Welcome to our blog post on TNPSC CURRENT AFFAIRS IN TAMIL AUGUST 2026-PDF, specifically tailored for competitive exams. This post is designed to help aspirants of various competitive exams like Banking, SSC, Railways, Insurance, UPSC, TNPSC and State Exams stay updated with the latest happenings around the world.
1. National Affairs
2. State Affairs
3. Global News
4. International Relations
5. Economic Trends
6. Political News
7. Environmental Issues
8. Science and Technology
9. Economy & Banking
10. Health and Science
11. Social Issues
12. Sports News
13. Entertainment News
14. Monthly News Digest
15. Daily News Update
16. World Events
17. National News
18. Awards and Honors
We hope this roundup of TNPSC CURRENT AFFAIRS IN TAMIL AUGUST 2026-PDF helps you in your preparation for competitive exams. Remember, staying updated with current affairs is crucial for anyone preparing for competitive exams or simply wanting to stay informed about global events.
TNPSC தேர்வர்களுக்கான ஆகஸ்ட் மாத 2026 மிக முக்கிய நடப்பு நிகழ்வுகள்:
ஆகஸ்ட் மாத முக்கிய தினங்கள் 2026: TNPSC தேர்வுகளுக்கான முழுமையான பட்டியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம்
- TNPSC குரூப் 1, குரூப் 2/2A, மற்றும் குரூப் 4 தேர்வுகளில் 'முக்கிய தினங்கள் மற்றும் கருப்பொருள்கள்' (Important Days & Themes) பிரிவில் இருந்து தொடர்ந்து வினாக்கள் கேட்கப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் மாதத்தில் இடம்பெறும் தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த தினங்களின் தொகுப்பு கீழே விவரிக்கப்பட்டுள்ளது
- ஆகஸ்ட் மாத முக்கிய தினங்கள் 2026:
இந்தியாவின் முதல் காமன்வெல்த் ஜூடோ தங்கப் பதக்கம்:
- மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவில் களமிறங்கிய அஸ்மிதா டே, தொடக்கம் முதலே எதிரணி வீரர்களுக்குக் கடும் சவால் அளித்து இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
- அதேபோல், ஆண்களுக்கான ஜூடோ பிரிவில் களமிறங்கிய ஹர்ஷ் சிங், தனது திறம்பட திட்டமிடப்பட்ட நகர்வுகள் மூலம் எதிராளிகளை வீழ்த்தி இந்தியாவிற்கான மற்றொரு தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார்.
- தேர்வு முக்கியக் குறிப்புகள் : இந்தியாவின் முதல் காமன்வெல்த் ஜூடோ தங்கப் பதக்கம் 2026
ஆந்திராவில் ரூ. 18,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
- ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்கட்டமைப்பு, எரிசக்தி மற்றும் போக்குவரத்துத் துறைகளை மேம்படுத்தும் வகையில், சுமார் ரூ.18,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளார்.
- விஜயநகரம் மாவட்டம் போகாபுரத்தில், சுமார் ரூ.5,600 கோடிக்கும் அதிகமான செலவில் பொது-தனியார் கூட்டு முறையில் அமைக்கப்பட்ட 'அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தை' பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
- நவீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் ஆந்திராவின் பாரம்பரியக் கட்டடக்கலை அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பசுமை விமான நிலையம் முதற்கட்டத்தில் ஆண்டுக்கு 60 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது.
- விசாகப்பட்டினத்தில் ரூ.460 கோடி செலவில் அமையவுள்ள ஆந்திராவின் முதல் செமிகண்டக்டர் ஆலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். கர்நூல் மற்றும் அனந்தபூரில் அமைக்கப்பட்ட சோலார் மற்றும் காற்றாலை மின் வழித்தடத் திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டன. மேலும், ரூ.1,880 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
தேசிய சிறுபான்மையினர் கல்வி நிறுவனம்:
- தேசிய சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கான ஆணையத்தின் தலைவராக (Chairman of the National Commission for Minority Educational Institutions) டாக்டர். ஷாஹித் அக்தர் (Dr. Shahid Akhtar) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்
மேற்குத் தொடர்ச்சி மலை சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதி (ESA): மத்திய அரசின் 7-வது வரைவு அறிக்கை:
- இந்தியாவின் இயற்கை அரணாகவும், பல்லுயிர் பெருக்கத்தின் உறைவிடமாகவும் விளங்கும் மேற்குத் தொடர்ச்சி மலையைப் (Western Ghats) பாதுகாப்பதற்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் புதிய வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, 6 மாநிலங்களில் பரவியுள்ள கணிசமான நிலப்பரப்பு சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதியாக (Ecologically Sensitive Area - ESA) அறிவிக்கப்படவுள்ளது.
