ஸ்டார் 3.0 திட்டம் (STAR 3.0 Scheme) :
- தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களால் பதிவுத்துறையில் (Registration Department) மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் வகையில் 'ஸ்டார் 3.0' மென்பொருள் திட்டத்தின் 'ஸ்பிரின்ட் 1' (Sprint 1) என்ற முதல்நிலைச் செயல் திட்டத்தைத்22 ஜனவரி 2026-ல் தொடங்கி வைக்கப்பட்டது.
1. ஸ்டார் 3.0 திட்டத்தின் நோக்கம்:
- பதிவுத்துறை சேவைகளை முழுமையாக கணினிமயமாக்குதல்.
- பொதுமக்கள் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு நேரில் அலைவதைத் தவிர்த்தல்.
- சொத்து பதிவுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் வேகத்தை அதிகரித்தல்.
2. ஸ்டார் 3.0 முக்கிய சிறப்பம்சங்கள்:
- நேரில் வரத் தேவையில்லை (No Physical Visit): வில்லங்கச் சான்று (EC), சான்றளிக்கப்பட்ட நகல்கள் (Certified Copies), மற்றும் திருமண பதிவுச் சான்றிதழ் போன்றவற்றை பெற பொதுமக்கள் இனி சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. இவற்றை ஆன்லைன் மூலமாகவே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
- விரைவான பதிவு: ஆவணங்கள் பதிவு செய்யும் நேரம் கணிசமாக குறைக்கப்படும்.
- ஆன்லைன் சரிபார்ப்பு: ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு மற்றும் பயோமெட்ரிக் முறைகள் மூலம் பாதுகாப்பான பரிவர்த்தனைகள் உறுதி செய்யப்படும்.
- தானியங்கி முறை: கட்டிட மதிப்பீடு மற்றும் வழிகாட்டி மதிப்புகளை (Guideline Value) தானாகவே கணக்கிடும் வசதி இதில் உள்ளது.
3. ஸ்டார் 3.0 போட்டித் தேர்வு குறிப்புகள் (For Exams):
- துறை: வணிக வரி மற்றும் பதிவுத் துறை.
- தொடங்கியவர்: தமிழக முதல்வர்.
- திட்டத்தின் பெயர்: STAR 3.0 (Simplified and Transparent Administration of Registration).
- முந்தைய பதிப்பு: ஸ்டார் 2.0 திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமே இந்த ஸ்டார் 3.0.
ஸ்டார் 2.0 திட்டம் VS ஸ்டார் 3.0 திட்டம் :
| அம்சம் (Features) | STAR 2.0 (பழையது) | STAR 3.0 (புதியது) |
|---|---|---|
| வேகம் | சர்வர் வேகம் குறைவு. | கிளவுட் தொழில்நுட்பம் மூலம் அதிவேகம். |
| அலுவலக வருகை | சான்றிதழ் பெற நேரில் செல்ல வேண்டும். | ஆன்லைனிலேயே தரவிறக்கம் செய்யலாம். |
| சொத்து மதிப்பீடு | மனித தவறுகள் ஏற்படலாம். | தானியங்கி (Auto) துல்லியமான கணக்கீடு. |
| பாதுகாப்பு | சாதாரண பாதுகாப்பு. | முக அங்கீகாரம் (Face Recognition) வசதி. |
| பயன்பாடு | சற்று கடினமானது. | மிகவும் எளிமையானது. |

