சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை -புதிய திட்டம் (Singappen Special Task Force)

TNPSC PAYILAGAM
By -
0

Singappen Special Task Force


சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

  • தவெக தலைவர் விஜய் கடந்த மே 10-ஆம் தேதி தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். அப்போது, குழந்தைகள், பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என்று அறிவித்து இருந்த நிலையில், பதவியேற்பு விழா மேடையிலேயே அதுதொடர்பான கோப்பில் கையெழுத்திட்டார்.
  • இதைத் தொடர்ந்து, அதிரடிப்படையின் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டார். இந்த படையில் மேலும், ஒரு எஸ்.பி. 02 டிஎஸ்பி, மற்றும் 04 ஆய்வாளர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். 
  • இதனை தொடந்து, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
  • அப்போது பெண் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை காவல்துறை வாகனத்தில் சென்று முதல்வர் பார்வையிட்டார். அதன் பின்னர் எஸ்.பி ஷானாஸ் தலைமையிலான சிங்கப்பெண் அதிரடிப் படை காவல்துறையினர் அளித்த அணிவகுப்பு மரியாதையை முதல்வர் விஜய் ஏற்றுக்கொண்டார்.


சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை: முக்கியக் குறிப்புகள்:


தொடக்கம் மற்றும் தலைமை
  • தொடங்கி வைக்கப்பட்ட நாள்: ஜூன் 9, 2026.
  • தொடங்கி வைக்கப்பட்ட இடம்: ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம், எழும்பூர், சென்னை.
  • தலைமை: இப்போலீஸ் படைக்கு ஐஜிபி (IGP) கே. பவானீஸ்வரி தலைமை தாங்குவார். இந்த அதிரடிப்படை முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் செயல்படும்.
  • பெயர்க் காரணம்: முதலமைச்சர் விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' (2019) திரைப்படத்தில் பெண்களின் வலிமையைக் கொண்டாடும் புகழ்பெற்ற "சிங்கப் பெண்ணே" பாடலின் உத்வேகத்தில் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடு மற்றும் பணியிடங்கள்
  • முதற்கட்ட நிதி: இத்திட்டத்தின் முதற்கட்டச் செயல்பாடுகளுக்காக ₹354 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது (சிங்கப்பெண் அதிரடித் திட்டம்).
  • மனிதவளம்: இப்படையில் பெண்களின் பாதுகாப்பிற்காக பிரத்யேகமாக 2,500 புதிய காவலர் பணியிடங்கள் உருவாக்கப்படவுள்ளன.
இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள்

  • இந்தியாவின் முதல் ட்ரோன் ரோந்து (Drone-Based Patrols): பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, இந்தியாவிலேயே முதல் முறையாக ரோந்து வாகனங்களுடன் இணைக்கப்பட்ட 'டிரோன் ரோந்து' தொழில்நுட்பம் இத்திட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • முன்னெச்சரிக்கை காவல் (Proactive Policing): குற்றங்கள் நடந்த பின் நடவடிக்கை எடுப்பதைக் காட்டிலும், குற்றங்கள் நடக்கும் முன்பே தடுக்கும் "முன்னெச்சரிக்கை காவல்" முறையை இப்படை தீவிரமாகப் பின்பற்றும்.
  • பிரத்யேக சீருடை மற்றும் வாகனங்கள்: கடற்படை நீலம் (Navy Blue) மற்றும் காக்கி நிறம் கலந்த மிடுக்கான பிரத்யேக சீருடையும், நவீனத் தொழில்நுட்பக் கருவிகள் கொண்ட சிறப்பு ரோந்து வாகனங்களும் இப்படைக்கு வழங்கப்பட்டுள்ளன.
  • கண்காணிப்புப் பகுதிகள்: பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் போன்ற பெண்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் தொடர் கண்காணிப்பு, பெண்களைப் பின்தொடர்தல் (Stalking) மற்றும் பாலியல் தொல்லைகளைத் தடுத்தல் போன்றவற்றில் இப்படை கவனம் செலுத்தும்.


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)