CURRENT AFFAIRS IN TAMIL MAY 2025 (11.05.2025-14.05.2025)

TNPSC PAYILAGAM
By -
0

 

CURRENT AFFAIRS IN TAMIL MAY 2025 (11.05.2025-14.05.2025)


ட்ரோன் அடிப்படையிலான அமைப்புகளுக்கு ஏற்ற குவாண்டம் விசை விநியோக தொழில்நுட்பத்தை கூட்டாக உருவாக்குவதற்கான சி-டாட் மற்றும் சினெர்ஜி குவாண்டம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்:

  • குவாண்டம் தொழில்நுட்ப அடிப்படையில் பாதுகாப்பான தகவல் தொடர்பு சாதனங்களில் இந்தியாவின் திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு எதிர்கால முயற்சியாக, மத்திய தொலைத்தொடர்புத் துறையின் (DoT) கீழ் உள்ள முதன்மைத் தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையம் (சி-டாட்) நிறுவனமும், குவாண்டம் தொழில்நுட்பத் துறையில் ஈடுபட்டுள்ள அதிநவீன தொழில்நுட்ப நிறுவனமான சினெர்ஜி குவாண்டம் இந்தியா என்ற தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
  • தொழில்நுட்பத் தயார்நிலை 6 அல்லது அதற்கு மேற்பட்ட நிலையில், துருவமுனைப்பு குறியாக்கத்துடன் டிகோய் அடிப்படையிலான பிபி84 நெறிமுறையைப் பயன்படுத்தி, ட்ரோன் அடிப்படையிலான குவாண்டம் விசை விநியோக அமைப்புகளின் மேம்பாட்டில் சி - டாட் நிறுவனம் மற்றும் சினெர்ஜி குவாண்டம் நிறுவனம் இடையேயான ஒத்துழைப்பை முறைப்படுத்துவதே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
  • "தற்சார்பு இந்தியா" முன்முயற்சியின் கீழ் உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கு வலு சேர்க்கும் வகையிலும், வளர்ந்து வரும் பாதுகாப்பான தொலைத்தொடர்புத் தொழில்நுட்பங்களில் இந்தியாவின் திறன்களை மேம்படுத்தும் நோக்கிலும் தேசிய தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து செயல்படுவதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
  • இந்த கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக, சி-டாட் மற்றும் சினர்ஜி குவாண்டம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ட்ரோன் அடிப்படையிலான பயன்பாட்டிற்கு உகந்த குவாண்டம் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களின் மேம்பாட்டு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும்.
  • தேசிய, சர்வதேச அளவில் பெரிய ஆராய்ச்சித் திட்டங்களை இணைந்து உருவாக்குதல், அறிவுசார் ஆய்வுக் கட்டுரைகளின் வெளியீடுகள், வெள்ளை அறிக்கைகள் மற்றும் பிற தளங்கள் வாயிலாக ஆராய்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதும் இந்தக் கூட்டு நடவடிக்கைகளில் அடங்கும்.
  • இந்த இரு நிறுவனங்களைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள், துறை சார்ந்த நிபுணர்களும் சந்தித்து பேச்சுவார்த்தைகள், குறுகிய கால பாடத்திட்டங்களை வழங்குதல் மற்றும் குறித்த நேரத்தில் ஆராய்ச்சி கருப்பொருள்கள் தொடர்பான கருத்தரங்குகள், மாநாடுகள், ஆலோசனைக் கூட்டங்களை ஏற்பாடு செய்வதிலும் ஈடுபடவுள்ளது.

ஏப்ரல், 2025 மாதத்திற்கான கிராமப்புற, நகர்ப்புற மற்றும் ஒருங்கிணைந்த நுகர்வோர் விலை குறியீட்டு எண்:

