நவம்பர் மாதம் 2025 (13.11.2025-17.11.2025) முக்கிய நடப்பு நிகழ்வுகள் :
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட முதலாவது நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் (Anti-Submarine Warfare Corvette) மாஹே-வின் சின்னம் அறிமுகம் :
மாஹே கப்பல் சின்னம் அறிமுகம் - முக்கிய தகவல்கள்
- கப்பலின் பெயர்: மாஹே (Mahe).
- வகை: உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட முதலாவது நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் (First indigenously designed Anti-Submarine Warfare Corvette).
- அறிமுகம்: இந்திய கடற்படை மாஹே கப்பலின் சின்னத்தை அறிமுகம் செய்துள்ளது.
- சேர்க்கை: இது விரைவில் மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது.
- முக்கியத்துவம்: வடிவமைப்பு முதல் செயல்பாடு வரை, கடற்படை கப்பல் கட்டுமானத்தில் இந்தியாவின் வளர்ந்துவரும் தற்சார்பை (Aatmanirbharta) கொண்டாடும் ஒரு முக்கிய மைல்கல்.
- பெயர்க் காரணம்: இந்தியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள கடலோர நகரமான மாஹேவின் பெயரிடப்பட்டுள்ளது.
கப்பல் சின்னத்தின் விளக்கம்
- மாஹே கப்பலின் சின்னம், அப்பகுதியின் கலாச்சார மற்றும் தற்காப்பு மரபிலிருந்து உத்வேகம் பெற்றுள்ளது:
- சித்தரிப்பு: கேரளாவின் தற்காப்பு பாரம்பரியத்தின் சின்னமான, களரிப்பயட்டுடன் தொடர்புடைய உருமி என்ற நெகிழ்வான வாள் கடலில் இருந்து எழுவதுபோல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
உருமி குறிப்பது:
- சுறுசுறுப்பு (Agility)
- துல்லியம் (Precision)
- கடும் தாக்குதல் (Lethality)
பிரதிபலிப்பு: இது கப்பலின் விரைவான செயல்பாட்டினையும் தீர்க்கமாகத் தாக்கும் திறனையும் பிரதிபலிக்கிறது.
சின்னத்தின் உறுதிப்பாடு: உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட, புதுமை கண்டுபிடிப்புடன் கூடிய மற்றும் தற்சார்புடன் கூடிய இந்திய கடற்படையின் உறுதிப்பாட்டை இந்தக் கப்பலின் சின்னம் பிரதிபலிக்கிறது.
நடப்பு நிகழ்வுகள் வினாடி வினா (Current Affairs Quiz) -(நவம்பர் 13 - 17, 2025):
Which weapon, associated with Kalaripayattu, is depicted in the Mahe ship's emblem?
மாஹே கப்பலின் சின்னத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள களரிப்பயட்டுடன் தொடர்புடைய ஆயுதம் எது?
A) Spear, அ) வேல்,
B) Sword, ஆ) வாள்ன வாள்)
C) Urumi (Flexible Sword), இ) உருமி (நெகிழ்வா
D) Shield ஈ) கேடயம்
சரியான விடை : C) Urumi (Flexible Sword), இ) உருமி (நெகிழ்வான வாள்)
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக அந்த நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார்:
முக்கிய அம்சங்கள்:
- குற்றத் தீர்ப்பு: கடந்த ஆண்டு (2024) ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வங்கதேசத்தில் பரவலாக நடந்த வன்முறை மற்றும் போராட்டங்களின் போது இளைஞர்கள் கொல்லப்பட்ட வழக்கில் ஹசீனா குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார்.
- பின்னணி: அவரது அரசாங்கத்திற்கு எதிராக நடந்த தொடர் போராட்டங்களில் 1,500 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இதன் காரணமாக அவர் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய நேரிட்டது.
- தற்போதைய நிலை: இராஜினாமா செய்த பிறகு, ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி, கடந்த ஓராண்டாக இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
- பின்விளைவு: வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றார்.
- தண்டனை: ஷேக் ஹசீனா தனது சொந்த நாட்டு மக்களைக் கொல்ல உத்தரவிட்டார் என்று நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் நீதிபதி அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்று சுட்டிக்காட்டினார்.
- பாதுகாப்பு: தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே டாக்கா மற்றும் பிற முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
நடப்பு நிகழ்வுகள் வினாடி வினா (Current Affairs Quiz) -(நவம்பர் 13 - 17, 2025):
Sheikh Hasina was found guilty of which major charge by the Tribunal?
ஷேக் ஹசீனாவுக்கு தீர்ப்பாயத்தால் விதிக்கப்பட்ட முக்கிய குற்றச்சாட்டு எது?
