TNPSC CURRENT AFFAIRS IN TAMIL JANUARY 2026 - (23.01.2026 TO 25.01.2026) | PDF Download & Key Notes

TNPSC PAYILAGAM
By -
0

 

TNPSC current affairs PDF in Tamil for Jan 23 to 25, 2026


TNPSC நடப்பு நிகழ்வுகள்: TNPSC Current Affairs in Tamil: Jan 23 to 25, 2026 |  (PDF) :

வணக்கம் Tnpsc Aspirants! 2026-ம் ஆண்டின் (ஜனவரி 23 to 25 ) நடைபெற்ற முக்கியமான நடப்பு நிகழ்வுகளைத் (TNPSC Group 1, 2, 4, and VAO exams) தேர்வுக்குத் தயாராகும் வகையில் இங்குத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய குறிப்புகள் (Key Takeaways for Exam):

  1. பத்ம விருது பெற்ற தமிழர்கள் பட்டியல் 2026:
  2. தேசிய அளவிலான சிறந்த தேர்தல் விருது 2026:
  3. அரசுப் பணிகளில் தமிழ் வழிக் கல்விக்கான முன்னுரிமை: சட்டப்பேரவையில் புதிய மசோதா தாக்கல்:
  4. ஒரு மாவட்டம், ஒரு உணவு’ திட்டம் - அமித் ஷா தொடங்கி வைத்தார்:
  5. ஒடிசாவில் புகையிலை மற்றும் நிகோடின் பொருட்களுக்கு முழுமையான தடை:
  6. நடைபாதை வியாபாரிகளுக்கான கிரெடிட் கார்டு திட்டம் (PM SVANidhi Credit Card): 
  7. இந்தியாவின் மின் விநியோகக் கட்டமைப்பு 5 லட்சம் சர்க்யூட் கி.மீ. சாதனை: 


பத்ம விருது பெற்ற தமிழர்கள் பட்டியல் 2026:

  • மத்திய அரசு 2026-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசின் சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன
  • தமிழகத்திலிருந்து 2 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 11 பத்மஸ்ரீ விருதுகள் (ஒரு விருதை இருவர் பகிர்வதால் மொத்தம் 14 பேர்) அறிவிக்கப்பட்டுள்ளன.


தேசிய அளவிலான சிறந்த தேர்தல் விருது 2026:

  • டெல்லியில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழாவில், தஞ்சாவூர் மாவட்டத்திற்குத் தேசிய அளவிலான சிறந்த தேர்தல் விருது வழங்கப்பட்டது 
விருது விவரம்:

  • விருது: தேசிய அளவிலான சிறந்த மாவட்டத் தேர்தல் விருது (தேர்தல்களில் தொழில்நுட்பத்தைத் திறம்படப் பயன்படுத்துதல் பிரிவு).
  • பெற்றவர்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம்.
  • வழங்கியவர்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.
  • இடம்: டெல்லியில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழா.
2025-ம் ஆண்டுக்கான இந்த விருது தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டதற்கான முக்கிய காரணங்கள்:
  • தொழில்நுட்பப் பயன்பாடு: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தியது.
  • வாக்காளர் சேவை: வாக்காளர் சேர்த்தல், நீக்கல் தொடர்பாக வீடு வீடாகச் சென்று படிவம் வழங்கி, அவற்றை இணையவழியில் விரைவாகப் பதிவேற்றம் செய்தது.

தேசிய வாக்காளர் தினம் (National Voters' Day) 2026:சிறப்பம்சங்கள் : 


அரசுப் பணிகளில் தமிழ் வழிக் கல்விக்கான முன்னுரிமை: சட்டப்பேரவையில் புதிய மசோதா தாக்கல்:

