டிசம்பர் மாதம் 2025 (16.12.2025-19.12.2025) முக்கிய நடப்பு நிகழ்வுகள் :
- TNPSC-CurrentAffairs குரூப் 1, 2, 2A, 4 தேர்வுகளுக்கான 16th to 19th டிசம்பர்2025 வரையிலான முக்கிய நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தொகுப்பு
எத்தியோப்பியாவின் உயரிய விருது 2025:
- உயரிய கௌரவம்: அரசுமுறைப் பயணமாக எத்தியோப்பியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்த நாட்டின் உயரிய சிவிலியன் விருதான 'தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா' (The Great Honour Nishan of Ethiopia) வழங்கப்பட்டது.
- வழங்கியவர்: தலைநகர் அடிஸ் அபாபாவில் நடைபெற்ற சிறப்பு விழாவில், எத்தியோப்பிய பிரதமர் அபிய் அகமது அலி இந்த விருதை வழங்கிக் கௌரவித்தார்.
- முக்கியத்துவம்: இந்த உயரிய விருதைப் பெறும் முதல் உலகத் தலைவர் பிரதமர் மோடி ஆவார். இந்தியா - எத்தியோப்பியா இடையேயான உறவை வலுப்படுத்தியதற்காகவும், அவரது உலகளாவிய தலைமைப் பண்பிற்காகவும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
- பிரதமரின் நெகிழ்ச்சி: விருதைப் பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, "உலகின் மிகவும் பழமையான நாகரிகங்களில் ஒன்றான எத்தியோப்பியாவால் கௌரவிக்கப்படுவது தமக்குக் கிடைத்த பெரும் பெருமை" என்று தெரிவித்தார்.
- அர்ப்பணிப்பு: இந்த கௌரவம் தனக்கு மட்டுமேயானதல்ல என்றும், இதனை 140 கோடி இந்தியர்களுக்கும், இரு நாடுகளின் உறவை மேம்படுத்த உழைத்த மக்களுக்கும் அர்ப்பணிப்பதாக அவர் கூறினார்.
- உறவில் முன்னேற்றம்: இந்தப் பயணத்தின் போது இந்தியா - எத்தியோப்பியா இடையேயான உறவு 'மூலோபாயக் கூட்டாண்மை' (Strategic Partnership) நிலைக்கு உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத்தில் 'ரத்து மற்றும் திருத்த மசோதா 2025' (Repealing and Amending Bill, 2025) நிறைவேற்றப்பட்டது :
- தலைப்பு: காலாவதியான 71 சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
- மசோதா நிறைவேற்றம்: வழக்கற்றுப்போன மற்றும் காலாவதியான 71 சட்டங்களை ரத்து செய்ய அல்லது திருத்தக் கோரும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) நிறைவேற்றப்பட்டது.
- நோக்கம்: தேவையற்ற பழைய சட்டங்களை நீக்குவது, சட்டமியற்றும் போது ஏற்பட்ட பிழைகளைச் சரிசெய்வது மற்றும் சில சட்டங்களில் உள்ள மதரீதியான அல்லது பாலின பாகுபாடுகளை அகற்றுவதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கமாகும்.
- அமைச்சரின் விளக்கம்: மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பேசுகையில், "இந்தச் சீர்திருத்தங்கள் காலனித்துவ (British Era) மனநிலையிலிருந்து விடுதலை பெறுவதற்கான ஒரு படி" என்று குறிப்பிட்டார். மேலும், இது மக்களின் "வாழ்க்கையை எளிதாக்குவதற்கு" (Ease of Living) உதவும் என்றும் தெரிவித்தார்.
முக்கிய மாற்றங்கள்:
- 71 சட்டங்கள் ரத்து: 1886-ஆம் ஆண்டின் இந்திய டிராம்வேஸ் சட்டம், 1976-ஆம் ஆண்டின் சர்க்கரை விலை சமன்பாட்டு நிதிச் சட்டம் உள்ளிட்ட 71 சட்டங்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதில் 65 சட்டங்கள் ஏற்கெனவே முதன்மைச் சட்டங்களுடன் இணைக்கப்பட்ட திருத்தச் சட்டங்களாகும்.
