மத்திய பட்ஜெட் 2026: முக்கிய அறிவிப்புகள் - TNPSC EXAMS KEY POINTS :

TNPSC PAYILAGAM
By -
0
Union Budget 2026 Nirmala Sitharaman
 (Union Budget 2026 Highlights in Tamil)


மத்திய பட்ஜெட் 2026: வருமான வரி, ரயில்வே முதல் தமிழகம் வரை - முழுமையான முக்கிய அறிவிப்புகள்:

  • இந்தியாவின் நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று (பிப்ரவரி 1, 2026) நாடாளுமன்றத்தில் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்து அவர் புதிய வரலாறு படைத்துள்ளார்.
  • 'விக்சித் பாரத்' (வளர்ச்சியடைந்த இந்தியா) என்ற இலக்கை நோக்கிய பயணத்தில், தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மற்றும் இளைஞர் நலன் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை அன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டின் மிக முக்கிய சிறப்பம்சங்களை இங்கே காண்போம்.


மத்திய பட்ஜெட் 2026: முக்கிய சிறப்பம்சங்கள் (Union Budget 2026 - Key Highlights in Tamil):

1. பொதுவான தகவல்கள்:

  • நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 9-வது தொடர்ச்சியான பட்ஜெட்டைத் தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார்.
  • சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2. வருமான வரி (Income Tax):

  • ஏப்ரல் 1, 2026 முதல் பழைய 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக, புதிய வருமான வரிச் சட்டம் 2025 (New Income Tax Act, 2025) அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மாற்றமில்லாத வரி விகிதங்கள்: பழைய மற்றும் புதிய வரி முறைகள் இரண்டிலும் தனிநபர் வருமான வரி விகிதங்களில் அல்லது அடுக்குகளில் (Slabs) எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
  • ITR தாக்கல் காலக்கெடு நீட்டிப்பு: திருத்தப்பட்ட வருமான வரி கணக்குகளை (Revised ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31-லிருந்து மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது (சிறு கட்டணத்திற்கு உட்பட்டு).
  • வெளிநாட்டு சொத்து வெளிப்படுத்தல்: வெளிநாடுகளில் சொத்து வைத்திருப்பவர்கள், அபராதம் இன்றி அவற்றை வெளிப்படுத்த 6 மாத கால அவகாசம் கொண்ட சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • TCS குறைப்பு: கல்வி மற்றும் மருத்துவத் தேவைகளுக்காக வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதற்கான வரி (TCS) 5 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

3. உள்கட்டமைப்பு மற்றும் மூலதனச் செலவு (Infrastructure & Capex):

  • 2026-27 நிதியாண்டிற்கான மூலதனச் செலவு (Capex) ரூ. 12.2 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகம்.
  • உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிப்பவர்களுக்கு உதவ 'உள்கட்டமைப்பு இடர் உத்தரவாத நிதி' (Infrastructure Risk Guarantee Fund) அமைக்கப்படும்.

4. ரயில்வே துறை (Railways):

  • கிழக்கே டான்குனி (Dankuni) முதல் மேற்கே சூரத் (Surat) வரை புதிய சரக்கு வழித்தடம் (Freight Corridor) அமைக்கப்படும்.

  • நகரங்களை இணைக்க 7 புதிய அதிவேக ரயில் வழித்தடங்கள் (7 High-Speed Corridors) உருவாக்கப்படும்.
5. தொழில்நுட்பம் மற்றும் செமிகண்டக்டர் (Technology & Semiconductors):

  • இந்தியா செமிகண்டக்டர் மிஷன் 2.0 (ISM 2.0): செமிகண்டக்டர் துறையை மேம்படுத்த ரூ. 40,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 'சக்தி' (Shakti) திட்டம்: செமிகண்டக்டர் சூழலியலை வலுப்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 10,000 கோடி ஒதுக்கப்படும்.
  • செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

6. சிறு மற்றும் குறு தொழில்கள் (MSMEs):

  • சிறு மற்றும் குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ரூ. 10,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி நிதி (SME Growth Fund) உருவாக்கப்படும்.
  • MSME-களுக்கு கடன் மற்றும் பணப்புழக்கத்தை எளிதாக்க புதிய நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

7. ஜவுளித் துறை (Textiles):

  • ஜவுளித் துறையை மேம்படுத்த 5 அம்ச ஒருங்கிணைந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 'சவால் முறையில்' (Challenge mode) மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும்.

