CURRENT AFFAIRS IN TAMIL AUGUST 2025 (29.08.2025-31.08.2025)

TNPSC PAYILAGAM
By -
0
CURRENT AFFAIRS IN TAMIL AUGUST 2025 (29.08.2025-31.08.2025)


15-வது இந்தியா-ஜப்பான் வருடாந்தர உச்சி மாநாடு கூட்டறிக்கை: 

  • ஜப்பான் பிரதமர் திரு இஷிபா ஷிகெரு அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி, 15-வது இந்தியா-ஜப்பான் வருடாந்தர உச்சிமாநாட்டிற்காக 2025, ஆகஸ்ட் 29-30 தேதிகளில் ஜப்பானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். 2025, ஆகஸ்ட் 29 அன்று மாலை பிரதமர் அலுவலகத்தில் (கான்டெய்) பிரதமர் மோடியை பிரதமர் இஷிபா வரவேற்றார். அங்கு அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • 2014 முதல் இந்தியா-ஜப்பான் இடையே சிறப்பு உத்தி மற்றும் உலகளாவிய கூட்டாண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பீடு செய்யவும், அடுத்த தலைமுறை மற்றும் அதற்கு அப்பால் பயனளிக்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை உருவாக்கவும் 15வது வருடாந்தர உச்சிமாநாடு உதவியது. 2027-ம் ஆண்டில் இந்தியா-ஜப்பான் தூதரக உறவின் 75-வது ஆண்டு நிறைவு என்பதை  நோக்கி இரு நாடுகளும் ஒன்றிணைந்து முன்னேறி வருவதாகவும், இது ஒரு பொருத்தமான முறையில் கொண்டாடப்படும் என்றும் இரு பிரதமர்களும் அறிவித்தனர்.


ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு 2025:

  • ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற 15-வது இந்திய, ஜப்பான் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இதன் பிறகு பிரதமர் நரேந்திர மோடி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க செண்டாய் நகரில் இருந்து சீனாவின் தியான்ஜின் நகருக்கு விமானத்தில் சென்றார். அங்குள்ள விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார்.
  • கடந்த 2001-ம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
  • தற்போது எஸ்சிஓ அமைப்புக்கு சீனா தலைமையேற்று உள்ளது. இதன்படி எஸ்சிஓ அமைப்பின் உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் 31.08.2025- 01.09.2025 நடைபெறுகிறது. 
  • இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசுகிறார். மேலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட உலக தலைவர்களையும் அவர் தனித்தனியாக சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்புகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது.


முதலாவது விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தி மாநாடு 2025:

  • புதுதில்லியில் நடைபெற்ற (30.08.2025) முதலாவது விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தி மாநாட்டிற்கு மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா தலைமை வகித்தார். 
  • இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு, இந்தியாவின் விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தித் திறன்களுக்கான புதிய செயல்திட்டத்தை உருவாக்குவதற்காக நித்தி ஆயோக், வர்த்தக அமைச்சகம், தொழில் துறை அமைப்புகள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், முன்னணி விளையாட்டுத் துறை பிரதிநிதிகள் ஆகியோரை ஒருங்கிணைத்தது.
  • விளையாட்டு உபகரணங்கள் உற்பத்தியில் இந்தியா தற்போது 1 சதவீத பங்கினைக் கொண்டுள்ளதாகவும் இதை 2036-ம் ஆண்டுக்குள் 25 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
  • இந்திய விளையாட்டுப் பொருட்கள் துறையின் மதிப்பு 2024-ம் ஆண்டில் 4.88 பில்லியன் அமெரிக்க டாலர் (42,877 கோடி ரூபாய்) ஆகும். இது 2027-ம் ஆண்டில் 6.6 பில்லியன் அமெரிக்க டாலர் (57,800 கோடி ரூபாய்) ஆகவும், 2034-ம் ஆண்டில் 87,300 கோடி ரூபாயாகவும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் துறை ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர்க்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. ஆசியாவில் மூன்றாவது பெரிய விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தியாளராகவும், உலக அளவில் 21-வது பெரிய ஏற்றுமதியாளராகவும் இந்தியா உள்ளது.