  • அகில இந்திய மொத்த விலை குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட ஆண்டுப் பணவீக்க விகிதம் 2025 - ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான (2024 -ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது) 0.85%-மாக (தற்காலிகம்) உள்ளது. 
  • 2024 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது, 2025 ஏப்ரல் மாத பணவீக்க விகிதம் ஆண்டுக்கு ஆண்டு என்ற முறையில் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் 3.16% ஆக உள்ளது.
  • 2025 மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 2025 ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 18 அடிப்படை புள்ளிகள் குறைந்துள்ளது. 2019 ஜூலை மாதத்திற்கு பிறகு இது மிகக் குறைந்த பணவீக்க விகிதமாகும்.
  • 2024 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, 2025 ஏப்ரல் மாதத்திற்கான உணவு பணவீக்க விகிதம் 1.78%-ஆக இருந்தது. 2025 மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 2025 ஏப்ரல் மாதத்தில் உணவுப் பணவீக்க விகிதம் 91 அடிப்படைப் புள்ளிகள் சரிவுடன் காணப்படுகிறது.
  • 2025 ஏப்ரலில் பணவீக்கம் மற்றும் உணவுப் பணவீக்கத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சரிவுக்கு காய்கறிகள், பருப்பு வகைகள், பொருட்கள், பழங்கள், இறைச்சி, மீன், தானியங்கள் மற்றும் தயாரிப்புகளின் பணவீக்கம் குறைந்ததே முக்கியக் காரணமாகும்.
  • 2025 ஏப்ரல் மாதம் கிராமப்புற உணவுப் பணவீக்கத்தில் குறிப்பிடத்தக்க சரிவு காணப்பட்டது. 2025 மார்ச் மாதத்தில் 2.82% ஆக இருந்த கிராமப்புற உணவுப் பணவீக்கம் 2025 ஏப்ரல்-இல் 1.85% ஆகக் காணப்படுகிறது.
  • 2025 மார்ச் இல் நகர்ப்புற பணவீக்கம் 3.43%-லிருந்த நிலையில், 2025 ஏப்ரலில் அது 3.36%-ஆக குறைந்து காணப்பட்டது. உணவுப் பணவீக்கம் 2025 மார்ச் மாதத்தில் 2.48%-லிருந்து 2025 ஏப்ரலில் 1.64% ஆக குறைந்துள்ளது.
  • 2025 ஏப்ரல் மாதத்தில் வீட்டுவசதி பணவீக்க விகிதம் 3.00% ஆக இருந்தது. இது 2025 மார்ச் மாதத்தில் விகிதம் 3.03% ஆக இருந்தது.
  • 2025 ஏப்ரல் மாதத்திற்கான நகர்ப்புற மற்றும் கிராமப்புற கல்வி பணவீக்க விகிதம் 4.13%-மாகும். இது 2025 மார்ச் மாதத்தில் 3.98%-ஆக இருந்தது.
  • 2025 ஏப்ரல் மாதத்திற்கான கிராமப்புற மற்றும் நகர்ப்புற சுகாதார பணவீக்க விகிதம் 4.25%-ஆகும். இது 2025 மார்ச் மாதத்தில் 4.26%-ஆக இருந்தது.
  • 2025 ஏப்ரல் மாதத்திற்கான கிராமப்புற மற்றும் நகர்ப்புற போக்குவரத்து மற்றும் தொடர்பு பணவீக்க விகிதம் 3.73%-ஆகும். இது 2025 மார்ச் மாதத்தில் விகிதம் 3.36%-ஆக இருந்தது.
  • 2025 ஏப்ரல் மாதத்திற்கான கிராமப்புற மற்றும் நகர்ப்புற எரிபொருள் மற்றும் மின் கட்டண பணவீக்க விகிதம் 2.92%-ஆகும். இது 2025 மார்ச் மாதத்தில் 1.42%-மாக இருந்தது.