8. இளைஞர்கள் மற்றும் விளையாட்டு:

  • அடுத்த 10 ஆண்டுகளில் விளையாட்டுத் துறையை மாற்றியமைக்க 'கேலோ இந்தியா மிஷன்' (Khelo India Mission) தொடங்கப்படும்.
  • அனிமேஷன் மற்றும் கேமிங் (AVGC) துறையை ஊக்குவிக்க 15,000 பள்ளிகள் மற்றும் 500 கல்லூரிகளில் ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

9. சுகாதாரம்:

  • புதிதாக 3 அகில இந்திய ஆயுர்வேத நிறுவனங்கள் (All India Institutes of Ayurveda) அமைக்கப்படும்.
  • உயிர்காக்கும் மருந்துகள்: புற்றுநோய் உள்ளிட்ட 17 வகை மருந்துகள் மற்றும் 7 அரிய வகை நோய்களுக்கான மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து (Customs Duty) முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

10. வங்கித் துறை:

  • வங்கித் துறையை மறுபரிசீலனை செய்ய உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்படும்.
  • மின் நிதி கழகம் (Power Finance Corporation) மற்றும் ஊரக மின்மயமாக்கல் கழகம் (REC) ஆகியவை மறுசீரமைக்கப்படும்.

11.விலை குறைந்த பொருட்கள் (Cheaper Items)

  • சில முக்கிய பொருட்களுக்கான சுங்க வரிகள் (Customs Duty) குறைக்கப்பட்டுள்ளதால், அவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது:
  • மருந்துகள்: புற்றுநோய் மற்றும் 7 அரிய வகை நோய்களுக்கான உயிர் காக்கும் மருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • மின்சார வாகனங்கள்: லித்தியம் பேட்டரிகளுக்கான (Lithium Batteries) இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மின்சார வாகனங்களின் விலை குறையலாம்.
  • வீட்டு உபயோகப் பொருட்கள்: மைக்ரோவேவ் ஓவன் (Microwave Oven) மற்றும் காலணிகள் (Footwear) தயாரிப்பதற்கான மூலப்பொருட்களுக்கு வரிச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • விமான உதிரிபாகங்கள்: விமான உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.

12.சுற்றுலா மற்றும் கலாச்சாரம் (Tourism & Culture)

  • தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையிலான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன:
  • ஆதிச்சநல்லூர்: தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் ஆதிச்சநல்லூர் உட்பட 60 இடங்கள் கலாச்சார மையங்களாக மாற்றப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படும்.
  • பழவேற்காடு ஏரி: இங்கு புதிய பறவைகள் கண்காணிப்பு மையம் (Bird Watching Center) அமைக்கப்படும்.
  • மலையேற்றம்: பொதிகை மலை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மலையேற்ற சுற்றுலா (Trekking) ஊக்குவிக்கப்படும்.

13.கல்வி மற்றும் வேலைவாய்ப்பு:

  • மாணவர்கள்: வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்குப் பணம் அனுப்புவதற்கான வரி (Tax on remittances) குறைக்கப்பட்டுள்ளது.
  • கல்விச் செலவு: கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான டிசிஎஸ் (TCS) வரி 2% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

14.மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு:

  • நிதிக்குழு: 16-வது நிதிக்குழுவின் பரிந்துரையின் படி, மாநிலங்களுக்கு 41% வரிப் பகிர்வு வழங்கப்படும். இதற்காக ரூ. 1.4 லட்சம் கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

15.பாதுகாப்பு அமைச்சகத்திற்கு பட்ஜெட்டில் சாதனை அளவிலான நிதி ஒதுக்கீடு (2026-27)

