CURRENT AFFAIRS IN TAMIL SEPTEMBER 2025 - (15.09.2025-16.09.2025)

TNPSC PAYILAGAM
By -
0


CURRENT AFFAIRS IN TAMIL SEPTEMBER 2025 - (15.09.2025-16.09.2025)



அன்பு கரங்கள் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:

  • ஏற்றமிகு தமிழ்நாட்டை உருவாக்கிட, குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களின் சீரான வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. 
  • மிகவும் வறுமையில் வாழும் குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் ‘தாயுமானவர்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோர் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், ‘அன்புக்கரங்கள்’ திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. 
  • அந்த குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப்படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்குவதுடன், பள்ளிப்படிப்பு முடித்த பின்னர் கல்லூரி கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்க வழிவகை செய்யும் இத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு உதவித்தொகையை வழங்கினார். 
  • மேலும், பெற்றோர் இருவரையும் இழந்து 12-ம் வகுப்பு முடித்து, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கினார்.


இந்தியாவின் ஆகஸ்ட் மாத ஏற்றுமதி 6.7% அதிகரிப்பு:

  • இந்தியாவின் ஏற்றுமதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும், கடந்த மாதம் 6.7 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேவேளையில் இறக்குமதி 10 சதவீதம் குறைந்துள்ளது. 
  • கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் ஏற்றுமதி 32.89 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் (கடந்த மாதம்) 35.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 
  • கடந்த ஆண்டு 68.53 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இறக்குமதி, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 61.59 அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. 
  • இருந்தபோதிலும், ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம் என்பதால், கடந்த ஆண்டு 26.49 பில்லியன் டாலராக இருந்த வர்த்தக பற்றாக்குறை, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 35.64 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 
  • 2025 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை இந்தியாவின் ஏற்றுமதி 184.13 பில்லியன் டாலராகும். அதேவேளையில் இறக்குமதி 306.52 பில்லியன் டாலராகும்.


16வது முப்படை தளபதிகளின் மாநாடு 2025:

  • மேற்கு வங்கத்தில் 15.09.2025 முதல் 3 நாட்கள் நடக்கும் முப்படை தளபதிகள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 
  • மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையின் மூத்த தளபதிகள் பங்கேற்கும் 16வது முப்படை தளபதிகளின் மாநாடு நடக்கிறது. சீர்திருத்தங்களின் ஆண்டு - எதிர்காலத்திற்கான மாற்றம் என்ற கருப்பொருளில் 15.09.2025 முதல் 17ம் தேதி வரை நடக்கிறது. 
  • இந்த மாநாட்டில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு படை தளபதி அனில் சவுகான் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.


இந்தியாவின் முதல் மூங்கில் - எத்தனால் ஆலை:

  • இந்தியாவின் முதல் மூங்கில் - எத்தனால் ஆலை அஸ்ஸாமில் கோல்கா மாவட்டத்தில், நுமாலிகர் எனும் இடத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார். 
  • இந்த ஆலைக்கு பூஜ்ய கழிவு என்பதால் மூங்கிலின் அனைத்து பாகங்களையும் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த ஆலையினால் உள்ளூர் பொருளாதாரம் ரூ.200 கோடி லாபம் அடையுமெனவும் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
  • வட கிழக்கு மாநிலங்களில் இருந்து இதற்காக 5 லட்சம் டன் பச்சை மூங்கில்கள் கொண்டுவரப்படும். இதனால், நேரடியாகவும் மறைமுகமாவும் 50,000 மக்கள் பயன்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • இது உலகின் முதல் மூங்கில் - எத்தனால் ஆலை என அஸ்ஸாம் மாநில செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • உலகின் முதல் மூங்கில் எத்தனால் ஆலை : அசாமில் உள்ள நுமாலிகர் என்ற இடத்தில் மூங்கில் மூலம் எத்தனால் தயாரிக்கும் நுமாலிகர் சுத்திகரிப்பு ஆலையை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார். கடந்த 2019 பிப்., 9ம் தேதி அன்று இந்த ஆலைக்காக மோடி அடிக்கல் நாட்டினார்.


வக்பு சட்டத்திற்கு முழுமையாக தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு - சில முக்கிய விதிகளுக்கு மட்டும் இடைக்கால தடை:

  • மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை கடந்த மே மாதம் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 
  • இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. சட்டத்திற்கு முழு தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், சில குறிப்பிட்ட விதிகளுக்கு மட்டும் தடை விதித்து உத்தரவிட்டது.
  • வக்பு வாரிய சட்டத்தை முழுமையாக நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தச் சட்டத்தை முழுமையாக நிறுத்தி வைக்க எந்தவொரு முகாந்திரமும் இல்லை என உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.
  • அதேநேரம் வக்பு வாரிய சட்டத்தின் சில குறிப்பிட்ட விதிகளுக்கு மட்டும் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. புதிய சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களைச் சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றம், ஒரு முக்கிய கருத்தைத் தெரிவித்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள், "தனிப்பட்ட குடிமக்களின் உரிமைகளை ஒரு மாவட்ட ஆட்சியர் தீர்மானிக்க அனுமதிக்க முடியாது. இது அதிகாரப் பிரிவினையை மீறும் செயல். ஆட்சியருக்கு அத்தகைய அதிகாரங்கள் அளிக்கும் விதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்" என்று தெரிவித்தனர்.


நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் பெண்கள் அதிகாரமளித்தல் குழுக்களின் இரண்டு நாள் மாநாடு :

  • நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் பெண்கள் அதிகாரமளித்தல் குழுக்களின் இரண்டு நாள் மாநாடு ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்றது. 15.09.2025 நடைபெற்ற நிறைவு விழாவில் பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் கலந்து கொண்டு பேசினார். 
  • அப்போது ஓம் பிர்லா பேசியதாவது:- நான் விரைவில் மாநில சட்டசபை சபாநாயர்களுக்கு பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் குழந்தைகள் மேம்பாடு கமிட்டியை அமைக்க வலியுறுத்தி கடிதம் எழுதுவேன். 29 மாநிலங்களில் 16 மாநிலங்களில் மட்டுமே பெண்களுக்கு அதிகாரமளித்தல் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளன. 
  • மீதமுள்ள மாநிலங்கள், பெண்கள் பிரச்சினைகள் குறித்த பரிந்துரைகளை அந்தந்த சட்டமன்றங்கள் மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு வழங்க இதுபோன்ற குழுக்களை அமைப்பது அவசியம். 
  • வரும் நாட்களில், Made in India பொருட்களை தயாரிப்பதில் பெண்களின் பங்கேற்பு அதிகரிக்க வேண்டும். இவ்வாறு ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் புகைப்பழக்கம் பற்றிய பரபரப்பான புள்ளி விவரம்:

  • நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (சி.டி.சி.) தரவுகளின்படி, புகையிலை பழக்கத்தால் ஆண்டுதோறும் இந்தியாவில் 13 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. 
  • இந்தியாவில் புகையிலையின் சுமை மிகப்பெரியது, 10 இந்தியர்களில் ஒருவர் புகையிலை தொடர்பான நோய்களால் முன்கூட்டியே இறக்கிறார் என்று கணிக்கப்பட்டு உள்ளது. 
  • இந்தியாவில் புகைபிடிப்பதை கைவிடுபவர்களின் விகிதம் குறைவாகவே உள்ளது. சுமார் 7 சதவீதம் பேர் மட்டுமே எந்த உதவியுமின்றி வெற்றிகரமாக புகைபிடிப்பதை விட்டுவிடுகிறார்கள். 
  • புகையிலை தொடர்பான நோய்களுக்கு இந்தியா ஆண்டு தோறும் ரூ.1.77 லட்சம் கோடிக்கு மேல் செலவிடுகிறது. 
  • உலகளவில், சிகரெட்டுகளுக்கு விவேகமான மாற்றாக நிகோட்டின் பைகள் பிரபலமடைந்து வருகின்றன. இந்த தயாரிப்புகள் இப்போது சுவீடன், நார்வே, அமெரிக்கா மற்றும் டென்மார்க் உள்பட 34 நாடுகளில் கிடைக்கின்றன. 
  • புகையற்ற நிகோட்டின் மாற்றுகள், புகையிலையில் உள்ள தார் மற்றும் எரிப்பை தடை செய்வதால், புகைபிடிப்பதைவிட 95 சதவீதம் வரை தீமை குறைந்ததாக உள்ளதாக இங்கிலாந்து ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இது புகைபிடிப்பவர்கள் சிகரெட்டுகளை விட்டு விலகுவதை அதிகரிக்கும் என்று இந்திய டாக்டர்களும் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். 
  • உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டலில், இந்த ஆண்டுக்குள் புகையிலை பயன்பாட்டை 30 சதவீதம் குறைக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த இலக்கை, நிகோட்டின் மாற்று மூலம் வேகமாக எட்ட முடியும் என்று கூறப்படுகிறது.


உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2025 :

  • உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்து வருகிறது. 
  • இதில் பெண்கள் 48 கிலோ பிரிவில் இந்தியாவின் மீனாட்சி ஹூடா, கஜகஸ்தான் வீராங்கனையை 4-1 என வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். 
  • ஏற்கனவே பெண்கள் 57 கிலோ பிரிவில் இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய இந்தி தினம் 2025 :

  • தேசிய இந்தி தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14 அன்று அனுசரிக்கப்படுகிறது. 1949 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சபையால் இந்தி இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளை இது அங்கீகரிக்கிறது. 
  • இந்தி தினம் தவிர, உலக இந்தி தினம் 2020 ஜனவரி 10 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் ஜனவரி 10, 1975 அன்று நாக்பூரில் நடைபெற்ற முதல் உலக இந்தி மாநாட்டின் ஆண்டு நிறைவை நினைவுபடுத்துகிறது.



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!


current-affairs-in-tamil-15th-16th-september-2025

Post a Comment

0Comments

Post a Comment (0)