- தேர்வு முக்கியக் குறிப்புகள் : மத்திய அரசின் 7-வது வரைவு அறிக்கை:
லோக்மான்ய திலகர் தேசிய விருது 2026: அஜித் தோவலுக்கு வழங்கி கௌரவித்தார் அமித் ஷா:
- இந்தியாவின் தேசிய பாதுகாப்பு உத்திகளை உலக அளவில் வலுப்படுத்தியதில் முக்கியப் பங்காற்றிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவலுக்கு 2026-ஆம் ஆண்டிற்கான லோக்மான்ய திலகர் தேசிய விருது (Lokmanya Tilak National Award) வழங்கப்பட்டுள்ளது.
- தேர்வு முக்கியக் குறிப்புகள்: லோக்மான்ய திலகர் தேசிய விருது 2026:
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடைந்தது
- ஈரான் மீதான தாக்குதல் நடவடிக்கைகளை ஒத்திவைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்த முடிவைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்து நிலையில் டாலரின் மதிப்பு சரிந்தது.
- இதன் விளைவாக, இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், தொடர்ந்து ஆறாவது வர்த்தக நாளாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடைந்தது, வர்த்தக முடிவில், ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிலைபெற்றது.
செய்தித் தலைப்பு: தமிழ்நாட்டில் பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தகவல்
- மதுரையைச் சேர்ந்த நவீன்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில், தமிழ்நாட்டில் ஓலா, ஊபர், ரேப்பிடோ போன்ற டிஜிட்டல் தளங்கள் மூலம் பைக்-டாக்ஸி சேவைகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான பிரத்யேக விதிகளோ அல்லது சட்டப்பூர்வ உரிம நடைமுறையோ அரசிடம் இல்லை என்றும், எனவே அதற்குரிய ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
- நீதிமன்ற விசாரணையின் போது, தமிழ்நாட்டில் தற்போது பைக்-டாக்ஸிகளை இயக்குவதற்கு அனுமதி கிடையாது என்று தமிழக அரசு தெளிவாகத் தெரிவித்துள்ளது.
- விதிகளை மீறி பைக்-டாக்ஸி சேவைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும் மற்றும் வாகனப் பறிமுதல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பைக்-டாக்ஸிகளை அனுமதிப்பது குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவின் பரிந்துரைகளுக்குப் பிறகே இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது.
- பைக்-டாக்ஸிகளுக்கு அனுமதி வழங்குவதா வேண்டாமா என்பது குறித்து தமிழக அரசு விரைந்து விரிவான கொள்கை முடிவை (Policy Decision) எடுக்க அறிவுறுத்தியுள்ளது.
உலக சமாதானப் போராளி 'வெண்புறா' இரா. கோபாலன் மறைவு: TNPSC தேர்வுக்கான முக்கிய தகவல்கள்:
- இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், மூத்த சமூகச் செயல்பாட்டாளரும், 'வெண்புறா' இதழின் ஆசிரியருமான இரா. கோபாலன் (R. Gopalan) ஆகஸ்ட் 2, 2026 அன்று கோவையில் இயற்கை எய்தினார். தமிழ்நாட்டின் சமூக, அரசியல் மற்றும் சமாதான இயக்க வரலாற்றில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானது.
- TNPSC தேர்வுக்கான முக்கிய தகவல்கள்: உலக சமாதானப் போராளி வெண்புறா இரா. கோபாலன் மறைவு:
தமிழக பட்ஜெட் 2026:
- தமிழக பட்ஜெட் 2026: புதிய திட்டங்கள், மகளிர் நலன் & உட்கட்டமைப்பு வளர்ச்சி – முக்கிய அம்சங்கள்!
- தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026-27: முக்கிய அம்சங்கள்
வரி விதிப்பு மற்றும் இதர சட்டங்கள் (திருத்த) மசோதா 2026:
- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்திய "வரி விதிப்பு மற்றும் இதர சட்டங்கள் (திருத்த) மசோதா 2026" கடந்த ஆகஸ்ட் 6, 2026 அன்று மக்களவையில் எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது. ஜூன் 5, 2026 அன்று பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்திற்குப் பதிலாக கொண்டுவரப்பட்ட இம்மசோதா, இந்தியாவின் வரி அமைப்பில் பல முக்கிய மாற்றங்களை முன்வைக்கிறது
- வரி விதிப்பு மற்றும் இதர சட்டங்கள் (திருத்த) மசோதா 2026:
இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 600-வது டெஸ்ட் போட்டி
- நாட்டின் 80-வது சுதந்திர தினத்தன்று, காலே (Galle) மைதானத்தில் இலங்கைக்கு எதிரான போட்டியில் களமிறங்கும்போது இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி தனது 600-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது; இதன் மூலம் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக இந்த மைல்கல்லை எட்டும் மூன்றாவது அணியாக இந்திய அணி திகழ்கிறது.