ஐஐடி மெட்ராஸ் - ஓர் அறிமுகம்

  • இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் என்ற தொழில்நுட்பக்க கல்வி நிறுவனம் 1959-ம் ஆண்டில் மத்திய அரசால் 'தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவன'மாகத் தொடங்கப்பட்டது. 
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறு பாடப் பிரிவுகளைச் சேர்ந்த 18 கல்வித் துறைகள், மேம்பட்ட இடைநிலை ஆராய்ச்சிக் கல்வி மையங்கள் மூலம் இக்கல்வி நிறுவனத்தின்  செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
  • இக்கல்வி நிறுவனம்  பி.டெக்., எம்.எஸ்சி., எம்.பி.ஏ., எம்.டெக்., எம்.எஸ்., பிஎச்.டி., போன்ற வெவ்வேறு பிரிவுகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களை வழங்குகிறது. 
  • ஐஐடிஎம் 650-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 10,000 மாணவர்களுடன் இயங்கும் உண்டு உறைவிடக் கல்வி நிறுவனமாகும். இங்கு 18 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். சிறப்பான பாடத்திட்டங்கள் மற்றும் 'ஐஐடிஎம் இன்குபேஷன் செல்' ஆகியவற்றின் மூலம், ஐஐடிஎம் தொழில் முனைவுக்கு  ஊக்கமளித்து வருகிறது.
  • 2019-ம் ஆண்டில் இன்ஸ்டிடியூட் ஆஃப் எமினன்ஸ் கல்வி நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்ட ஐஐடிஎம், மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தேசியக் கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலில் 'ஒட்டுமொத்த'ப் பிரிவில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக அகில இந்திய அளவில் முதலிடத்தைத் தக்க வைத்துள்ளது. 
  • இதே தரவரிசைப் பட்டியலில் 'பொறியியல் கல்வி நிறுவனங்கள்' பிரிவிலும் 2016 - ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக இக்கல்வி நிறுவனம் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது
  • 2023 - ம் ஆண்டில், தான்சானியாவின் ஜான்சிபாரில் 'ஐஐடி மெட்ராஸ் ஜான்சிபார்' என்ற சர்வதேச வளாகத்தை நிறுவிய முதல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமாக ஐஐடி மெட்ராஸ் உள்ளது.

விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு :

  • இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 
  • 36 வயதான விராட் கோலி கடந்தாண்டு டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெற்றார். கோலியின் தலைமையில், இந்திய அணி முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்திருந்தது. டெஸ்ட் போட்டிகளில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து அதிக வெற்றிகளைப் பெற்றுத் தந்தது விராட் கோலிதான் என்ற பெருமையையும் அவர் வைத்துள்ளார்.
  • 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 30 சதங்கள், 7 இரட்டைச் சதங்களை பதிவு செய்துள்ளார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 9,230 ரன்கள் குவித்துள்ளார்.


மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) தலைவர் நியமனம் :

  • மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) தலைவராக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு பணியாளர் அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) தலைவராக இருந்த ப்ரீத்தி சுதன் பதவிக்காலம் ஏப்ரல் 29 ஆம் தேதியுடன் முடிந்த நிலையில், யுபிஎஸ்சி தலைவர் பதவி காலியாக இருந்தது.
  • இந்த நிலையில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) தலைவராக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு பணியாளர் அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 316(1) இன் கீழ் அஜய் குமாரை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) தலைவராக நியமிப்பதில் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி அடைவதாக மத்திய பணியாளர் அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


LIST OF IMPORTANT DAYS AND DATES IN MAY 2025 IN TAMIL : (11.05.2025-14.05.2025)


தேசிய தொழில் நுட்ப தினம் (National Technology Day ) : 
  • ஒவ்வோர் ஆண்டும் மே 11 அன்று தேசிய தொழில்நுட்ப நாளை இந்தியா கொண்டாடிவருகிறது. இந்த நாள் இந்திய வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாக அமைந்திருக்கிறது. காரணம், 1998-ம் ஆண்டு மே 11 அன்று பொக்ரானில் அணுகுண்டு சோதனையை இந்தியா வெற்றிகரமாகச் செய்து முடித்தது. 
  • இதைச் சிறப்பிக்கும் வகையில் அந்த நாள் தேசியத் தொழில்நுட்ப தினமாக அனுசரிக்கப்படுகிறது. 
  • ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் கண்டுபிடிப்பாளர்களுக்கும் தொழில்முனைவோருக்கும் அவர்களின் பங்களிப்புக்காக விருதுகளும் அங்கீகாரமும் வழங்கப்படுகின்றன

சர்வதேச செவிலியர் தினம் (International Nurses Day): 

  • ஒவ்வொரு ஆண்டும் மே 12 அன்று, நவீன செவிலியர்களின் நிறுவனர் மற்றும் துறையில் முன்னோடியான புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் சர்வதேச செவிலியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
  • சர்வதேச செவிலியர் தினம் 1965 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மே 12 ஆம் தேதி சர்வதேச செவிலியர் மன்றத்தால் (ICN) தொடங்கப்பட்டது.

OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!


current-affairs-in-tamil-11th-14th-may-2025


Post a Comment

0Comments

Post a Comment (0)