A) Corruption and Fraud, அ) ஊழல் மற்றும் மோசடி
B) Sedition and Treason, ஆ) தேசத்துரோகம்
C) Crimes Against Humanity, இ) மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்
D) Money Laundering, ஈ) பணமோசடி
சரியான விடை : C) Crimes Against Humanity, இ) மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்
'மக்களைத்தேடி மருத்துவம்' திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 2.50 கோடி பேர் பயனடைந்துள்ளனா் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்:
இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
- பயனாளிகள் எண்ணிக்கை: நான்கு ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலன் காக்கப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் தனது 'எக்ஸ்' தளத்தில் (X platform) தெரிவித்துள்ளார்.
- சாதனை: இத்திட்டம் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்று, ஐ.நா. விருதையும் வென்றுள்ளது.
நோக்கம்:
- 2021-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், வீடு வீடாகச் சென்று அனைத்து தொற்றா நோய்களையும் (NCDs) கண்டறிதல்.
- நோயுள்ளவர்களைக் கண்காணித்தல், மாத்திரைகள் வழங்குதல் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்குதல்.
- வலி நிவாரண சிகிச்சை தேவைப்படுவோருக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று உடற்பயிற்சி மற்றும் சமூக உளவியல் சார்ந்த சிகிச்சைகள் அளித்தல்.
- சமீபத்திய நிகழ்வு: 2 கோடியே 50 லட்சமாவது பயனாளியான தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மனோன்மணிக்கு மருந்துப் பெட்டகத்தை வழங்கிய மா. சுப்பிரமணியனுக்கு முதல்வர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
நடப்பு நிகழ்வுகள் வினாடி வினா (Current Affairs Quiz) -(நவம்பர் 13 - 17, 2025):
How many people have benefited from the 'Makkalai Thedi Maruthuvam' scheme in the last 4 years, as announced by CM Stalin?
முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி, 'மக்களைத்தேடி மருத்துவம்' திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் எத்தனை கோடி பேர் பயனடைந்துள்ளனர்?
A) 1.50 crore, அ) 1.50 கோடி
B) 2.50 crore, ஆ) 2.50 கோடி
C) 3.00 crore, இ) 3.00 கோடி
D) 4.50 crore ஈ) 4.50 கோடி
சரியான விடை : B) 2.50 crore, ஆ) 2.50 கோடி
நடிகை கீர்த்தி சுரேஷ், குழந்தைகளின் உரிமைகளுக்காகப் போராடும் யுனிசெஃப் இந்தியாவின் பிரபலங்களுக்கான தூதராக (Celebrity Advocate) நியமிக்கப்பட்டுள்ளார்:
இந்தப் புதிய பொறுப்பின் மூலம், குழந்தைகளைப் பாதிக்கும் முக்கியமான விஷயங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவர் கவனம் செலுத்துவார். அவரது முக்கியப் பணிகளில் அடங்குவன:
- மன ஆரோக்கியம்
- கல்வி
- பாலின சமத்துவம்
ரசிகர்களுடனான கீர்த்தி சுரேஷின் ஆழமான தொடர்பு, குழந்தைகளுக்கு, குறிப்பாக மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் பேச ஒரு சக்திவாய்ந்த வாய்ப்பை உருவாக்கும் என்றும், ஒவ்வொரு குழந்தையையும் சென்றடைய யுனிசெஃப் அமைப்பின் இலக்கை அடைய அவர் உதவுவார் என்றும் யுனிசெஃப் இந்தியா தெரிவித்துள்ளது. அனைத்துக் குழந்தைகளும் ஆரோக்கியமாக வளர விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மக்களைத் தூண்டவும் யுனிசெஃப் இந்தியாவுடன் இணைந்ததில் பெருமைப்படுவதாகக் கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
நடப்பு நிகழ்வுகள் வினாடி வினா (Current Affairs Quiz) -(நவம்பர் 13 - 17, 2025):
Who has been appointed as UNICEF India's Celebrity Advocate for promoting children's rights?