- 1932-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராகத் தொடங்கிய பயணம் இது. முதல் 100 டெஸ்ட்களுக்கு 35 ஆண்டுகள் ஆனது, ஆனால் அடுத்தடுத்து 200 மற்றும் 300-வது டெஸ்ட் மைல்கற்களை முறையே 15 மற்றும் 14 ஆண்டுகளில் எட்டியது. அதன் பிறகே சுமார் 10 ஆண்டுகளில் அடுத்தடுத்த 100 டெஸ்ட் போட்டிகள் மைல்கற்களை எட்டியது.
தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி புதிய வரலாற்றுச் சாதனை: 36-வது முறையாக 100 மில்லியன் யூனிட் கடந்தது!
- தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி இந்த ஆண்டு புதிய உச்சத்தைத் தொட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
- நடப்பாண்டில் மட்டும் 36-வது முறையாக தினசரி காற்றாலை மின் உற்பத்தி 100 மில்லியன் யூனிட்டைக் கடந்துள்ளது. இதன் மூலம் கடந்த 2025-ஆம் ஆண்டில் எட்டப்பட்ட 35 முறை என்ற சாதனையை தமிழ்நாடு மின்வாரியம் முறியடித்துள்ளது.
- இந்திய அளவில் குஜராத் மாநிலத்திற்கு அடுத்தபடியாக அதிக காற்றாலை மின் கட்டமைப்பைக் கொண்டுள்ள மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. மாநிலத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் 9,500 மெகாவாட் (MW) திறனில் காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டின் மிகப்பெரிய காற்றாலை பண்ணைகளில் ஒன்றான முப்பந்தல் காற்றாலை பண்ணை கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- மே மாதம் காற்றாலை சீசன் தொடங்கியது முதல் தினசரி சராசரியாக 80 மில்லியன் யூனிட் மின்சாரம் பெறப்பட்டது.
- ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 13 வரையிலான காலக்கட்டத்தில் மொத்தம் 8,491 மில்லியன் யூனிட் காற்றாலை மின்சாரம் மின்வாரியத்தால் பெறப்பட்டுள்ளது.
- ஜூலை மாதத்தில் மட்டும் 3,291 மில்லியன் யூனிட் மின்சாரம் மாநில மின் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
AMCA 5-ஆம் தலைமுறை போர் விமான இன்ஜின்: ரிலையன்ஸ் & ரோல்ஸ்-ராய்ஸ் வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டு ஒப்பந்தம்:
- இந்தியாவின் பாதுகாப்புத் துறையைத் தன்னாட்சி பெற்றதாக மாற்றும் நோக்கில், 5-ஆம் தலைமுறை மேம்பட்ட நடுத்தர போர் விமானத்திற்கான (AMCA) உள்நாட்டு இன்ஜினை உருவாக்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பிரிட்டனின் ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன.
- TNPSC தேர்வுக்கான முக்கிய தகவல்கள்: ரிலையன்ஸ் & ரோல்ஸ்-ராய்ஸ் வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டு ஒப்பந்தம்
இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா: செங்கோட்டையில் பிரதமர் மோடியின் 13-வது உரை:
- இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தொடர்ச்சியாகத் தனது 13-வது சுதந்திர தின உரையை ஆற்றி நாட்டின் எதிர்கால இலக்குகளை முன்கூறி அறிவித்தார்
- இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா: செங்கோட்டையில் பிரதமர் மோடியின் 13-வது உரை - முக்கிய அறிவிப்புகள்
செங்கல்பட்டில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும் வான்வழி திட்டம் தொடங்கப்பட்டது
- செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், முன்னெச்சரிக்கை காவல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் 'வான்விழி திட்டம்' என்ற நவீன ஆளில்லா விமானக் (Drone) கண்காணிப்புத் திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது
- TNPSC தேர்வுக்கான முக்கிய தகவல்கள்: வான்வழி திட்டம்
சென்னை ஐஐடி பேராசிரியர் தாளப்பில் பிரதீப் ஐரோப்பிய பொறியியல் கழகத்தின் முழுநேர உறுப்பினராகத் தேர்வு:
- சென்னை ஐஐடியின் வேதியியல் துறை பேராசிரியர் தாளப்பில் பிரதீப், உலகளவில் சிறப்பு வாய்ந்த ஐரோப்பிய பொறியியல் கழகத்தின் முழுநேர உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்
- TNPSC தேர்வுக்கான முக்கிய தகவல்கள்: ஐரோப்பிய பொறியியல் கழகத்தின் (European Academy of Engineering) முழுநேர உறுப்பினராகத் தேர்வு
இந்தியாவில் வேலையின்மை விகிதம் 5.1% ஆகக் குறைந்தது:
- இந்தியப் பொருளாதாரத்தில் தொழிலாளர் சந்தை சீரான முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. தேசிய புள்ளியியல் ஆய்வகம் (NSO) வெளியிட்டுள்ள காலமுறை தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பின் (PLFS) படி, கடந்த ஜூலை மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 5.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.