  • 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், பாதுகாப்புத் துறைக்கு வரலாற்றிலேயே மிக அதிகபட்சமாக ரூ. 7.85 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • அதிகரிப்பு: இந்த ஒதுக்கீடு கடந்த நிதியாண்டை விட 15% அதிகமாகும். இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2% ஆகும்.
  • பங்கீடு: மத்திய அரசின் மொத்த செலவினத்தில் 14.67% பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வேறு எந்த அமைச்சகத்திற்கும் இவ்வளவு அதிக நிதி ஒதுக்கப்படவில்லை.
  • மூலதன செலவினம் (Capital Expenditure): புதிய ஆயுதங்கள், தளவாடங்கள் வாங்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் ரூ. 2.19 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 21.84% அதிகம்.
  • இதன் மூலம் அடுத்த தலைமுறை போர் விமானங்கள், கப்பல்கள், ட்ரோன்கள் ஆகியவை வாங்கப்படும்.
  • உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கம் (Atmanirbhar Bharat): பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், ரூ. 1.39 லட்சம் கோடி உள்நாட்டுத் கொள்முதலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ஓய்வூதியம்: ஓய்வூதியத் திட்டங்களுக்காக 21.84% நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

16.தமிழகம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த அறிவிப்புகள்

  • 2026-27 மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு தூத்துக்குடி ஆதிச்சநல்லூரில் சர்வதேச தரம் வாய்ந்த கலாச்சார மையம் மற்றும் பழவேற்காட்டில் சுற்றுலா மேம்பாடு, சென்னை-பெங்களூர், ஹைதராபாத்-சென்னை அதிவேக ரயில் தடங்கள் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

முக்கிய அறிவிப்புகள்:

  • கலாச்சார மையம்: தமிழ்நாட்டின் தொல்லியல் தலங்களில் முதன்மையாக, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர்-ல் உலகத் தரம் வாய்ந்த கலாச்சார மையம் மற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
  • சுற்றுலா மேம்பாடு: பழவேற்காடு (Pulicat) ஏரியில் பறவைகள் சரணாலயத்தை பார்வையிடுவதற்கான சுற்றுலா மற்றும் பொதிகை மலையில் மலையேற்ற சுற்றுலா (Trekking) வசதிகள் மேம்படுத்தப்படும்.
  • கனிமவள காரிடார்: தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய கனிமவள காரிடார் (Mineral Corridor) அமைக்கப்பட்டு, அரிய வகை கனிமங்கள் எடுக்கப்படும்.
  • அதிவேக ரயில்: சென்னை-பெங்களூர் மற்றும் ஹைதராபாத்-சென்னை இடையே அதிவேக ரயில் தடங்கள் (High-Speed Rail) மேம்படுத்தப்படும்.
  • விவசாயம் & மீன்வளம்: தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க சிறப்புத் திட்டம் மற்றும் 500 நீர்நிலைகளில் மீன்பிடி தொழில்/கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க நடவடிக்கை. 

பிற முக்கிய அறிவிப்புகள்

  • நிதிப் பற்றாக்குறை: நடப்பு நிதியாண்டின் நிதிப் பற்றாக்குறை ஜிடிபியில் 4.4% ஆக உள்ளது. 2027-ல் இது 4.3% ஆகக் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
  • டேட்டா சென்டர்கள்: இந்தியாவில் டேட்டா சென்டர் அமைக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 2047 வரை வரிச்சலுகை வழங்கப்படும்.
  • மாற்றுத்திறனாளிகள்: மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களைத் தயாரிக்க செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
  • மூலதனச் செலவு (Capex): உள்கட்டமைப்பு வளர்ச்சியை ஊக்குவிக்க மூலதனச் செலவு ஒதுக்கீடு 9% உயர்த்தப்பட்டு ₹12.2 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • கார்பன் கேப்சர் திட்டம்: எஃகு மற்றும் சிமெண்ட் ஆலைகளில் கார்பன் உமிழ்வைக் குறைக்க ₹20,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • அரிய வகை கனிம வழித்தடங்கள்: தமிழ்நாடு, கேரளா, ஒடிசா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் 'அரிய வகை கனிம வழித்தடங்கள்' (Rare Earth Corridors) அமைக்கப்படும்.
  • PM-Kisan உயர்வு: விவசாயிகளுக்கான PM-Kisan திட்டத்தின் கீழ் ஆண்டு ஊக்கத்தொகை ₹6,000-லிருந்து ₹9,000-ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 
  • பழவேற்காடு ஏரியில் பறவை கண்காணிப்பு மையம் அமைக்கப்படும்


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)