குழந்தைகளின் உரிமைகளுக்காகப் போராடும் யுனிசெஃப் இந்தியாவின் பிரபலங்களுக்கான தூதராக (Celebrity Advocate) நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A) Nayanthara, அ) நயன்தாரா
B) Priyanka Chopra, ஆ) பிரியங்கா சோப்ரா
C) Samantha Ruth Prabhu, இ) சமந்தா ரூத் பிரபு
D) Keerthy Suresh , ஈ) கீர்த்தி சுரேஷ்
சரியான விடை : D) Keerthy Suresh , ஈ) கீர்த்தி சுரேஷ்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆதார் அட்டை ஒரு அடையாள ஆவணமாக மட்டுமே கருதப்படுமே தவிர, குடியுரிமைக்கான சான்றாக கருதப்படாது-உச்ச நீதிமன்றம்:
- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் அல்லது நீக்குதல் தொடர்பாக, ஆதார் அட்டை ஒரு அடையாள ஆவணமாக மட்டுமே கருதப்படுமே தவிர, குடியுரிமைக்கான சான்றாக கருதப்படாது என்று இந்திய தேர்தல் ஆணையம் (ECI) மீண்டும் ஒருமுறை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது:
முக்கிய அம்சங்கள்:
- அடையாள ஆவணம் மட்டுமே: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது, ஆதார் அட்டை வாக்காளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த மட்டுமே பரிசீலிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
- குடியுரிமைக்கான ஆவணம் அல்ல: இது குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணமாகப் பயன்படுத்தப்படாது.
- அறிவிக்கை வெளியீடு: மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதலின் அடிப்படையில், ஆதார் அடையாள ஆவணமாகப் பயன்படுத்தப்படலாம், ஆனால் குடியுரிமை ஆவணமாகப் பயன்படுத்தப்பட முடியாது என்று தேர்தல் ஆணையம் கடந்த செப்டம்பர் 9 அன்று ஒரு அறிவிக்கையை வெளியிட்டது.
- சூழல்: ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக மட்டுமே ஏற்க அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்குப் பதிலளிக்கும் விதமாக தேர்தல் ஆணையம் இந்த பதிலை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
நடப்பு நிகழ்வுகள் வினாடி வினா (Current Affairs Quiz) -(நவம்பர் 13 - 17, 2025):
Which organization recently informed the Supreme Court that Aadhaar card is only an identity document and not proof of citizenship for voter list procedures?
வாக்காளர் பட்டியல் நடைமுறைகளுக்கு ஆதார் அட்டை ஒரு அடையாள ஆவணம் மட்டுமே தவிர, குடியுரிமைக்கான சான்று அல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த அமைப்பு எது?
A) UIDAI, அ) யுஐடிஏஐ
B) Ministry of Home Affairs, ஆ) உள்துறை அமைச்சகம்
C) Election Commission of India (ECI), இ) இந்திய தேர்தல் ஆணையம் (ECI)
D) Ministry of Law and Justice , ஈ) சட்டம் மற்றும் நீதி அமைச்சகம்
சரியான விடை : C) Election Commission of India (ECI), இ) இந்திய தேர்தல் ஆணையம் (ECI)
பிகார் சட்டமன்றத் தேர்தல் :
- பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் (JDU) உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), பிகார் சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, 243 இடங்களில் 202-ஐக் கைப்பற்றியது.
முக்கிய அம்சங்கள்:
- தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலமான வெற்றி: பெரும்பான்மைக்குத் தேவையான 123 இடங்களை விட மிக அதிகமாக வென்று, இக்கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.
- பாஜகவின் எழுச்சி: பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 89 இடங்களை (முந்தைய தேர்தலை விட 74 இடங்கள் அதிகம்) வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
- ஐக்கிய ஜனதா தளத்தின் பங்கு: ஐக்கிய ஜனதா தளம் (JDU) 85 இடங்களைப் பெற்றது (முந்தைய தேர்தலை விட 43 இடங்கள் அதிகம்).
- ‘இண்டி’ கூட்டணியின் தோல்வி: ராஷ்ட்ரீய ஜனதா தளம் (RJD), காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளை உள்ளடக்கிய எதிர்க்கட்சியான 'இண்டி' கூட்டணி படுதோல்வி அடைந்து, வெறும் 34 இடங்களை மட்டுமே வென்றது.
- ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் (RJD) இடங்கள் கணிசமாகக் குறைந்து 24 ஆகின (முந்தைய தேர்தலில் 75).
- காங்கிரஸ் கட்சி மிகக் குறைவாக 6 இடங்களை மட்டுமே வென்றது.
- அதிக வாக்குப்பதிவு: இத்தேர்தலில் வரலாறு காணாத வகையில் 67% வாக்குகள் பதிவாகின. இதில் ஆண்களை விட (62.8%) பெண்களே (71.6%) அதிகமாக வாக்களித்தனர்.
- பிற கட்சிகள்: ஹைதராபாத் எம்.பி. அஸாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி 5 இடங்களை வென்றது. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஒரு இடத்தையும் பெறவில்லை.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தேசிய கோபால் ரத்னா விருது 2025:
- சிறந்த பால் கூட்டுறவு சங்கம் அல்லது பால் உற்பத்தி நிறுவனம் அல்லது பால் உற்பத்தி அமைப்பு பிரிவில் வடகிழக்கு பிராந்தியம் அல்லாத வகையில், தமிழ்நாட்டில் அரியலூரில் உள்ள டி.ஒய்.எஸ்.பி.எல். 37 செந்துறை பால் உற்பத்தி கூட்டுறவு சங்க நிறுவனத்திற்கு 3-வது பரிசு கிடைத்துள்ளது.