- இந்தியாவில் வேலையின்மை விகிதம் 5.1% ஆகக் குறைந்தது: முழு விவரம்
தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு 2026:
- மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் தேசிய விளையாட்டு விருதுகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் குமார் மிஸ்ரா தலைமையிலான தேர்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.
- TNPSC தேர்வுக்கான முக்கிய தகவல்கள்: தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு 2026
ரிஷப் பண்ட் உலக சாதனை: டெஸ்ட்டில் அதி விரைவில் 100 சிக்சர்கள்
- கால்லே டெஸ்ட் போட்டியின் இந்திய அணியின் அதிரடி பேட்டரும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவிரைவில் 100 சிக்சர்களை விளாசி உலக சாதனை புரிந்துள்ளார்.
- 89 இன்னிங்ஸ்களில் 100 சிக்சர்களை விளாசிய ரிஷப் பண்ட் டெஸ்ட்டில் அதிவிரைவு 100 சிக்சர்கள் உலக சாதனை என்பது இந்த வடிவத்தின் வரலாற்றில் இவ்வளவு விரைவாக வேறு யாரும் எட்டியதில்லை. ஏனென்றால், இது போன்ற ஷாட்களை ஆடுபவர் ஒரே நபர் அவர்தான்.
- ரிஷப் பண்ட் 100 சிக்சர்கள் - 89 இன்னிங்ஸ்கள்.
முதல்வர் விஜய், விதி எண் 110ன் கீழ் அறிவித்த முக்கிய அறிவிப்புகள்
- தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள் பால் உற்பத்தியாளர்கள், மருத்துவக் கட்டமைப்பு, செவிலியர் கல்வி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான படிகள் குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்
- TNPSC தேர்வுக்கான முக்கிய தகவல்கள்: முதல்வர் விஜய், விதி எண் 110ன் கீழ் அறிவித்த முக்கிய அறிவிப்புகள்
31-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம்:
- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் 31-வது தென் மண்டலக் குழு கூட்டம் (Southern Zonal Council Meeting) தமிழ்நாட்டின் மாமல்லபுரம் அருகே உள்ள கோவளத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் துணைத்தலைவராகப் பொறுப்பு வகித்தார்
- TNPSC தேர்வுக்கான முக்கிய தகவல்கள்: 31-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் -முழு விவரங்கள்
மகாராஷ்டிர அரசு பாம்புக்கடியை 'அறிவிக்கப்பட வேண்டிய நோயாக' (Notifiable Disease) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது:
- மகாராஷ்டிர அரசு பாம்புக்கடியை 'அறிவிக்கப்பட வேண்டிய நோயாக' (Notifiable Disease) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இந்த முக்கிய முடிவை மாநில பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் பதிவாகும் அனைத்து வகையான பாம்புக்கடி சம்பவங்களையும், அது தொடர்பான மரணங்களையும் சுகாதார அமைப்புகளுக்குக் கட்டாயமாகப் புகாரளிக்க வேண்டும்
- காரணம்: ஆகஸ்ட் 9 அன்று கட்சிரோலி (Gadchiroli) மாவட்டத்தின் பழங்குடியின குடியிருப்புப் பள்ளி ஒன்றில் விஷப்பாம்பு கடித்து மூன்று மாணவிகள் உயிரிழந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- மகாராஷ்டிராவில் கடந்த மூன்று ஆண்டுகளில் (ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2026 வரை) சுமார் 1.29 லட்சம் பாம்புக்கடி வழக்குகளும், 655 மரணங்களும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2026ஆம் ஆண்டுக்கான தேசிய அனுபவ விருதுகள்
- புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில், மத்திய அரசு பணியாளர் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் சார்பில் 15 ஓய்வுபெற்ற மத்திய அரசுப் பணியாளர்களுக்கு தேசிய அனுபவ விருதுகளை மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வழங்கினார்
- (National Anubhav Awards 2026) விருது பெற்றவர்கள்: தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் சிறந்து விளங்கிய 15 ஓய்வுபெற்ற மத்திய அரசுப் பணியாளர்கள்.