- திருத்தங்கள்: இந்திய வாரிசுரிமைச் சட்டம் (1925), சிவில் நடைமுறைச் சட்டம் (1908) உள்ளிட்ட 4 சட்டங்களில் தற்காலத்திற்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, நீதிமன்றங்கள் மூலம் உயில்களை (Wills) உறுதிப்படுத்தும் கட்டாயம் சில வழக்குகளில் நீக்கப்பட்டுள்ளது.
- வரலாற்றுப் பின்னணி: 2014-ஆம் ஆண்டு முதல் இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட காலாவதியான சட்டங்கள் மத்திய அரசால் நீக்கப்பட்டுள்ளன. இந்த புதிய மசோதா சட்டமானால், ரத்து செய்யப்பட்ட மொத்த சட்டங்களின் எண்ணிக்கை 1,633 ஆக உயரும்.
புதிய தலைமைத் தகவல் ஆணையராக ராஜ்குமார் கோயல் பதவியேற்பு:
- பதவியேற்பு: முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராஜ்குமார் கோயல் (Rajkumar Goyal), இந்தியாவின் புதிய தலைமைத் தகவல் ஆணையராக (Chief Information Commissioner - CIC) பதவியேற்றுக் கொண்டார்.
- பதவிப் பிரமாணம்: குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்குப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
- முன்னிலை: இவ்விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- பின்னணி: ராஜ்குமார் கோயல் 1990-ம் ஆண்டு பேட்ச் (Batch) ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். இவர் இதற்கு முன்பு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறையின் செயலாளராகவும், உள்துறை அமைச்சகத்தில் எல்லை மேலாண்மை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
- கூடுதல் தகவல்: தலைமைத் தகவல் ஆணையர் பதவி கடந்த செப்டம்பர் 13-ம் தேதி முதல் காலியாக இருந்தது. இவருடன் சேர்த்து புதிதாக 8 தகவல் ஆணையர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய தகவல் ஆணையம் முழு பலத்துடன் (Full Strength) செயல்பட உள்ளது.
- தேர்வுக் குழு: பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு இவரைத் தேர்வு செய்தது. ராகுல் காந்தி இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட வெறுப்புப் பேச்சுத் தடை மசோதா (Karnataka Hate Speech and Hate Crimes Bill, 2025) :
- கர்நாடக மாநிலத்தில் உடுப்பி, மங்களூரு, கார்வார் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மதம், மொழி, சாதி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வெறுப்பு பேச்சு காரணமாக அவ்வப்போது கலவரங்கள் நிகழ்ந்தன. இதனால் கர்நாடக அரசு வெறுப்பு பேச்சுக்கு எதிரான சட்டத்தை கொண்டுவர முடிவெடுத்தது. அதன்படி வெறுப்பு பேச்சு மற்றும் வெறுப்பு குற்றங்கள் தடுப்பு மசோதாவுக்கு கடந்த 4-ம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- சட்டப்பேரவையில் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பின்போது நிறைவேற்றப்பட்டது. அப்போது பாஜக எம்எல்ஏக்கள் அவையின் மைய பகுதிக்கு வந்து, எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி இந்த மசோதா வெற்றிகரமான நிறைவேற்றப்பட்டதாக பேரவைத்தலைவர் யு.டி.காதர் அறிவித்தார்.
- சட்டத்தின் நோக்கம்: சமூகத்தில் அமைதியின்மை, பகைமை மற்றும் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசப்படும் "வெறுப்புப் பேச்சுக்கள்" (Hate Speech) மற்றும் அதனால் ஏற்படும் "வெறுப்பு குற்றங்களை" (Hate Crimes) தடுப்பதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கம்.
- முதல்முறை குற்றம் புரிபவர்களுக்கு 1 ஆண்டு முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
- மீண்டும் அதே குற்றத்தைச் செய்தால், தண்டனை 2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை அதிகரிக்கப்படும் மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
- எந்தெந்த தளங்களுக்குப் பொருந்தும்: பொதுவெளியில் பேசப்படும் பேச்சுக்கள் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்கள் (Facebook, X, WhatsApp போன்றவை), அச்சு ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் வெறுப்புப் பேச்சுக்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும்.
