CURRENT AFFAIRS IN TAMIL JULY 2025 (01.07.2025-02.07.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL JULY 2025 (01.07.2025-02.07.2025)


RailOne என்ற புதிய செயலி:

  • ரயில்வே தகவல் அமைப்புகள் மையத்தின் (CRIS) 40வது நிறுவன தினத்தை முன்னிட்டு புதுடெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் RailOne என்ற புதிய செயலியை (01.07.2025) அறிமுகப்படுத்தினார். பயன்படுத்துவதற்கு எளிதான, அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு செயலி இது.
  • இந்த செயலியை ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோர் மற்றும் iOS ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்
  • முன்பதிவு செய்யப்படாத மற்றும் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளை பெறுவது, ரயில் எந்த இடத்தில் உள்ளது என்பதை அறிவதற்கான நேரடி ரயில் கண்காணிப்பு, குறை தீர்க்கும் சேவை, மின் கேட்டரிங், போர்ட்டர் முன்பதிவு மற்றும் கடைசி மைல் டாக்ஸி ஆகிய சேவைகளை இந்த செயலி மூலம் பெறலாம்.
  • முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் வழக்கம்போல் IRCTC-ல் தொடர்ந்து வழங்கப்படும். IRCTC உடன் கூட்டு சேர்ந்துள்ள பல வணிக பயன்பாடுகளைப் போலவே RailOne செயலியும் IRCTC ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • mPIN அல்லது பயோமெட்ரிக் மூலம் உள்நுழையக்கூடிய ஒற்றை உள்நுழைவு வசதியை RailOne கொண்டுள்ளது. இது ஏற்கனவே உள்ள RailConnect & UTS செயலிகளையும் உள்ளடக்கி உள்ளது. பல பயன்பாடுகளை நிறுவ வேண்டிய அவசியமில்லை என்பதால், இந்த செயலி இடத்தை மிச்சப்படுத்துகிறது.

திட்டம் 17ஏ-ன் கீழ் கட்டப்பட்ட இரண்டாவது இந்திய போர்க்கப்பலான உதயகிரி இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு:

  • 17ஏ திட்டத்தின் கீழ் மசகான் டாக் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்ட இரண்டாவது தாக்குதல் போர்க்கப்பல் உதயகிரி (Yard 12652 (Udaygiri)), இந்திய கடற்படை வசம் (01.07.2025) ஒப்படைக்கப்பட்டது
  • பல்நோக்குத் திறன் கொண்ட இந்த வகை போர்க்கப்பல்கள் இந்தியாவிற்கு எதிரான  கடல்சார் அச்சுறுத்தல்களைக் கையாளும் திறன் கொண்டவையாகும். உதயகிரி கப்பல், முன்னாள் ஐஎன்எஸ் உதயகிரியின் நவீன வடிவமாகும்.
  • 17ஏ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் போர்க்கப்பல்கள் நவீன ஆயுதங்கள் மற்றும் சென்ஸார் அமைப்பு உள்ளிட்ட மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளன. உதயகிரி போர்க்கப்பல் கட்டுமான பணி தொடங்கிய நாளிலிருந்து 37 மாதங்களில் நிறைவு பெற்று இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது.


தேசிய விளையாட்டுக் கொள்கை 2025-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்:

  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நாட்டின் விளையாட்டு சூழலை மறுவடிவமைத்து, விளையாட்டு மூலம் குடிமக்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய முயற்சியான தேசிய விளையாட்டுக் கொள்கை 2025-க்கு(National Sports Policy 2025) ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • இந்தப் புதிய கொள்கை, தற்போதுள்ள தேசிய விளையாட்டுக் கொள்கை 2001-க்கு மாற்றாகவும் இந்தியாவை உலகளாவிய விளையாட்டு சக்தி மையமாகவும், 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் உட்பட சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் சிறந்து விளங்குவதற்கான வலுவான போட்டியாளராகவும் நிலைநிறுத்துவதற்கான தொலைநோக்கு மற்றும் திட்டமிடலை இது அடிப்படையாகக் கொண்டுள்ளது.
  • தேசிய விளையாட்டுக் கொள்கை 2025 என்பது மத்திய அமைச்சகங்கள், நிதி ஆயோக், மாநில அரசுகள், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள், விளையாட்டு வீரர்கள், கள நிபுணர்கள் மற்றும் பொது பங்குதாரர்கள் ஆகியோரின் விரிவான ஆலோசனைகளால் உருவாக்கப்பட்டதாகும்.

