இந்தியக் கடற்படைக்கு 26 ரஃபேல்-மரைன் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம்:
- இந்தியக் கடற்படைக்கு 26 ரஃபேல்-மரைன் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இந்தியா - பிரான்ஸ் அரசுகளுக்கு இடையே 28.04.2025 கையெழுத்தானது. இதில் 22 ஒற்றை இருக்கை விமானங்களும் 4 இரட்டை இருக்கை விமானங்களும் அடங்கும்.
- இந்த ஒப்பந்தத்தில் பயிற்சி அளித்தல், உபகரணங்கள், சிமுலேட்டர், ஆயுதங்கள் மற்றும் செயல்திறன் அடிப்படையிலான போக்குவரத்து ஆகியவை உள்ளடங்கும். இதில் இந்திய விமானப்படையின் தற்போதுள்ள ரஃபேல் விமானங்களுக்கான கூடுதல் உபகரணங்களும் அடங்கும். இந்த ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், பிரான்ஸ் ஆயுதப்படைகள் துறை அமைச்சர் செபாஸ்டியன் லெகார்னுவும் கையெழுத்திட்டுள்ளனர்.
பத்ம விருதுகள் 2025: தமிழ்நாட்டில் 13 பேர் பெறுகின்றனர்:
- புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி (ஏப்.28) நடைபெற்றது. இவ்விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருதினை குடியரசுத் தலைவர் திரவுபதி வழங்கி கவுரவித்தார்.
- விளையாட்டுத் துறையில் சிறந்த பங்களிப்புக்காக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், சமையல் கலை வல்லுநர் டாக்டர் கே.தாமோதரன், வர்த்தகம், தொழில் துறையில் சிறந்த பங்களிப்புக்காக ஆர்.ஜி.சந்திரமோகன், இலக்கியம், கல்வித் துறையில் சிறந்த பங்களிப்புக்காக டாக்டர் லட்சுமிபதி ராமசுப்பையர், சிற்பக் கலையில் சிறந்த பங்களிப்புக்காக ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி ஸ்தபதி ஆகியோருக்குப் பத்மஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்.
- இந்த ஆண்டு 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள், 19 பத்ம பூஷண் விருதுகள், 113 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.
- TNPSC KEY NOTES :2025 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளின் முழுப் பட்டியல்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை NIA விசாரிக்கிறது:
- ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பசுமை பள்ளத்தாக்கில், கடந்த 22ல் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 26 சுற்றுலா பயணியர் உயிரிழந்தனர். இந்த வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பிடம் மத்திய அரசு ஒப்படைத்தது. இதையடுத்து என்.ஐ.ஏ., விசாரணையை துவக்கிஉள்ளது.
- என்.ஐ.ஏ.,யைச் சேர்ந்த ஐ.ஜி., - டி.ஐ.ஜி., மற்றும் எஸ்.பி., மேற்பார்வையில் விசாரணை துவங்கியுள்ளது. தாக்குதலை நேரில் கண்டவர்களிடம், அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர்.
தேசிய புலனாய்வு முகமை:
- என்.ஐ.ஏ என்பது தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency) என்ற அமைப்பின் சுருக்கம். இது, இந்தியாவில் பயங்கரவாத தடுப்பு சட்ட அமலாக்க முகமையாக செயல்படுகிறது. இது, தீவிரவாதக் குற்றங்களை விசாரணை மேற்கொள்ளும் இந்திய அரசால் நிறுவப்பட்ட ஓர் புலனாய்வு அமைப்பாகும்.
- 2008 -ம் ஆண்டில் நடைபெற்ற மும்பைத் தீவிரவாதத் தாக்குதலை அடுத்து, இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள போதுமான புலனாய்வு அமைப்பு இல்லை என்று அரசு கருதியதை அடுத்து, 2009-ம் ஆண்டு, தீவிரவாதச் செயல்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க சிறப்பு அதிகாரம் கொண்ட தேசியப் புலனாய்வு முகமை (National Investigation Agency, NIA) சட்டத்தை நிறைவேற்றியது.
