைஞர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில் இப்போது கலை, அறிவியல் மற்றும் வணிகப் பிரிவைச் சேர்ந்த வேலையில்லாத ஆண் மற்றும் பெண் பட்டதாரி இளைஞர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதிய உயர்வு, கிராமப்புற சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு, மாணவர்களுக்கு கல்விக் கடன் வட்டி தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகளையும் நிதிஷ் குமார் வெளியிட்டிருந்தார்.

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக சதம் விளாசிய இந்தியர்: (FASTEST INDIAN TO SCORE A CENTURY IN ODIS)

  • இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 412 ரன்கள் குவித்தது. பின்னர் 413 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.
  • இந்திய அணியில் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா அதிரடியாக விளையாடி 50 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய இரண்டாவது வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார். அதிரடியாக விளையாடிய அவர் 63 பந்துகளில் 125 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 17 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். 

  • 50 பந்துகளில் அதிவேகமாக சதம் விளாசியதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக சதம் விளாசிய இந்தியர் (ஆடவர் மற்றும் மகளிர் உள்பட) என்ற விராட் கோலியின் சாதனையை ஸ்மிருதி மந்தனா முறியடித்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலி 52 பந்துகளில் சதம் விளாசியிருந்தார். அதுவே இந்தியர் ஒருவரால் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக அடிக்கப்பட்ட சதமாக இருந்து வந்தது. அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
  • அத்துடன் 13 சதங்களுடன், பெண்கள் ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசி பேட்ஸ் சாதனையை சமன் செய்துள்ளார்.
  • இந்தியா 47 ஓவரில் 369 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது, இதனால் ஆஸ்திரேலியா 43 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 எனக்கைப்பற்றியது.


பாகிஸ்தான்- சவுதி அரேபியா இடையே பாதுகாப்பு ஒப்பந்தம்: (PAKISTAN-SAUDI ARABIA SECURITY AGREEMENT - THE STRATEGIC MUTUAL DEFENSE AGREEMENT (SMDA))

  • பாகிஸ்தான்- சவுதி அரேபியா இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் முக்கியம்சம் என்னவென்றால், ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால், அது மற்றொரு நாட்டின் மீதான தாக்குதலாக கருதப்படும். இதனால் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், சவுதி அரேபியா பாகிஸ்தான் பாதுகாக்க வரும். 
  • இது இந்தியாவுக்கு தலைவலியை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. ஏனென்றால், இந்தியா- சவுதி அரேபியா இடையே நல்ல நட்புறவு உள்ளது. 
  • இந்த நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்பிடம், இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் சவுதி அரேபியா தலையிடுமா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அமைச்சர் கவ்ஜா ஆசிப் கூறியதாவது: இந்தியா போர் தொடுத்தால் சவுதி அரேபியா பாகிஸ்தானை பாதுகாக்க வரும். இதில் சந்தேகமே இல்லை” என்று கூறியுள்ளார். சவுதி அரேபியாவுடனான ஒப்பந்தம் என்பது தாக்குதல் ஒப்பந்தம் என்பதை விட, தற்பாதுகாப்பு ஒப்பந்தமாகும். சவுதி அரேபியாவுக்கு எதிராகவோ, பாகிஸ்தானுக்கு எதிராகவோ ஏதாவது அத்துமீறல் நடைபெற்றால் நாங்கள் ஒருங்கிணைந்து எதிர்ப்போம். இந்த ஒப்பந்தத்தை அத்துமீறலுக்கு பயன்படுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆனால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால், இந்த ஒப்பந்தம் உடனடியாக செயல்பாட்டுக்கு வந்துவிடும். பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்கள் சவுதி அரேபியா பயன்பாட்டுக்கும் கிடைக்கும்” என்றார்.



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!


current-affairs-in-tamil-19th-20th-september-2025

Post a Comment

0Comments

Post a Comment (0)