CURRENT AFFAIRS IN TAMIL MAY 2025 (01.05.2025-02.05.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL MAY 2025 (01.05.2025-02.05.2025)


முதலாவது உலக ஒலி, ஒளி, பொழுதுபோக்கு உச்சி மாநாடு 2025:

  • முதலாவது உலக ஒலி, ஒளி, பொழுதுபோக்கு உச்சி மாநாடு (WAVES 2025-World Audio Visual & Entertainment Summit) மும்பையின் புகழ்பெற்ற ஜியோ உலக மையத்தில் "ஜாம்பவான்களும், பாரம்பரியமும்: இந்தியாவின் ஆன்மாவை வடிவமைத்த கதைகள்" என்ற தலைப்பில் குழு விவாதத்துடன் தொடங்கியது. இந்த அமர்வு இந்தியாவின் மிகவும் மதிப்பிற்குரிய சினிமா நட்சத்திரங்கள் சிலரை ஒன்றிணைத்தது.
  • ஹேமமாலினி, மோகன்லால், சிரஞ்சீவி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை அக்ஷய் குமார் நெறிப்படுத்தினார்.
  • வேவ்ஸ் 2025-ல், இந்தியா முதல் முறையாக உலகளாவிய ஊடக உரையாடலை நடத்துகிறது.
  • வேவ்ஸ் 2025 என்பது "படைப்பாளர்களை இணைத்தல், நாடுகளை இணைத்தல்" என்ற முழக்கத்துடன் நடைபெறும் நான்கு நாள் உச்சிமாநாடு ஆகும்.  இது உலகெங்கிலும் உள்ள படைப்பாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை ஒன்றிணைப்பதன் மூலம் ஊடகம், பொழுதுபோக்கு, மின்னணு கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை நிலைநிறுத்த தயாராக உள்ளது.
  •  2029-ம் ஆண்டுக்குள் 50 பில்லியன் டாலர் சந்தையை ஈர்ப்பது என்பதை வேவ்ஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது. 


ஐநா வளர்ச்சி திட்ட ஒப்பந்தம்:

  • தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஐநா வளர்ச்சி திட்டத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழிலாளர்கள் நலனில் ஒரு முக்கிய நடவடிக்கையை அமைச்சகம் எடுத்துள்ளது. இது கழிவு சேகரிப்பு, மீட்பு மற்றும் மறுசுழற்சி ஆகியவற்றில் அந்த தொழிலாளர்களின் பங்களிப்பை அங்கீகரித்து வலுப்படுத்துகிறது. பாதுகாப்பான மற்றும் நிலையான பணிச்சூழலுடன் நிதி மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்களுக்கான மேம்பட்ட அணுகலை இந்த முயற்சி அவர்களுக்கு வழங்கும்.
  • இந்தியாவில் உள்ள ஐநா வளர்ச்சித் திட்டத்தின் பிரதிநிதி டாக்டர் ஏஞ்சலா லூசிகி மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் செயலாளர் திரு அமித் யாதவ் இடையே இந்த ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
  • நமாஸ்தே திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களில் மாநில திட்ட மேலாண்மை அலகுகளை நிறுவுவதற்கு முக்கியமான நிதி ஆதரவை வழங்க ஐநா வளர்ச்சித் திட்டம் முன்வந்துள்ளது. திட்டத்தின் நோக்கங்களை மிகவும் பயனுள்ள மற்றும் சரியான நேரத்தில் செயல்படுத்துவதை இது உறுதி செய்யும்.


தேர்தல் ஆணையத்தின் 3 புதிய முன்முயற்சிகள்:

  • வாக்காளர் பட்டியலின் துல்லியத்தை மேம்படுத்தவும், மக்களுக்கு வாக்களிக்கும் செயல்முறையை மிகவும் வசதியானதாக மாற்றவும் இந்திய தேர்தல் ஆணையம் புதிய முன்முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி முன்னிலையில் நடைபெற்ற தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மாநாட்டில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. ஞானேஷ் குமார் தெரிவித்த திட்டமிட்ட முன்முயற்சிகளுக்கு ஒத்திசைந்ததாக இந்த நடவடிக்கைகள் உள்ளன.
  • வாக்காளர் தகவல் சீட்டுகளை வாக்காளர்களுக்கு மிகவும் உகந்ததாக மாற்ற, ஆணையம் அதன் வடிவமைப்பை மாற்றவும் முடிவு செய்துள்ளது. அதிகரித்த எழுத்துரு அளவுடன், வாக்காளரின் வரிசை எண் மற்றும் பகுதி எண் இப்போது மிகவும் முக்கியமாகக் காட்டப்படும். இது வாக்காளர்கள் தங்கள் வாக்குச் சாவடியை அடையாளம் காண்பதையும், வாக்குச்சாவடி அதிகாரிகள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் திறம்பட கண்டுபிடிப்பதையும் எளிதாக்கும்.
  • வாக்காளர் பதிவு விதிகள், 1960 இன் விதி 9 மற்றும் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம், 1969 (2023 இல் திருத்தப்பட்டபடி) பிரிவு 3 (5) (பி) ஆகியவற்றின் அடிப்படையில் ஆணையம் இப்போது இந்திய தலைமைப் பதிவாளரிடமிருந்து  இறப்பு பதிவு தரவை மின்னணு முறையில் பெறும். பதிவு செய்யப்பட்ட இறப்புகள் குறித்த தகவல்களை வாக்காளர் பதிவு அதிகாரிகள் சரியான நேரத்தில் பெறுவதை இது உறுதி செய்யும். இதன்மூலம், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், படிவம் 7-ன் கீழ் முறையான கோரிக்கைக்காக காத்திருக்காமல், கள ஆய்வு மூலம் தகவல்களை மீண்டும் சரிபார்க்க முடியும்.
  • மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 இன் பிரிவு 13 பி (2) இன் கீழ் வாக்காளர் பட்டியல் பதிவு அதிகாரிகளால் நியமிக்கப்படும் அனைத்து வாக்குச்சாவடி அதிகாரிகளும்  வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் பதிவு இயக்கங்களின் போது மக்கள் அடையாளம் கண்டு நம்பிக்கையுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதை உறுதி செய்வதற்காக நிலையான புகைப்பட அடையாள அட்டைகளை வழங்கவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் தொடர்பான கடமைகளைச் செய்வதில் வாக்காளர்களுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இடையிலான முதல் நடவடிக்கையாக, வீடு வீடாகச் சென்று பார்வையிடும்போது வாக்குச்சாவடி அதிகாரிகளை பொதுமக்கள் எளிதில் அடையாளம் காண வேண்டியது அவசியம்.


ஏப்ரல் மாத ஜிஎஸ்டி-2025:

  • 2025-26 ஆம் நிதியாண்டின் தொடக்க மாதமான கடந்த ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.37 லட்சம் கோடி. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தைவிட(ரூ. 2.1 லட்சம் கோடி) 12.6% அதிகமாகும். கடந்த மார்ச் மாதம் வருவாய் ரூ. 1.96 லட்சம் கோடி.
  • கடந்த 2017, ஜூலை 1 ஜிஎஸ்டி அமல்படுத்தியதில் இருந்து கடந்த ஏப்ரல் மாத வருவாயே அதிகபட்சம் ஆகும்.
  • இதில், உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் கிடைக்கும் ஜிஎஸ்டி வருவாய் 10.7 சதவீதம் அதிகரித்து சுமார் ரூ. 1.9 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களிலிருந்து பெறப்படும் வருவாய் 20.8 சதவீதம் அதிகரித்து ரூ. 46,913 கோடியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் :

  • கேரளாவின் விழிஞ்சம் பகுதியில் அதானி குழுமம் சார்பில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி (02.05.2025) தொடங்கிவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்
  • கேரள மாநிலத்தில் ரூ.8,867 கோடி முதலீட்டில் இந்த சர்வதேச துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்துக்கான முதலீட்டில் மூன்றில் இரண்டு பங்கு தொகையை கேரள அரசு செலவிட்டுள்ளது.
  • இந்த விழிஞ்சம் துறைமுகம் காரணமாக கடல்சார் வர்த்தகத்தில் கேரளம் முக்கிய இடத்தைப் பெறும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், நாட்டின் ஆழ்கடல் சரக்குப் போக்குவரத்துை துறைமுகமாகவும் இது அமைந்துள்ளது.
  • இந்த துறைமுகத்தின் கப்பல் போக்குவரத்து சோதனை முயற்சி கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது. முழுமையாக செயல்படத் தொடங்கியது கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில். இந்த துறைமுகம் 5,50,000 கண்டெய்னர்களை கையாளவும் 270 மிகப்பெரிய கப்பல்களை கையாளவும் திறன்பெற்றதாக அமைந்தளள்து.


இந்தியாவில் ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25:

  • இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.
  • இதில் 13.6 சதவீத வளா்ச்சியுடன் சேவைகள் ஏற்றுமதியின் மதிப்பு ரூ.32.70 லட்சம் கோடியாக உள்ளதாக மத்திய வா்த்தக அமைச்சகத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2023-24-இல் இதன் மதிப்பு ரூ.28.86 லட்சம் கோடியாக இருந்தது.
  • கடந்த மாா்ச் மாதத்துக்கான சேவைகள் துறையின் ஏற்றுமதி மதிப்பை ரிசா்வ் வங்கி வெளியிட்டபின் 2024-25-ஆம் நிதியாண்டில் சரக்கு மற்றும் சேவைகளை உள்ளடக்கிய நாட்டின் மொத்த ஏற்றுமதியின் மதிப்பு ரூ.69.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.
  • கடந்த 2023-24-இல் நாட்டின் மொத்த ஏற்றுமதி ரூ.65.85 லட்சம் கோடியாக இருந்தது.
  • அதேபோல் கடந்த ஆண்டு மாா்ச்சில் சேவைகள் ஏற்றுமதியின் மதிப்பு ரூ.2.5 லட்சம் கோடியாக இருந்த நிலையில் நிகழாண்டு மாா்ச்சில் இதன் மதிப்பு 18.6 சதவீதம் அதிகரித்து ரூ.3.02 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.


இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) :

  • நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) எனும் பொருளாதார வளர்ச்சி 6.5-6.7 சதவீதமாக இருக்கும் என்று டெலாய்ட் கணித்துள்ளது.
  • இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது: உலக வர்த்தக சூழல் நிச்சயமற்ற சூழ்நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரி சலுகைகள் உள்நாட்டு தேவையில் விறுவிறுப்பை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.5-6.7 சதவீதத்தை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


LIST OF IMPORTANT DAYS AND DATES IN MAY 2025 IN TAMIL :

1st May

உலக தொழிலாளர் தினம் (World Labour Dar) :

  • தொழிலாளர் நாள் அல்லது உழைப்பாளர் நாள் (Labour Day அல்லது Labor Day) என்பது உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விடுமுறை நாளாகும். 
  • அது தொழிலாளர் ஒன்றிய இயக்கத்திலிருந்து தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக சாதனைகளைக் கொண்டாடுவதை குறிக்கின்றது. 
  • இந்தியா மே 1, 1927 இல் இருந்து தொழிலாளர் வாரத்தைக் கடைபிடிக்கத் தொடங்கியது. இது பல்வேறு தொழிலாளர் அமைப்புகளால் கொண்டுவரப்பட்ட ஊர்வலங்களுடன், பொது விடுமுறையாக கொண்டாடப்படுகின்றது. 
  • மகாராஷ்டிரா மற்றும் குஜராத் (இந்தியாவிலுள்ள மாநிலங்கள்) ஆகியவற்றில், தொழிலாளர் வாரமானது 'மகாராஷ்டிரா திவ்யாஸ்' மற்றும் 'குஜராத் திவ்யாஸ்' (முறையே, மகாராஷ்டிரா தினம் மற்றும் குஜராத் தினம்) ஆகியவற்றுடனும் நிகழ்கின்றது. ஏனெனில் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் 1960 இல் அதே வாரத்தில் உருவாக்கப்பட்டன.
  • தொழிலாளர் தினத்தின் கொண்டாட்டம் அதன் மூலங்களை எட்டு மணிநேர நாள் இயக்கத்தில் கொண்டிருக்கின்றது. இது எட்டு மணிநேர வேலை, எட்டு மணிநேர பொழுதுபோக்கு மற்றும் எட்டு மணிநேர ஓய்வு ஆகியவற்றை குறிப்பதாகும்
  • 2024  ஆண்டிற்கான தொழிலாளர் தினத்தின் மையக்கருத்து “காலநிலை மாற்றத்தின் மத்தியில் பணியிடப் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துதல்”  (workplace safety and health amidst climate change) என்பதாகும். 

மகாராஷ்டிர/ குஜராத் தினம்

  • குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் மே 1 ஆம் தேதி இன்று தங்கள் 65 வது நிறுவன தினத்தை கொண்டாடின.
  • 1960 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட பம்பாய் மறுசீரமைப்புச் சட்டம், 1960 இன் படி இந்த இயக்கத்தின் விளைவாக மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன . இந்தச் சட்டம் 1 மே 1960 இல் நடைமுறைக்கு வந்தது.


2nd May

ஐ.நா. உலக சூரைமீன் தினம் (United Nations’ World Tuna Day) :

  • ஒவ்வொரு ஆண்டும் மே 2 ஆம் தேதி உலக சூரை மீன்கள் (Tuna Fish) தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • கடலில் பிடிக்கப்படும் மீன்களில் அதிகபட்சமாக காணப்படுவது சூரை மீன் (Tuna). அதாவது சுமார் 20 சதவிகிதம் வரை இவை இடம்பெறுகின்றன. உலகில் அதிகம் விற்பனை செய்யப்படும் மீன் இதுதான். இவற்றை பாதுகாக்கும் விதமாக ஐக்கிய நாடுகள் சபை சார்பில் மே 2 ஆம் தேதி உலக சூரை மீன் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
  • 2016 டிசம்பரில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஒவ்வொரு ஆண்டும் உலக சூரை மீன்கள் தினத்தை அனுசரிக்க வாக்களித்தது. உலக சூரை மீன்கள் தினத்தின் தொடக்க கொண்டாட்டம் மே-2, 2017 இல் நடந்தது. அப்போதிருந்து, ஒவ்வொரு ஆண்டும், உலக சூரை மீன்கள் தினம் மே 2 அன்று அனுசரிக்கப்படுகிறது.


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!


Post a Comment

0Comments

Post a Comment (0)