2023 ஆம் ஆண்டிற்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள்:
- 71வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான நடுவர் குழு, 2023 ஆம் ஆண்டிற்கான வெற்றியாளர்களை அறிவித்தது.
- இதன்படி ‘பார்க்கிங்’ தமிழ் திரைப்படத்திற்கு 3 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது, சிறந்த துணை நடிகர் விருது (திரு எம்.எஸ்.பாஸ்கர்) மற்றும் சிறந்த திரைக்கதைக்கான விருது (திரு ராம்குமார் பாலகிருஷ்ணன்) ஆகியவற்றை இந்தத் திரைப்படம் வென்றுள்ளது.
- சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது, ‘வாத்தி’ தமிழ் திரைப்படத்திற்காக திரு ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, புனைவு அல்லாத திரைப்படங்கள் (Non-Feature Films) பிரிவில் தமிழ் ஆவணப்படமான லிட்டில் விங்ஸ், சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்றுள்ளது.
- சிறந்த கலை / பண்பாட்டு திரைப்படத்துக்கான தேசிய விருதை கமக்யா நாரயண் சிங் இயக்கிய ‘டைம்லெஸ் தமிழ்நாடு’ (Timeless Tamil Nadu) என்ற படம் வென்றுள்ளது.
உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம் (ஆகஸ்ட் 1 -7, 2025):
- ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் தாய்ப்பால் விழிப்புணர்வு வாரமாக கொண்டாடப்படுகிறது.
- இந்த ஆண்டு தாய்ப்பால் விழிப்புணர்வு வாரத்தின் கருப்பொருளாக "தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்னுரிமை அளிப்போம் - தாய்ப்பால் கொடுப்பதற்கு நிலையான ஆதரவு அமைப்புகளை உருவாக்குவோம் என்பதாகும்.
15-வது இந்திய உறுப்பு தான தினம் :
- இந்திய உறுப்பு தான தினமானது ஆகஸ்ட் 03 ஆம் தேதி கொண்டாடப்படும்.
- மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் கீழ் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (NOTTO) ஏற்பாடு செய்த 15-வது இந்திய உறுப்பு தான தின நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு நட்டா கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் பொறுப்பு செயலாளர் திருமதி நிவேதிதா சுக்லா வர்மா மற்றும் சுகாதார சேவைகள் தலைமை இயக்குநர் டாக்டர் சுனிதா சர்மா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
- நாடு முழுவதும் உறுப்பு மற்றும் திசு தானத்தை ஊக்குவிக்கும் நோக்கில் , ஓராண்டு காலமாக நடைபெற்று வரும் " அங்தானம்- ஜீவன் சஞ்சீவனி இயக்கம் " என்ற தேசிய இயக்கத்தின் கீழ், 15-வது இந்திய உறுப்பு தான தினம் கொண்டாடப்பட்டது . இந்த இயக்கம், பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிப்பதன் அவசியத்தையும், கட்டுக்கதைகள் மற்றும் தவறான கருத்துக்களை நீக்குவதையும், மக்கள் உறுப்பு தானத்திற்கு உறுதியளிக்க ஊக்குவிப்பதையும் வலியுறுத்துகிறது. உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், வாழ்க்கை என்ற பரிசை வழங்கிய தன்னலமற்ற நன்கொடையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை கௌரவிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டது.
- உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின் மொத்த எண்ணிக்கையில் இந்தியா உலக அளவில் அமெரிக்கா மற்றும் சீனாவிற்குப் பிறகு மூன்றாவது இடத்தில் உள்ளது ,
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் / NALAM KAKKUM STALIN THITTAM:
- நலம் காக்கும் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை 02.08.2025 முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
- மக்கள் தங்களின் உடல் நிலையை நோய் வரும் முன்பே மருத்துவரீதியாக பரிசோதிப்பதில்லை என்பதால் அதை நோக்கமாகவைத்து, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்படுகிறது.
