CURRENT AFFAIRS IN TAMIL AUGUST 2025 (04.08.2025-05.08.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL AUGUST 2025 (04.08.2025-05.08.2025)



தமிழ்நாடு வளர்கிறது-முதலீட்டாளர்கள் மாநாடு:

  • தூத்துக்குடியில் 'தமிழ்நாடு வளர்கிறது' (டி.என்.ரைசிங்) என்னும் தலைப்பில் முதலீட்டாளர்கள் மாநாடு திருச்செந்தூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 04.08.2025 நடைபெற்றது. தமிழக அரசின் தலைமை செயலர் நா.முருகானந்தம் தலைமை வகித்தார்.
  • விழாவில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ரூ.32,554 கோடி முதலீடு மற்றும் 49,845 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், ரூ.265.15 கோடி முதலீடு மற்றும் 1,196 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.


இந்தியாவிலேயே முதலாவது முழு மின்சார வாகன உற்பத்தி நிலையம்:

  • தூத்துக்குடி மின்சார கார் தொழிற்சாலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், இந்தியாவில் வாகன உற்பத்தியின் தலைநகரமாக தமிழ்நாடு விளங்குகிறது என்று பெருமிதம் தெரிவித்தார். மேலும், இந்நாள் தென் மாவட்டத்தின் ஒரு பொன் நாள் என்றும் அவர் கூறினார்.
  • வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் சார்பில் தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கார் தொழிற்சாலையை திறந்து வைத்து, முதல் கார் விற்பனையை தொடங்கி வைத்தார்.விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
  • இந்தியாவின் மொத்த மின் வாகன உற்பத்தியில் 40 சதவீதம் தமிழ்நாட்டில் தான் உற்பத்தி ஆகிறது.
  • தற்போது தூத்துக்குடியில் முதல் மின்வாகன உற்பத்தி தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கும், வியட்நாமுக்கும் இடையேயான வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் மேம்படும். நான் உறுதியோடு சொல்கிறேன், இந்நாள் தென் மாவட்டத்தின் ஒரு பொன் நாள்.
  • இதுதான் தமிழ்நாட்டின் ஈசி டுயிங் பிசினசுக்கு முக்கியமானது. முதல் கட்டமாக ரூ.1300 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 50 ஆயிரம் மின்வாகனம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. தெற்கு ஆசியாவிலேயே வியட்நாமுக்கு வெளியே தொடங்கப்பட்டுள்ள முதல் மின்வாகன உற்பத்தி நிலையம் இதுதான். தமிழ்நாட்டில் நமது தூத்துக்குடியில் உள்ள இந்த ஆலை தான் இந்தியாவிலேயே முதலாவது முழு மின்சார வாகன உற்பத்தி நிலையமாகும்.  இவ்வாறு முதல்வர் பேசினார்.


ஜாகுவார் லேண்ட் ரோவர் சிஇஓ :

  • டாடா மோட்டார்ஸுக்கு சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்த பி.பி. பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். 
  • தற்போது தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் அட்ரியன் மார்டெலின் பதவிக் காலம் வருகின்ற அக்டோபருடன் நிறைவடையும் நிலையில், பி.பி. பாலாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • தமிழகத்தைச் சேர்ந்த பாலாஜி, 1992 ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் பி.டெக். மெக்கானிக்கல் பட்டம் பெற்றார். பின்னர், 1993 ஆம் ஆண்டு கொல்கத்தா ஐஐடியில் முதுநிலைப் பட்டம் பெற்றார். யூனிலீவர் நிறுவனத்தில் 1995 ஆம் ஆண்டு தனது பணியைத் தொடங்கிய பாலாஜி, நிறுவனத்தின் மூத்த நிதி மேலாண்மை அதிகாரியாக இந்தியா, சிங்கப்பூர், பிரிட்டன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். 2017 வரை ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். 2017 ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் குழும தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பேற்றார். டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.


ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடர் 2025: 

  • இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும், 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
  • இந்​நிலை​யில், லண்​டன் கெனிங்​டன் ஓவல் மைதானத்​தில் கடைசி மற்​றும் 5-வது டெஸ்ட் போட்டி கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்​கியது. இந்தப் போட்​டி​யில் முதல் இன்​னிங்​ஸில் இந்​திய அணி 224 ரன்​களும், இங்​கிலாந்து அணி 247 ரன்​களும் எடுத்​தன. 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய இந்​திய அணி 396 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இதைத் தொடர்ந்து 374 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் 2-வது இன்​னிங்ஸை இங்​கிலாந்து விளை​யாடியது.
  • மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 85.1 ஓவர்களில் 367 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் ஆண்டர்சன் டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
  • இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியில் இருந்து தலா ஒருவர் என மொத்தம் 2 வீரர்களுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. அதன்படி இந்திய அணியில் இருந்து கேப்டன் சுப்மன் கில்லும், இங்கிலாந்து அணியில் இருந்து ஹாரி புரூக்கும் தொடர் நாயகன் விருதினை பெற்றனர்.


லெக்சிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டி 2025:

  • அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் உள்ள லெக்சிங்டன் நகரில் ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. ஆடவர் இரட்டையர் இறுதிச் சுற்றுப் போட்டியில் ராம்குமார், அனிருத் ஜோடி 6-4, 6-4 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் யூ ஹிசியூ ஹுசு, ரே ஹோ ஹுவாங் ஜோடியை வீழ்த்தியது.
  • லெக்சிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், அனிருத் சந்திரசேகர் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.


வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட்  தொடர் 2025 :

  • இங்கிலாந்தில் கடந்த மாதம் தொடங்கிய வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடர் 03.08.2025 நிறைவடைந்தது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் உள்ளிட்ட அணிகள் இதில் பங்கேற்றன. சர்வதேச கிரிக்கெட்டில் அசத்திய முன்னாள் வீரர்கள் இதில் பங்கேற்று விளையாடினர்.
  • இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் 03.08.2025 இந்த தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. 
  • 20 ஓவர்களில் 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென் ஆப்பிரிக்கா விரட்டியது.16.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. டிவில்லியர்ஸ் 60 பந்துகளில் 120 ரன்கள், டுமினி 28 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தனர். ஆட்ட நாயகன் விருதை டிவில்லியர்ஸ் வென்றார்.
  • வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது தென் ஆப்பிரிக்க அணி


மகளிருக்கான கோபா அமெரிக்கா ஃபெமினினா கால்பந்து போட்டி 2025:

  • தென் அமெரிக்க கண்டத்தில் நடைபெறும் மகளிருக்கான கோபா அமெரிக்கா ஃபெமினினா கால்பந்து போட்டியில், பிரேசில் ‘பெனால்ட்டி ஷூட் அவுட்’ வாய்ப்பில் கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. நிா்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் ஆட்டம் 4-4 கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில் பிரேஸில் 5-4 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 
  • 10-ஆவது ஆண்டாக நடைபெறும் இந்தப் போட்டியில் தற்போது பிரேஸில் 9-ஆவது முறையாக கோப்பை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும், இந்த ஆண்டுடன் கடைசி 5 முறையும் அந்த அணியே தொடா்ந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
  • போட்டியிலேயே அதிக கோல்கள் (6) அடித்தவா்களாக பிரேஸிலின் அமாண்டா குட்டெரெஸ், பராகுவேயின் கிளாடியா மாா்டினெஸ் தோ்வாகினா்.


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!

current-affairs-in-tamil-04th-05th-august-2025

 


Post a Comment

0Comments

Post a Comment (0)