- வழங்கியவர் & இடம்: புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் விருதுகளை வழங்கினார்.
- வழங்கிய துறை: மத்திய அரசு பணியாளர் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறை.
நோக்கம்:
- அதிகாரிகள் அரசுப் பணியில் இருந்தபோது மேற்கொண்ட சிறந்த நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் புதுமைகளை அங்கீகரித்தல்.
- பாஸ்போர்ட் சேவைகள், தொழில்நுட்ப மேம்பாடு, அரசு கணக்கு பராமரிப்பு ஆகியவற்றில் அவர்களின் அனுபவங்களை ஆவணப்படுத்துதல்.
- வருங்கால அரசு அதிகாரிகளுக்கு வழிகாட்டியாக நிறுவன அறிவைச் (Institutional Knowledge) சேமித்து வைப்பது.
இம்பேடியன்ஸ் நிம்ஸ்புர்ஜாய்' (Impatiens nimspurjai):
- இமயமலைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இயற்கை வள ஆய்வுகளின் மூலம் 'இம்பேடியன்ஸ் நிம்ஸ்புர்ஜாய்' (Impatiens nimspurjai) என்ற புதிய வகை அரிய மலர் தாவரம் கண்டறியப்பட்டுள்ளது
- இம்பேடியன்ஸ் நிம்ஸ்புர்ஜாய்' (Impatiens nimspurjai) என்ற புதிய வகை அரிய மலர் தாவரம் கண்டறியப்பட்டுள்ளது:
பவர் கிரிட் நிறுவனத்திற்கு PMIS 'எக்சிட் பாத்வேஸ்' தேசிய விருது:
- இந்தியப் பவர் கிரிட் கார்ப்பரேஷன் (POWERGRID) நிறுவனம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புப் பயிற்சியை மேம்படுத்தியதற்காக மத்திய அரசின் உயரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
- PMIS - எக்சிட் பாத்வேஸ் தேசிய விருது 2026
இந்தியாவின் முதல் புல்வெளிகள் சுற்றுச்சூழல் வழிகாட்டி வெளியீடு 2026:
- மங்கோலியாவின் உலான்பாத்தார் நகரில் நடைபெற்ற சர்வதேச சூழலியல் மாநாட்டில், இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிக முக்கிய மைல்கல்லாகப் புல்வெளிகள் மற்றும் திறந்த இயற்கை சுற்றுச்சூழல் வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.
- UNCCD COP17 மாநாடு & வரலாற்றுச் சிறப்புமிக்க வெளியீடு
முதலமைச்சரின் முதியோர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2026
- முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவ காப்பீட்டுத் தொகை ஆண்டொன்றுக்கு, தற்போதுள்ள ரூபாய் 5 லட்சத்திலிருந்து ரூபாய் 25 லட்சமாக உயர்த்தப்படும் என தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
- முதலமைச்சரின் முதியோர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (Chief Minister's Elderly Health Insurance Scheme)
தமிழ்நாடு கூட்டுறவுத் துறை 2026 முக்கிய சீர்திருத்தங்கள்:
- புதிய மாநில கூட்டுறவுக் கொள்கை மற்றும் நலவாழ்வு மற்றும் வணிக முயற்சிகள் உட்பட கூட்டுறவுத் துறைக்கான பல நடவடிக்கைகளை 2026 ஆம் ஆண்டு மாநில பட்ஜெட்டில் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. வி. காந்திராஜ் அறிவித்தார்.
- தமிழ்நாடு கூட்டுறவுத் துறை 2026 முக்கிய சீர்திருத்தங்கள்:
டிஆர்டிஓ தொழில்நுட்பப் பரிமாற்றம்:
- டி.ஆர்.டி.ஓ., எனும் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கிய தொழில்நுட்பங்களை, உள்நாட்டு ராணுவ தளவாட தயாரிப்பு நிறுவனங்கள், உள்நாட்டில் ஆயுத தயாரிப்புக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளதாக, பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- தொழில்நுட்பப் பரிமாற்றம் (ToT): டிஆர்டிஓ (DRDO) உருவாக்கிய ஏவுகணை அமைப்புகளின் உற்பத்தி உரிமங்கள் மற்றும் தொழில்முறைத் தொழில்நுட்பங்கள் உள்நாட்டு நிறுவனங்களுக்கு மாற்றப்படும்.
- மரபுசார் ஏவுகணைகள்: தரைவழி, வான்வழி மற்றும் கடல்சார் இலக்குகளைத் தாக்கும் அனைத்து வகையான மரபுசார் (Conventional Missile Systems) ஏவுகணைகளும் இதில் அடங்கும்.
