தமிழ்நாடு இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம் 2025:
- 2025-ம் ஆண்டில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும், அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காகவும் தமிழ்நாடு அரசு "இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்" (Pink Autos) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
- பெண்களின் பாதுகாப்பில் தமிழ்நாடு சிறந்து விளங்குகின்ற சூழலில் அதனை கூடுதலாக வலுப்படுத்தும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், கடந்தாண்டு ஜூன் மாதம் 2024 நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ‘சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுய தொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியமாக ரூ.1 லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கி ரூ.2 கோடி செலவில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் (பிங்க் ஆட்டோ) அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
- இதையடுத்து பிங்க் ஆட்டோ திட்டம் தொடர்பாக அரசு, அரசிதழில் பதிவு செய்தது.
- அதில் ‘ஆட்டோ முழுவதும் பிங்க் நிறத்தில் இருக்க வேண்டும், பெண்கள் மட்டும்தான் ஓட்டுநராக இருக்க வேண்டும்,
- அவர்கள் பிங்க் நிறத்தில் சீருடை அணிந்திருக்க வேண்டும்.
- ஆட்டோவில் ஜிபிஎஸ் மற்றும் வாகனம் இருக்கும் இடத்தை கண்காணிக்கும் சாதனம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்’ என மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
"இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்" (Pink Autos) திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
- நோக்கம்: சென்னை மாநகரில் பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வது மற்றும் பெண்களுக்குச் சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கித் தருவது.
- தொடக்கம்: 2025 மார்ச் 8-ம் தேதி, சர்வதேச மகளிர் தினதன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
- மானியம்: ஆட்டோ வாங்க விரும்பும் தகுதியான பெண் ஓட்டுநர்களுக்கு ரூ.1 லட்சம் மானியம் அரசு வழங்குகிறது.
- இயக்கம்: இந்த இளஞ்சிவப்பு ஆட்டோக்களைப் பெண்கள் மட்டுமே இயக்க வேண்டும். ஆண்கள் இயக்கினால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
- பாதுகாப்பு: பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த ஆட்டோக்களில் ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
- கட்டணம்: சாதாரண ஆட்டோக்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணமே இதற்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- பெண்கள் பாதுகாப்பாகப் பயணிக்கவும், அவர்கள் பொருளாதார ரீதியாகச் சுதந்திரம் அடையவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது.
தமிழ்நாடு இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம் 2025:
| விவரம் | குறிப்பு |
| திட்டத்தின் பெயர் | இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம் (Pink Auto Scheme) |
| தொடங்கப்பட்ட நாள் | 08 மார்ச் 2025 (சர்வதேச மகளிர் தினம்) |
| தொடங்கியவர் | மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் |
| நோக்கம் | பெண்கள் பாதுகாப்பு & சுயதொழில் |
| மானியத் தொகை | ரூ. 1 லட்சம் |
\

