CURRENT AFFAIRS IN TAMIL SEPTEMBER 2025 - (12.09.2025-14.09.2025)

TNPSC PAYILAGAM
By -
0
CURRENT AFFAIRS IN TAMIL SEPTEMBER 2025 - (12.09.2025-14.09.2025)




மிசோரம் மாநிலத்தில் முதல் முறையாக ரயில் சேவை:

  • மிசோரமில் முதல் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இது தவிர ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
  • பிரதமர் நரேந்திர மோடி வடகிழக்கு மாநிலங்களில் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக பைராபி - சாய்ராங் இடையிலான 51.38 கி.மீ. நீள ரயில் பாதையை பிரதமர் மோடி கணொலி மூலம் தொடங்கி வைத்தார். 

  • இந்த பாதை அய்சால் நகரையும் அசாமின் சில்சர் நகரையும் இணைக்கிறது. அத்துடன் சாய்ராங் (மிசோரம்) -ஆனந்த் விஹார் (டெல்லி) இடையிலான ராஜ்தானி எக்ஸ்பிரஸ், கொல்கத்தா-சாய்ராங் இடையிலான கொல்கத்தா எக்ஸ்பிரஸ் மற்றும் குவாஹாட்டி-சாய்ராங் இடையிலான குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ஆகிய 3 ரயில் சேவைகளையும் அவர் காணொலி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 
  • இதன்மூலம் மிசோரம் மாநிலத்தில் முதல் முறையாக ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.  ரயில் போக்குவரத்தை ஏற்படுத்தும் வகையில், ரூ.8,071 கோடியில் 51.38 கிமீ நீளத்தில் ரயில் பாதை அமைப்பதற்கான திட்டம் கடந்த 2008-ல் அறிவிக்கப்பட்டது.
  • நாட்டின் வேறு எந்த ரயில் பாதையும் கொண்டிருக்காத வகையில் 48 சுரங்கங்கள், 55 பெரிய பாலங்கள், 87 சிறிய பாலங்கள் வழியாக ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், குராங் ஆற்றின் மீது, 371 மீ நீளமும், 114 மீ உயரமும் கொண்ட நாட்டின் இரண்டாவது உயர்ந்த ரயில் பாலமாக அமைக்கப்பட்டுள்ளது. இது குதுப் மினாரை விட 42 மீ உயரம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜம்மு காஷ்மீரின் செனாப் பாலமே உலகளவில் முதலாவது உயரமான பாலமாகும்.

  • மேலும் சாலை கட்டுமானம் உட்பட ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் முடிவடைந்த சில திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

  • இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் மிசோரம் மாநிலம் இப்போது முக்கிய பங்கு வகிக்கிறது. இது நாட்டுக்கு குறிப்பாக மிசோரம் மக்களுக்கு வரலாற்று சிறப்பு மிக்க நாள். இன்று முதல் அய்சால் நகரம் நாட்டின் ரயில்வே வரைபடத்தில் இடம்பெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
  • 172 ஆண்டுகளுக்கு பிறகு: பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் முதல் முறையாக ரயில் சேவை தொடங்கப்பட்டது.ஆனால், வடகிழக்கு மாநிலங்களில் நில அமைப்பு காரணமாகரயில் சேவை இயக்கப்படவில்லை. இந்நிலையில்,இந்தியாவில் ரயில் சேவை தொடங்கி 172 ஆண்டுக்குப் பிறகு மிசோரம் மாநிலத்தில் முதல் முறையாக ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.


பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் ஐ.நா தீர்மானம்: இந்தியா ஆதரவாக வாக்களிப்பு:

  • லஸ்தீனம் ஆகிய இரு நாடுகளை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பது குறித்த 'நியூயார்க் பிரகடனத்தை' ஆதரிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா வாக்களித்தது.
  • பிரான்ஸ் அறிமுகப்படுத்திய இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 142 நாடுகள் வாக்களித்தன, எதிராக 10 நாடுகள் வாக்களித்தன, 12 நாடுகள் வாக்களிக்கவில்லை. இத்தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தவர்களில் அர்ஜென்டினா, ஹங்கேரி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும்.
  • பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு மற்றும் இஸ்ரேல், பாலஸ்தீனத்தை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பது குறித்த நியூயார்க் பிரகடன தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த 142 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
  • ஜூலை மாதம் ஐ.நா. தலைமையகத்தில் பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியா இணைந்து நடத்திய உயர்மட்ட சர்வதேச மாநாட்டில் இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டது.
  • இந்த பிரகடனத்தில், ‘காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், இரு நாடுகளையும் தனித்தனி நாடுகளாக அங்கீரிப்பதன் அடிப்படையில் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு ஒரு நியாயமான, அமைதியான மற்றும் நீடித்த தீர்வை அடைவதற்கும், பாலஸ்தீனியர்கள், இஸ்ரேலியர்கள் மற்றும் பிராந்தியத்தின் அனைத்து மக்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் கூட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என வலியுறுத்தப்பட்டது.