- தனியார் துறை பங்கேற்பு: அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் (DPSUs) மட்டுமின்றி, தகுதியான இந்திய தனியார் பாதுகாப்பு உற்பத்தியாளர்களும் இதில் பங்கெடுக்க முடியும்.
நேபாளத்தில் பனிமலை உடைந்து ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு (Glacial Lake Outburst Flood - GLOF)
- காரணம்: கடந்த 26-ம் தேதி லாங்டாங் லிருங் (Langtang Lirung) பனிச்சிகரத்தில் 1.5 கி.மீ. அகலமுள்ள பனிமலை உடைந்து ஏரியில் விழுந்ததால், ஏரி உடைந்து சீனாவின் திபெத் பகுதி மற்றும் நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டது.
- பாதிக்கப்பட்ட நதிகள்: நேபாளத்தின் போடேகோசி (Bhote Koshi) மற்றும் திரிசூலி (Trisuli) நதிகளில் பல மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
பாதிப்பு நிலவரம்:
- உயிரிழந்தோர் எண்ணிக்கை 626 ஆக அதிகரிப்பு.
- 2,426 பேரைக் தொடர்புகொள்ள முடியவில்லை (இதில் 517 பேர் வெளிநாட்டினர்).
- 101 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மீட்புப் பணிகள்:
- நேபாள தேசிய பேரிடர் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் சார்பில் 15,224 பாதுகாப்புப் பணியாளர்கள் (4,811 காவல்துறையினர், 6,755 ராணுவத்தினர், 3,658 ஆயுதக் காவல் படையினர்) களமிறக்கப்பட்டுள்ளனர்.
- இதுவரை 4,451 பேர் மீட்கப்பட்டுள்ளனர் (191 பேர் சுரங்கப்பாதையிலும், 517 பேர் வான்வழியாகவும்).
- மீட்புப் பணிகளுக்கு 16 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
- தகவல் தொடர்பு சீரமைப்பு: சேதமடைந்த 198 தொலைபேசி கோபுரங்களில் 145 கோபுரங்கள் பழுதுபார்க்கப்பட்டுச் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.
நம்மாழ்வார் விருது 2026
- உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், வேளாண்மையில் நம்மாழ்வாரின் பங்களிப்பைச் சிறப்பிக்கும் வகையிலும் சிறந்த விவசாயிகளுக்கு அவரது பெயரில் ஆண்டுதோறும் விருதுகள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.
- TNPSC தேர்வுக்கான முக்கிய தகவல்கள்: நம்மாழ்வார் விருது 2026
தமிழ்நாடு உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை 2026-27
- தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27ஆம் நிதியாண்டுக்கான உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை (Demand for Grants) மீதான விவாதம், ஆகஸ்ட் 24, 2026 அன்று நடைபெற்றது. Government Agencies
- நிதித்துறை அமைச்சர் என். மேரி வில்சன் தாக்கல் செய்த பட்ஜெட்டைத் தொடர்ந்து, உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் இந்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
- TNPSC தேர்வுக்கான முக்கிய தகவல்கள்:தமிழ்நாடு உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை 2026-27
புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் போட்டி 2026 -சாம்பியன் பட்டம்
- ஹங்கேரியில் புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான பிரிவில் இந்தியாவில் வேலவன் செந்தில்குமார் பட்டம் வென்றார்.
- முன்னதாக, அரை இறுதி சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த வீரர் சோட்ரானியுடன் மோதினார். இந்த மோதலில் வேலவன் செந்தில்குமார் 9-11, 11-8, 11-7, 1-11, 12-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் வேலவன் செந்தில்குமார், ஹங்கேரியின் பாலாஸ் ஃபர்காஸுடன் பலப்பரீட்சை மேற்கொண்டார்.
- இதில் 11-4, 11-2, 11-3 என்ற செட் கணக்கில் பாலாஸ் ஃபர்காஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் இந்திய வீரர்:
- அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் கிளப்பில் கிராண்ட் செஸ் டூரின் இறுதிப் போட்டி நடைபெற்றது.கிராண்ட் செஸ் டூரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
- கிராண்ட் செஸ் டூர் 2026 சாம்பியன்: வரலாறு படைத்த இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா
இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு ₹50 லட்சம் பரிசு அறிவிப்பு
- சாதனை மற்றும் பரிசு: நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீனில் நடைபெற்ற FIH மகளிர் ஹாக்கி உலகக் கோப்பையில் 5-வது இடத்தைப் பிடித்த இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு ஹாக்கி இந்தியா அமைப்பு ₹50 லட்சம் ரொக்கப் பரிசை அறிவித்துள்ளது.