- வெறுப்புணர்வைத் தூண்டும் பதிவுகளை ஆன்லைன் தளங்களில் இருந்து நீக்க உத்தரவிடும் அதிகாரம் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு: வெறுப்புப் பேச்சால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- அரசியல் எதிர்ப்பு: இந்த மசோதாவிற்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது கருத்து சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என்றும், அரசியல் பழிவாங்கலுக்குப் பயன்படுத்தப்படலாம் என்றும் கூறி அவையில் அமளியில் ஈடுபட்டனர். இதற்கிடையே, குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட அணுசக்தி மேம்பாட்டு மசோதா (SHANTI Bill, 2025) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) நிறைவேற்றப்பட்டுள்ளது:
மசோதாவின் பெயர் மற்றும் நோக்கம்:
- இந்த மசோதா 'இந்தியாவின் மாற்றத்திற்கான அணுசக்தி மேம்பாட்டு (சாந்தி - SHANTI)' மசோதா என அழைக்கப்படுகிறது.
- நாட்டில் அணு மின் உற்பத்தியை அதிகரிக்கவும், 2047-ம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி இலக்கை எட்டவும் இது வழிவகை செய்கிறது.
முக்கிய அம்சங்கள்:
- தனியார் பங்களிப்பு: இதுவரை அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்த அணுசக்தித் துறை, இப்போது தனியார் நிறுவனங்களுக்கும் திறந்துவிடப்பட உள்ளது. தனியார் நிறுவனங்கள் 49% வரை பங்குகளைக் கொண்டிருக்க அனுமதி அளிக்கப்படும்.
- சிறிய அணு உலைகள் (SMR): நவீன தொழில்நுட்பமான 'சிறிய மாடுலர் அணு உலைகளை' (Small Modular Reactors) உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதற்காக பட்ஜெட்டில் ₹20,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- பாதுகாப்பு: அணுசக்தித் துறையில் தனியார் அனுமதிக்கப்பட்டாலும், பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசமும் செய்யப்பட மாட்டாது என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
- பழைய சட்டங்கள் நீக்கம்: 1962-ம் ஆண்டு அணுசக்தி சட்டம் மற்றும் 2010-ம் ஆண்டு அணுசக்தி விபத்து இழப்பீடு சட்டம் ஆகியவற்றை நீக்கிவிட்டு, காலத்திற்கேற்ற புதிய மாற்றங்களுடன் இந்தச் சட்டம் அமலுக்கு வருகிறது.
இந்தியா - ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்:
- வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் நரேந்திர மோடியின் ஓமன் பயணத்தின் போது, இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் ஓமன் வர்த்தக அமைச்சர் ஆகியோர் முன்னிலையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
- சுங்க வரி சலுகை: இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியா ஓமனுக்கு ஏற்றுமதி செய்யும் 99% பொருட்களுக்கு சுங்க வரி கிடையாது (Zero Duty Access). ஓமனின் 98% வர்த்தகப் பிரிவுகளில் இந்தியப் பொருட்களுக்கு வரிவிலக்கு கிடைத்துள்ளது.
- பயனடையும் துறைகள்: ஜவுளி, தோல் பொருட்கள், பாதணிகள், ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், பொறியியல் பொருட்கள் மற்றும் மருந்துகள் போன்ற அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறைகள் இந்த வரிவிலக்கினால் பெரிதும் பயனடையும்.
- இந்தியாவிற்கு சாதகம்: இந்தியாவில் இருந்து ஓமனுக்கு செய்யப்படும் ஏற்றுமதி மதிப்பு இதன் மூலம் கணிசமாக உயரும். குறிப்பாக, இந்திய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) மற்றும் கைவினைஞர்களின் தயாரிப்புகள் வளைகுடா நாடுகளில் அதிகப் போட்டியை எதிர்கொள்ள இது உதவும்.
