பிடே செஸ் உலககோப்பை வென்ற முதல் இந்திய வீராங்கனை:
- உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் கோனேரு ஹம்பியை வீழ்த்தி, சர்வதேச மாஸ்டரான இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். மகளிர் உலகக் கோப்பையில் இந்திய வீராங்கனை சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதன்முறையாகும்.
- இந்த மகத்தான வெற்றியின் மூலம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வசப்படுத்தும் நான்காவது இந்திய வீராங்கனை என்ற சிறப்பைப் பெறுகிறார் திவ்யா தேஷ்முக். இவருக்கு முன்பாக கோனேரு ஹம்பி, ஆர்.வைஷாலி மற்றும் ஹஉலகக் கோப்பை தொடரின் வரலாற்றில் இரு இந்தியர்கள் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதன்முறையாகும். இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் கோனேரு ஹம்பியும், திவ்யா தேஷ்முக்கும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கேண்டிடேட்ஸ் தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றனர்.ரிகா ஆகிய இந்திய செஸ் வீராங்கனைகள் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றிருந்தனர்.
- பிடே செஸ் உலககோப்பை வென்ற முதல் இந்திய வீராங்கனை, கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 4வது இந்திய வீராங்கனை, இந்தியாவின் 88வது கிராண்ட் மாஸ்டர் என்ற பல சாதனைகள் நிகழ்த்திய நாக்பூர் மங்கை திவ்யா தேஷ்முக்கிற்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்தியா-சிங்கப்பூர் கூட்டு ராணுவப் பயிற்சி:
- இந்தியா-சிங்கப்பூர் கூட்டு ராணுவப் பயிற்சியின் 14-வது பதிப்பான "போல்ட் குருக்ஷேத்ரா 2025" என்ற பயிற்சி (27 ஜூலை 2025) ஜோத்பூரில் தொடங்கி 2025 ஆகஸ்ட் 04 வரை நடைபெறுகிறது. இந்தப் பயிற்சியில் 4-வது சிங்கப்பூர் கவசப் பிரிவின் 42வது படைப்பிரிவும், இந்திய ராணுவத்தின் இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை பிரிவும் பங்கேற்றுள்ளன.
- இந்தப் பயிற்சி, இயந்திரமயமாக்கப்பட்ட போருக்கான செயல்பாட்டு நடைமுறைகள் குறித்த பயிற்சியை நோக்கமாகக் கொண்ட போர் பயிற்சியாக நடத்தப்படுகிறது. இது இந்திய ராணுவத்தின் தளவாடங்களின் கண்காட்சியுடன் நிறைவடையும்.
- போல்ட் குருக்ஷேத்ரா 2025 பயிற்சி, இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான வலுவான பாதுகாப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தி ஒத்துழைப்பை வளர்க்கும்.
வெள்ளப்பெருக்கு முன்னறிவிப்புக்கான இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு:
- மத்திய அரசு இணைய அடிப்படையிலான C-வெள்ளப்பெருக்கு முன்னறிவிப்பிற்கான வலைதளத்தை (web-based C-Flood platform) அறிமுகப்படுத்தியுள்ளது.
- இது வெள்ளப்பெருக்கு வரைபடங்கள் மற்றும் நீர் மட்ட கணிப்புகள் வடிவில் கிராமங்கள் வரை கிடைக்கக் கூடிய இரண்டு நாட்களுக்கு முன்கூட்டிய வெள்ளப்பெருக்கு முன்னறிவிப்புகளை வழங்குகிறது.
இந்த C-வெள்ள வலை அடிப்படையிலான தளத்தின் முக்கிய அம்சங்கள்:
- C-வெள்ள வலைதளம் மேம்பட்ட இரு பரிமாண ஹைட்ரோடைனமிக் மாடலிங் மூலம் பெறப்பட்ட வெள்ளப்பெருக்கு வெளியீட்டுத் தகவலை விரிவான முறையில் ஆழமான நுட்பங்களுடன் ஒருங்கிணைக்கிறது.
- அனைத்து நதிப் படுகைகளுக்கான தேசிய மற்றும் பிராந்திய நிறுவனங்களின் வெள்ள மாதிரி வெளியீடுகளை அந்தந்த செயல் திட்டங்களின்படி ஒருங்கிணைக்கும் ஒருங்கிணைந்த வெள்ளப்பெருக்கு தகவல் அமைப்பாக இது செயல்பட வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஆரம்ப கட்டத்தில் கோதாவரி, தபி மற்றும் மகாநதி நதிப் படுகைகளுக்கான வெள்ளப்பெருக்கு முன்னறிவிப்புகளை உள்ளடக்கியது.
- இந்த வலை தளம் ஆரம்ப கட்டத்தில் இந்தி, ஆங்கிலம் மற்றும் ஒடியா ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும்.