ஹாரில் ரூ.27 ஆயிரம் கோடி​யில் 2,400 மெகா​வாட் மின் உற்​பத்தி ஆலையை நிறு​வப் போவ​தாக அதானி பவர் நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது:

  • இதுகுறித்து அதானி பவர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிஹார் மாநிலத்துக்கு 25 ஆண்டுகளுக்கு மின்சாரம் வழங்குவது தொடர்பாக அம்மாநில மின் உற்பத்தி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். 
  • இதன்படி, ரூ.26,482 கோடி மதிப்பில் பாகல்பூர் மாவட்டம் பிர்பைன்ட்டியில் அனல் மின் உற்பத்தி தொழிற்சாலை நிறுவப்படும். இங்கு 800 மெகா வாட் திறன் கொண்ட 3 ஆலைகள் நிறுவப்படும். 5 ஆண்டுகளில் உற்பத்தி தொடங்கப்படும். இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பிஹார் மாநிலத்துக்கு யூனிட்டுக்கு ரூ.6.075 என்ற விலையில் வழங்கப்படும்.
  • இந்த திட்டத்தின் கட்டுமானப் பணியின்போது நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழிற்சாலை செயல்பாட்டுக்கு வந்ததும் 3 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். நாட்டின் மிகப்பெரிய அனல் மின் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான அதானி பவர், 18,110 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்களைக் கொண்டுள்ளது.


‘இசைஞானி இளையராஜா’ பெயரில் விருது:

  • கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இசை​ஞானி இளை​ய​ராஜா​வின் இசைப்​பயணம் இந்த ஆண்​டுடன் 50 ஆண்​டு​களை நிறைவு செய்​கிறது. இதனையொட்டி  முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் சென்​னை, நேரு உள்​விளை​யாட்டு அரங்​கில் திரையுல​கில் பொன் விழா காணும் இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு தமிழக அரசின் சார்​பில் மிகப்​பெரிய அளவில் பாராட்டு விழா நடைபெற்றது.
  • இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:இசைத்துறையில், ஆர்வத்துடன் சிறந்த இசையைப் படைக்கின்ற இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கின்ற விதமாக தமிழ்நாடு அரசின் சார்பில், இனி ஆண்டுதோறும் ‘இசைஞானி இளையராஜா’ பெயரில் விருது வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டி 2025:

  • ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை இஷா சிங் தங்கம் வென்றார்.
  • சீனாவின் நிங்போ நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடர் நடைபெற்று வருகிறது. மகளிர் தனிநபர் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் இறுதிப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை இஷா சிங் 242.6 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
  • சீன வீராங்கனை யாவோ 2-வது இடம் பிடித்து வெள்ளியைக் கைப்பற்றினார். நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான தென் கொரியாவின் ஓ யெஜின் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.


உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2025 :

  • நடப்பு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் உலக சாம்பியன் என வரலாற்றில் தனது பெயரை அவர் பதித்துள்ளார்.
  • இங்கிலாந்து நாட்டின் லிவர்பூல் நகரில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் 57 கிலோ பிரிவுக்கான இறுதிப் போட்டியில் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற போலந்து நாட்டின் ஜூலியா ஷரமெத்தாவை வீழ்த்தினார் ஜாஸ்மின்.
  •  இறுதிப் போட்டியில் 4-1 என்ற கணக்கில் ஜாஸ்மின் வெற்றி பெற்றார். இதில் வெற்றி பெற்றதன் மூலம் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற 9-வது வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்னர் மேரி கோம், நிகத் ஜரீன், சரிதா தேவி, ஜென்னி ஆர்எல், லேகா, நீது, லவ்லினா, சாவிட்டி ஆகியோர் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!


current-affairs-in-tamil-12th-14th-september-2025

Post a Comment

0Comments

Post a Comment (0)