மொரீஷியஸ் பிரதமரின் இந்தியப் பயணத்தின் முக்கிய ஒப்பந்தங்கள் :
- அரசு முறைப் பயணமாக மொரீஷியஸ் பிரதமர் திரு நவீன் சந்திர ராம்கூலம் இந்தியா வந்துள்ளார். அவரது இந்தப் பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட முக்கிய ஒப்பந்தங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு:
- இந்தியா- மொரீஷியஸ் இடையே அறிவியல் தொழில்நுட்பத் துறையில் இணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
- இந்தியாவில் உள்ள தேசிய பெருங்கடல் நிறுவனம் மற்றும் மொரீஷியஸ் பெருங்கடல் நிறுவனங்களின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
- மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் கர்மயோகி பாரத் இயக்கம்- மொரீஷியசின் பொதுச் சேவைகள் மற்றும் நிர்வாக சீர்திருத்த அமைச்சகத்திற்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்
- மின்சாரத்துறையில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
- இரண்டாவது கட்ட சிறு மேம்பாட்டு திட்டங்களை அமல்படுத்துவதற்காக இந்தியாவின் நிதியுதவி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்
- நீர்நிலைகளில் அளவீடுகள் மற்றும் அதன் விவரங்கள் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் நீர்வரைவியல் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
- விண்வெளி ஆராய்ச்சித்துறையில் தொலைத் தொடர்பு மற்றும் கண்காணிப்பு செயற்கைகோள்களை செலுத்துவதற்கான ஏவுதளத்தை நிர்மாணித்தல் மற்றும் செலுத்து வாகன தயாரிப்புக்கான ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
- சென்னை ஐஐடி மற்றும் மொரீஷியஸ் பல்கலைக்கழகத்திற்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பித்தல்
- பெங்களூரூவில் உள்ள தோட்டக்கலை மேலாண்மை நிறுவனம் மற்றும் மொரீஷியஸ் பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
- மொரீஷியசில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் 17.5 மொகாவாட் உற்பத்தி திறனுடன் கூடிய சூரிய சக்தி உற்பத்திக்கான தகடுகளை நிறுவுதல். தேசிய அனல்மின் நிலையத்தின் பிரதிநிதிகள் குழு விரைவில் மொரீஷியசில் பயணம் மேற்கொண்ட பின்னர் இது தொடர்பான ஒப்பந்தம் இறுதிசெய்யப்படும்.
மகாராஷ்டிரா மாநில ஆளுநர் நியமனம் :
- இந்தியாவின் குடியரசு துணைத்தலைவராக திரு சி பி ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.
- இதனையடுத்து அப்பதவிக்கு திரு ஆச்சார்யா தேவ்ரத் நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் மாநில ஆளுநராக பதவி வகித்து வரும் இவருக்கு மகாராஷ்டிரா மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிறப்பித்துள்ளார்.
மழை, வெள்ளத்தால் பாதித்த இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி: பிரதமர் மோடி அறிவிப்பு:
- மேக வெடிப்பு, மழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இமாச்சலப் பிரதேசத்தை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, மாநிலத்துக்கு ரூ.1,500 கோடி நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்தார்.
- மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசத்தின் பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி வான் வழியாக ஆய்வு செய்தார்.
- அதன்பிறகு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம், மறுவாழ்வு நடவடிக்கைகள், சேத மதிப்பீடு ஆகியவை தொடர்பாக காங்க்ரா பகுதியில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை மேற்கொண்டார்.
- அப்போது, முதற்கட்டமாக இமாச்சலப் பிரதேசத்துக்கு ரூ.1,500 கோடி நிதி உதவி வழங்கப்படும் என அவர் அறிவித்தார்.
தியாகி இமானுவேல் சேகரன் 68ஆவது நினைவு தினம் :
- தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாளையொட்டி (11.09.2025), அவர் மறைந்தாலும் அவரது புகழ்ச்சுடர் அணையாமல் இன்றளவும் சமூக நீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தீண்டாமை, இரட்டைக் குவளை முறை, சாதிய ஒடுக்குதல் போன்ற சமூகச் சழக்குகளுக்கு எதிராக வீரியமிகுந்த போராட்டங்களை முன்னெடுத்த சமத்துவப் போராளி தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாள்.
- அவர் வாழ்ந்தது 32 ஆண்டுகளே... ஆனால் அவர் மறைந்தாலும் அவரது புகழ்ச்சுடர் அணையாமல் இன்றளவும் சமூக நீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது. அத்தீரமிகு தியாகியின் நினைவைப் போற்றி வணங்குகிறோம்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற வளர்ச்சியில் புனே நகரம் முதலிடம் :
- நகரங்களில் கட்டிடங்கள் அதிகரிக்கும் அளவை செயற்கைக்கோள் படங்களை கொண்டு கணக்கிட்டு ‘ஸ்கொயர் யார்ட்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் இணையதளம் ஒன்று ‘சிட்டிஸ் இன் மோஷன்’ என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.
- இதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய நகரங்களில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரம் கடந்த 30 ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. நகர்ப்புற எல்லை பல திசைகளில் விரிவடைந்து, தற்போது நகர்ப்புற வளர்ச்சியில் நாட்டில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
- இரண்டாவது இடத்தை பெங்களூரு பிடித்துள்ளது. நமது சென்னை இந்த பட்டியலில் 3-ம் இடத்தை பிடித்துள்ளது. இதே காலத்தில் கட்டிடங்களின் அளவு 197 சதுர கி.மீட்டரில் இருந்து 467 சதுர கி.மீ-ஆக உயர்ந்துள்ளது. வாகனம், எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சரக்கு போக்குவரத்து ஆகிய துறைகளின் வளர்ச்சியால் சென்னையும் வளர்ச்சியடைந்தது.
- டெல்லி தேசிய தலைநகர் மண்டலம், ஹைதராபாத், அகமதாபாத், கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களின் வளர்ச்சி சதவீதம் அடுத்தடுத்த இடத்தில் உள்ளது. இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!
current-affairs-in-tamil-10th-11th-september-2025