  • தமிழக சட்டப்பேரவையில் அரசுப் பணிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு (PSTM) முன்னுரிமை அளிப்பது தொடர்பான புதிய சட்டத் திருத்த மசோதாவை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தாக்கல் செய்தார்.
  • அரசுப் பணி​களில் நேரடி பணி நியமனம் மூலம் நிரப்​பப்பட வேண்​டிய அனைத்து காலிப் பணி​யிடங்​களி​லும் 20 சதவீதம் தமிழ் வழி​யில் படித்​தவர்​களுக்கு முன்​னுரிமை அளிக்​கும் சட்​டம், 2010-ம் ஆண்டு கொண்டுவரப்​பட்​டது.
  • இந்​நிலை​யில், ஏற்​கெனவே அரசுப் பணி​யில் இருப்​பவர்​கள் தமிழ் வழி​யில் கல்வி பயின்​றவர்​கள் என்ற வகைப்​பாட்​டின்​கீழ் முன்​னுரிமை நியமனத்​துக்கு தகு​தி​யற்​றவர்​கள் என்ற தீர்ப்பை உயர் நீதி​மன்​றம் வழங்​கி​யுள்​ளது. 
  • இந்த தீர்ப்பை தெளிவு படுத்​தும் வகை​யில் சட்​டத்​தில் திருத்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.
மசோதாவின் முக்கிய அம்சங்கள்:
  • புதிய விண்ணப்பதாரர்களுக்கே முன்னுரிமை: இனிவரும் காலங்களில், புதிதாக அரசுப் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் படித்ததற்கான 20% முன்னுரிமை வழங்கப்படும்.
  • ஏற்கனவே பணியில் உள்ளவர்கள்: ஏற்கனவே அரசுப் பணியில் உள்ளவர்கள், தமிழ் வழியில் படித்தவர்கள் என்ற அடிப்படையில் வேறு பணிகளுக்கான முன்னுரிமை கோர முடியாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதைச் சட்டபூர்வமாகத் தெளிவுபடுத்தவே இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
  • முந்தைய நியமனங்கள் செல்லும்: 2010-ம் ஆண்டு முதல் இதுவரை தமிழ் வழி முன்னுரிமை அடிப்படையில் நடைபெற்ற பணி நியமனங்கள் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாவட்டம், ஒரு உணவு’ திட்டம் - அமித் ஷா தொடங்கி வைத்தார்:

  • உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 'ஒரு மாவட்டம், ஒரு உணவு' (One District, One Cuisine) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • பின்னணி: உத்தரப் பிரதேசத்தின் முன்னோடித் திட்டமான 'ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு' (One District, One Product - ODOP) வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, அதன் அடிப்படையில் இந்த உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.


ஒடிசாவில் புகையிலை மற்றும் நிகோடின் பொருட்களுக்கு முழுமையான தடை:

  • பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், ஒடிசா மாநில அரசு புகையிலை மற்றும் நிகோடினை மூலப்பொருட்களாகக் கொண்ட அனைத்துப் பொருட்களுக்கும் முழுமையான தடையை அறிவித்துள்ளது.
தடையின் விவரங்கள்:

  • தடை செய்யப்பட்ட நடவடிக்கைகள்: புகையிலை மற்றும் நிகோடின் கலந்த பொருட்களின் உற்பத்தி (Manufacturing), பதப்படுத்துதல், பேக்கிங் (Packaging), சேமிப்பு, போக்குவரத்து, விநியோகம் மற்றும் விற்பனை ஆகிய அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.
  • எந்தெந்த பொருட்கள்? குட்கா (Gutka), பான் மசாலா (Pan Masala) எனப் பெயர் எதுவாக இருந்தாலும், பாக்கெட்டில் அடைக்கப்பட்டிருந்தாலும் அல்லது உதிரியாக விற்கப்பட்டாலும், அவை தடை செய்யப்பட்டுள்ளன. சுவையூட்டப்பட்ட பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றுடன் புகையிலையைக் கலந்து விற்பதும் இதில் அடங்கும்.

தடைக்கான காரணங்கள்:

  • உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்: புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • புற்றுநோய் அபாயம்: புகையிலை மெல்லுவது வாய், உணவுக்குழாய், வயிறு, கணையம் மற்றும் சிறுநீரகப் புற்றுநோயை உண்டாக்கும் அபாயம் கொண்டது.
  • அதிகரிக்கும் பயன்பாடு: ஒடிசாவில் 42% பெரியவர்கள் புகையிலை மெல்லும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இது தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு அதிகம் என்பதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • இது குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முக்கிய முடிவு என ஒடிசா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

நடைபாதை வியாபாரிகளுக்கான கிரெடிட் கார்டு திட்டம் (PM SVANidhi Credit Card): 

  • திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் உள்ள நடைபாதை மற்றும் தெருவோர வியாபாரிகளுக்குப் பயனளிக்கும் வகையில் ‘பிரதமரின் ஸ்வாநிதி கடன் அட்டை’ (PM SVANidhi Credit Card) திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
திட்டத்தின் நோக்கம் மற்றும் பிரதமரின் உரை:
  • நோக்கம்: தெருவோர வியாபாரிகள் அதிக வட்டிக்குக் கடன் வாங்குவதைத் தவிர்த்து, எளிதாக வங்கிக் கடன் பெறுவதை உறுதி செய்வது. ஏற்கனவே 'பிஎம் ஸ்வநிதி' (PM SVANidhi) திட்டத்தின் மூலம் பலர் கடன் பெற்றுள்ள நிலையில், தற்போது அவர்களுக்கென பிரத்யேக கிரெடிட் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பயன்: இது ஏழைகளின் நலனுக்காக கேரளாவிலிருந்து தொடங்கப்பட்ட ஒரு பெரிய முயற்சி என்றும், இது நாடு முழுவதிலும் உள்ள தொழிலாளர்களுக்குப் பயனளிக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

