ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் இன்ஜினை வெற்றிகரமாக பரிசோதித்து சென்னை ஐசிஎப் தொழிற்சாலை சாதனை படைத்துள்ளது:
- மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை ஐசிஎப்-ல் ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
- இந்தியா 1,200 எச்பி திறன் கொண்ட ஹைட்ரஜன் ரயில் இன்ஜின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருகிறது. இதன்மூலம் வருங்காலத்தில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரும் முன்னணி நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெறும்.
- ஜீரோ கார்பன் உமிழ்வு நிலையை அடைய பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், நாட்டின் போக்குவரத்தில் முதன்மையாக உள்ள ரயில்வேயில் ஹைட்ரஜன் இன்ஜினை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் அந்த இலக்கை நாம் விரைவாக அடைய முடியும்’’ என்று தெரிவித்துள்ளார்.
- கடந்த 2023-ம் ஆண்டு மாநிலங்களவையில் பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘‘பாரம்பரிய நகரங்களுக்கு ஹைட்ரஜன்’’ என்ற திட்டத்தின் கீழ் 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து 4,078 நாட்களாக பிரதமர் பதவியில் அமர்ந்து, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் சாதனையை பிரதமர் நரேந்திர மோடி முறியடித்துள்ளார்.
- பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்று (ஜூலை 25) 4,078 நாள்களை நிறைவு செய்துள்ளார். இதன் மூலம், முன்னாள் பிரதமரான மறைந்த இந்திரா காந்தியின் பதவிக்காலமான, தொடர்ச்சியாக 4,077 நாள்கள் நாட்டின் பிரதமராகப் பதவி வகித்திருந்த சாதனையை மோடி முறியடித்துள்ளார்.
- 1966-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி முதல் 1977-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி வரை இந்திரா காந்தி தொடர்ச்சியாக பிரதமராகப் பதவி வகித்திருந்தார். இதன்மூலம் அவர் தொடர்ச்சியாக 4077 நாட்கள் பிரதமர் பதவியில் இருந்தார்.
- இந்நிலையில் பிரதமராக மோடி பதவியேற்று நேற்றுடன் (ஜூலை 25) தொடர்ச்சியாக 4,078 நாட்கள் பதவியில் இருந்துள்ளார். இந்த மைல்கல் சாதனையுடன், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு இந்திய வரலாற்றில் தொடர்ச்சியாக நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றிய 2-வது பிரதமர் என்ற சிறப்பையும் மோடி பெற்றுள்ளார்.
2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வருகை:
- அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில், மத்திய கலாச்சாரத் துறை சார்பில் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
- இதில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி ராஜராஜ சோழன் மற்றும் அவரது மைந்தன் ராஜேந்திர சோழன் இருவருக்கும் பிரம்மாண்ட சிலைகள் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என்று உறுதி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
- தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதன்பின், ரூ.4,874 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
கார்கில் விஜய் திவாஸ்:
- கார்கில் வெற்றி தினமான ‘கார்கில் விஜய் திவாஸின்’ 26-வது நினைவு நாளில், போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
- கடந்த 1999-ல் பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் வெற்றி தினம் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
- கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவு கூரும் வகையிலும், உயிரோடு இருக்கும் கார்கில் போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் இன்று 26-வது ஆண்டாக கார்கில் வெற்றி தினம், ‘கார்கில் விஜய் திவாஸ்’ என்ற பெயரில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
ட்ரோன் மூலம் வானிலிருந்து தரை இலக்குகளை தாக்கும் யுஎல்பிஜிஎம் - வி3 என்ற ஏவுகணை சோதனை வெற்றி:
- ட்ரோன் மூலம் வானிலிருந்து தரை இலக்குகளை தாக்கும் யுஎல்பிஜிஎம் - வி3 என்ற ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ) உருவாக்கியது. இந்த ஏவுகணை தயாரிப்பு அதானி மற்றும் பாரத் டைனமிக்ஸ் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
- இந்த வகை ஏவுகணையில் வி1, வி2, வி3 என்ற மூன்று வகை ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன. இவற்றில் வழிகாட்டுதல், செயல்பாடு, தாக்கும் தூரம் ஆகிய விஷயங்களில் மாறுபாடுகள் உள்ளன.
- இவற்றில் யுஎல்பிஜிஎம் - வி3 ஏவுகணை பெங்களூரில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஏரோ இந்தியா 2025 கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த ஏவுகணையை ஆந்திர மாநிலம் கர்னூலில் உள்ள திறந்தவெளி சோதனை மையத்தில் டிஆர்டிஓ வெற்றிகரமாக பரிசோதித்தது.
- 12.5 கிலோ எடையுள்ள இந்த ஏவுகணை ட்ரோன் மூலம் வானில் எடுத்துச் செல்லப்பட்டு ஏவப்பட்டது. இந்த ஏவுகணையை பயன்படுத்தி பகலில் 4 கி.மீ தூரம் உள்ள இலக்கையும், இரவில் 2.5 கி.மீ தூரமுள்ள இலக்கையும் தாக்க முடியும். நேற்று நடைபெற்ற பரிசோதனையில், யுஎல்பிஜிஎம் - வி3 ஏவுகணை இலக்கை வெற்றிகரமாக தாக்கியதாக டிஆர்டிஓ தெரிவித்தது.
மாலத்தீவு நாட்டின் 60-வது சுதந்திர தினம் :
- பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலத்தீவு தலைநகர் மாலேவுக்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- கேரளாவில் இருந்து 700 கி.மீ. தொலைவில் மாலத்தீவு அமைந்துள்ளது. அந்த நாட்டின் 60-வது சுதந்திர தினம் ஜூலை 26 அன்று கொண்டாடப்படுகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
TN SPARK திட்டம் பள்ளிகளில் தொடக்கம்:
- பள்ளி மாணவர்கள் கணினி, ஏஐ பயில ‘டிஎன் ஸ்பார்க்’ திட்டம்: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- பள்ளி மாணவர்கள் அடிப்படை கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ‘டிஎன் ஸ்பார்க்’ என்ற புதிய திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- TNPSC EXAM KEY NOTES : TN SPARK திட்டம்
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!
current-affairs-in-tamil-24th-27th-july-2025