'தேசிய சிறார் விருது' (ராஷ்டிரிய பால புரஸ்கார்) 2025 :
- 2025-ஆம் ஆண்டிற்கான பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் (Pradhan Mantri Rashtriya Bal Puraskar) விருதுகளை, 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 20 சிறார்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 2025 டிசம்பர் 26 அன்று புது தில்லியில் வழங்கினார்.
Pradhan Mantri Rashtriya Bal Puraskar Winners List:
வீர தீர சாகசம் (Bravery & Courage)
- வியோமா பிரியா (மறைவுக்குப் பின்) - தமிழ்நாடு: கோவையில் பூங்காவில் மின்சாரம் தாக்கிய மற்றொரு சிறுவனைக் காப்பாற்ற முயன்று உயிரிழந்த 8 வயது சிறுமி வியோமா பிரியாவுக்கு, வீரதீரச் செயலுக்கான விருது வழங்கப்பட்டது. இவ்விருதை அவரது தாயார் அர்ச்சனா பெற்றுக் கொண்டார்.
- கமலேஷ் குமார் (மறைவுக்குப் பின்) - பீகார்: தனது சகோதரனைக் காப்பாற்ற தனது உயிரைத் தியாகம் செய்தார்.
- அஜய் ராஜ் - உத்தரப் பிரதேசம்: முதலைத் தாக்குதலில் இருந்து தனது தந்தையை மீட்டார்.
- முகமது சித்தன் பி. - கேரளா: மின்சார விபத்தில் இருந்து இரண்டு நண்பர்களைக் காப்பாற்றினார்.
விளையாட்டு (Sports)
- வைபவ் சூர்யவன்ஷி - பீகார்: 14 வயதான பிஹாரைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர். ஐபிஎல்-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் இவர், சமீபத்தில் லிஸ்ட் ஏ போட்டியில் அதிவேகமாக (59 பந்துகளில்) 150 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.:
- ஜோஷ்னா சபர் - ஒடிசா: பளுதூக்குதல் / விளையாட்டு சாதனையாளர் : உலக இளையோர் பளுதூக்குதல் (40 கிலோ பிரிவு): 2023-ல் வெண்கலம், 2024-ல் வெள்ளி மற்றும் 2025-ல் வெண்கலம் வென்றுள்ளார். ஆசிய இளையோர் சாம்பியன்ஷிப்: 2023-ல் டெல்லியில் வெண்கலம், 2024-ல் தோஹாவில் தங்கம் வென்றார். காமன்வெல்த் இளையோர் போட்டி: 2023 மற்றும் 2024-ல் தங்கம் வென்று சாதித்தார். தேசிய போட்டிகள்: கேலோ இந்தியா மற்றும் தேசிய இளையோர் போட்டிகளில் தொடர்ந்து தங்கம் வென்று வருகிறார். 16 வயதிற்குள் பளுதூக்குதலில் இவர் படைத்த சாதனைகளைப் பாராட்டி, அவருக்கு 'பிரதமரின் தேசிய சிறார் விருது' (Pradhan Mantri Rashtriya Bal Puraskar) வழங்கப்பட்டது.
- தினீதி தேசிங்கு - கர்நாடகா: நீச்சல் / விளையாட்டுத் துறை.
- சிவானி ஹூசுரு உப்பாரா - ஆந்திரப் பிரதேசம்: மாற்றுத்திறனாளி தடகள வீரர்.
- யோகிதா மாண்டவி - சத்தீஸ்கர்: ஜூடோ (தேசிய அளவிலான வீரர்).
- ஜோதி - ஹரியானா: விளையாட்டுத் துறை சாதனையாளர்.
புதுமை, கல்வி மற்றும் அறிவியல் (Innovation, Scholars & Science/Tech)
- ரிஷிக் குமார் - ஜம்மு காஷ்மீர்: கண்டுபிடிப்பாளர் மற்றும் கல்வித் துறை சாதனையாளர்.
- வாகா லட்சுமி பிரக்னிகா - குஜராத்: 7 வயது செஸ் சாம்பியன்.
- அனிஷ் சர்க்கார் - மேற்கு வங்கம்: செஸ் மற்றும் கல்விப் புலத்தில் இளம் சாதனையாளர்.
- ஐஷி பிரிஷா போரா - அசாம்: கல்வி மற்றும் கண்டுபிடிப்புத் துறை.
- பூஜா பால் - உத்தரப் பிரதேசம்: தூசியைக் குறைக்கும் கதிரடிக்கும் இயந்திரத்தைக் (Thresher) கண்டுபிடித்தார்.
- அர்ணவ் அனூப்ரியா மகர்ஷி - மகாராஷ்டிரா: செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மென்பொருள் கண்டுபிடிப்பு.
- எஸ்தர் லால்டுஹவ்மி ஹ்னாம்டே - மிசோரம்: கல்வி மற்றும் புதுமைத் துறை (இளம் பாடகியும் கூட).
கலை, கலாச்சாரம் மற்றும் சமூக சேவை (Arts, Culture & Social Service)
- சுமன் சர்க்கார் - மேற்கு வங்கம்: தபலா கலைஞர் மற்றும் கலாச்சாரச் செயல்பாடுகள்.
- ஷ்வன் சிங் - பஞ்சாப்: 'ஆபரேஷன் சிந்தூர்' மற்றும் சமூக நலப் பணிகள்.
- வன்ஷ் தயாள் - சண்டிகர்: 17 வயது, சமூக சேவை மற்றும் சமூக மேம்பாட்டுப் பணிகள்.