- 52 ஆண்டு கால சாதனை: 1974-ல் 4-வது இடம் பிடித்ததற்குப் பிறகு, கடந்த 52 ஆண்டுகளில் உலகக் கோப்பையில் இந்தியாவின் சிறந்த செயல்திறன் இதுவாகும்.
- போட்டி முடிவு: 5-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. இந்தியாவுக்காக நவ்நீத் கவுர் 2 கோல்களும், இஷிகா சவுத்ரி 1 கோலும் அடித்தனர்.
- பரிசுத் தொகை பகிர்வு: அணியில் உள்ள ஒவ்வொரு வீராங்கனைக்கும் ₹2 லட்சமும், ஆதரவு பணியாளர்களுக்கு (Support Staff) தலா ₹1 லட்சமும் வழங்கப்படும்.
- இத்தொடரில் இந்திய மகளிர் அணியை சலீமா டெட்டே (Salima Tete) வழிநடத்தினார்.
- ஹாக்கி இந்தியாவின் தலைவராக திலீப் திர்கியும், பொதுச் செயலாளராக போலா நாத் சிங்கும் உள்ளனர்.
தேவதுர்கா தங்கம் மற்றும் தாமிர ஆய்வைத் தொடங்கியது தெலங்கானா
- திட்டத் தொடக்கம்: கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா தாலுகாவில் உள்ள லிங்கதஹள்ளி கிராமத்தில், தங்கம் மற்றும் தாமிரச் சுரங்க ஆய்வுத் திட்டத்தை தெலங்கானா அரசு 2026 ஆகஸ்ட் 27 அன்று தொடங்கியது.
- பரப்பளவு & ஏலம்: மத்திய சுரங்க அமைச்சகம் நடத்திய ஏலம் மூலம் ஒதுக்கப்பட்ட இந்த தேவதுர்கா கனிமத் தொகுதி 199.13 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
- முக்கிய மைல்கல் (SCCL): 136 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட அரசுக்குச் சொந்தமான நிலக்கரி நிறுவனமான சிங்கரேணி காலரீஸ் கம்பெனி லிமிடெட் (SCCL), முக்கிய மற்றும் உத்திசார் கனிம ஆய்வில் (Critical and Strategic Minerals) ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும்.
- 2026 ஆகஸ்ட் 6 அன்று பெங்களூருவில் கர்நாடக சுரங்கம் மற்றும் புவியியல் துறை மற்றும் SCCL இடையே ஆய்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- 2026 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின விழாவின் போது SCCL தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் இதற்கான ஆய்வு உரிமத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
- களப் பணிகள்: கள ஆய்வு மற்றும் செயல்பாடுகளுக்காக தேவதுர்காவில் பிரத்யேக அலுவலகம் மற்றும் ஹெலிபேட் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜப்பானின் 'போல்கா டாட் ராணி' யயோய் குசாமா காலமானார்
- மறைவு: ஜப்பானின் புகழ்பெற்ற அவாண்ட்-கார்ட் (Avant-garde) சமகாலக் கலைஞரான யயோய் குசாமா (Yayoi Kusama) தனது 97-வது வயதில் 2026 ஆகஸ்ட் 14 அன்று டோக்கியோ மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுச் செய்தியை 2026 ஆகஸ்ட் 27 அன்று அவரது நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
- கலைப் பாணி & படைப்புகள்:
- வட்டப் புள்ளிகள் (Polka dots), தொடர் வடிவங்கள் (repetitive patterns), பூசணிக்காய் சிற்பங்கள் (pumpkin sculptures) மற்றும் 'Infinity Mirror Rooms' எனப்படும் கண்ணாடியறை கலைக் கட்டமைப்புகளுக்காக உலகளவில் புகழ்பெற்றவர்.
- ஓவியம், சிற்பம் மற்றும் நிறுவல் கலை (installation art) ஆகியவற்றில் 20 மற்றும் 21-ஆம் நூற்றாண்டின் முன்னணி கலைஞராகத் திகழ்ந்தார்.
- வாழ்க்கைக் குறிப்பு:
- இவர் 1929 மார்ச் 22 அன்று ஜப்பானின் மாட்சுமோட்டோவில் பிறந்தார்.
- 1957-ல் நியூயார்க் நகருக்குக் குடிபெயர்ந்து, 1960-களின் அவாண்ட்-கார்ட் மற்றும் பாப் ஆர்ட் (Pop Art) கலை இயக்கங்களில் தீவிரமாகப் பங்கேற்றார்.