- சேவைத்துறை மற்றும் வேலைவாய்ப்பு: கணக்கியல், மருத்துவம், வரி விதிப்பு மற்றும் கட்டிடக்கலை போன்ற துறைகளில் உள்ள இந்திய வல்லுநர்கள் ஓமனில் பணிபுரியவும், அங்கு தங்கியிருக்கவும் தாராளமயமாக்கப்பட்ட விதிகள் இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
- பாதுகாக்கப்பட்ட துறைகள்: இந்திய விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பால் பொருட்கள், தேயிலை, காபி, ரப்பர் மற்றும் புகையிலை போன்ற உணர்வுபூர்வமான பொருட்களுக்கு இந்தியா வரிச் சலுகை அளிக்கவில்லை.
- முக்கியத்துவம்: ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் பிரிட்டனைத் (UK) தொடர்ந்து, இந்தியா சமீபத்தில் கையெழுத்திட்டுள்ள மற்றொரு முக்கியமான வர்த்தக ஒப்பந்தம் இதுவாகும். ஓமன் நாடு, இந்தியா தனது ஏற்றுமதியை மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு விரிவுபடுத்துவதற்கான ஒரு நுழைவு வாயிலாகத் திகழும்.
ஜார்க்கண்ட் அணி சையது முஸ்டாக் அலி கோப்பை (Syed Mushtaq Ali Trophy) 2025 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது :
- வரலாற்று வெற்றி: புனேவில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் ஹரியானா அணியை வீழ்த்தி, ஜார்க்கண்ட் அணி தனது முதல் சையது முஸ்டாக் அலி கோப்பையைக் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.
- இஷான் கிஷனின் அதிரடி: ஜார்க்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷன் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி, வெறும் 49 பந்துகளில் 101 ரன்கள் (6 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள்) விளாசினார். இறுதிப் போட்டியில் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
- இமாலய ஸ்கோர்: இஷான் கிஷன் மற்றும் குமார் குஷாக்ரா (81 ரன்கள்) ஆகியோரின் அதிரடியால் ஜார்க்கண்ட் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் குவித்தது. இது இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
- ஹரியானா தோல்வி: 263 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ஹரியானா அணி, ஜார்க்கண்ட் அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 18.3 ஓவர்களில் 193 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் ஜார்க்கண்ட் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- ஆட்ட நாயகன்: சதம் விளாசி அசத்திய இஷான் கிஷன்.
- தொடர் நாயகன்: பேட்டிங்கில் 303 ரன்களும், பந்துவீச்சில் 18 விக்கெட்டுகளும் வீழ்த்திய அனுகுல் ராய்.
LIST OF IMPORTANT DAYS AND DATES IN DECEMBER 2025 IN TAMIL : (16.12.2025-19.12.2025)
- 1971-ஆம் ஆண்டு நடந்த போரில் பாகிஸ்தானை எதிர்த்து இந்தியா வெற்றி பெற்றதை நினைவுகூரும் வகையில், இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இது வங்காளதேசம் உருவானதற்கும் வழிவகுத்தது.
- 1903-ஆம் ஆண்டு ஆர்வில் மற்றும் வில்பர் ரைட் ஆகியோர் முதல் வெற்றிகரமான விமானத்தை பறக்கவிட்டதை குறிக்கும் நாள்.
- உலகெங்கிலும் உள்ள பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் மற்றும் வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாள்.
- வேலை அல்லது வசிப்பிடம் தேடி ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும், அவர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஐக்கிய நாடுகள் சபையால் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
- இந்தியாவில் சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு சம வாய்ப்புகளை உறுதி செய்யவும் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
- 1961-ஆம் ஆண்டு போர்ச்சுகீசிய ஆட்சியிலிருந்து கோவா விடுவிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்திய ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட 'ஆபரேஷன் விஜய்' (Operation Vijay) மூலம் கோவா இந்தியாவுடன் இணைந்தது.