- நாடு முழுவதும் நடைபெறும் தீவிரவாதம் தொடர்புடைய குற்றங்களை மாநில அரசுகளின் அனுமதி இன்றியேகூட விசாரணைகள் மேற்கொள்ள இவ்வமைப்புக்கு உரிமையுள்ளது. இதன் முதல் தலைமை இயக்குநரான ஆர்.வி. ராஜூ பணியாற்றி வந்தார். தேசிய புலனாய்வு முகமையின் தற்போதைய தலைவர் சதானந்த் வசந்த் டேட். இவர் 2024 மார்ச் 27 அன்று நியமிக்கப்பட்டார்
- தேசிய புலனாய்வு முகமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் சூலை 2019-இல் நிறைவேற்றப்பட்டது.
- என் ஐ ஏ தலைமையிடம் புது தில்லியில் உள்ளது. நாடு முழுவதும் 14 நகரங்களில் இதன் கிளைகள் உள்ளது.
இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் மார்ச் 2025:
- திருத்தப்பட்ட நாட்காட்டியின்படி, நாட்டின் தொழில்துறை உற்பத்தி குறியீட்டு ஏண்ணின் விரைவு மதிப்பீடு தற்போது மாதந்தோறும் 28-ம் தேதி வெளியிடப்படுகிறது. (அல்லது 28-ம் தேதி விடுமுறை நாளாக இருந்தால் அடுத்த வேலை நாள்).
- உற்பத்திப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் / நிறுவனங்களிடமிருந்து தரவுகளைப் பெறும் ஆதார முகமைகளிடமிருந்து பெறப்பட்ட விவரங்கள் அடிப்படையில் குறியீட்டெண் தொகுக்கப்படுகிறது.
- தொழில் உற்பத்திக் குறியீட்டின் திருத்தக் கொள்கையின்படி, இந்த விரைவு மதிப்பீடுகள் அடுத்தடுத்த வெளியீடுகளில் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும்.
இதன் முக்கிய சிறப்பம்சங்கள்:
1. மார்ச் 2025 மாதத்திற்கான தொழில் உற்பத்தி குறியீட்டு எண் வளர்ச்சி விகிதம் 3.0 சதவீதமாகும். இது 2025 பிப்ரவரி மாதத்தில் 2.9 சதவீதமாக (விரைவான மதிப்பீடு) இருந்தது.
2. சுரங்கம், உற்பத்தி, மின்சாரம் ஆகிய மூன்று துறைகளின் வளர்ச்சி விகிதங்கள் முறையே 0.4 சதவீதம், 3.0 சதவீதம் மற்றும் 6.3 சதவீதமாகும்.
3. தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண்ணின் விரைவான மதிப்பீடுகள் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 160.0- ஆக இருந்தது இந்த மார்ச் மாதத்தில் 164.8 ஆக உள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கான சுரங்கம், உற்பத்தி, மின்சாரத் துறைகளுக்கான தொழில்துறை உற்பத்தி குறியீடுகள் முறையே 156.8, 160.9 மற்றும் 217.1 ஆக உள்ளன.
4. உற்பத்தித் துறைகளைச் சேர்ந்த 23 தொழில் குழுக்களில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
5. தொழில் குழுக்களில் உள்ள நிறுவனங்களில் "அடிப்படை உலோகங்களின் உற்பத்தி", "எஃகு குழாய்கள், பார்கள் உள்ளிட்ட பல்வேறு வகை உற்பத்தி குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
6. "மோட்டார் வாகனங்கள், டிரெய்லர்கள் உற்பத்தி" என்ற தொழில்துறை குழுவில், "வாகன உதிரிபாகங்கள், லாரிகள் மற்றும் டிரெய்லர்களின் பாகங்கள்" ஆகியவை வளர்ச்சியடைந்துள்ளன.
தேசிய அதிவேகக் கணினி இயக்கம்:மார்ச் 2025
- தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கத்தின் கீழ், மார்ச் 2025 நிலவரப்படி, 35 பெட்டாபிளாப்ஸ் ஒருங்கிணைந்த கணினி திறன் கொண்ட மொத்தம் 34 சூப்பர் கம்ப்யூட்டர்கள், பல்வேறு கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், ஆய்வகங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
- இந்த இயக்கத்தின் கீழ் சூப்பர் கம்ப்யூட்டிங் அமைப்புகள் 85 சதவீதத்துக்கும் அதிகமான ஒட்டுமொத்த பயன்பாட்டு விகிதத்தை அடைந்துள்ளன.
- ஆராய்ச்சி - மேம்பாட்டுத் (R&D) துறையில் இந்த சூப்பர் கம்ப்யூட்டிங் அமைப்புகளின் பங்களிப்பு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 200-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், ஆய்வகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு இது உதவுகிறது .