- 1970-களில் மீண்டும் ஜப்பான் திரும்பிய இவர், 1977 முதல் தனது இறுதி காலம் வரை டோக்கியோவில் உள்ள மனநல மருத்துவமனையில் சுயமாக தங்கி, தினமும் கலைப் படைப்புகளை உருவாக்கி வந்தார்.
இணையத் தமிழ்ச் செம்மல் விருது 2026:
- அறிமுகம்: டிஜிட்டல் தளங்களில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான பங்களிப்பை அங்கீகரிக்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு இணையத் தமிழ்ச் செம்மல் விருதை அறிமுகப்படுத்தியுள்ளது.
- நோக்கம்: இணையதளங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் இணையவழி ஆய்வுகள் மூலம் தமிழை வளர்க்கும் தமிழறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களைக் கௌரவிப்பது இதன் நோக்கமாகும்.
- விருது விவரங்கள்: இவ்விருது 'இணையத் தமிழ்ச் செம்மல்' என்ற பட்டத்துடன், ₹25,000 ரொக்கப் பரிசையும் உள்ளடக்கியது.
- முக்கியத்துவம்:
- டிஜிட்டல் தமிழ் சேவைகள் மற்றும் யூனிகோட் (Unicode) மேம்பாட்டிற்கான முயற்சிகளை இது அங்கீகரிக்கிறது.
- தமிழ் மொழிப் பணிக்கான அரசு அங்கீகாரத்தை தற்கால டிஜிட்டல் சகாப்தத்திற்கும் இது விரிவுபடுத்துகிறது.
தமிழ்நாட்டில் 3 புதிய யானை வழித்தடங்கள் அறிவிப்பு
- அறிவிப்பு: 2026 ஆகஸ்ட் 28 அன்று, ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள காவிரி வடக்கு வனவிலங்கு சரணாலயப் பகுதியில் 3 புதிய யானை வழித்தடங்களை தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே ஆசிய யானைகள் நடமாடும் காவிரி கடந்த பாதையின் ஒரு பகுதியாகும்.
- அறிவிக்கப்பட்ட 3 வழித்தடங்களின் விவரங்கள்:
- ஜவளகிரி–உளிபண்டா–தக்கட்டி வழித்தடம்: 18.50 கி.மீ நீளம், 0.73 முதல் 3.20 கி.மீ அகலம், 3,241.53 ஹெக்டேர் பரப்பளவு.
- ஜவளகிரி–பானை–அஞ்செட்டி வழித்தடம்: 20.90 கி.மீ நீளம், 0.80 முதல் 5.00 கி.மீ அகலம், 6,881.47 ஹெக்டேர் பரப்பளவு.
- பிலிக்கல்–ஜவளகிரி வழித்தடம்: 2.20 கி.மீ நீளம், 0.66 முதல் 1.50 கி.மீ அகலம், 196 ஹெக்டேர் பரப்பளவு.
மேலும் படிக்க:
- DAILY CURRENT AFFAIRS IN TAMIL JANUARY 2026
- DAILY CURRENT AFFAIRS IN TAMIL FEBRUARY 2026
- DAILY CURRENT AFFAIRS IN TAMIL MARCH 2026
- DAILY CURRENT AFFAIRS IN TAMIL APRIL 2026
- DAILY CURRENT AFFAIRS IN TAMIL MAY 2026
- DAILY CURRENT AFFAIRS IN TAMIL JUNE 2026
- DAILY CURRENT AFFAIRS IN TAMIL JULY 2026
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN :
TNPSC Payilagam - Your Ultimate Study Partner 📚
Dedicated to helping you crack TNPSC exams (Group 1, 2, 4, & VAO). Join our channel for:
✅ Daily Current Affairs (Tamil & English)
✅ Government Scheme Updates (State & Central)
✅ Exclusive Study Notes & PDFs
✅ Exam-oriented Quiz & Model Question Papers
✅ Syllabus-wise Preparation Guides
Stay ahead in your competitive exam journey. Join now and ace your exams!
- Whatsapp Channel - TNPSCPAYILAGAM
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
- Whatsapp Channel : / TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!
Dedicated to helping you crack TNPSC exams (Group 1, 2, 4, & VAO). Join our channel for:
✅ Daily Current Affairs (Tamil & English)
✅ Government Scheme Updates (State & Central)
✅ Exclusive Study Notes & PDFs
✅ Exam-oriented Quiz & Model Question Papers
✅ Syllabus-wise Preparation Guides
Stay ahead in your competitive exam journey. Join now and ace your exams!
- Whatsapp Channel - TNPSCPAYILAGAM
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
- Whatsapp Channel : / TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!
tnpsc-current-affairs-in-tamil-august-2026

.jpg)