இந்தியாவின் முதல் செம்பதக் கண்ணாடி (டெம்பர்டு கிளாஸ்) உற்பத்தி தொழிற்சாலை:

  • மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் (30.08.2025) நொய்டாவில் கைப்பேசி (மொபைல் போன்) சாதனங்களுக்கான இந்தியாவின் முதல் செம்பதக் கண்ணாடி (டெம்பர்டு கிளாஸ்) உற்பத்தி தொழிற்சாலையைத் திறந்து வைத்தார். 
  • இது அமெரிக்காவின் கார்னிங் இன்கார்பரேட்டட் நிறுவனத்துடன் இணைந்து ஆப்டிமஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ளது.  இது உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட உயர்தர டெம்பர்டு கிளாஸை உற்பத்தி செய்யும். இந்த தயாரிப்புகள் உள்நாட்டு, சர்வதேச சந்தைகளுக்கு வழங்கப்படும்.
  • கடந்த 11 ஆண்டுகளில், இந்தியாவில் மின்னணு சாதனங்கள் உற்பத்தி ஆறு மடங்கு வளர்ந்து 11.5 லட்சம் கோடி ரூபாய் உற்பத்தி மதிப்பை எட்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.  3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புக்கு  ஏற்றுமதி நடைபெறுவதாகவும் இத்துறை மூலம் 25 லட்சம் பேருக்கு நேரடியாக அல்லது  மறைமுகமாக  வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். 
  • நாட்டில் ஒட்டுமொத்த மின்னணு சூழல் அமைப்பு வேகமாக வளர்ந்து வருவதாகவும், மதிப்பு கூட்டல் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மாநில எரிசக்தி திறன் குறியீடு 2024 ஐ மத்திய மின்சார அமைச்சகம் வெளியிட்டது:

  • மாநில எரிசக்தி திறன் குறியீடு 2024 ஐ மத்திய மின்சார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளரும் எரிசக்தி திறன் பணியகத்தின் தலைமை இயக்குநருமான திரு ஆகாஷ் திரிபாதி வெளியிட்டார், 2023-24 நிதியாண்டிற்கான 36 இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஆற்றல் செயல்திறன் மதிப்பிடப்பட்டுள்ளது.  
  • மாநில அளவிலான தரவு கண்காணிப்பை நிறுவனமயமாக்குதல், எரிசக்தி தடம் மேலாண்மையை கண்காணித்தல், சிறந்த நடைமுறைகளை ஊக்குவித்தல் மற்றும் மாநிலங்கள் முழுவதும் எரிசக்தி திறனில் போட்டித்தன்மை வாய்ந்த மேம்பாடுகளை வளர்ப்பதில் இந்தக் குறியீடு முக்கிய பங்கு வகிக்கிறது.


மானக் மந்தன்/Manak Manthan :

  • இந்தியாவின் தேசிய தரநிலைகள் அமைப்பான இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்), குளோரினேற்றம் செய்யப்படாத உயிரி மருத்துவ கழிவுகளுக்கான பிளாஸ்டிக் பைகள் IS 19314  தரநிலை (Indian Standards on Non-Chlorinated Plastic Biomedical Waste Bags) என்ற தலைப்பில் ‘மானக் மந்தன்’ நிகழ்ச்சியை BIS சென்னை அலுவலகத்தில், 2025 ஆகஸ்ட் 29 அன்று நடத்தியது.
  • நிகழ்ச்சி திரு S.D. தயானந்த், விஞ்ஞானி-F / முதுநிலை இயக்குனர் & தலைவர், BIS – சென்னை கிளை அலுவலகம், அவர்களின் வரவேற்புரையுடன் துவங்கியது. அவர் IS 19314 -குளோரினேற்றம் செய்யப்படாத உயிரி மருத்துவ கழிவுகளுக்கான பிளாஸ்டிக் பைகள் என்ற தரநிலை கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. மருத்துவ கழிவு மேலாண்மையில் தரநிலைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, குளோரினேட்டட் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து, சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கிய பாதிப்புகளை தடுக்க, பாதுகாப்பான மற்றும் பசுமையான மாற்று முறைகள்  தேவையை எடுத்துரைத்தார்.
  • மானக் மந்தன் எனும் தரநிலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொழில்துறையையும் BIS- யும் இணைக்கும் பாலமாக இருப்பதாக பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர். இந்திய தரநிலைகள் பொது நலனுக்கும் நிலையான வளர்ச்சிக்கும் நேரடியாக பங்களிப்பதை உறுதி செய்ய உதவுகிறது.


தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பு விரிவாக்க பணிகளுக்காக நிதி ஒதுக்கீட்டிற்கு மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல்:

  • திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு வசதிகளை விரிவாக்கம் செய்வதற்காக உயர்கல்வி நிதிய முகமை  மூலம் 385.27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • அனுமதி வழங்கப்பட்ட நிதியின் மூலம் மத்தியப் பல்கலைக்கழக வளாகத்தில் புதிய வகுப்புகளுக்கான கட்டடம் மற்றும் குடியிருப்பு வசதிகள் உட்பட நவீன கல்வி வளாகம், கூடுதல் மாணவர் விடுதிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கான வசதிகள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனப் பணியாளர்களுக்கான குடியிருப்பு வசதிகள் கட்டப்பட உள்ளன. பிரத்யேக அறிவியல் உபகரணம் மையம் மேம்பட்ட ஆராய்ச்சிப் பணிகளுக்காக அதிநவீன உபகரணங்களுடன் அமைக்கப்பட உள்ளது.
  • உயர்கல்விக்கான  நிதி முகமை இந்தத் திட்டத்திற்கு மத்திய கல்வி அமைச்சகத்தின் மாநில திட்டங்கள் மூலம் நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


இதன்படி, பின்வரும் திட்டங்களுக்காக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது:
  • 96.40 கோடி ரூபாய் செலவில் கல்வி பிரிவுக்கான புதிய கட்டடம்
  • 46.63 கோடி ரூபாய் மதிப்பிலான 300 படுக்கை  வசதிகளுடன் கூடிய மாணவிகள் தங்கும் விடுதி.
  • 46.91 கோடி ரூபாய் செலவில் 300 படுக்கை வசதிகளுடன் கூடிய மாணவர் தங்கும் விடுதி.
  • 19.95 கோடி  ரூபாய் செலவில் அறிவியல் உபகரண மையம்
  • 16.84 கோடி ரூபாய் செலவில் அறிவியல் உபகரணங்கள் கொள்முதல்.
  • 46.16 கோடி ரூபாய் செலவில் நிர்வாகக் கட்டத்திற்கான விரிவாக்கப் பணிகள்.
  • 62.97 கோடி ரூபாய் செலவில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான (அனைத்து வகையான) குடியிருப்பு வசதிகள்.
  • 42.60 கோடி ரூபாய் மதிப்பில் 400 படுக்கை வசதிகளுடன் கூடிய ஆராய்ச்சி மாணவர்களுக்கான தங்கும் விடுதி.

ஐஎம்எஃப் நிர்வாக இயக்குநராக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேல் நியமனம்:

  • இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேல், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேலை, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநராக மூன்று ஆண்டு காலத்திற்கு நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
  • ரகுராம் ராஜனுக்குப் பிறகு 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி முதல் ரிசர்வ் வங்கியின் 24-வது ஆளுநராக உர்ஜித் படேல் பணியாற்றினார். இருப்பினும், தனிப்பட்ட காரணங்களைக் கூறி உர்ஜித் படேல் தனது பதவிக்காலத்தை முடிப்பதற்கு முன்பே 2018 டிசம்பர் 10 அன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். 1990-ஆம் ஆண்டுக்குப் பிறகு பதவிக்காலம் முடிவதற்குள் ராஜினாமா செய்த முதல் ரிசர்வ் வங்கி ஆளுநர் இவர்தான்.
  • உர்ஜித் படேல் சர்வதேச நாணய நிதியத்தில் பணியாற்றுவது இது முதல் முறை அல்ல. 1996-1997 ஆம் ஆண்டு காலத்தில், அவர் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து மத்திய வங்கிக்கு பிரதிநிதியாக இருந்தார். அங்கு கடன் சந்தையை மேம்படுத்துதல், வங்கித் துறையை சீர்திருத்துதல், ஓய்வூதிய நிதிகளைப் புதுப்பித்தல் மற்றும் அந்நியச் செலாவணி சந்தையை உருவாக்குதல் குறித்து ஆலோசனை வழங்கினார்.
  • மேலும், 1998 முதல் 2001 வரை பொருளாதார விவகாரத் துறையின் கீழ் நிதி அமைச்சகத்தின் ஆலோசகராகப் பணியாற்றினார். மேலும் பொது மற்றும் தனியார் துறைகளில் பல்வேறு பதவிகளை அவர் வகித்துள்ளார்.
  • சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக வாரியம் அதன் அன்றாட நடவடிக்கைகளை நடத்துவதற்கு பொறுப்பாகும். நிர்வாக வாரியத்தில், உறுப்பு நாடுகள் அல்லது குழுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 நிர்வாக இயக்குநர்கள் உள்ளனர்.


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!

current-affairs-in-tamil-29th-31st-august-2025

Post a Comment

0Comments

Post a Comment (0)