- தேசிய அதிவேகக் கணினி இயக்கம் (நேஷனல் சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷன் -NSM) என்பது உயர் செயல்திறன் கணினி (HPC) திறன்களுடன் நாட்டை மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் முதன்மை முயற்சியாகும். 2015-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தப் பணி, சூப்பர் கம்ப்யூட்டிங்கில் இந்தியாவின் தொழில்நுட்ப வலிமையை மேம்படுத்துதல், ஆராய்ச்சி - மேம்பாட்டை வளர்ப்பது, கல்வி, தொழில், அரசுத் துறைகளில் அறிவியல் முன்னேற்றங்களை ஆதரிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கர்ப்பகால உயர் ரத்த அழுத்த நோயைக் கண்டறியும் புதிய உயிரி பயோசென்சார் தளத்தை உருவாக்கியுள்ளனர்:
- சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) தலைமையில் பல்வேறு கல்வி நிறுவன ஆராய்ச்சிக் குழுவினர் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் கர்ப்பகால உயர் ரத்த அழுத்த நோயைக் கண்டறியக்கூடிய புதிய பயோசென்சார் தளத்தை உருவாக்கியுள்ளனர்.
- தற்போதுள்ள தொழில்நுட்பங்களுக்கு சாத்தியமுள்ள மாற்றாக, ஃபைபர் ஆப்டிக்ஸ் சென்சார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நோயாளியை பரிசோதனை செய்து கண்டறியும் உத்தியை உருவாக்க ஒன்றிணைந்துள்ளனர்.
- உயிருக்கு ஆபத்தான சிக்கலான கர்ப்பகால உயர் ரத்தஅழுத்தம் உலகளவில் அதிக எண்ணிக்கையில் கர்ப்பிணிகளையும், பச்சிளங்குழந்தைகளையும் பாதிக்கிறது. சரியான தருணத்தில் சிகிச்சை அளிப்பதையும், தாய்-சேய் இருவரின் நோயற்ற தன்மை, இறப்பு விகிதங்களைக் குறைப்பதையும் உறுதி செய்யும் வகையில், இந்த சிக்கலுக்கு குறைந்த செலவில் தொடக்க நிலையிலேயே விரைவாக தேவைப்படும் இட ங்களிலேயே நேரடியாக பரிசோதனை செய்வது அவசியமாகிறது.
செயற்கைக்கோள் பேருந்து:
- இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் ( IN-SPACe ), சேட்டிலைட் பஸ் ஆஸ் எ சர்வீஸ் (SBaaS -Satellite Bus as a Service ) என்ற புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
- இந்த முயற்சி இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்கள் செயற்கைக்கோள்-பஸ் தளங்களை வடிவமைத்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இறக்குமதி சார்புநிலையைக் குறைப்பதும், இந்திய விண்வெளித் துறையில் புதுமைகளை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும்.
- இது இந்தியாவை சிறிய செயற்கைக்கோள்-பஸ் மற்றும் ஹோஸ்ட் செய்யப்பட்ட-பேலோட் சேவைகளுக்கான உலகளாவிய சேவை வழங்குநராக மாற்ற உதவும்.
LIST OF IMPORTANT DAYS AND DATES IN APRIL 2024 IN TAMIL :
ரவிவர்மா பிறந்த தினம் (Ravivarma Birth Anniversary) :
- ராஜா ரவிவர்மா 1848ஆம் ஆண்டு ஏப்ரல் 29 அன்று கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள கிளிமானூர் என்னும் ஊரில் பிறந்தார். எண்ணெய் வண்ண ஓவியக்கலையை 9 ஆண்டுகள் பயின்றார்.
- தியோடோர் ஜென்சன் என்னும் ஐரோப்பியரிடம் ஐரோப்பா தைல வண்ணக் கலையைக் கற்றுக்கொண்டார். சென்னை ஆளுராக இருந்த பக்கிங்ஹாம் பிரபுவை அவர் ஓவியமாக வரைந்தது அவருக்குப் புகழைத் தேடித்தந்தது.
- 1873இல் வியன்னாவில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் ரவிவர்மாவின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு சிறப்பான விருதைப் பெற்றார்.
- பழம்பெரும் காவிய நாயகிகளான துஷ்யந்தை, சகுந்தலை, தமயந்தி போன்றோரின் உருவங்களை வரைந்து உலகப்புகழ் பெற்றார்.
- இவர் நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தினார்.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!