தொடங்கி வைக்கப்பட்ட ரயில் சேவைகள்:

இதே விழாவில், பிரதமர் 3 அமிர்த பாரத் விரைவு ரயில்கள் உட்பட 4 புதிய ரயில் சேவைகளைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்:
  • திருவனந்தபுரம் - தாம்பரம் அமிர்த பாரத் விரைவு ரயில்.
  • நாகர்கோவில் - மங்களூரு அமிர்த பாரத் விரைவு ரயில்.
  • திருவனந்தபுரம் - சார்லபள்ளி அமிர்த பாரத் விரைவு ரயில்.
  • திருச்சூர் - குருவாயூர் பயணிகள் ரயில்.
பிற முக்கிய அம்சங்கள்:

  • கேரளாவின் உள்கட்டமைப்பு மற்றும் ரயில் இணைப்பை வலுப்படுத்துதல்.
  • திருவனந்தபுரத்தை முக்கிய ஸ்டார்ட்அப் (Startup) மையமாக மாற்றுதல்.


ஏழைகளுக்கான மருத்துவக் காப்பீடு (ஆயுஷ்மான் பாரத்) மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான வரிவிலக்கு (ரூ. 12 லட்சம் வரை) பற்றியும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்தியாவின் மின் விநியோகக் கட்டமைப்பு 5 லட்சம் சர்க்யூட் கி.மீ. சாதனை: 

  • இந்தியாவின் மின் விநியோகக் கட்டமைப்பு (Transmission Network) 5 லட்சம் சர்க்யூட் கிலோமீட்டர் (cKm) என்ற வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளதாக மத்திய மின் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய விவரங்கள்:

  • சாதனையின் பின்னணி: ராஜஸ்தானின் பத்லா-II முதல் சீகர்-II வரையிலான 765 கி.வோ. திறன் கொண்ட 628 சர்க்​யூட் கி.மீ. புதிய மின் பாதை பயன்பாட்டுக்கு வந்ததன் மூலம் இந்த 5 லட்சம் கி.மீ. மைல்கல் எட்டப்பட்டது.
  • மின் மாற்றும் திறன்: நாட்டின் மொத்த மின் மாற்றும் திறன் (Transformation Capacity) 1,407 ஜிகாவோல்ட் ஆம்பியராக (GVA) அதிகரித்துள்ளது.
  • வளர்ச்சி (2014 முதல்): 2014 ஏப்ரல் முதல் தற்போது வரை மின் விநியோகக் கட்டமைப்பு 71.6% வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 2.09 லட்சம் சர்க்யூட் கி.மீ. புதிய பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திட்டத்தின் பயன்கள்:

  • ஒரே தேசம் - ஒரே மின்கட்டமைப்பு: மாநிலங்களுக்கு இடையேயான மின் பரிமாற்றத் திறன் தற்போது 1,20,340 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. இது 'ஒரே தேசம் – ஒரே மின்கட்டமைப்பு – ஒரே அலைவரிசை' (One Nation - One Grid - One Frequency) என்ற இலக்கை வலுப்படுத்தியுள்ளது.
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி: ராஜஸ்தானின் சூரிய சக்தி மண்டலங்களிலிருந்து (பத்லா, ராம்​கர், பதேகர்) கூடுதலாக 1,100 மெகாவாட் மின்சாரத்தை விநியோகிக்க முடியும்.
  • எதிர்கால இலக்கு: 2030-க்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை எட்டுவதற்கு, தற்போது நடைபெற்று வரும் கூடுதல் 40,000 சர்க்யூட் கி.மீ. மின்பாதை திட்டங்கள் உதவும்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக் பாஷ் லீக் (Big Bash League) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது :

  • சாம்பியன்: பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் (Perth Scorchers) எதிரணி: சிட்னி சிக்சர்ஸ் (Sydney Sixers) முடிவு: பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.
போட்டி விவரம்:

  • இடம்: பெர்த் மைதானம்.
  • சிட்னி சிக்சர்ஸ் பேட்டிங்: முதலில் பேட்டிங் செய்த சிட்னி அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் எடுத்தது.
  • பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் பேட்டிங்: 133 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பெர்த் அணி, 17.3 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

சாதனை: 
  • பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி பிக் பாஷ் லீக் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்வது இது 6-வது முறை ஆகும்.