- TNPSC KEY NOTES: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்
தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்:
- தமிழ்நாட்டில் நகரங்களுக்கு இடையே இயக்குவதற்காக 100 மின்-பேருந்துகளை வழங்குவதற்கான பூர்வாங்க ஒப்பந்தத்தை யுனிவர்சல் பஸ் சர்வீசஸ் (யுபிஎஸ்) நிறுவனத்தின் கிரீன் எனர்ஜி மொபிலிட்டியுடன் டாடா மோட்டார்ஸ் மேற்கொண்டுள்ளது.
- சென்னை பயணிகள் வாகனக் கண்காட்சியில் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையொப்பமானது.
- ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கி.மீ. தொலைவு வரை செல்லக்கூடிய மேக்னா இவி பேருந்துகளை வழங்குவதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய உற்பத்தித் துறை கடந்த ஜூலை மாதத்தில் 16 மாதங்களில் இல்லாத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது:
- இதுகுறித்து ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
- உற்பத்தித் துறை நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண்ணான பிஎம்ஐ, கடந்த ஜூலையில் 57.7-ஆக இந்தது. ஆனால், ஆகஸ்டில் 58.6-ஆக அதிகரித்த பிஎம்ஐ, செப்டம்பரில் மீண்டும் 57.5-ஆக சரிந்தது.கடந்த அக்டோபரில் அது மேலும் சரிந்து 55.5-ஆக இருந்தது. இது, கடந்த 8 மாதங்கள் காணாத குறைந்தபட்ச பிஎம்ஐ எண்ணாகும். இவ்வாறு தொடா் சரிவைச் சந்தித்து வந்த பிஎம்ஐ, கடந்த நவம்பரில் 56-ஆக அதிகரித்தது. பின்னா் டிசம்பரில் 18 மாதங்களில் இல்லாத குறைந்தபட்சமாக பிஎம்ஐ 54.9-ஆக சரிந்தது. ஜனவரியில் 56.5-ஆகவும், பிப்ரவரியில் 56.9-ஆகவும் அதிகரித்த பிஎம்ஐ, மாா்ச் மாதத்தில் 56.4-ஆக இருந்தது.
- அதைத் தொடா்ந்து அது கடந்த ஏப்ரலில் 58.2-ஆக அதிகரித்து, பின்னா் மே மாதத்தில் 57.6-ஆகச் சரிந்தது. பின்னா் அது ஜூனில் முந்தைய 14 மாதங்கள் காணாத அளவுக்கு 58.4-ஆக அதிகரித்தது.இந்த நிலையில், உற்பத்தித் துறை நடவடிக்கைகளுக்கான பிஎம்ஐ குறியீட்டு எண் கடந்த ஜூலை மாதத்தில் 59.1-ஆக உயா்ந்துள்ளது.
- இது, கடந்த 16 மாதங்களில் இல்லாத அதிகபட்ச பிஎம்ஐ எண்ணாகும்.இதன்மூலம், தொடா்ந்து 49-ஆவது மாதமாக உற்பத்தித் துறையின் பிஎம்ஐ குறியீட்டு எண் நடுநிலை வரம்பான 50-க்கும் மேலே உள்ளது. அந்தக் குறியீட்டு எண் 50-க்கு மேல் இருந்தால் உற்பத்தித் துறையின் ஆரோக்கியமான போக்கையும், 50-க்கும் குறைவாக இருந்தால் பின்னடைவையும் குறிக்கிறது.
- கடந்த ஜூலை மாதத்தில் உற்பத்திப் பொருள்களுக்கான புதிய தேவைகள் உருவானதும், துறைக்கு சாதகமான சூழல் நிலவியதும் அந்தத் துறைக்கான பிஎம்ஐ 16 மாதங்கள் காணாத வளா்ச்சியைப் பதிவு செய்ததில் முக்கிய பங்கு வகித்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!