2024-25 நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் :

  • நாட்டின் ஜிஎஸ்டி வசூல் கடந்த 5 ஆண்டில் இரட்டிப்பாகி, 2024-25 நிதியாண்டில் ரூ.22.08 லட்சம் கோடியாகி உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலுக்கு வந்தது.
  • ஜிஎஸ்டி அமலுக்கு வந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், “ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு வசூல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன்மூலம் நாட்டின் நிதிநிலவரம் வலுவடைந்து வருகிறது’’ என கூறப்பட்டுள்ளது.
  • ஜிஎஸ்டி அமலுக்கு வந்தபோது பதிவு செய்யப்பட்ட வரிதாரர்கள் எண்ணிக்கை 65 லட்சமாக இருந்தது. இது நடப்பு ஆண்டில் 1.51 கோடியைக் கடந்துள்ளது. கடந்த 2024-25 நிதி​யாண்​டில் ஒட்​டுமொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.22.08 லட்​சம் கோடி​யாக அதி​கரித்​துள்​ளது. 2020-21 நிதி​யாண்​டில் ரூ.11.37 லட்​சம் கோடி​யாக இருந்த வசூல், 5 ஆண்​டில் இரட்​டிப்​பாகி உள்​ளது.
  • கடந்த 2023-24 நிதி​யாண்​டில் வசூலான ரூ.20.18 லட்​சம் கோடி​யுடன் ஒப்​பிடும்​போது, 2024-25-ல் ஜிஎஸ்டி வசூல் 9.4% அதி​கரித்​துள்​ளது. இந்த ஆண்​டில் சராசரி​யாக மாதந்​தோறும் ரூ.1.84 லட்​சம் கோடி வசூலாகி உள்​ளது.
  • முந்​தைய நிதி​யாண்​டில் சராசரி மாதாந்​திர வசூல் ரூ.1.68 லட்​சம் கோடி​யாக இருந்​தது. கடந்த ஏப்​ரல் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2.37 லட்​சம் கோடி​யாக உயர்ந்​தது. இது இது​வரை இல்​லாத அதி​கபட்ச ஒரு மாத வரி வசூல்​ ஆகும்​.

பிரதமர் விருது வழங்கும் திட்டம் 2025:

  • நடப்பாண்டில் (2025) பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கான பிரதமர் விருது வழங்கும் திட்டத்தை மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை  (01.07.2025) அறிவித்துள்ளது.
  • பிரதமரின் விருதுகளுக்கான பரிந்துரைகளைப் பதிவு செய்வதற்கும், சமர்ப்பிப்பதற்குமான இணையதளம் 2025 அக்டோபர் 2-ம் தேதி முதல் முறையாகத் தொடங்கப்படும், அதன் பிறகு பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கலாம்.
  • இந்த விருதுத் திட்டம் இந்தியா முழுமையான வளர்ச்சியை எட்டுவதை ஊக்குவிப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தரவு, ஆவண ஆதாரங்களின் தொகுப்பு கூட்டாக மதிப்பீடு செய்யப்படும். 11 முன்னுரிமைத் துறை திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான நல்லாட்சி அம்சங்களில் இது கவனம் செலுத்துகிறது.
  • சிறந்த நடைமுறைகளின் கீழ் ஆக்கபூர்வமான போட்டி, புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் நிறுவனமயமாக்கலை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். நல்லாட்சி, சிறப்பான சாதனை மற்றும் கடைக்கோடிவரை இலக்கை அடைதல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
  • 2025 ஆம் ஆண்டிற்கான, பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கான பிரதமரின் விருதுகளுக்கான திட்டம் மூன்று பிரிவுகளின் கீழ் அரசு ஊழியர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது:
  • பிரதமரின் விருதுகள், 2025 திட்டத்தில் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் மாவட்டம், அமைப்புகளுக்கு கோப்பையுடன் 20 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். 