IMPORTANT DAYS AND DATES IN JANUARY 2026 IN TAMIL :(ஜனவரி 23 to 25, 2026) :


ஜனவரி 23, 2026 :

பராக்கிரம் திவாஸ் (Parakram Diwas): 
  • இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த நாள் இன்று. வீரத்திற்கும் துணிச்சலுக்கும் பெயர்போன நேதாஜியின் தியாகத்தைப் போற்றும் நாள்.
  • நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1897 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி ஒரிசா மாநிலம் கட்டாக்கில் பிறந்தார். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களில் முக்கியமானவர். அவரது இராணுவம் இந்திய தேசிய இராணுவம் (INA) அல்லது ஆசாத் ஹிந்த் ஃபௌஜ் என்று அறியப்பட்டது. 
  • இரண்டாம் உலகப் போரின் போது மேற்கத்திய சக்திகளுக்கு எதிராக வெளிநாட்டிலிருந்து இந்திய தேசியப் படையையும் அவர் வழிநடத்தினார்.

ஜனவரி 24, 2026

தேசிய பெண் குழந்தைகள் தினம் (National Girl Child Day): 
  • ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 அன்று, இந்தியாவில் பெரும்பான்மையான பெண்கள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள், கல்வி, ஊட்டச்சத்து, சட்ட உரிமைகள், மருத்துவ பராமரிப்பு மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு போன்றவற்றின் முக்கியத்துவம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்த தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
  • இது 2008 ஆம் ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது
சர்வதேச கல்வி தினம் (International Day of Education): 
  • ஒவ்வொரு ஆண்டும்ஜனவரி 24 அன்று சர்வதேச கல்வி தினம் (சர்வதேச கல்வி தினம்)உலகெங்கும் கொண்டாடப்படுகிறது
  • 2018 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை (UNGA) உலகளாவிய அமைதி மற்றும் நிலையான வளர்ச்சியைக் கொண்டுவருவதில் கல்வியின் பங்கைக் கொண்டாடும் வகையில், ஜனவரி 24 ஐ சர்வதேச கல்வி தினமாக அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது

ஜனவரி 25, 2026 :

மொழிப்போர் தியாகிகள் தினம் (Language Martyrs Day): 
  • தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ந்தேதி மொழிப்போர் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
  • தமிழுக்காகவும், இந்தி திணிப்பை எதிர்த்தும் தங்கள் உயிரைத் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளை நினைவுகூரும் வீரவணக்க நாள் 1937–1939 போராட்டம்: ராஜாஜி தலைமையிலான அரசு இந்தியை கட்டாயப் பாடமாக்கியதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் தாளமுத்து மற்றும் நடராசன் சிறையில் உயிரிழந்தனர்.
  • 1965 போராட்டம்: 1965-ஆம் ஆண்டு ஜனவரி 26 முதல் இந்தி ஆட்சி மொழியாகும் என்ற அறிவிப்பை எதிர்த்து மாணவர்கள் முன்னெடுத்த மிகப்பெரிய போராட்டத்தில் கீழப்பழுவூர் சின்னசாமி, சிவகங்கை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர்
தேசிய வாக்காளர் தினம் (National Voters Day):
  • இந்தியத் தேர்தல் ஆணையம் (Election Commission of India) 1950-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நாளை நினைவுகூரும் வகையிலும், மக்களாட்சியில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தவும் 2011-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி 'தேசிய வாக்காளர் தினம்' கொண்டாடப்படுகிறது.
தேசிய சுற்றுலா தினம் (National Tourism Day): 
  • இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 அன்று தேசிய சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது.
  • நோக்கம்: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சுற்றுலாத் துறை எவ்வளவு முக்கியமானது என்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
  • முக்கியத்துவம்: இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகை உலகிற்கு பறைசாற்றுவதோடு, சுற்றுலா மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் வருவாய் குறித்து இத்தினம் கவனம் செலுத்துகிறது.


TNPSC Current Affairs Quiz: January - (23.01.2026 TO 25.01.2026) :

  • படித்தது போதும்! உங்கள் அறிவை சோதிக்க இந்த வினாடி வினாவை முயற்சிக்கவும்: Test your knowledge:


DOWNLOAD PDF : TNPSC CURRENT AFFAIRS IN TAMIL JANUARY 2026 :



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!


Download Daily TNPSC current affairs PDF in Tamil for Jan 23 to 25, 2026 for TNPSC Group 1, 2, & 4 exams.

tnpsc-current-affairs-in-tamil-january-23-25-2026




Post a Comment

0Comments

Post a Comment (0)