CURRENT AFFAIRS IN TAMIL AUGUST 2025 (09.08.2025-11.08.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL AUGUST 2025 (09.08.2025-11.08.2025)


நாட்டின் மிக நீளமான சரக்கு ரயில் அறிமுகம்: 

  • நாட்டின் நீளமான சரக்கு ரயிலை மத்திய ரயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இந்த ரயிலானது 354 வேகன்களுடன் 4.5 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக அமைந்துள்ளது. நாட்டின் மிக நீளமான சரக்கு ரயில் என்ற பெருமையை பெற்றுள்ள இதற்கு ருத்ராஸ்த்ரா என்று பெயர் சூட்டியுள்ளனர்.
  • ருத்ராஸ்த்ரா ரயில் கடந்த 7-ம் தேதி தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. 354 வேகன்களைக் கொண்ட இந்த ரயில் நாட்டின் மிக நீளமான சரக்கு ரயிலாக இருக்கும். 4.5 கிலோ மீட்டர் நீளத்தை கொண்டதாகவும், மிகச்சிறப்பாகவும் இந்த ரயில் உள்ளது.
  • உத்தர பிரதேசத்தின் கஞ்ச்கவாஜா ரயில் நிலையத்தில் இருந்து இது பயணத்தைத் தொடங்கியுள்ளது. 
  • இந்த ரயில் 7 இன்ஜின்களைக் கொண்டு இயக்கப்படுகிறது. மேலும் இது உலகின் மீக நீளமான 2-வது சரக்கு ரயிலாக உள்ளது. உலகின் மிக நீளமான சரக்கு ரயில் என்ற பெருமையை ஆஸ்திரேலியாவின் பிஎச்பி(7.3 கிலோ மீட்டர் நீளம், 682 வேகன்கள்) பெற்றுள்ளது. 
  • ருத்ராஸ்த்ரா ரயில் சராசரியாக மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் சென்று 5 மணி நேரத்தில் 200 கிலோ மீட்டர் தூரத்தை எளிதில் கடக்கும். நேரத்தை சேமிப்பதோடு மட்டுமல்லாமல் இந்த ரயிலை இயக்குவதற்கான செலவும் குறைவு. 


புதிய வருமான வரி மசோதா  மக்களவையில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது:

  • புதிய வருமான வரி மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் 11.08.2025  தாக்கல் செய்தார். 
  • பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் மேற்கொண்ட அமளிக்கு மத்தியில் விவாதமின்றி இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
  • இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்து வந்த 1961-ம் ஆண்டு வருமான வரி சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டம் இயற்றப்பட்டது. பழைய சட்டத்தில் இருந்த பல சிக்கலான நடைமுறைகளை களைந்து எளிமைப்படுத்தி தயாரிக்கப்பட்ட புதிய வருமான வரி மசோதா 2025 கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • ஸ்ரீ பைஜயந்த் பாண்டா தலைமையிலான 31 உறுப்பினர்களை கொண்ட தேர்வுக் குழு, 4,500 பக்கங்கள் கொண்ட புதிய வருமான வரி மசோதா 2025-ன் மீது 285 பரிந்துரைகளை வழங்கியது.
  • புதிய வருமான வரி சட்டத்தில் மத மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பெயர் குறிப்பிடப்படாத நன்கொடைகளுக்கு தொடர்ந்து வரி விலக்கு அளிக்க வேண்டும், வரி செலுத்துவோர் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டிய தேதிக்குப் பிறகும் எந்த அபராதக் கட்டணமும் செலுத்தாமல் டிடிஎஸ் பணத்தைத் திரும்பப் பெற அனுமதிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தன. இந்த பரிந்துரைகளில், பெரும்பாலான பரிந்துரைகளை உள்ளடக்கிய புதுப்பிக்கப்பட்ட வருமான வரி மசோதா, மக்களவையில்  அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

3 புதிய வந்தே பாரத் ரயில் சேவை :

  • பெங்​களூரு​வில் மெட்ரோ ரயி​லின் மஞ்​சள் பாதையை​யும், 3 புதிய வந்தே பாரத் ரயில் சேவை​களை​யும் பிரதமர் நரேந்​திர மோடி தொடங்கி வைத்​தார். இதன் மூலம் ஐடி ஊழியர்​களும் ஓசூர் பயணி​களும் பெரு​மள​வில் பயனடைவார்கள்.
  • பெங்​களூரு-பெல​கா​வி, அமிர்​தசரஸ்​-ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்​ரா, அஜ்னி (நாக்​பூர்​)-புனே ஆகிய 3 வழித்​தடங்​களில் புதிய வந்தே பாரத் எக்​ஸ்​பிரஸ் ரயில்​களை பிரதமர் நரேந்​திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்​தார்.
  • இதையடுத்​து, பெங்​களூரு நம்ம மெட்ரோ ரயில் திட்​டத்​தின் கீழ் ரூ.7160 கோடி மதிப்​பில் கட்​டப்​பட்​டுள்ள 19.1 கிமீ தொலைவை கொண்ட மஞ்​சள் பாதை​யில் ஓட்​டுநர் இல்​லாத ரயில் சேவையை ராகி​குட்டா மெட்ரோ நிலை​யத்​தில் அவர் தொடங்கி வைத்​தார். பின்​னர் க்யூ ஆர் கோடு அடிப்​படை​யில் செயல்​படக்​கூடிய டிக்​கெட் வழங்​கும் இயந்​திரத்​தில் டிக்​கெட்டை பெற்ற நரேந்​திர மோடி, பெண் லோகோ பைலட் இயக்​கிய மெட்ரோ ரயி​லில் எலக்ட்​ரானிக் சிட்டி வரை பயணம் மேற்​கொண்​டார்.

உலக சிங்க தினம் 2025:

  • உலக சிங்க தினம் என்பது ஆண்டுதோறும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெறும் ஒரு நிகழ்வாகும்.
  • இதை முன்னிட்டு, இந்தியாவில் உள்ள ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை தொடர்பான 16-வது அறிக்கை 2025  வெளியிடப்பட்டது. 
  • அதில் நாடு முழுவதும் 891 சிங்கங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில் பெண் சிங்கங்கள் எண்ணிக்கை 260-லிருந்து 330 ஆக அதிகரித்துள்ளது.கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிய சிங்கங்கள் எண்ணிக்கை 674 ஆக இருந்தது. 
  • ஐந்து ஆண்டில் 32 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுபோல பத்து ஆண்டுகளில் 70.36% அதிகரித்துள்ளது. அதாவது 2015-ல் சிங்கங்களின் எண்ணிக்கை 523 ஆக இருந்தது.



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!

current-affairs-in-tamil-09th-11th-august-2025

 



Post a Comment

0Comments

Post a Comment (0)