Current Affairs Quiz - December 2025 -(16.12.2025-19.12.2025):
நடப்பு நிகழ்வுகள் டிசம்பர் 2025 வினாடி வினா-(16.12.2025-19.12.2025):
Topic 1: Ethiopia's Highest Honour to PM Modi
1. Which is the highest civilian honour of Ethiopia conferred upon Prime Minister Narendra Modi?
பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட எத்தியோப்பியாவின் உயரிய சிவிலியன் விருதின் பெயர் என்ன?
- A) The Grand Cross of Ethiopia / தி கிராண்ட் கிராஸ் ஆஃப் எத்தியோப்பியா
- B) The Great Honour Nishan of Ethiopia / தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா
- C) The Star of Africa / தி ஸ்டார் ஆஃப் ஆப்பிரிக்கா
- D) The Order of Abiy Ahmed / தி ஆர்டர் ஆஃப் அபிய் அகமது
Answer: B) The Great Honour Nishan of Ethiopia / தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா
Explanation:
- English: PM Modi became the first world leader to receive 'The Great Honour Nishan of Ethiopia' for his global leadership and for strengthening India-Ethiopia relations.
- Tamil: இந்தியா - எத்தியோப்பியா உறவை வலுப்படுத்தியதற்காகவும், உலகளாவிய தலைமைப் பண்பிற்காகவும் பிரதமர் மோடிக்கு 'தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா' விருது வழங்கப்பட்டது.
Topic 2: Repealing and Amending Bill, 2025
2. How many outdated laws are proposed to be repealed by the 'Repealing and Amending Bill, 2025'?
'ரத்து மற்றும் திருத்த மசோதா 2025' மூலம் எத்தனை காலாவதியான சட்டங்களை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது?
- A) 50
- B) 65
- C) 71
- D) 100
Answer: C) 71
Explanation:
- English: The bill aims to repeal 71 obsolete laws, including the Indian Tramways Act of 1886, to improve the 'Ease of Living'.
- Tamil: மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் நோக்கில், 1886-ஆம் ஆண்டின் இந்திய டிராம்வேஸ் சட்டம் உள்ளிட்ட 71 காலாவதியான சட்டங்களை ரத்து செய்ய இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
Topic 3: New Chief Information Commissioner
3. Who has been sworn in as the new Chief Information Commissioner (CIC) of India in December 2025?
டிசம்பர் 2025-ல் இந்தியாவின் புதிய தலைமைத் தகவல் ஆணையராகப் பதவியேற்றவர் யார்?
- A) Heeralal Samariya / ஹீராலால் சமாரியா
- B) Rajkumar Goyal / ராஜ்குமார் கோயல்
- C) Yashvardhan Kumar Sinha / யஷ்வர்தன் குமார் சின்ஹா
- D) Jitendra Singh / ஜிதேந்திர சிங்
Answer: B) Rajkumar Goyal / ராஜ்குமார் கோயல்
Explanation:
- English: Former IAS officer Rajkumar Goyal was sworn in as the new CIC by President Droupadi Murmu.
- Tamil: முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராஜ்குமார் கோயல், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முன்னிலையில் புதிய தலைமைத் தகவல் ஆணையராகப் பதவியேற்றுக் கொண்டார்.
Topic 4: Karnataka Hate Speech and Hate Crimes Bill, 2025
4. What is the maximum imprisonment term for a repeat offender under the 'Karnataka Hate Speech and Hate Crimes Bill, 2025'?
'கர்நாடக வெறுப்புப் பேச்சு மற்றும் வெறுப்பு குற்றங்கள் தடுப்பு மசோதா 2025'-ன் கீழ், மீண்டும் குற்றம் புரிபவருக்கு விதிக்கப்படும் அதிகபட்ச சிறைத் தண்டனை எவ்வளவு?
- A) 3 Years / 3 ஆண்டுகள்
- B) 5 Years / 5 ஆண்டுகள்
- C) 7 Years / 7 ஆண்டுகள்
- D) 10 Years / 10 ஆண்டுகள்
Answer: D) 10 Years / 10 ஆண்டுகள்
Explanation:
- English: For first-time offenders, the penalty is 1 to 7 years. For repeat offenders, the imprisonment increases to a term between 2 to 10 years.