2025-26 நிதியாண்டில் கனிமம், இரும்பு அல்லாத உலோக உற்பத்தி :

  • 2025-26 நிதியாண்டில் நாட்டில் சில முக்கிய கனிமங்களின் உற்பத்தி தொடர்ந்து வளர்ச்சியை எட்டியுள்ளது. கனிம பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு விதிகளின்கீழ் மொத்த கனிம உற்பத்தியில் இரும்புத் தாது 70 சதவீதமாக உள்ளது. 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-மே) 52.7 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த இரும்புத் தாது உற்பத்தி 2025-26 நிதியாண்டில் (ஏப்ரல்-மே) 53 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. 
  • 2025-26 நிதியாண்டில் (ஏப்ரல்-மே) மாங்கனீசு தாது உற்பத்தி 1.4%-ஆக அதிகரித்து 0.70 மில்லியன் மெட்ரிக் டன்னாக உள்ளது, இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 0.69 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது.
  • நடப்பு நிதியாண்டில் பாக்சைட் தாது உற்பத்தியும் 0.9% அதிகரித்து 4.73 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது, இது 2024-25 நிதியாண்டில் 4.69 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது.
  • துத்தநாக தாது உற்பத்தி நடப்பு (2025-26) நிதியாண்டில் (ஏப்ரல்-மே) 3.7% அதிகரித்து 0.28 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது, இது 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-மே) 0.27 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது.
  • சுண்ணாம்புக்கல் உற்பத்தி 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-மே) 80.10 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது, இது 2025-26 நிதியாண்டில் (ஏப்ரல்-மே) 1.6% அதிகரித்து 81.40 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.
  • இரும்பு அல்லாத உலோகத் துறையில், 2025-26 நிதியாண்டில் (ஏப்ரல்-மே) முதன்மை அலுமினிய உற்பத்தி கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 1.3% வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்த  நிதியாண்டில் இது 6.98 லட்சம் டன்னாக இருந்தது. 2025-26 நிதியாண்டில் (ஏப்ரல்-மே) 7.07 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. சுத்திகரிக்கப்பட்ட செம்பு உற்பத்தி 2024-25 (ஏப்ரல்-மே) காலகட்டத்தில், 0.69 லட்சம் டன்னிலிருந்து 0.99 லட்சம் டன்னாக உயர்ந்து 43.5% வளர்ச்சிக்கண்டுள்ளது.


தமிழ்நாட்டில்  பரமக்குடி – ராமநாதபுரம் இடையே நான்கு வழிச்சாலை:

  • தமிழ்நாட்டில்  பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 46.7 கி.மீ தொலைவிற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் ரூ.1,853 கோடி செலவில் கலப்பின ஆண்டுத்தொகை மாதிரியில்  அமைக்கப்பட உள்ளது.
  • தற்போது, மதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி இடையிலான 2-வழி தேசிய நெடுஞ்சாலை எண் 87,  அதனுடன் தொடர்புடைய மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் இந்த நான்கு வழிச் சாலை அமைக்கப்பட உள்ளது. 
  • போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதன் காரணமாக குறிப்பாக அதிக மக்கள் தொகை நடமாட்டம் கொண்ட பகுதிகள் மற்றும் வழித்தடங்களில் உள்ள முக்கிய நகரங்களில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், இந்தத் திட்டத்தின்கீழ் பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை எண்-87 இனி 4-வழிச் சாலையாக மேம்படுத்தப்படும். 
  • இதன் மூலம் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண முடியும். மேலும், நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் பரமக்குடி, சத்திரக்குடி, அச்சுந்தன்வயல், ராமநாதபுரம் போன்ற விரைவான வளர்ச்சி கண்டு வரும்  நகர்ப்புறங்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உதவிடும்.

யுஎஸ் ஓபன் பாட்மிண்டன் தொடர் 2025:

  • அமெரிக்காவின் அயோவா நகரில் யுஎஸ் ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்றது. இதன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் வளர்ந்து வரும் நட்சத்திர மான இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள கனடாவின் பிரையன் யங்குடன் மோதினார்.
  • 47 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆயுஷ் ஷெட்டி 21-18, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். 
  • மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் 16 வயதான தன்வி சர்மா, போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் பெய்வென் ஜாங்குடன் மோதினார்.
  • 46 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தன்வி சர்மா 11-21, 21-16, 10-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.அமெரிக்காவின் பெய்வென் ஜாங்கு சாம்பியன் பட்டம் வென்றார்




OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!

current-affairs-in-tamil-01st-02nd-july-2025

Post a Comment

0Comments

Post a Comment (0)