CURRENT AFFAIRS IN TAMIL AUGUST 2025 (06.08.2025-08.08.2025)

TNPSC PAYILAGAM
By -
0
CURRENT AFFAIRS IN TAMIL AUGUST 2025 (06.08.2025-08.08.2025)


தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025 :

  • தமிழகத்துக்கான மாநில அரசின் கல்விக் கொள்கை (பள்ளிக் கல்வி) அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில்  (08.08.2025) வெளியிட்டார்.
  • மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடா்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது.
  • இந்தக் கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வு பெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 போ் கொண்ட குழு 2022-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் பல்கலை. துணை வேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியாா் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் உள்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்டறிந்து கல்விக் கொள்கையை வடிவமைத்தனர்.
  • அதன்படி, சுமார் 650 பக்கங்கள் கொண்ட மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை 2023 அக்டோபரில் தயாரானது. எனினும், வெள்ளப் பாதிப்புகள், மக்களவைத் தோ்தல் பணிகளால் வரைவு அறிக்கையை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின் மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினா் 2024 ஜூலை 1-ஆம் தேதி தமிழக அரசிடம் சமா்ப்பித்தனர்.
  • இந்த நிலையில் முதல்கட்டமாக பள்ளிக் கல்வித் துறைக்கான மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையை சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்  (ஆக. 8) முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
  • அந்த அறிக்கையில், 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது, தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையையே கடைப்பிடிக்க வேண்டும், கல்வி மாநிலப் பட்டியலில் கொண்டுவர வேண்டும், நீட் தேர்வு நடத்தக் கூடாது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
  • மேலும் 8 ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி தொடரும், 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய நீதி அறிக்கை 2025:

  • இந்திய நீதி அறிக்கை 2025 தற்போது வெளியாகி உள்ளது. காவல்துறை, சிறைத்துறை, நீதித்துறை, சட்ட உதவிகள் உள்ளிட்டவற்றின் மூலம் மக்களுக்கு நீதி வழங்குவதில் மாநிலங்களின் தர நிலைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், முதல் 6 இடங்களைப் பெற்றுள்ள மாநிலங்கள் சிறப்பானவை என்றும், அடுத்த 6 இடங்களைப் பெற்ற மாநிலங்கள் சுமாரானவை என்றும் கடைசி 6 இடங்களைப் பெற்ற மாநிலங்கள் மோசமானவை என்றும் மதிப்பிடப்பட்டுள்ளன.
  • அதன்படி, நாட்டின் 18 பெரிய மாநிலங்களில் கர்நாடகா, 10-க்கு 6.78 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. ஆந்திரப் பிரதேசம் 6.32 புள்ளிகள் பெற்று 2-ம் இடத்தையும், தெலங்கானா 6.15 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. 6.09 புள்ளிகளுடன் கேரளா 4-ம் இடத்தையும், 5.62 புள்ளிகளுடன் தமிழ்நாடு 5-ம் இடத்தையும், 5.54 புள்ளிகளுடன் சத்தீஸ்கர் 6-ம் இடத்தையும் பிடித்துள்ளன.
  • 5.42 புள்ளிகளுடன் 7-ம் இடத்தில் மத்தியப் பிரதேசமும், 5.41 புள்ளிகளுடன் 8-ம் இடத்தில் ஒடிசாவும், 5.33 புள்ளிகளுடன் 9-ம் இடத்தில் பஞ்சாபும் உள்ளன. மகாராஷ்டிரா 5.12 புள்ளிகளுடன் 10-ம் இடத்தையும், குஜராத் 5.07 புள்ளிகளுடன் 11-ம் இடத்தையும், ஹரியானா 5.02 புள்ளிகளுடன் 12-ம் இடத்தையும் பெற்றுள்ளன.
  • .13-ம் இடத்தை பிஹாரும் (4.88), 14-ம் இடத்தை ராஜஸ்தானும்(4.83), 15-ம் இடத்தை ஜார்க்கண்ட்டும்(4.78), 16-ம் இடத்தை உத்தராகண்டும்(4.41), 17-வது இடத்தை உத்தரப்பிரதேசமும்(3.92), 18-வது இடத்தை மேற்கு வங்கமும்(3.63) பெற்றுள்ளன.
  • ஏழு சிறிய மாநிலங்களில் சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, மேகாலயா, மிசோரம், கோவா ஆகிய மாநிலங்கள் ஒன்று முதல் 7 வரையிலான இடங்களைப் பெற்றுள்ளன.

8-ஆவது வீஸ்லாவ் மானியாக் மெமோரியல் போட்டி 2025 :

  • போலந்தில் நடைபெற்ற 8-ஆவது வீஸ்லாவ் மானியாக் மெமோரியல் போட்டியில் இந்திய வீராங்கனை அன்னு ராணி ஈட்டி எறிதலில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
  • வீஸ்லாவ் மானியாக் மெமோரியல் தொடரில் தனது இரண்டாவது முயற்சியில் 62.59 மீட்டருக்கு ஈட்டி எறிந்து தங்கம் வென்றுள்ளார்.
  • 32 வயதாகும் அன்னு ராணு இந்திய அளவில் அதிக தூரம் ஈட்டி எறிந்ததில் தேசிய சாதனை படைத்த வீராங்கனையாக இருக்கிறார்.
  • வீஸ்லாவ் மானியாக் மெமோரியல் தொடரில் 62.59 மீட்டருக்கு ஈட்டி எறிந்து தங்கம் வென்றதன் மூலம் உலக தடகள கான்டினென்டல் டூர் வெண்கல பிரிவில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
  • தேசிய அளவில் அன்னு ராணி 2022-இல் 63.82 மீட்டருக்கு ஈட்டி எறிந்ததே இதுவரை அவரது சிறந்த சாதனையாக இருக்கிறது.


11-வது தேசிய கைத்தறி தினம்:

  • ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 அன்று தேசிய கைத்தறி தினம் (National Handloom Day) இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இது இந்தியாவின் பாரம்பரிய கைத்தறி தொழிலாளர்களின் பங்களிப்பை நினைவுகூரும் ஒரு முக்கிய நாள்.
  • 1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கப்பட்ட சுதேசி இயக்கம், உள்நாட்டுத் தொழில்களை, குறிப்பாக கைத்தறி நெசவாளர்களை ஊக்குவித்தது. 
  • 2015 ஆம் ஆண்டில், இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 ஆம் தேதியை தேசிய கைத்தறி தினமாகக் கொண்டாட முடிவு செய்தது. முதல் தேசிய கைத்தறி தினத்தை பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 7, 2015 அன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!

current-affairs-in-tamil-06th-08th-august-2025

 



Post a Comment

0Comments

Post a Comment (0)