- Tamil: முதல்முறை குற்றம் புரிபவர்களுக்கு 1-7 ஆண்டுகள் தண்டனை. மீண்டும் அதே குற்றத்தைச் செய்தால், தண்டனை 2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை அதிகரிக்கப்படும்.
Topic 5: Nuclear Energy (SHANTI) Bill, 2025
5. What is the target set for nuclear power generation by 2047 under the SHANTI Bill?
SHANTI-மசோதாவின் கீழ், 2047-ஆம் ஆண்டிற்குள் எட்ட நிர்ணயிக்கப்பட்டுள்ள அணு மின் உற்பத்தி இலக்கு என்ன?
- A) 50 GW / 50 ஜிகாவாட்
- B) 75 GW / 75 ஜிகாவாட்
- C) 100 GW / 100 ஜிகாவாட்
- D) 150 GW / 150 ஜிகாவாட்
Answer: C) 100 GW / 100 ஜிகாவாட்
Explanation:
- English: The 'SHANTI Bill' aims to increase nuclear power generation to 100 GW by 2047 and allows up to 49% private participation.
- Tamil: இந்த மசோதா 2047-ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி இலக்கை எட்டவும், தனியார் நிறுவனங்கள் 49% வரை பங்குகளைக் கொண்டிருக்கவும் வழிவகை செய்கிறது.
Topic 6: India-Oman Free Trade Agreement
6. Under the India-Oman Free Trade Agreement, what percentage of Indian goods will get 'Zero Duty Access' in Oman?
இந்தியா - ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், ஓமனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எத்தனை சதவீத இந்தியப் பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு (Zero Duty Access) கிடைத்துள்ளது?
- A) 80%
- B) 90%
- C) 95%
- D) 99%
Answer: D) 99%
Explanation:
- English: The agreement provides Zero Duty Access for 99% of Indian exports to Oman, benefiting sectors like textiles, gems, and engineering.
- Tamil: இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியா ஓமனுக்கு ஏற்றுமதி செய்யும் 99% பொருட்களுக்கு சுங்க வரி கிடையாது.
Topic 7: Syed Mushtaq Ali Trophy 2025
7. Which team won the Syed Mushtaq Ali Trophy 2025 for the first time?
சையது முஸ்டாக் அலி கோப்பை 2025-ஐ முதன்முறையாக வென்ற அணி எது?
- A) Haryana / ஹரியானா
- B) Mumbai / மும்பை
- C) Jharkhand / ஜார்க்கண்ட்
- D) Punjab / பஞ்சாப்
Answer: C) Jharkhand / ஜார்க்கண்ட் Explanation:
- English: Jharkhand won their first title by defeating Haryana by 69 runs. Ishan Kishan scored a century (101 runs) in the final.
- Tamil: இறுதிப் போட்டியில் ஹரியானாவை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜார்க்கண்ட் அணி சாம்பியன் பட்டம் வென்றது. கேப்டன் இஷான் கிஷன் சதம் அடித்தார்.
Topic 8: Important Days (Dec 16-19)
8. Which military operation is associated with 'Goa Liberation Day' celebrated on December 19?
டிசம்பர் 19 அன்று கொண்டாடப்படும் 'கோவா விடுதலை தினம்' எந்த ராணுவ நடவடிக்கையுடன் தொடர்புடையது?
- A) Operation Polo / ஆபரேஷன் போலோ
- B) Operation Vijay / ஆபரேஷன் விஜய்
- C) Operation Cactus / ஆபரேஷன் காக்டஸ்
- D) Operation Meghdoot / ஆபரேஷன் மேகதூத்
Answer: B) Operation Vijay / ஆபரேஷன் விஜய்
Explanation:
- English: Goa Liberation Day marks the liberation of Goa from Portuguese rule in 1961 through 'Operation Vijay' by the Indian Armed Forces.
- Tamil: 1961-ல் இந்திய ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட 'ஆபரேஷன் விஜய்' மூலம் போர்ச்சுகீசிய ஆட்சியிலிருந்து கோவா விடுவிக்கப்பட்டது.
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
current-affairs-in-tamil-16th-19th-december-2025

.png)