- அந்நிறுவனத்திற்கு 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசுடன் சான்றிதழும் நினைவுப் பரிசும் வழங்கப்படும்.
தேசிய கோபால் ரத்னா விருது 2025 - முக்கிய அம்சங்கள்
- விருது அளிப்பவர்: மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை.
- சிறப்பு: இது கால்நடை மற்றும் பால்வளத்துறையின் மிக உயரிய தேசிய அளவிலான விருது.
- வழங்கும் தேதி: தேசிய பால்வள தினத்தையொட்டி (National Milk Day) 2025 நவம்பர் 26 அன்று.
- வழங்குபவர்: மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு. ராஜீவ் ரஞ்சன் சிங்.
- பெறப்பட்ட விண்ணப்பங்கள்: இந்த ஆண்டு மொத்தம் 2081 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
விருது வழங்கப்படும் பிரிவுகள் (மொத்தம் 3)
- நாட்டு மாடுகளை வளர்க்கும் சிறந்த பால் உற்பத்தியாளர் (Best Dairy Farmer Rearing Indigenous Bovine Breed).
- சிறந்த பால் கூட்டுறவு சங்கம் அல்லது பால் உற்பத்தி நிறுவனம் அல்லது பால் உற்பத்தி அமைப்பு (Best Dairy Cooperative/Milk Producer Organization/Dairy Farmer Producer Organization).
- சிறந்த செயற்கை கருவூட்டல் தொழில்நுட்பவியளாலர் (Best Artificial Insemination Technician).
நடப்பு நிகழ்வுகள் வினாடி வினா (Current Affairs Quiz) -(நவம்பர் 13 - 17, 2025):
Which district in Tamil Nadu is associated with the DYSBL 37 Sendurai Milk Producers Co-operative Society that won the National Gopal Ratna Award?
தேசிய கோபால் ரத்னா விருது பெற்ற டி.ஒய்.எஸ்.பி.எல். 37 செந்துறை பால் உற்பத்தி கூட்டுறவு சங்கம் தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தது?
A) Thanjavur, அ) தஞ்சாவூர்
B) Tiruchirappalli, ஆ) திருச்சிராப்பள்ளி
C) Perambalur, இ) பெரம்பலூர்
D) Ariyalur, ஈ) அரியலூர்
சரியான விடை : D) Ariyalur, ஈ) அரியலூர்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
2025 ஜூலை - செப்டம்பர் காலாண்டில் தமிழ்நாட்டின் வேலையின்மை விகிதம் மற்றும் தேசிய அளவில் வேலையின்மை விகிதம் :
தமிழ்நாட்டில் வேலையின்மை விகிதம் - 2025 (Q3)
| விவரம் | தரவு |
| கணக்கெடுப்பு நிறுவனம் | தேசிய புள்ளிவிவர அலுவலகம் (NSO) |
| கணக்கெடுப்பு முறை | காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு (PLFS) |
| அறிக்கை காலாண்டு | ஜூலை - செப்டம்பர் 2025 (மூன்றாவது காலாண்டு) |
| தமிழ்நாட்டின் வேலையின்மை விகிதம் | 5.7% |
| தேசிய அளவில் தமிழ்நாட்டின் இடம் | வேலையின்மை குறைவாக உள்ள மாநிலங்களில் 11வது இடம் |
வேலையின்மை மிகக் குறைவாக உள்ள முதல் இரண்டு மாநிலங்கள்:
| மாநிலம் | வேலையின்மை விகிதம் | தேசிய அளவில் இடம் |
| குஜராத் | 2.2% | 1 |
| கர்நாடகா | 2.8% | 2 |
- வரையறை: வேலை செய்யத் தகுதியும் விருப்பமும் இருந்தும் வேலை கிடைக்காமல் இருப்பவர்களின் சதவீதம்.
- முக்கியத்துவம்: ஒவ்வொரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவற்றை எடை போடும் முக்கிய அளவுகோல்.
- இந்தத் தரவுகள், தமிழ்நாட்டில் இன்னும் 5.7% பேர் வேலை இல்லாமல் இருக்கின்றனர் என்பதைக் காட்டுகிறது. இருப்பினும், வேலைவாய்ப்பு குறைவாக உள்ள மாநிலங்களின் பட்டியலில் 11-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிகழ்வுகள் வினாடி வினா (Current Affairs Quiz) -(நவம்பர் 13 - 17, 2025):
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
current-affairs-in-tamil-13th-17th-november-2025