- இதில் அடுத்த இரண்டு நாட்களுக்கான வெள்ளப்பெருக்கு முன்னறிவிப்பும் அடங்கும். இது கிராமங்கள் வரையிலான வெள்ளப்பெருக்கு தகவல்களைக் வழங்குகிறது.
- வெள்ள ஆழத்தைப் பொறுத்து மூன்று வகையான வெள்ள எச்சரிக்கைகளை இது குறிக்கிறது: மஞ்சள் எச்சரிக்கை 0.5 மீட்டருக்கும் குறைவான வெள்ளத்தைக் குறிக்கிறது, ஆரஞ்சு எச்சரிக்கை 1.5 மீட்டருக்கும் குறைவான ஆழத்தைக் குறிக்கிறது, மற்றும் சிவப்பு எச்சரிக்கை 1.5 மீட்டருக்கு மேலான வெள்ளத்தைக் குறிக்கிறது.
பிரளய் ஏவுகணை இரண்டு முறை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது:
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ (ஜூலை 28, 29) ஒடிசா கடல்பகுதியில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து பிரளய் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
- ஏவுகணை அமைப்பின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச தூர திறனை சரிபார்க்க இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஏவுகணைகள் சரியான பாதையில் பயணித்து இலக்கை துல்லியமாகத் தாக்கின. அனைத்து துணை அமைப்புகளும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக செயல்பட்டன.
- இந்த சோதனைகளை டிஆர்டிஓவின் மூத்த விஞ்ஞானிகள், இந்திய விமானப்படை உயர் அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் தொழில்துறை பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இந்த சோதனைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதற்கு டிஆர்டிஓ, ஆயுதப்படைகள் மற்றும் தொழில்துறையினருக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிரளய் ஏவுகணை உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட திட எரிபொருள் பகுதியளவு உந்து விசைத்திறன் கொண்ட ஏவுகணையாகும். இது துல்லியத்தை உறுதி செய்வதற்காக அதிநவீன வழிகாட்டுதல் அமைப்பை பயன்படுத்துகிறது. இந்த ஏவுகணை பல்வேறு இலக்குகளுக்கு எதிராக பல வகையான ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது.
கோடக் ஆக்டிவ் மொமென்டம் பண்ட் அறிமுகம்:
- கோடக் மஹிந்திரா சொத்து மேலாண்மை நிறுவனம், ஓபன் எண்டட் பரஸ்பர நிதி திட்டமான கோடக் ஆக்டிவ் மொமென்டம் பண்ட் அறிமுகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
- இது சொந்தமாக உருவாக்கப்பட்ட மாதிரி அடிப்படையில் வருவாய் வேகத்துடன் கூடிய பங்குகளை அடையாளம் காண்பதன் மூலம் வாய்ப்புகளைப் பிடிக்க முயல்கிறது. இந்த புதிய திட்டத்தில் (என்எப்ஓ) 29.07.2025 முதல் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை முதலீடு செய்யலாம். என் எப்ஓ காலத்தில் குறைந்த பட்சம் ரூ.5,000 முதலீடு செய்ய வேண்டும். அதன் பிறகு சந்தையில் எவ்வளவு தொகை வேண்டுமானலும் முதலீடு செய்யலாம். எஸ்ஐபி முறையில் குறைந்தபட்சம் ரூ. 500 முதலீடு செய்யலாம்.
- விலை உயரும் பங்குகள்: பொதுவாக மொமென்டம் முதலீடு என்பது விலை உயர வாய்ப்புள்ள பங்குகளை வாங்குவதாகும். இருப்பினும், மொமென்டம் விலை சார்ந்தது மட்டுமல்ல. வருவாய் மொமென்டம் என்பது வலுவான அடிப்படைக் காரணிகளால் ஆதரிக்கப்படும். மேல்நோக்கிய வருவாய் திருத்தங்கள் மற்றும் சாதகமான ஆய்வாளர் மதிப்பீடுகள் கொண்ட பங்குகளை மையமாகக் கொண்டது.
டோல் டிராபி மாஸ்டர்ஸ் 2025:
- பிரான்ஸ் நாட்டின் அக்ஸ் அன் ப்ரொவேன்ஸ் நகரில், கடந்த 19-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை ‘டோல் டிராபி மாஸ்டர்ஸ் 2025 ’ எனும் சர்வதேச செஸ் போட்டி நடைபெற்றது.
- 9 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் 6 வெற்றி, 3 டிரா என 7.5 புள்ளிகளுடன் இந்திய கிராண்ட் மாஸ்டர் இனியன் முதல் இடத்தைப் பெற்று, போலாந்தின் மலேக் ஜான் உடன் சமன் செய்தார்.
- வெற்றியாளரை நிர்ணயம் செய்ய நடைபெற்ற முதல் ரேபிட் போட்டி டிரா ஆனது. அடுத்து நடைபெற்ற 2-வது ரேபிட் போட்டியில் இனியன், 1.5 - 0.5 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!
current-affairs-in-tamil-28th-29th-july-2025